வழக்கமா உல்டா பண்ணியே படம் எடுக்க தெரிந்த வாசுவுக்கு. சந்திரமுகி தமிழ், தெலுங்குன்னு ஹிட்டானதும் என்ன செய்யறதுன்னு புரியாம அடுத்த நல்ல கதை எதை உல்டா பண்ணலாம்னு யோசிச்சார். நம்ம ரஜினிய காலி பண்ண்றதுக்கு முன்னாடியே.. தெலுங்குல ரஜினியின் குளோஸ் பிரண்டான மோகன்பாபுவின் மகன் விஷ்ணுவை வச்சு ஓரு படம் ரிலீஸ் பண்ணிட்டாரு. அந்த பையன் பாவம் இருந்து இருந்து நாலு ப்ளாப்பை கொடுத்திட்டு அப்படி இப்படி வாசு போலவே தெலுங்குல ஓரு டைரக்டர் சீனுவைத்லான்னு ஓருத்தர் "தீ"ன்னு ஓரு படத்தை வாசுவோட சின்னத்தம்பிய உல்டா பண்ணி ஹிட் ஆகியிருக்க, வாசுக்கு எப்படி மூக்குல வேர்த்துச்சோ..உடனே அந்த பையனையும், நாகர்ஜூனையும் வைத்து, நம்ம ஜிம் கேரி நடித்த "புரூஸ் ஆல்மைட்டி" படத்தையும், தன்னோட சின்னதம்பியையும், உல்டா பண்ணி பாணிபூரிக்கு பிசைந்த உருளைகிழங்கு கணக்கா பிசைஞ்சு, அந்த பையனோட கொஞ்சம், நஞ்சம் இருந்த மார்கெட்டையும் காலி பண்ணிட்டாரு. ஏதோ வயசானாலும் யூத்தா இருக்கிற நாகார்ஜுனையும் விடலையே? நம்ம ரஜீனியை காலி பண்ணாமாதிரி கெஸ்ட் ரோல்ன்னு அவரை கூப்பிட்டு, படம் முழுக்க அவர் இருககறாமாதிரி ஏற்கனவே குழப்பி பிசைந்திருந்ததை இன்னும் குழப்பி, அய்யோ பாவம்..
தம்பி சக்தி.. உனக்கொரு சான்ஸ்.. அடுத்து அவர் உன்ன வச்சு பண்ணப்போற "பாஸிகர்" உல்டாவிலிருந்து தப்பிச்சிக்க.. ரஜினிதான் தெரிஞ்சே அந்த சான்ஸை மிஸ் பண்ணிட்டார். நீயாவது சுகுரா இருந்து. எஸ்கேப் ஆயிக்கோ..
என்னதான் இருந்தாலும் வாயும் வயிறும் வேற வேற தானே..
Post a Comment
4 comments:
எனக்கு முதலில் சுகுரா வுக்கு மொழியாக்கம் சொல்லுங்க.பிறகு வருகிறேன்.
//அப்படி இப்படி வாசு போலவே தெலுங்குல ஓரு டைரக்டர் சீனுவைத்லான்னு ஓருத்தர் "தீ"ன்னு ஓரு படத்தை வாசுவோட சின்னத்தம்பிய உல்டா பண்ணி ஹிட் ஆகியிருக்க, வாசுக்கு எப்படி மூக்குல வேர்த்துச்சோ..//
Dhee சின்ன தம்பியோட உல்டானு உங்களுக்கு யார் சொன்னா? படம் பார்த்தீங்களா?
Dheeல விஷ்ணு பயங்கர புத்திசாலி...
சும்மா அடிச்சி விடக்கூடாது...
"சுகுரா"ன்னா தெரியாதா ராஜநடராஜன்.
சென்னை தமிழில் கரெக்டான்னு அர்த்தம்
அதனான் சொன்னேனே.. Dhee படம் சின்னத்தம்பியோட உல்டான்னு. சின்னதம்பியில அவன் லூசு, இதுல அவன் கொஞ்சம் ஸ்மார்ட். அத தவிர சின்னதம்பிக்கும் dheeக்கும் கதையில் அங்கங்கே சின்ன சின்ன மாற்றங்கள்.நானும் அந்த படத்த பார்த்தேன்.
Post a Comment