Posts

Showing posts from 2008

எ.வ.த.இ.ம.படம் -Slumdog Millionaire

Image
படம் பார்த்துட்டு ஒரு இரண்டு மணிநேரத்துக்கு என் மனம் முழுவதும் ஜமால் மாலிக், மாலிக், லதிகா என்றே உழன்று கொண்டிருந்தது. What a movie yaar..? படத்தின் கதை ஜமால் மாலிக் என்கிற 18வயது கால்சென்டரில் டீ பாய்யாக வேலை செய்யும், ஒருவன் நமது கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எல்லா கேள்விகளுக்கும் சரியான் பதிலை சொல்லி அசத்துகிறான். நிகழ்ச்சியை நடத்தும் அனில் கபூருக்கு ஒரு சாதாரண குப்பத்தில் அனாதையாய் வளர்ந்த இவனுக்கு எப்ப்டி இந்த பதில்கள் தெரியும், இதற்கு பின்னால் ஒரு சதியிருக்கும் என்று சந்தேகப்பட்டு, கடைசி கேள்வியின் போது நிகழ்ச்சியின் நேரம் முடிய, அன்று இரவு அவனை போலீஸில் பிடித்து கொடுக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் அவனை டார்சர் செய்யும் காட்சியிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. டார்சரின் முடிவில், தனக்கு எவ்வாறு அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தெரிந்தது என்று தன் வாழ்கையை சொல்கிறான். முஸ்லிம்கள் அதிகமாய் வசிக்கும் மும்பை குப்பத்தில் இந்துக்கள் கலவரத்தில் தன் தாயை இழந்து அனாதையான சகோதரர்கள், அவர்களுடன் சேரும் லதிகா என்ற சிறுமி, இவர்கள் மூவரும் ஒரு கொடிய மனமுள்ள குழந்தைகளை வைத்து, அவ...

King - Telugu Cinema Review

Image
ராஜ குடும்பத்தின் மகன் கிங் என்கிற ராஜா சந்திரபிரதாப் வர்மா(நாகார்ஜூன்).. தன் தந்தையின் இறப்புக்கு பிறகு, குடும்ப பிஸினெஸ்ஸை எடுத்து நடத்துக்கிறார். வீட்டிற்குள்ளேயே அவருக்கு எதிரிகள் இருக்க, ஆஸ்திரேலியாவில் அவரின் பரம எதிரியான சுவப்னா(மம்தா மோகன்தாஸ்)வால் கொல்லபடுகிறார். இப்போது ஹைதராபாத்தில் பொட்டு சீனு என்கிற பெரிய ரவுடி அசல் கிங்கை போலவே இருக்க, அவர் மிகப் பெரிய பாடகியாக வேண்டும் என்கிற ஆசையில் இருக்கும் ஷரவணியின் (திரிஷா)மேல் காதல் கொள்கிறார். திரிஷாவிடம் தான் ஒரு ரவுடி என்று சொல்லாமல் சாப்ட்வேர் இன்ஜினியர் என்று உட்டாலக்கடி அடித்து மடிக்கிறார். ஒரு கட்டத்தில் கிங்கின் இடத்தில் பொட்டு சீனு இருக்க வேண்டிய கட்டாயம் ஆகிறது. கிங்கை கொலை செய்தது யார்..? அதன் பிண்ணனி என்ன? என்று படம் முடிகிறது. நாகார்ஜூனுக்கு ஏற்கனவே பல படங்களில் செய்த கேரக்டர்தான். மனுசன் இன்னும் கூட இவ்வளவு யங்கா இருக்காறே..? அதிலும் பாடல்கள் காட்சிகளில் சும்மா சூப்பர். திரிஷா வரவர சப்பி போட்ட மாங்கொட்டை கணக்காய் இருக்கிறார். படத்தில் வருகிறார், சிரிக்கிறார், போகிறார். பொட்டு சீனுவாகவும், திரிஷாவிடம் சாப்ட்வேர் இன்ஜின...

ஸ்டேட் ஃபர்ஸ்ட்...

Image
D.சரண்யா. புவியியல் பாடத்தில் 200/195 2006ல் எடுத்தவர். எனக்கு பல நாட்களாய் ஒரு சந்தேகம். வருடா வருடம் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் பத்தாவது, மற்றும் +2 தேர்வுகளில் ஸ்டேட் பர்ஸ்டாக வரும் மாணவ, மாணவிகள் பலரும் தாங்கள் எப்படி முதல் மதிப்பெண் பெற்றார்கள், தங்களுடய பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்கள், பள்ளி அவர்களுக்கு எவ்வாறு துணை நின்றது என்பதையும் சொல்வார்கள். அதிலும் மாணவிகள், தங்கள் எதிர்காலத்தில் டாக்டர் ஆகப் போறேன்.. இன்ஜினியர் ஆக போறேன்னு தங்கள் கனவுகளை சொல்வார்கள். அவங்க அப்படி சொல்லும் போது அவங்க கண்ல தெரியில கனவுகளும், அவர்களின் உழைப்புக்கான வெற்றி கிடைச்ச சந்தோசம் நிஜம். ஆனா வாழ்க்கை எல்லாருடய கனவுகளை நிஜப்படுத்துவதில்லை.. சென்ற வருடம் ஸ்டேட் பர்ஸ்ட் வந்த மாணவிகள் ரம்யா, ரூபிகா சில வருடங்களூக்கு முன் ஸ்டேட் பர்ஸ்ட் வந்த மாணவ, மாணவிகளின் கனவுகள் நிறைவேறிச்சா.. பத்தாவதுல ஸ்டேட் பர்ஸ்ட் வந்தவங்க.. +2வில ஏன் அந்த அளவுக்கு ஸ்கோர் பண்ண முடியல.. அட்லீஸ்ட் ஸ்கூல் பர்ஸ்டாவது வந்தாங்களா..? +2வில ஸ்டேட் பர்ஸ்ட் வந்தவங்க.. இப்ப என்ன பண்ணுறாங்க? கடந்த பத்து வருடங்கள்ல உங்களுக்கு தெரிஞ்சு யார...

கடேசி.. கடேசி.. பதிவர் சந்திப்பு

Image
கடேசி..கடேசி பதிவர் சந்திப்பு பற்றி எழுதலாம்னு பாத்தா.. அதுக்குள்ள பல பேர் எழுதிட்டாங்க.. அந்த காண்டுல, யார்.. யார் வந்தாங்கன்னு கண்டுபிடிக்க, போட்டோ பிடிச்சு வச்சிருக்கேன்.. கண்டுபிடிச்சுக்க திறமையிருக்கிறவங்க.. கண்டுபிடிச்சுக்கங்க.. நம்ம போன்ல இவ்வளவுதான் வந்திச்சு..இதவிட கேவலமா படமெடுக்க முடியாதுன்னு படத்தை பத்தி திட்டணும்னா பின்னூட்டமிட்டு திட்டவும். இல்லாட்டா ஓட்ட குத்திட்டு போகவும்.. தராசு, லக்கிலுக் கார்க்கி, ஜ்யோவரம்சுந்தர், லக்கிலுக் லக்கிலுக், கார்க்கி,பாலா,குகன்,.. குகன், காவேரிகணேஷ், அன்பு,(மதுரையிலிருந்து வந்த பதிவர்கள்) வாசகர்கள்,ஸ்ரீவத்சன் டோண்டு, தாமிரா, அதிஷா, இரண்டுபேர் இடுக்கில் அத்திரி, மற்றும் பலர்...(பேர் தெரியலைன்னா..அப்படித்தான்.) அக்னிபார்வை, நர்சிம், முரளிகண்ணன். பதிவர் சந்திப்பு பதிவுகள்.. அக்னிபார்வை டோண்டு குகன் அத்திரி உங்க ஓட்டை தமிழ்மணத்துலேயும், தமிலிஷிலும் குத்துங்க எசமான்.. குத்துங்க...

கடைசி பதிவர் சந்திப்பு - டிசம்பர் 27-2008

Image
’லக்கிலுக்கின் புத்தக வெளியீட்டு விழா பார்ட்டி.ஸ்பான்சர்டு பை அதிஷா.. அனைவரும் வரவும் 27 ஆம் தேதி சென்னை பதிவர் சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் பதிவர் சந்திப்பு அழைப்பிதழ் நாள் : டிசம்பர் 27, சனிக்கிழமை இடம் : நடேசன் பூங்கா, தியாகராய நகர் மாலை 5 மணி கலந்து கொள்பவர்களுக் கிடையேயான பரஸ்பர கும்மாங்குத்துகள் மாலை 5.15மணி மணமான ஆண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் – அதற்க்கான நடைமுறை சாத்தியமான தீர்வு குறித்த விவாதம் நடைபெறும். விவாதத்தை தாமிரா தன் தங்கமணியின் துணையுடன் தைரியமாய் துவக்கி வைக்க பதிவர்களுக்கு இடையே துக்கயுரையாடல் நடைபெறும். டோண்டு ராகவன்,முரளிகண்ணன், கேபிள் சங்கர்,(யாருய்யா என்னை கேட்கமா பேரெல்லாம் போட்டது) அத்திரி போன்ற அனுபவசாலிகள் விவாதத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். திருமணமாகாமல் இருக்கும் அனுபவசாலிகளும் கலந்து கொள்ளலாம். மாலை 5.45மணி வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்த மாதிரியான கூட்டணிகள் அமைய வாய்ப்புள்ளது?. அக்கூட்டணிகளின் பலம்/பலவீனம், அமையப் போகும் புது அரசில் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கு என்ன? என்பது பற்றிய கலந்துரையாடல். பாலபாரதி,லக...

Gajini - Hindi film Review

Image
நாமெல்லாம் ஏற்கனவே தமிழில் பார்த்த படம் தான் என்றாலும் இந்தியில் அதிலும் அமீர்கான் வேறு நடித்திருப்பதால் பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம். சென்னையின் எல்லா தியேட்டர்களிலும் ஹவுஸ்புல்.. மும்பையில் மிக்ப் பெரிய செல் கம்பெனியின் முதலாளி சஞ்சய் சிங்கானியாவுக்கு ஷார்ட் டைம் மெமரி லாஸ்.. ஆனால் அவர் ஒவ்வொருவராய் தேடி, தேடி கொல்கிறார். ஏன்..? எதற்காக..? என்று இண்டரஸ்டாக கதை சொல்லியிருக்கிறார்கள். அமீர்கானின் உழைப்பு, அவரின் உடலில் மட்டுமல்ல, நடிப்பிலும் தெரிகிறது. அதிலும் அவரின் குள்ளமான உருவத்தை வைத்து கொண்டு, திரையில் ஆஜானுபாகுவான உடலமைப்பு உள்ளவர்களையெல்லாம் தூக்கி பந்தாடுவதை பார்க்கும் போது, நம்மால் நம்பாமல் இருக்க முடியவில்லை.. அந்த அளவிற்கு அவரின் பாடி லேங்குவேஜ். அதே போல் அவருக்கு மெமரி லாஸின் போது நடக்கும் நடை, பார்வைகள், அடிபட்ட புலியாய் சீறும் சீற்றம், படத்தில் அவருக்கு வசனங்கள் மிக குறைச்சல்.. ஆனால் அவர் பேசும் விஷயங்கள் நிறைய.. அசின் இனிமே இந்தி மார்கெட்டில் பிசின் போல் ஒட்டிக் கொள்வார் என்று நினைக்கிறேன். மீண்டும் தமிழ் கஜினி போலவே இம்ப்ரஸிவான நடிப்பு.. அம்மணி சும்மா பின்னி பெடலெடுத்தி...

பட வரிசை “பத்து”

Image
10- எல்லாம் அவன் செயல் தெரிஞ்சோ தெரியாமையோ.. பி..சி.. சென்டர்களில் தப்பி தவறி தத்தளித்து தலை தெரிகிறது. 9.சூர்யா இது எல்லாம் இந்த ஒரு வாரத்துக்குதான் லிஸ்டுல இருக்கும். வேற வ்ழி ரிலீஸ் ஆகியிருச்சு இல்ல.. 8.தெனாவட்டு சன் டிவி மட்டும்தான் ஹிட்.. ஹிட்டுன்னு கூவிட்டிருக்காஙக்.. இது ஒரு சூப்பர் ப்ளாப் படம்.. 7.பூ படம் என்னவோ நல்லாயிருக்குன்னு எல்லாரும் பேசிக்கிட்டாலும்.. வருமானம் ஒன்ணும் சொல்லிகிறபடியா இல்ல்.. பல இடங்களில் தியேட்டர்களிலிருந்து படத்த எடுத்துட்டாங்க.. 6.பொம்மலாட்டம் படத்தை ஒரு விதமான நல்ல ஒப்பீனியன் இருந்தாலும், இந்தி டப்பிங் படம் பாக்கிறா மாதிரி இருக்கிறதுனால சென்னை தவிர மற்ற இடங்களில் வருமானம் ஒன்ணுமே இல்லையாம் 5 வாரணம் ஆயிரம் ரிலீஸான டயத்துல பெரிய ரிப்போர்ட் இல்லாட்டியும் பெரும்பாலான ஏ செண்டர் ஏரியாக்களில் நல்ல வருமானம்.. தப்பிச்சிரும்னு சொல்லிகிட்டிருக்காங்க.. படத்தோட வருமானத்துக்கு முக்கிய காரணம் ஹாரிஸ்.. 4 திண்டுக்கல் சாரதி சன் டிவி உபயத்தால் சுமாரான ஓப்பனிங்.. ஆனால் படத்தை பற்றி அவ்வளவாக நல்ல ரிப்போர்ட் இல்லை. 3 அபியும் நானும் படத்தை பத்தி நல்ல அபிப்ராயம் இருந்தாலும், ...