இலவசம்- தேன்கூடு போட்டிக்காக..
என்ன எழுதறதுன்னே தெரியல.. அதுவும் இலவசம் பத்தி எழுதறதுன்னா சும்மாவா? ஏன்னா இலவசம்ன்னா பினாயிலை கூட குடிப்பானுங்கன்னு கவுண்டமணி ஓரு படத்துல சொன்னமாதிரி.. அதுக்கு அத்தாச்சியா நம்ம தமிழ்நாட்டுல ஆட்சி அமைச்சிருக்கிறதும் ஓரு இலவச அரசுதான். பாருங்க எங்க பார்த்தாலும் இலவசம்...தான், புக் வாங்கினா புக் விலயவிட இலவசம் விலை அதிகமா இருக்கு. அதனால அந்த புத்தகம் நம்பர் ஓண்னா வந்திருச்சுன்னு அவங்களே ஏதேதோ சர்வேலிருந்து சொல்றாங்க.. ஆனா ஓரு விஷயம் அந்த புக் நம்பர் ஒண் வந்தது இலவசத்தினால்ன்னு அவங்களே இன்னும் சொல்றாங்க.. இல்லேன்னா அவங்க இலவசத்தை நிறுத்திருக்கணுமில்லே.. அது சரி, ஒரு மளிகை கடையில மாசம் ஐநூறு ருபாய்க்கு மளிகை வாங்கினா ஓரு கூப்பன் தர்றான். அது மாதிரி ஓரு 25 கூப்பன் சேர்த்தா.. ஓரு பான் இலவசம்ன்னு சொல்லியிருந்தான்.. அதுக்காக ஒவ்வொரு மாசமும் சரியா ஐநூறுக்கு மளிகை வாங்கறத்துக்குள்ளே நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். இப்படி இலவசம்ங்கிற பேர்ல கிடைச்ச பான்னோட காதுல சரியா ஹேண்டில் நிக்கமாட்டேங்குது பான் தனியா ஹேண்டில் தனியா வருது. இத மாத்தறதுக்கு ஓரு நாலு வாட்டி அலைஞ்சதுதான் மிச்சம். கடைசியா நானே அந்த கடையில ஓரு ஸ்குருடிரைவர் வாங்கி டைட் பண்ணி புதுசா மாத்திட்டேன்னு சொல்லி தப்பிச்சேன்.. ஆனாலும் சுத்த தத்தி முததடவயே சரியா பார்த்து வாங்கியிருந்தா இந்த அலைச்சல் இல்லேல்ல என்று அன்பு கொஞ்சல் வேறு. இவ்வளவுக்கும் அந்த கடையில் நல்ல தரமான மளிகை குறைந்த விலையில் கிடைக்கிறது. இவ்வளவு இருந்த்தும் ஏன் இலவசம் என்று கூறி விற்கிறான் என்று எனக்கு புரியாமல் இருந்தது. அதற்கு பதில் என் மனைவியிடமிருந்து வந்தது. "இந்த பானை மட்டும் மாத்தாம இருந்திருந்தா நான் அவன் கடை பக்கமே திரும்பமாட்டேன்." என்றாள். கடைபக்கமே திரும்ப மாட்டாளாம்.. மாதாமாதம் கடைக்கு போவது நான் இவள் போகமாட்ட்டாளம்...கடவுளே.. என்ன கூத்துடாது... இப்படி எல்லாமே இலவசத்தை நம்பி இருக்கும் மனநிலை உள்ள நம் போன்றவர்களூக்கு எப்படி இலவசத்தை பற்றி எழுதுவது...அதுவும் உலகத்தில் இலவசம் என்று எதுவுமே கிடையாது. அப்படி இலவசமாக எதாவது கிடைத்தால் மறைமுகமாக நம்மால் எதாவது அவர்களூக்கு கிடைக்கும்...இல்லாவிட்டால் அவர்கள் இலவசமாய கொடுப்பதற்க்கு அவர்கள் என்ன மாமனா..? மச்சானா? அவர்கள் கூட நமக்கு இலவசமாய ஏதாவது கொடுத்தால் அது மச்சானாக இருந்தால் தமது சகோதரிக்காகவும்,மாமனாக இருந்தால் தனது மருமகனுக்காகவும்தான். இலவசமாக எது கிடைத்தாலும் அதன் தரத்தை பற்றி கவலைப்படாமல் கிடைத்தால் போதும் என்று நாம் நினைப்பதாலும், எது கொடுத்தாலும் அதை வாங்கிக்கொண்டு ஓரு இலவசத்தை கொடுத்தால் பொருட்களின் தரமில்லையென்றாலும் வாங்குவார்கள் என்று வியாபாரிகள் நினைக்கிறார்கள். இப்படி இலவசமாய் பினாயில் கிடைத்தாலும் குடிக்கிற மனநிலையில் உள்ளவர்களூக்கு இலவசத்தை பற்றி என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. யாராவது இலவசமாய் ஐடியா இருந்த்தால் சொல்லுங்களேன்.. இலவசத்தை பற்றி தேன்கூடு போட்டிக்கு அனுப்ப....
சங்கர் நாராயண் ( கேபிள் சங்கர்)
Post a Comment
7 comments:
உங்கள் புலம்பல் நன்றாக இருந்தது சங்கர்.
மிக்க நன்றி வசந்த... அது சரி ஏதாவது ஐடியா இருக்கா? இலவசமா?
இத்த தூக்கிட்டு,
"இலவசமாய் வசமானேன்" ன்னு ஒரு கதையோ கவிதயோ எழுதுங்க சார்.
//அதனால அந்த புத்தகம் நம்பர் ஓண்னா வந்திருச்சுன்னு அவங்களே ஏதேதோ சர்வேலிருந்து சொல்றாங்க.. ஆனா ஓரு விஷயம் அந்த புக் நம்பர் ஒண் வந்தது இலவசத்தினால்ன்னு அவங்களே இன்னும் சொல்றாங்க.. இல்லேன்னா அவங்க இலவசத்தை நிறுத்திருக்கணுமில்லே.. //
வணக்கம். குங்குமம் இலவசத்தை நிறுத்தி பலமாதம் ஆகிறது. இலவசத்தை நிறுத்தியபின்பும் National Readership Surveyல் தமிழில் நெ.1 ஆகவும், இந்தியாவில் நெ. 4 ஆகவும் குங்குமம் வார இதழ் விளங்குகிறது. இலவசப் பொருட்கள் மூலமாக மக்களிடையே Reading Habitஐ அதிகப்படுத்தினார்கள். Habitக்கு மக்கள் அடிமையானவுடன் இலவசத்தை நிறுத்தியும் தொடர்ந்து பத்திரிகை வாங்குகிறார்கள். உண்மையில் பத்திரிகை படிக்கும் வழக்கத்தை அதிகரித்ததற்காக குங்குமத்துக்கு நாம் நன்றி தான் சொல்லவேண்டும்.
குங்குமத்தின் தரமும் இப்போது நன்றாகவே இருக்கிறது. சாருப்ரபா சுந்தர், கவுதம், தமிழ்மகன், எம்.பி. உதயசூரியன் என்று பத்திரிகையுலக ஜாம்பவான்கள் பட்டாளம் இப்போதைய குங்குமத்தில் பணியாற்றுகிறது.
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
லக்கிலுக் சார், ஆனாலும் நான் உங்களை பாராட்டுறேன். நான் எதுக்கு உங்களை பாராட்டுறேன்னு உங்களுக்கு தெரியும். அது சரி எப்ப மீட் செய்யலாம்
நானும் உங்க ஆசிரியர் குழுவை மிகவும் மதிக்கிறேன் லக்கிலுக். நான் ஏற்கனவே உங்களுக்கு எழுதிய தனி மெயிலில் சாருப்ரபா பற்றி எழுதியிருந்தேன். எப்படியோ பத்திரிக்க வித்தா சரி அப்படியாச்சும் எல்லோருக்கும் படிக்கிற பழக்கம் வரட்டும்
தொடர்ச்சியாய் எழுதியிருக்கிறீர்கள். சற்று பிரித்து, தனித்தனி பத்தியாக எழுதினால், படிக்க எளிதாய் இருக்கும்.
வாழ்த்துக்கள்!
Post a Comment