Posts

Showing posts from 2007

புதிய குறும்படம் "ஆக்ஸிடெண்ட்"

நான் சமீபத்தில் இயக்கிய குறும்படம் "ஆக்ஸிடெண்ட்" என்கிற இந்த குறும் படத்தை என்னுடய இணைய தளத்தில் ஏற்கனவே.. வெளீயிட்டுள்ளேன். பெறுவாரியான இணையதள மக்களிடம் அதன் வரவேற்பை அறியவே.. அந்த குறும் படத்தை இங்கே வெளியிடுகிறேன். அதற்கான லிங்க் இதோ... http://www.shortfilmindia.com/ShortAccident.html

என்ன எல்லாரூம் சிவாஜி பாத்தாச்சசா...?

சிவாஜி.. பார்த்தாச்சா..? Friday June 22nd 2007, 9:58 am Filed under: Uncategorized தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகில் உள்ள 25 நாடுகளில் ஓரே சமயத்தில் சங்கரின் ‘சிவாஜி” படம் ரீலீஸ் ஆகியிருக்கிறது. கடந்த 14ஆம் தேதி முதலே.. தமிழ்நாட்டில் எல்லார் வாயிலும் “சிவாஜி டிக்கட் வாங்கிட்டியா?? வாங்க்கிட்டியா? என்ற கேள்வி தான். அப்படி ஓரு சிவாஜி ஜூரம். உலகமே எதிர்பார்க்க வைத்த ஏவிஎம். ரஜினி, சங்கர், ஏ.ஆர். ரகுமான். போன்ற ஜாம்பவான்கள் சேர்ந்திருக்கும் படம், என்வே எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும், எங்கே முதல் நாளே படத்தை பார்க்காவிட்டால் எதிர்படும் நண்பர்களிடம் அவமானப்பட வேண்டுமே என்று.. முதல் நாளே.. எனக்கு தெரிந்த தியேட்டர்களை காண்டேக்ட் செய்து, ஓரு வழியாக, 10 டிக்கெட்டை வாங்கிவிட்டேன்.. அந்த பத்து டிக்கெட்டுக்கு நான் நீ என்று போட்டி வேறு. நான் சிலருக்கு டிக்கெட் கொடுக்க முடியாமல் போக, அதனால் சில நண்பர்கள், விரோதியாக, பாவிக்க, ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் எதிர்பார்பெல்லாம், என்னுடய டிக்கெட்டை அவர்களீடம் கொடுத்தாவது, என் நட்பை நிருபிக்க, பிரயத்தனம் செய்தார்கள். இவ்வளவு, பரபரப்புக் கிடையே, ஓரு வழியா...

பார்த்த முதல் படம் எது?

எல்லாரும் படம் பார்க்கிறோம், ஆனால் முதல் முதலாக பார்த்த திரைப்ப்டம் எது என்று பலருக்கும் ஞாபகம் இருக்குமா?. எனக்கு நினவு தெரிந்து என் தாத்தா ஜெமினி லேபில் செக்கூரிட்டி ஆபிசாராக இருந்த போது, அங்கே இருக்கும் பிரிவியூ தியேட்டரில் சிவாஜி கணேசன் நினத்த "அந்தமான் காதலி" என்ற பட்த்தை பார்த்ததை அங்கிங்கே ப்ளாஷ் கட் போல, கலரிலும், ப்ளாக் & வொயிட்டிலும் அந்த படத்தை எப்போதாவது டிவியில் பார்க்கும்போது, வரும். திரும்ப திரும்ப யோசித்து பார்த்ததில், எம்.ஜி.ஆர். ந்டித்த, "பல்லாண்டு வாழ்க" என்ற திரைப்படமும் வ்ந்து, வந்து, போகிறது, ஆக இந்த இரண்டில் ஓன்றைத்தான் நான் பார்திருக்க வேண்டும், அப்போது எனக்கு இந்த் இரண்டில் பிடித்த படம்,, வழக்கம்போல் "பல்லாண்டு வாழ்க" தான் இது போல் நீங்கள் பார்த்த், முதல் படத்தை பற்றி ஏதாவது சொல்லலாமே..

டாஸ்மாக்கும் DDயும்

அன்று நான் எழுதிய பிளாக்கையே இப்போது சட்டமாக இயற்றப் போகிறார்க்ள் என்பதை நினைக்கும் போது, எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. டாஸ்மாக் கடைகளீன் வாசலில் நிற்கும் வண்டிகளை பிடித்தாலே, குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை, கட்டுப்படுத்த முடியும் என்ற என்னுடய ப்ளாக் http://cablesankar.blogspot.com/2006/11/blog-post_23.html நீங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்

முனி அடிச்சிருச்சு....

ஆமா.. முனிதான் அடிச்சிரூச்சு, முனி படம் சாயங்காலம் ஆனா பேய்க்கு பயப்படும் ஓருவனின் கதை. அப்படி பேய்க்கு பயப்படும் ஓருவன் அவர்தம் குடுப்பத்தோடு பேய் வசிக்கும் வீட்டிற்கு குடியேறுகிறார்கள், அங்கிருந்து ஆரம்பிக்கிறது கதை. வழக்கமா ஹீரோவென்றால் எல்லாரையும் அடித்து உதைத்து, எதற்கும் பயப்படாதவனாய் இருப்பான் ஆனால் இதில் கதாநாயகன் ஆறு மணியானால் வெளியே போகப் பயப்படுகிறான்.ஆனால் லாஜிகில்லாமல் நேரே கதாநாயகியின் வீட்டிற்குப் போய் அவளின் பெற்றோர்களிடம் உங்கள் பெண்ணை காதலிப்பதாய் சொல்லி உடனே அவர்கள் எல்லாம் சம்மதிப்பதும், படு தமாஷ். பேயை காட்டும்முன் அதற்கான பில்டப்புகள் அமர்களம். பேயின் அட்டகாசங்களும், வீட்டிலேயே குடியிருக்கும் ஓரு குடும்பத்தில் பேய் பிடித்ததாக நடித்து கொண்டிருக்கும் பெண், குட்டி சாத்தான் போலிருக்கும் வாட்சுமேன், பின்பக்கத்தில் குடியிருக்கும் பெரிய பொட்டு கிழவி, என்று படத்தின் முதல் பாதி, படு சுவாரஸ்யம், பேயே வராமல் படு சுவாரஸ்யமாயிருந்த படம், பேய் வந்ததும், அத்தனை பில்டப்புகளூம் வடிந்து போய் வெறும் காத்தாய் போய்விட்டது தான் வருத்தம். அதிலும் பேயாய் வரும் ராஜ்கிரண் கேரக்டர் படு அ...

தரிசனம்

Image
என் மனைவியின் தொந்தரவு தாங்காமல் அந்த இடத்திற்கு போக பயணப்பட்டேன். எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை. எனக்கு நம்பிக்கையுமில்லை. ஆனால் அதை என் மனைவியிடம் திணிக்க எனக்கு மனமில்லை. அவள் சொன்ன இடம் ஓரு பிரபலமான சாமியாரின் ஆசிரமம். அங்கே போய் அவரை தரிசித்திவிட்டு வந்தால் எல்லா கவலைகளும், நோய்களும் போய்விடும், மன அமைதி கிடைக்குமென்றாள். அவளூக்கு என்ன அமைதி கெட்டு போய்விட்டதென்று கேட்க நினைத்து, கேட்காமல் சரி போகலாம் என்றேன்.பல நூறு கிலோமீட்டர் தூரம் பயணம். அங்கே போய் சேரும் போது இரவாகிவிட்டது. அதனால் அருகேயிருந்த ஓரு லாட்ஜில் அறையெடுத்து தங்கினோம். இரவு குளிர் அதிகமாக இருந்தது. போர்வையோடு சேர்த்து என் மனைவியை அணைத்து போர்த்திக் கொள்ள எத்தனித்தேன். அவள் சடாரென்று எழுந்து "என்ன நீங்கள் .... உங்க மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க... நாம என்ன ஹனிமூன் டூருக்கா வந்திருக்கோம்.. தள்ளிப்படுங்க..." என்று கட்டிலை விட்டு இறங்கி வெறும் தரையில் போய் படுத்தாள். நான் அவளை பார்த்து "சரி நான் ஓண்ணும் செய்யமாட்டேன்... மேல வந்து படு..." என்ற குரலை சற்றும் சட்டை செய்யாமல் என் குரல் கேட்காதது ப...

டி.ஆருக்கு பயந்த விஜய்

டி.ஆருக்கு பயந்த விஜய் இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று விளம்பரபடுத்தப்பட்ட, டி.ஆரின் "வீராசாமி" பொங்கலுக்கு வரவில்லை .ஏன் என்று விசாரித்தபோது, வெளிப்பட்ட ரகசியம் இதுதான். அதாகப்பட்டது. டி.ஆரின் வீராசாமி... தன்னுடய போக்கிரி படத்துடன் வெளியானால் தன்னுடய படத்தின் வசூல் பாதிக்குமென்று கருதி தனிப்பட்ட முறையில் டி.ஆரிடம் கோரிக்கை வைத்து படத்தை தள்ளிப்போட வைத்துள்ளதாக தகவல். ஜோக்.. ஆப் த டவுன்

குறைந்த சினிமா கட்டணமும், கானல் நீரூம்...

'கேபிள் சங்கரின்' பக்கங்கள் வருகிற ஜனவரி மாதம் முதல் சென்னையில் உள்ள தீயேட்டர்களில் எல்லாம் ஜம்பது ரூபாய்க்கு படம் பார்க்கலாம்ன்னு பார்தா.. வழக்கப்படி கருணாநிதி அவர்கள் குழப்படிச்சிட்டாரூ.. போனவாரம் ஓண்ணு , இந்த வாரம் ஓரு ரூல்ஸ்ன்னு மாத்திட்டாரு. அதனால இனிமே நாம வழக்கப்படி அதே நூறு ரூபாய் கிட்ட கொடுத்து தான் படம் பார்கணும். சத்யம், மாயாஜால் போன்ற நல்ல முறையில் பராமரிக்கபடும் தியேட்டர்களுக்கு இந்த விலை கொடுத்தாலும் தகும், ஆனால் இந்த மாற்றியமைக்கப்பட்ட சட்டத்தினால். டூபாக்கூர் தியேட்டரான... ரோகிணி போன்ற காம்ளெக்ஸ் ஏற்கனவே அநியாயமாய் படம் பார்க்கும், பார்வையாளரூக்கு எந்த வசதியையும் செய்யாமல், ஏன் எல்லா தியேட்டரும் டிடிஎஸ்ஸூக்கு மாறிக் கொண்டிருக்க, சென்னையின் முக்கிய கலெக்ஷன் செண்டரான அந்த தியேட்டரில் நல்ல ஓளி, ஓலி அமைப்பு கிடையாது, சீட் பற்றி கேட்டகவே வேண்டாம்.. கருணாநிதி அவர்க்ள் போட்டிருக்கும் புதிய சட்டத்தினால் நிறைய சம்பாதிக்க போகிறவர்க்ள அரசு அதிகாரிகள்தான் எப்படியும் இவர்கள் காம்ளெக்ஸ் தியேட்டர் என்று சொல்லி புதிய விலையை வைக்க போகிறார்கள் அனால் வச்தியை பெருக்காமல் அந்த விலைய...