தாம்-தூம்- திரை விமர்சனம்

இயக்குனர் ஜீவா இருந்திருந்து அவரின் படத்தை பார்த்திருந்தால் அவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டார். மிக அருமையாக வந்திருக்க வேண்டிய ஓரு திரில்லர் படத்தை, போட்டு குழப்பி,தவறான காஸ்டிங்கினாலும், திரைக்கதையினாலும் சொதப்பிவிட்டிருப்பது பரிதாபம். சென்னையின் ஓரு பிரபல மருத்துவ்ரின் மகனான கெளதம் சுப்ரமணியம் ஓரு கான்பரன்ஸ் விஷயமாய் ரஷ்யா போக, அங்கே நட்பாகும் ஓரு ரஷ்ய பெண் அவரது அறையில் கொல்லப்பட, அதனால் அவர் கைதாக, இங்கே அவரின் காதலி பொள்ளாச்சியில் திருமணத்திற்காக காத்திருக்க, அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை. படிக்கும் போது மிக இண்ட்ரஸ்டான ஓரு திரில்லர் திரைக்கதைக்கான அத்தனை அம்சங்களும் இருந்தும், படம் ஆமை வேகத்தில் நகர்கிறது. ரஷ்யாவிற்கும், பொள்ளாச்சிக்குமாய் அலைபாயும், திரைக்கதை படத்தின் வேகத்தை கூட்டுவதற்கு பதிலாக, மேலும் சுருதியை குறைக்கிறது. பொள்ளாச்சி காதலியாக, கங்கணா ராவத், கொஞ்சமும் பொறுந்தாத டிசைனர் அவுட்பிட்களுடன் கிராமத்து சுட்டிப் பெண்ணாக வருவதும், அவரின் அப்பா ஏதோ மிகப் பெரிய ஆள் என்பது வசனதிலேயே பில்டப் செயவதும், ரவியின் மாமாவிற்கும் அவருக்கும் ஏதோ ஓரு பிரச்சனை என்பது போல பில்...