ஓரு பரப்பரப்பான காமெடியும், ஆக்ஷனும் கலந்த திரில்லரை பார்த்து ரொம்ப நாளாச்சா? அப்ப சரோஜா சரியான படம். வெங்கட் பிரபு டீமோட சென்னை-28 வெற்றி ஓண்ணும் சும்மா வந்ததில்லைன்னு புரூப் பண்ணியிருக்காங்க.
ஓரிசாவிலிருந்து ஓரு கெமிக்கல் லாரி கிளம்புகிறது. இன்னொரு இடத்தில் பணக்கார ப்ரகாஷ்ராஜ் பெண் வீட்டிலிருந்து வெளியேறி கடத்தபடுகிறாள். ஹைதராபாத்தில் நடக்கும் இந்தியா பாக் மாட்சை பார்க்க, spb ச்ரண், ப்ரேம்ஜி அமரன், சிவர், மற்றும் அவரின் தம்பி, நால்வரும் ஓரு பழைய காரவனில் கிளம்புகிறார். இந்த மூண்றும் இணைகிற இடம் தான் சரோஜாவின் முக்கிய புள்ளி.
படத்திற்கு மிகப் பெரிய பலம், ஓளிப்பதிவாளர் சக்தி சரவணனும்,யுவனும் (இருவரும் படத்தில் நடித்தும் இருக்கிறார்கள்). அது தவிர படம் முழுக்க விரவி இருக்கும் நகைச்சுவை, சாதாரணமாக திரில்லர் கதைகளில் நடுவில் நகைச்சுவை இருந்தால் டெம்போ போய்விடும் என்று சொல்வார்கள். ஆனால் வெங்கட் பிரபுவுக்கு தன்னுடய தம்பியின் பலம் தெரிந்து இருக்கிறது. அவரை வைத்து அவர் அடிக்கும் லூட்டி இருக்கிறதே.. அவர்களுடனே ஓடிக் கொண்டிருக்கும் பரபரப்புக்கு நடுவுல் சிரிக்காமல் இருக்க முடியாது.
ப்ரேம்ஜி ஓவ்வோரு பெண்களை பார்த்தும், ஆயிரம் தாமரை மொட்டுகளே.. ட்யூனுடன் வெள்ளை நிற தேவதைகள் வருவதும், அதற்கு அவரின் ரியாக்ஷனும் சும்மா சொல்லக்கூடாது. தம்பி உடையான் ப்டைக்கஞ்சான்.
சரணின் இயல்பான நடிப்பை பற்றி சொல்லியே ஆகவேண்டும், ஓவ்வொரு சிச்சுவேசனிலும் அவரின் ரியாக்ஷ்ன்கள் அருமை அதிலும் பெண்டாட்டியிடம் திட்டு வாங்கும் இடத்தில் ..படத்தை பாருங்க அப்ப தெரியும்.
ப்ரேம்ஜி அமரன் அவரை பத்தி சொலலவே தேவையில்லை.தன்னுடய தம்பியின் பலம் எதுன்னு தெரிஞ்சு அவரை இயல்பா பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
இயக்குனர் படம் நெடுகிலும் அவர் பயன்படுத்தியிருக்கும் நகைச்சுவை மிக இயல்பாக இருக்கிறது. அதுவும் இளைஞர் நால்வரின் பேச்சுக்கள்.
படத்தில் சென்னை 28 நடித்த் பலர் ஓரு ஓரு காட்சிகளில் தலை காண்பித்து இருக்கிறார்கள். பிரகாஷ்ராஜ் படம் முழுவதும் டென்ஷனாகவே இருக்கிறார். ஜெயராமிற்கு கடைசி காட்சியில் தான் நடிக்க சான்ஸ் அதை முழுதாக் பயன்படுத்தியிருக்கிறார்.
வில்லன் சம்பத், அவரின் காதலியாக வரும் நிகிதா, அவரது அடியாளாக வரும் நாகேந்திரன் என்று யாரையும் குறை சொல்ல முடியாது.
ஓரு நல்ல ஜாலியான திரில்லரை பார்கக தயாராகுங்கள்.
Post a Comment
8 comments:
என்ன கொடுமை சார் இது?
விமர்சனம் அப்படியே ஜெராக்ஸ் அடித்தமாதிரி இருக்கு. அதுவும் போட்டிருக்கும் படமும் கூட.
நான் நேத்தே பார்த்துட்டேன் அண்ணாச்சி!
அதைத்தான் சொல்றேன் நான் காலையில படம் பார்த்துட்டு வந்த சூட்டோட எழுதினேன். எழுதி முடிச்சிட்டு பார்த்தா.. சேம் ப்ளட்..
//என்ன கொடுமை சார் இது?
விமர்சனம் அப்படியே ஜெராக்ஸ் அடித்தமாதிரி இருக்கு. அதுவும் போட்டிருக்கும் படமும் கூட.
நான் நேத்தே பார்த்துட்டேன் அண்ணாச்சி!//
ithu superoo super...
என்ன பண்ணறது தமிழ்பறவை.. பதிஞ்சதுக்கு அப்புறமா பார்த்தாதான் தெரியுது..
படம் நான் பார்க்க வில்லை. இருந்தாலும் உங்களின் விமர்சனம் நன்றாக உள்ளது. படம் டோட்டல் வேஸ்ட்டா? அது சரி உங்களின் விமர்சனத்தை http://nellaitamil.com
இணையத்தில் பதிவிட்டுள்ளேன். நன்றி.
வேஸ்ட் இல்லை.. நன்றாகவே இருக்கிறது.. நன்றி டமில் சினிமா..
சுடச்சுட தருகிறீர்கள் நன்றி
நன்றி முரளி கண்ணன்
Post a Comment