Thottal Thodarum

Aug 19, 2008

டாஸ்மாக் கொள்ளை

சமீபத்திய தினசரியில் டாஸ்மாக்கின் ஓரு நாள் வருமானம் முப்பது கோடியை தொடுகிறது என்றது.அரசாங்கம் நடத்தும் கடைகளில் MRP ரேட்டில் தான் விற்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. ஆனால் எல்லா டாஸ்மாக் கடைகளிலும் ஓவ்வோரு பீர் பாட்டிலுக்கும் 2 முதல் 5 வரை அவர், அவர் இஷ்டப்படி விற்கிறார்கள்.கேட்டால், கூலாக தருவதால் அந்த ரேட் என்கின்றனர். ஓவ்வொரு முறையும், நான் போராடித்தான் அந்த 2 ரூபாயோ அல்லது 5 சண்டை போட்டு வாங்கிவிடுவேன். இப்போதெல்லாம் அவர்கள் பீருக்கு மட்டுமில்லாமல் மற்ற வகைகளூக்கும் 2 முத்ல் 5 ரூபாய் வரை ஏற்றி விற்கிறார்கள். கேட்டால் பாட்டில் ஹாண்டிலிங் சார்ஜ் என்கிறார்கள்.

ஓரு முறை என் நண்பர் ஓருவர் கடைக்கு சென்று பீரையும் , ஹாட் டிரிங்கையும் வாங்கிய போது 13 ரூபாய் எக்ஸ்ட்ராவாக வாங்கியிருக்க, ஏன் கொடுக்க வேண்டும் இது கவர்ண்மெண்ட் கடை தானே? என்று கேட்டதற்கு, இல்லை இது ப்ரைவேட் கடை என்று நக்கலாக பதில் சொல்ல, மேலும் வாக்குவாதமாக, கடைக்காரன் அவரை தாக்க முற்பட, அந்த சமயத்தில் எனது நண்பரின் நண்பர் என்னுடய போனுக்கு சமயோசிதமாக போன் செய்து

"சார், நான் தான் பேசறேன்.. நீங்க சொன்னா மாதிரி இங்க அப்படித்தான் நடக்குது.
உடனே நீங்க வரலாம் சார் . கையும் , களவுமா பிடிச்சிட்டோம் சார். என்று எனக்கு
போன் செய்ய, எனக்கு ஓன்றும் புரியாமல். திருதிரு வென்று விழிக்க, போன் கட் செய்யப்பட,

பிறகு விசாரித்தபோது, அவ்ர் அப்படி பேசியிருக்கவிட்டால் உங்கள் நண்பரை அடித்திருப்பார்கள். இவர்கள் யாரோ மேலதிகாரிகளை கூப்பிட்டு இருப்பதாக நினைத்து, அவர்களுக்கு மீதி காசையும் கொடுத்துவிட்டு, அங்கே எதுவும் நடக்காத மாதிரி, வந்தவர்களுக்கு எல்லாம் Mrp ரேட்டுக்கே கொடுக்க, வந்தவர்கள் எல்லாம் அதிசயமாக, சில்லரை கொடுப்பதை பார்த்து அதிசயத்தில், அங்கே நடந்த விஷயங்களை தெரிந்தவர்கள், என் நண்பர்களை பார்த்து, நீங்க, தினம் வாங்க சார்.. அப்பத்தான் இவங்க கொட்டம் அடங்கும் என்று புலம்பியபடி சென்றார்கள்.

அரசு ஓவ்வொரு கடைக்கும் மின்சாரக் கட்டணத்திலிருந்து எல்லாவிதமான செலவுகளையும், ஏற்கிறது. அது போக, பார் லீசுக்கு எடுக்கும் கடைக்காரரிடமிருந்து ப்ரீசரை வாங்கி வைத்து விடுகிறார்கள். பின் எத்ற்காக நாம் அவர்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும், அது போக ஓவ்வோரு கடைக்கும், சேல்ஸ் கமிசன், சரக்கு கைமாற்றும், போது அது உடைந்துப் போனால் அதற்கான நஷ்டம் எல்லாம் போகத்தான் அரசுக்கு போகிறது. சுமாராக ஓவ்வோரு கடையிலும் அதுவும் வெயில் காலத்தில் குறைந்தது 500 பாட்டில் பீர் விற்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஓரு பாட்டிலுக்கு 2 ரூபாய் என்ற வீதம் 500 பாட்டிலுக்கு 1000 ரூபாய் கிடைக்கிறது. ஓரு நாளைக்கு 1000 ரூபாய் என்றால் 30 நாளைக்கு 30000 ரூபாய். அது தவிர அவர்க்களூக்கு சம்பளம் , மற்றும் அலவுன்ஸுகள், இத்யாதி, இத்யாதி.. ஓரு ஜடி கம்பெனி வேலையில் உள்ள ஓரு வர் சம்பாதிப்பதை விட இவர்கள் அதிகமாகவே சம்பாதிக்கிறார்கள். கேட்டால் "அவர்கள் சொல்வது நாங்க என்ன இதை வச்சுகிட்டு என்ன வீடா கட்டப்போறோம்.. என்று கேட்கிறார்கள். நீங்களே சொல்லுங்க வீடு கட்டுவாங்களா.. இல்லையா?
Post a Comment

2 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அம்பத்தூரில் (சென்னைப் புறநகர்) ஒரு பியர் பாட்டில் விலை 80 ரூபாய் (பாட்டிலில் இருக்கும் விலையைவிட குறைந்த பட்சம் 12 ரூபாய் அதிகம்!). கேட்டால் அதே கூலாகத் தருகிறோம் பதில்தான்.

ரம், விஸ்கி ஒரு குவார்டர் பாட்டிலுக்கு 2 ரூபாய் அதிகம்.

பாரிமுனையில் இருக்கும் கடைகளில் பியர் 4 ரூபாயும் ரம் போன்றவை 2 ரூபாயும் அதிகம்.

இப்படிக் குடிகாரர்களில் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளலாமா?? :)

பேசாமல் குடிப்பதை நிறுத்திவிடலாமா என யோசிக்கிறேன் :(

Cable சங்கர் said...

நாம் குடிப்பதை நிறுத்துவது நல்லதுதான். ஆனால் அரசாங்கம் நட்த்தும் கடையிலேயே இப்படி இருந்தால், அரசாங்கமும் அப்படித்தானே இருக்கும்?