வருகிற ஜனவரி மாதம் முதல் சென்னையில் உள்ள தீயேட்டர்களில் எல்லாம் ஜம்பது ரூபாய்க்கு படம் பார்க்கலாம்ன்னு பார்தா.. வழக்கப்படி கருணாநிதி அவர்கள் குழப்படிச்சிட்டாரூ.. போனவாரம் ஓண்ணு , இந்த வாரம் ஓரு ரூல்ஸ்ன்னு மாத்திட்டாரு. அதனால இனிமே நாம வழக்கப்படி அதே நூறு ரூபாய் கிட்ட கொடுத்து தான் படம் பார்கணும். சத்யம், மாயாஜால் போன்ற நல்ல முறையில் பராமரிக்கபடும் தியேட்டர்களுக்கு இந்த விலை கொடுத்தாலும் தகும், ஆனால் இந்த மாற்றியமைக்கப்பட்ட சட்டத்தினால். டூபாக்கூர் தியேட்டரான... ரோகிணி போன்ற காம்ளெக்ஸ் ஏற்கனவே அநியாயமாய் படம் பார்க்கும், பார்வையாளரூக்கு எந்த வசதியையும் செய்யாமல், ஏன் எல்லா தியேட்டரும் டிடிஎஸ்ஸூக்கு மாறிக் கொண்டிருக்க, சென்னையின் முக்கிய கலெக்ஷன் செண்டரான அந்த தியேட்டரில் நல்ல ஓளி, ஓலி அமைப்பு கிடையாது, சீட் பற்றி கேட்டகவே வேண்டாம்.. கருணாநிதி அவர்க்ள் போட்டிருக்கும் புதிய சட்டத்தினால் நிறைய சம்பாதிக்க போகிறவர்க்ள அரசு அதிகாரிகள்தான் எப்படியும் இவர்கள் காம்ளெக்ஸ் தியேட்டர் என்று சொல்லி புதிய விலையை வைக்க போகிறார்கள் அனால் வச்தியை பெருக்காமல் அந்த விலையை வைக்க, கட்டிங் போகப் போவது உறுதி, தயவு செய்து சட்டங்களை போடும் போதே சரியாக போடுவது நல்லது. அல்லது போட்டபின் மாற்றியமைக்காமல் அதை அமுல்படுத்தி, அதில் மாற்றங்க்ள் வேண்டுமெனில் சரி செய்வதே சரி என்று என் எண்ணம். ம்ஹூம்... ஜம்பது ரூபாய்க்கு சத்யமில் சினிமா.. கானல் நீர்தான்...
Post a Comment
No comments:
Post a Comment