Thottal Thodarum

Sep 1, 2008

எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம்-?


மும்பை மேரி ஜான்.

11-7-2006ல் மும்பையில் நடந்த தொடர் ரயில் குண்டுவெடிப்பு ஓவ்வோரு
மும்பைகாரர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நடந்த ஓரு அதிர்சியே. கொஞ்சம்
நினைத்து பாருங்கள் அந்த நேரத்தில் அதே ரயிலில்களில் நீங்கள் இருந்திருந்தால்
அதிலிருந்து தப்பியிருந்தாலும், உங்கள் மனநிலை என்னவாக இருந்திருக்கும். எப்படி
அதிலிருந்து மீள்வீர்கள். அதை பற்றி படம் தான் நிஷிகாந்த காமத என்கிற இயக்குனர் இயக்கிய ஹிந்தி படம். "மும்பை மேரி ஜான்".

இன்னும் சில நாட்களில் ரிட்டைய்ர் ஆக போகும் பாடில்(பரேஷ் ராவல்), அவரின் வாழ்க்கை
தத்துவம் "எப்பவுமே ஓரமாய் நின்று பார்க்க பழகிக்கொள், அந்த படத்தில் நடிக்க ஆசைபடாதே" என்றும், தன் வாழ்கையில் எந்த ஓரு நேரத்திலும், மிகப் பெரிய திருடனையோ, தீவிரவாதியையோ,பிடித்ததில்லை. என்பதில் எந்த வருத்தமும் இல்லாதவர். பரேஷ் ராவலுக்கு ஓரு லைப் டைம் கேரக்டர்.மனுஷன் சும்மா பின்னியிருக்கிறார்.

அவருடய அசிஸ்டெண்டாக வரும் கதம் (விஜய் மெளரியா) தனது புது பெண்டாட்டியுடன்
ஹனிமூன் போகயிருந்த நேரத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால், அவருடய லீவ் கேன்சலாகி,
குண்டுவெடிப்பு நிகழ்ந்த நாளன்று பாரில் லஞ்சம் வாங்க மறுப்பதும், இந்த உலகையே மாற்ற
நினைத்து அவரின் செய்கிற செய்கைகள் நீர்த்து போவதும், அந்த கோபத்தை கையாலாகாத
ரோட் சைட் டீ விற்பவனிடம் காட்டுவதும், குண்டு வெடிப்பினால் நடந்த பாதிப்பையும், தன்னுடய நிலையையும் நினைத்து மனதுக்குள் புழுங்கி, பாடிலின் ஓரு மழைநாள் பார்டியில் போதையின் உச்சத்தில் தன்னைதானே சுட்டுக் கொள்ள முயற்சிபதும். சிம்ப்ளி சூப்பர்.

நிகில் தன்னால் சொந்தமாய் காரும், டிரைவரும் வைத்துக் கொள்ள அனுமதியிருந்தும், எதற்காக உபயோகபடுத்தி ஏற்கனவே கெட்டிருக்கும் மும்பையின் டிராபிகையும், பொலீயுசனையும் அதிக படுத்த வேண்டுமென, பிளாஸ்டிகை யூஸ் பண்ணாமல் இருக்கும்படி அவ்வப்போது பழம் விற்கும் கடைகாரனிடம் பேசும் ஆக்டிவிஸ்டாக மாதவன். அவருக்கு நிறைமாத கர்பிணி மனைவி. குண்டு வெடிப்புக்கு உள்ளான டிரையினில் எந்த வித பாதிப்பில்லாமல் இருந்தாலும் அந்த அதிர்ச்சியில்,மலங்க, மலங்க விழித்துக் கொண்டு , என்ன செய்வதறியாமல் அங்கே நடக்கும் , நடந்திருக்கும் அவலங்களையேல்லாம் பார்த்து கொண்டிருக்கும் ஓருவனை நம் கண் முன்னே நிறுத்துகிறார்.மாதவன்.

ருபாலி ( சோஹா அலி கான்) ஓரு நியூஸ் சேனல் ரிப்போட்டர். பரபரப்பான ஓரு ரிப்போட்டர்.மற்றவர் சோகங்களை எல்லாம் பரபரப்பான நியூஸாக ஆக்குவது வல்லவர். திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண். அவரின் வருங்கால கணவன் அந்த குண்டு வெடிப்பில் இறந்துவிட, அதே நியூஸ் சேனலுக்கு,அவரே நீயூஸாவதும், தான் செய்த அதே வேலையை, அதே கேள்விகளை தன்னிடமே, கேட்கப்படும்போது, அவர் நொறுங்கி போவதும், அதை கொஞ்சம் கூட தனிமனித நோக்கிலிருந்து பார்க்காமல்,ஓரு
நியூசாகவே பார்க்கும் அந்த சேனலின் தலைவர்.

தாமஸ் ( இர்பான் கான்) அவரின் இன்னொரு மிகச் சிறந்த நடிப்புக்கு இந்த படம் ஓரு உதாரணம்.பம்பாயில் டீ விற்கும் தமிழன். தன்னால் தனது மகள், மனைவியை மிகப் பெரிய மால்களூக்கு,அழைத்துபோய் அங்கே இருக்கும் செண்ட் கடையில் இருக்கும் செண்ட்களையெல்லாம் ஓசியில் போட்டு பார்க்க, அங்கே இருந்தவர்கள் அவனை அடித்து விரட்டுவது, அந்த மாதிரி மால்களையேல்லாம் பழிவாங்குவதாக நினைத்து, ஓரு ரூபாய் காய்ன் போனில் எல்லா மால் களிலும் பாம் இருப்பதாக போலீசூக்கு போன் செய்து அவர்கள் வியாபரத்தை குழப்புவதால் மன சந்தோஷமடையும் ஓரு , பாமரனை கண்முன்னே காட்டியிருக்கிறார். தான் செய்த ஓரு போனால் பாதிக்கப்பட்ட ஓரு வயதானவரின்
பாதிப்பை கண் முன் பார்த்த பின் அவர் பிழைத்துவிட்டாரா? என்று அலைபாய்வதும், அவர் டிஸ்சார்ஜ் ஆகி,வரும் வரை தினமும் அந்த ஹாஸ்பிடலின் வாசலில் காத்திருப்பதும், அவர்கள் டாக்ஸிக்காக காத்திருக்கும்போது, ஓரு டாக்ஸியை பிடித்து கொடுத்து, அது நகர்கையில் கையில் ரோஜா கொடுப்பதும், கவிதை.

ஓரு டீக்கடையில் தினமும் உட்காரும் நண்பர்கள், ஓரு கம்ப்யூட்ட்ர் கம்பெனியில் சேல் மேனாக இருக்க்கும் சுரேஷ்(கே.கே.மேனன்) இம்மாதிரியான குண்டுவெடிப்புக்கெல்லாம் காரணம் முஸ்லிம்கள் தான் என்றும், தன்னை போலவே தினமும் அந்த டீக்கடைக்கு வரும் ஓரு முஸ்லிம் இளைஞனை குண்டுவெடிப்பு நிகழ்விலிருந்து காணாததால், அவர் வீடு வரைக்கும் சென்று விசாரித்து, அவர் ஏன் இதற்கு காரணமாய் இருக்கக் கூடாது என்று எல்லா முஸ்லிம் கலையும் சந்தேகப்படும் ஓரு கோபக்கார இளைஞர்.

இவர்களை வைத்து பின்னப்பட்ட ஓரு எமோஷனலான, அருமையான் திரைக்கதை படத்திற்கு பலம்

படத்தை இயக்கிய இயக்குனருக்கு இது மூன்றாவது படம், அவரின் முதல் படமான "டோம்பிவில்லி பாஸ்ட்" என்கிற மராத்தி படம் மிகப் பெரிய ஹிட்,பல சர்வதேச விருதுகளை வாங்கிய படம், ஏனோ தமிழில் செய்தபோது "எவனோ ஓருவன்" வரவேற்கபடவில்லை. ஓரு தரம் வாய்ந்த இயக்குனருக்கான அத்தனை அம்சங்களும்
இவரிடம் இருக்கிறது.

டெக்னிலகாக கேமரவாகட்டும், எடிட்டிங்காகட்டும், பிண்ண்னி இசையாகட்டும், எந்த வித குறையும் கிடையாது.

சிம்ப்ளி சூப்பர்ப்..

இந்த மாதிரியான படங்கள் எப்போது தமிழில் வருமோ..?

இந்த படத்திற்கான லக்கிலுக்கின் விமர்சனத்தையும் எதிர்பார்கிறேன்.
Post a Comment

8 comments:

லக்கிலுக் said...

இந்தப் படம் சென்னையில் ஓடுகிறதா? ஓடுவதாக இருந்தால் இன்றே ஆட்டையை போட்டுவிடுகிறேன் :-)

Athisha said...

இந்த வருடத்தில் வெளியான மிக சிறந்த ஹிந்தி படம் என்று நண்பர் ஒருவர் கூறினார்..

படம் பார்க்கும் ஆவலை உங்கள் பதிவு தூண்டுகிறது

rapp said...

இந்தப்படத்தை தமிழிலும் யாவரும் நலம் என்று எடுக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன்

Cable சங்கர் said...

சத்யம் தியேட்டரில் இரவுக் காட்சி மட்டும் தான்

Cable சங்கர் said...

யாவரும் நலம் இந்த படம் அல்ல.ராப்
உங்கள் வருகைக்கு நன்றி

Cable சங்கர் said...

நன்றி ஆதிஷா அவர்களே..

tharudhalai said...

"rapp 5:22 PM
இந்தப்படத்தை தமிழிலும் யாவரும் நலம் என்று எடுக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன்"
இந்த அண்ணன் சீரியஸாதான் இந்த கமெண்ட்ட போட்டாரா?

இந்த படத்தை பற்றி ஞானி விலாவாரியாக எழுதியிருந்தார்.(உங்களைப்போன்றே ஏக்கத்துடன்)தமிழில் யாராவது இந்தப்படத்தை எடுத்து புண்ணியம் கட்டிக்கொள்ளலாம்.மாதவன் பாவம் சூடு கண்ட பூனை.

மஞ்சூர் ராசா said...

மாதவனுக்கு ஹிந்தியில் பல நல்ல வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன என்றாலும் ஏனோ பெரிய அளவில் வரவில்லை என்பது வருத்தம் தான்.

வருவார் என எதிர்ப்பார்ப்போம்.