Thottal Thodarum

Oct 13, 2006

www.shortfilmindia.comமிலிருந்து கேபிள் சங்கர்

அன்புள்ள மீரான் அவர்களே.. வணக்கம், என் பெயர் சங்கர் நாராயண் நான் ஓரு நடிகன், எழுத்தாளன் ஓரு குறும்பட இயக்குனர். நான் இந்த பிளாகின் மூலம் அறிவிக்கிறது என்னன்னா.. www.shortfilmindia.com நடத்துற குறும்பட, ஆவணப்பட விழாவிற்க்கு குறும்பட, ஆவணப்பட இயக்குனர்கள் எல்லாரையும் வரவேற்கிறது. படங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி வருகிற நவம்பர் 30ஆம் தேதி.2006. மேலும் இதுபற்றி தகவலறிய இணையதளத்துக்கு வாங்க.. அல்லது எனது இ-மெயிலில் தொடர்பு கொள்ளவவும் sankara4@shortfilmindia.com, sankara4@yahoo.com
அன்பு மீரான் அவர்களே .. நான் உங்க பிளாக் மூலமா விளம்பரம் செய்யறேன்னு நினைகாதீங்க.... இந்த தளத்தின் மூலமா நான் நிறைய குறும்பட இயக்குனர்களுக்கு செய்யணும்னு நினைச்சிருக்கேன். நன்றி

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்

காந்தியம் ஓத்துவருமா?

ஹ்லோ... வணக்கம், என் பக்கங்களுக்கு வந்து போனதுக்கு நன்றி. யாராவது "லகே ர்கோ முன்னாபாய்' இந்தி படத்த பார்த்தீங்களா?.. காந்தியின் கொள்கைகளை பின்பற்றும் ஓரு தாதாவின் கதை. ஹிந்தியில் தாதாக்கள் செய்யும் அட்டகாசங்களை 'தாதாகிரி' என்பர். அந்த தாதா காந்தியின் கொள்கைகளை பின்பற்றி அதற்க்கு 'காந்திகிரி" என்று வடநாடு பூராவும் பிரபலமாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த படத்திற்க்கு வரிவிலக்கு அளிக்கபட்டுள்ளது. இதை பற்றி ஏதாவது சொல்ல விருப்பமிருப்பவர்கள் உடனே சொல்லலாம்.
நன்றி .. வணக்கம்..
சங்கர்நாராயண்

Oct 11, 2006

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: கேபிள் சங்கரின் பக்கங்கள்

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: கேபிள் சங்கரின் பக்கங்கள்

குறும்படம்ன்னா என்ன?
இந்த கேள்விக்கு பல பேர் பல பதில் சொன்னாங்க. அதுலேயும் சில பேர் குறும்படம்ன்னு சொன்னதுமே "என்ன கான்செப்ட்?"ன்னு கேட்கிறாங்க..
எனக்கென்னமோ குறும்படம்னா ஏதாவது விஷயமோ அல்லது ஏதாவது கருத்து சொல்லணும்ணோ தோணல. குறும்பட்ம்றது ஓரு பிளாக் மாதிரி நம்ம மனசுல தோணிய விஷயங்களை எல்லாம் எழுதறமாதிரி... அது ஒரு விதமான வெளிப்பாடுன்னு என் கருத்து.
சங்கர் நாராயண்