டாஸ்மாக் அநியாயம்

சமீபத்திய தினசரியில் டாஸ்மாக்கின் ஓரு நாள் வருமானம் முப்பது கோடியை தொடுகிறது என்றது.அரசாங்கம் நடத்தும் கடைகளில் MRP ரேட்டில் தான் விற்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. ஆனால் எல்லா டாஸ்மாக் கடைகளிலும் ஓவ்வோரு பீர் பாட்டிலுக்கும் 2 முதல் 5 வரை அவர், அவர் இஷ்டப்படி விற்கிறார்கள்.கேட்டால், கூலாக தருவதால் அந்த ரேட் என்கின்றனர். ஓவ்வொரு முறையும், நான் போராடித்தான் அந்த 2 ரூபாயோ அல்லது 5 சண்டை போட்டு வாங்கிவிடுவேன்.

இதை பார்க்கும் எந்த கஸ்டமரும் அதை பற்றியெல்லாம் கவலை இல்லாமல் அவர்கள் சொல்லும் விலைக்கு வாங்கிக் கொண்டு போகிறார்கள்.

அரசு ஓவ்வொரு கடைக்கும் மின்சாரக் கட்டணத்திலிருந்து எல்லாவிதமான செலவுகளையும், ஏற்கிறது. அது போக, பார் லீசுக்கு எடுக்கும் கடைக்காரரிடமிருந்து ப்ரீசரை வாங்கி வைத்து விடுகிறார்கள். பின் எத்ற்காக நாம் அவர்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும், அது போக ஓவ்வோரு கடைக்கும், சேல்ஸ் கமிசன், சரக்கு கைமாற்றும், போது அது உடைந்துப் போனால் அதற்கான நஷ்டம் எல்லாம் போகத்தான் அரசுக்கு போகிறது. சுமாராக ஓவ்வோரு கடையிலும் அதுவும் வெயில் காலத்தில் குறைந்தது 500 பாட்டில் பீர் விற்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஓரு பாட்டிலுக்கு 2 ரூபாய் என்ற வீதம் 500 பாட்டிலுக்கு 1000 ரூபாய் கிடைக்கிறது. ஓரு நாளைக்கு 1000 ரூபாய் என்றால் 30 நாளைக்கு 30000 ரூபாய். அது தவிர அவர்க்களூக்கு சம்பளம் , மற்றும் அலவுன்ஸுகள், இத்யாதி, இத்யாதி.. ஓரு ஜடி கம்பெனி வேலையில் உள்ள ஓரு வர் சம்பாதிப்பதை விட இவர்கள் அதிகமாகவே சம்பாதிக்கிறார்கள். கேட்டால் "அவர்கள் சொல்வது நாங்க என்ன இதை வச்சுகிட்டு என்ன வீடா கட்டப்போறோம்.. என்று கேட்கிறார்கள். நீங்களே சொல்லுங்க வீடு கட்டுவாங்களா.. இல்லையா?

Comments

hi friend i am also faced the same problem. ref:http://sathisht.blogspot.com/2008/05/beyond-mrp-what-can-we-do.html

this will help to u...
tasmac government MRP list

http://tasmac.tn.gov.in/Mrp.htm
Just for Laugh said…
ஆஹா.. அவங்க வூடு கட்டுவாங்களோ இல்லையோ.. நீங்க உங்கள் க்ளாஸிக் பதிவுகளில் ஊடு கட்டிருக்கீங்க தல.

உங்கள் பழைய க்ளாஸிக் பதிவுகளை தூசு தட்டி வாசிச்சுட்டுருக்கேன்.

ஹி ஹி..

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.