கலைஞர் v/s மாற்ன் ப்ரதர்ஸ்

காதலில் விழுந்தேன் திரைப்படத்தை மதுரை மற்றும் ராமநாதபுர மாவட்டங்களில் வெளியிட முடியவில்லை. அதற்கு காரணம் முதல்வரின் மகன் திரு.மு.க. அழகிரிதான் என்றும் அவரின் பேரில் தியேட்டர்காரர்கள் மிரட்ட படுகிறார்கள் என்று கூறுகிறது சன் பிக்சர்ஸ். இதற்கு முதல்வர் தலையிட்டு ப்ரச்சனையை தீர்க்க வேண்டும் என்று கோரியிருக்கிறது. அதற்கு முதல்வர் அவர்கள், சென்சார் சர்டிபிகேட் பெற்ற எந்த படங்களும் மக்கள் பார்வைக்கு தடை செய்ய முடியாது என்றும், இது குறித்து மதுரை போலீசாரிடம் புகார் கொடுக்காமல், தலைமை செயலருக்கு ஃபாக்ஸ் ஏன் செய்தார்கள்? என்று கேட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தேவையேயில்லாமல் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பதை போல் சன் குழுமம் அரசாஙக் கேபிளுக்கு சிக்னலை தர மறுத்தது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஓரு வேளை நீ உன் சிக்னலை எங்களுக்கு கொடுத்தால் உங்கள் பிரச்சனையை சரி செய்யப்படும் என்று அர்தமா? ஏனென்றால் மதுரையில் அழகிரி நடத்தும் ஆர்.சி.வி கேபிளுக்கும் அவர்கள் சிக்னலை தரவில்லை. அதனால் மதுரை முழுவதும் சன் டிவியின் சீரியல்கள் எல்லாம் ரெக்கார்ட் செய்யப்பட்டு அரைமணி நேர இடைவெளியில் ஓளிபரப்பபடுவதாக தெர...