Posts

Showing posts from May, 2008

டாஸ்மாக் அநியாயம்

சமீபத்திய தினசரியில் டாஸ்மாக்கின் ஓரு நாள் வருமானம் முப்பது கோடியை தொடுகிறது என்றது.அரசாங்கம் நடத்தும் கடைகளில் MRP ரேட்டில் தான் விற்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. ஆனால் எல்லா டாஸ்மாக் கடைகளிலும் ஓவ்வோரு பீர் பாட்டிலுக்கும் 2 முதல் 5 வரை அவர், அவர் இஷ்டப்படி விற்கிறார்கள்.கேட்டால், கூலாக தருவதால் அந்த ரேட் என்கின்றனர். ஓவ்வொரு முறையும், நான் போராடித்தான் அந்த 2 ரூபாயோ அல்லது 5 சண்டை போட்டு வாங்கிவிடுவேன். இதை பார்க்கும் எந்த கஸ்டமரும் அதை பற்றியெல்லாம் கவலை இல்லாமல் அவர்கள் சொல்லும் விலைக்கு வாங்கிக் கொண்டு போகிறார்கள். அரசு ஓவ்வொரு கடைக்கும் மின்சாரக் கட்டணத்திலிருந்து எல்லாவிதமான செலவுகளையும், ஏற்கிறது. அது போக, பார் லீசுக்கு எடுக்கும் கடைக்காரரிடமிருந்து ப்ரீசரை வாங்கி வைத்து விடுகிறார்கள். பின் எத்ற்காக நாம் அவர்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும், அது போக ஓவ்வோரு கடைக்கும், சேல்ஸ் கமிசன், சரக்கு கைமாற்றும், போது அது உடைந்துப் போனால் அதற்கான நஷ்டம் எல்லாம் போகத்தான் அரசுக்கு போகிறது. சுமாராக ஓவ்வோரு கடையிலும் அதுவும் வெயில் காலத்தில் குறைந்தது 500 பாட்டில் பீர் விற்கிறது என்ற...