ஓரு சின்ன லைன் அதை இண்ட்ரஸ்டாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்.இயக்குனர் ரா.கண்ணன்.வெளிநாட்டிலிருந்து சம்பாதித்து தன் அப்பாவிடம் அனுப்பி வைக்கும் மகன், தன் அப்பா இறந்த பிறகு அந்த பணத்தை வைத்து பிஸினெஸ் பண்ணலாம்னு நினைக்கும் போது பார்த்தா.. பணம் இல்ல.. எங்னேன்னு தேடிபார்த்தா.. அவங்க அப்பாவுக்கு ஓரு சின்னவீடும், அதுக்கு ஓரு மகளும் இருக்க, அவளுக்கு அமெரிக்கா போய் படிக்கணும்னு ஆசை. அவங்க அப்பா ஓரு வீட்டை மதுரையில் ஹீரோவோட காசில வாங்கி வச்சிருக்க, அதை விற்க அவரோட தங்கச்சி முயற்சி பண்ண, அது முடியாம தேவையில்லாம ஓரு ரவுடியின் கையில் அந்த ப்ராபர்டி போக, அந்த பிரச்சனையில் ரவுடின் மனைவி ஆக்ஸிடெண்டில் சாக, பின்னர் துரத்து, துரத்து என்று துரத்துகிறார்கள். முடிவில் அண்ணனும், தங்கையும், சேர்ந்தார்களா?
என்பதுதான் கதை.
வினய் அழகாய் இருக்கிறார். அப்போ, அப்போ அழகாய் சிரிக்கிறார்.நல்லா டிரஸ் போடறார். ஆனா இந்த பாழாப்போன நடிப்பு மட்டும்தான் வரமாட்டேங்குது. எவ்வளவு எமோஷனலான சீன் ஆனாலும் சப்டைட்டில் இல்லாத சைனா படத்த பார்கிற மாதிரி ஓரு மையமான பார்வை.
பாவனா.. சும்மா சொல்லக்கூடாது இந்த படத்துல பெரிசா நடிக்கிறதுக்கு சான்ஸ் இல்லாட்டாலும், அந்த ஓப்பனிங் சாங்கிலும், வினயை மாப்பிள்ளை என்று நினைத்து, தன்னை பற்றி அறிமுகபடுத்திக்கொள்ளும் காட்சியில் அருமை.
விவேக்.. பாவம் அப்படி ஓண்ணும் செல்பு எடுத்தா மாதிரி தெரியவில்லை..கிடைத்த சின்ன கேப்பில் கிடா வெட்டுகிறார் சந்தானம்.
ரவுடியாக வரும் கிஷோர் குமார் ஓகே. அவரைவிட் அவரின் கீப் மனைவியாக வரும் அந்த மதுரைக்கார பெண் சூப்பர். என்னா பாடி லேங்குவேச்.
லேகா வாஷிங்டனுக்குதான் நல்ல கேரக்டர், அதை புரிஞ்சி கொஞ்சம் நடிக்க டிரை பண்ணியிருக்கார். என்ன வாய் தான் கொஞ்சம் ஓரு மாதிரி இருக்கு. கொஞம்நாள் பார்த்து பழகிட்டா சரியாயிடும்
பாலசுப்ப்ரமணியத்தின் கேமரா துல்லியம், ஆனா பாவம் வித்யாசாகர் தான் டைரக்டரை கவுத்திட்டார்.
கிளைமாக்ஸில் லேகா வாஷிங்டன் “அண்ணா” என்று கூப்பிட்டவுடன் அதுவரை துணி தோய்க்கும் கல்லில் அடித்து கிழிக்கப்பட்ட நாராய் இருக்கும் வினய் பாய்ந்து சென்று ஓரே அடியில் வில்லனை அடித்து தூக்குவதாகட்டும், வில்லனை சுற்றி 10 இருவது தடியர்கள் இருந்தும், வில்லன் தான் ம்ட்டுமே சண்டை போடுவதாக சொல்லி சாவது, விவேக், சந்தானத்தை விட காமெடி.
மற்றபடி ஓரு ஓகே படம்தான் .. பார்க்கலாம்.
Post a Comment
No comments:
Post a Comment