Posts

Showing posts from March, 2007

முனி அடிச்சிருச்சு....

ஆமா.. முனிதான் அடிச்சிரூச்சு, முனி படம் சாயங்காலம் ஆனா பேய்க்கு பயப்படும் ஓருவனின் கதை. அப்படி பேய்க்கு பயப்படும் ஓருவன் அவர்தம் குடுப்பத்தோடு பேய் வசிக்கும் வீட்டிற்கு குடியேறுகிறார்கள், அங்கிருந்து ஆரம்பிக்கிறது கதை. வழக்கமா ஹீரோவென்றால் எல்லாரையும் அடித்து உதைத்து, எதற்கும் பயப்படாதவனாய் இருப்பான் ஆனால் இதில் கதாநாயகன் ஆறு மணியானால் வெளியே போகப் பயப்படுகிறான்.ஆனால் லாஜிகில்லாமல் நேரே கதாநாயகியின் வீட்டிற்குப் போய் அவளின் பெற்றோர்களிடம் உங்கள் பெண்ணை காதலிப்பதாய் சொல்லி உடனே அவர்கள் எல்லாம் சம்மதிப்பதும், படு தமாஷ். பேயை காட்டும்முன் அதற்கான பில்டப்புகள் அமர்களம். பேயின் அட்டகாசங்களும், வீட்டிலேயே குடியிருக்கும் ஓரு குடும்பத்தில் பேய் பிடித்ததாக நடித்து கொண்டிருக்கும் பெண், குட்டி சாத்தான் போலிருக்கும் வாட்சுமேன், பின்பக்கத்தில் குடியிருக்கும் பெரிய பொட்டு கிழவி, என்று படத்தின் முதல் பாதி, படு சுவாரஸ்யம், பேயே வராமல் படு சுவாரஸ்யமாயிருந்த படம், பேய் வந்ததும், அத்தனை பில்டப்புகளூம் வடிந்து போய் வெறும் காத்தாய் போய்விட்டது தான் வருத்தம். அதிலும் பேயாய் வரும் ராஜ்கிரண் கேரக்டர் படு அ...