எதை எதிர்பார்த்து இவ்வளவு கூட்டம்? ஹீரோ ஹீரோயின் இல்லாத படம் என்று விளம்பரபடுத்தியதாலா? அல்லது வித்யாசமான படமாய் இருக்கும் என்ற எண்ணத்தினாலா? என்று குழம்பியவாறே நான் படம் பார்க்க ஆரம்பித்தேன்.
சரியாக 10.10 ஓரு கொலை நடைபெறுகிற்து. அந்த கொலையை யார் செய்திருக்கக்கூடும் என்று பல கோணங்களில் இன்வெஸ்டிகேசன் செய்கிறார் "போஸ் வெங்கட்" ஓவ்வொருவரையும் அவர் விசாரிக்கும் போது இவர்தானோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருப்பது திரைக்கதையில் ஓரு நல்ல உத்தி,
ஆரம்பத்தில் அமெச்சூர் தனமான காட்சியமைப்புகள், நடிப்பு, என்று ஆரம்பித்த படம், சோனா வந்தவுடன் சும்மா பாட்டிலிலிருந்து விடுபட்ட தீபாவளி ராக்கெட் போல் சும்மா விர்ரென்று கிளம்புகிறது படம்.
அதுவும் ஓரு பையன் மேலே பேனை மாட்ட,கீழே சோனா விலகிய மேலாக்குடன் லஞ்சையுடன் மேலே பார்க்க, அதை பார்த்து அவள் வீட்டிலிருக்கும் ஓரு பையன் வெகுண்டெழுந்து அவனை துரத்திவிட்டு, "இனிமே உங்களுக்கு எதாவது வேணும்ன்னா என்னை கேளுங்க"ன்னு சொல்வது, அதற்கு சோனாவின் ரியாக்ஷனும்,பார்த்த பிறகு தான் எனக்கு புரிந்தது எப்படி 400 பேர்கள் தியேட்டருக்குள் வந்தார்கள் என்று.
ஆனால் இதையெல்லாம் மீறீ படத்தின் திரைக்கதையில் இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பாகி, யாரும் எதிர்பார்க்காத வகையில் முடிகிறது.
ஓரு நல்ல திரில்லர் அவர்கள் எடுத்த முறையினால் B கிரேட் திரில்லராகிறது.
படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் சோனாவுக்கு ஓரு ஸ்பெஷல் "ஜே" போடுங்க...
Post a Comment
2 comments:
//லஞ்சையுடன்//
அண்ணாச்சி!
இந்த வார்த்தையை முதல் தடவையாக கேள்விப்படுகிறேன். லஞ்சையுடன் என்றால் காமத்துடன் என்று அர்த்தமா?
என்னோட போன் நம்பர் இருக்கா? மிஸ் பண்ணிட்டீங்களா? :-)
முடிஞ்சா இன்னைக்கு ஈவ்னிங் காந்தி சிலை அருகில் நடக்கும் பதிவர் சந்திப்புக்கு வாங்க. ரொம்ப நாளா உங்களை பார்த்து பேசணும்னு ஆசை!!
இந்தப் படத்துக்கெல்லாம் விமர்சனம் எழுதினீர்களா? ஹ்ஹ்ஹ்ம்ம்ம்
Post a Comment