அம்மன் கண் திறந்த கதை...

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்
சமீபத்தில் வட சென்னையில் தண்டயார்பேட்டை என்று நினைக்கிறேன்... அங்கே இருக்கும் ஓரு அம்மன் கோவிலில் இருக்கும் அம்மன் கண்திறந்ததாக செய்தி வெளியாகி ஓரே பரபரப்பாய் இருந்தது. அதற்கு அடுத்த நாளே.. பக்கத்திலிருக்கும் இன்னொரு கோவிலில் இருக்கும் அம்மன் சிலையின் கண் திறந்த்தாக கூறப்பட்டது அது பற்றி தினத்தந்தியில் படம் கூட போடப்பட்டது. ஆனால் அதற்கு அப்புறம் அதை பற்றிய எந்த விஷயமும் வரவில்லை.. ஓரு வேளை அது வெறும் புரளியா? அல்லது நடந்தது என்ன? வீணாக ஓரு விஷயம் புரளியாக கிளம்பும் ஓன்றை வெளீயிடும் பத்திரிக்கை அது பற்றிய அடுத்த செய்தியையும் வெளீயிட வேண்டிய கடமை அதற்கு உண்டல்லவோ? எனக்கென்னவோ இது பிள்ளையார் பால் குடித்த கதை மாதிரி தான் படுகிறது. என்ன செய்வது எல்லாவற்றிக்கும் மார்கெட்டிங் தேவையாய் இருக்கிறது.. அது இந்த தடவை அந்த தண்டையார்பேட்டை அம்மன் கோவிலுக்கு யார் கொடுத்த மார்கெடிங் ஐடியாவோ...?

Comments

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.