பொய் சொல்ல போறோம் - விமர்சனம்

இந்தியில் வந்து ஹிட்டான “கோஸ்லா கா கோஸ்லா” என்ற படத்தின் ரீமேக் தான் நம்ம பொய் சொல்ல போறோம். படத்தின் முதல் காட்சியிலேயே இது ஓரு காமெடி படம் என்பதை உறுதிபட கூறுகிறார்கள். அதனால் ஏன் எப்படி என்று லாஜிக் பற்றி யோசிக்காமல் படம் பார்க்க ஆரம்பித்தால் நிச்சயம் படம் பிடிக்கும்
ஹீரோ கார்திக் ஓரு சாப்ட்வேர் இன்சினியர். அவரது தந்தை நெடுமுடிவேணு ஓரு ரிடயர்ட் எ.ஜி.எஸ் ஆபிஸர்.(ஓரு சமயத்தில் தான் என்ன வேலை செய்தேன் என்பதை அவர் ஒரு ரவுடிக்கு விளக்க அவன் எல்லாம் புரிந்தது போல் தலையாட்டி பக்கத்து ரவுடியிடம் சீரியஸாக” வாத்தியாராம்” என்று சொல்வதை பார்த்துவிட்டு நெடுமுடி வேணுவின் ரியாக்ஷனை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியாது.) அவர் ஓரு நிலத்தை ஹனிபாவின் மூலம் தன் சேவிங்ஸ் அத்த்னையும் போட்டு வாங்குகிறார். அதில் தன் கனவு இல்லத்தை கட்ட நினைக்கிறார். ஆனால் வீட்டை கட்ட பூமிபூஜை போடப் போகும்போது அந்த இடத்தில் சுவர் ஏற்றி அந்த இடம் பேபி என்பவருக்கு சொந்தமானது என்று போர்டு மாட்டப்பட்டு இருக்க, அதுக்கு ஓரு சுனாமி ரவுடி காவலாய் இருக்கிறான். அந்த இடம் அவருக்கு மீண்டும் வேண்டுமானல் மேலும் பதினைந்து லட்சம் பணம் கேட்கிறார் நாசர்.
அவருக்கு வேலையே அது தான். அந்த இடத்தை மீண்டும் அடைய ஓர் அவருடய இளைய மகன் ராயபுரம் டெரர் ரவுடியை அழைத்து வந்து சுவற்றை இடித்து தள்ளிவிட அதனால் அவரை போலீசில் சொல்லி ஜெயிலில் வைக்க, இதுவரை எதை பற்றியும் கவலைப்படாத, அமெரிக்கா செல்வதையே தன்னுடய ஆதர்சமாய் நினைத்து வரும் அவரது மூத்த மகன் கார்த்திக் தன் காதலி மற்றும் அவளது தகப்பனார் 135 சாரி 136 முறை சிற்ந்த நடிகர் அவார்ட் வாங்கிய மெளலி, மற்றும் பாலாஜி மற்றும் அவளது நண்பர்கள் உதவியுடன் எப்படி அவனை ஏமாற்றி பணம் பறித்து அவர் கேட்ட பணத்தை கொடுத்து நிலத்தை மீட்கிறார்கள் என்பதுதான் கதை.
முதல் பாதியில் படம் முழுவதும் கார்திக் ஏனோ விளக்கெண்ணெய் விழுங்கியது போல் வருவதற்கு என்ன காரணம்? அவரை விட அவரது தங்கை, தம்பி சுறுசுறுப்பு, கார்திக்கின் காதலியாய் வரும் பிரிதிக்கு மிக இயல்பாய் முகத்தில் ரியாக்ஷன் வருகிறது. சில நேரத்தில் திடீரென காஜல் சாயல்.
நாசர் தான் படத்தின் முதுகெலும்பாய் இருக்கிறார். நிறைய வசனம் பேசாமலேயே பாடி லேங்வேஜிலேயே நிறைய நடிக்கிறார். ஹிந்தியில் போமன் ஈரானி நடித்த கேரக்டர். அவரை பார்த்தவர்கள் நாசரின் நடிப்பை பார்த்தால் ஓரு மாற்று கம்மிதான்.
படத்தில் அடுத்த முக்கியஸ்தர் மெளலி.. அவரை பற்றி சொல்வதை விட பார்த்து விடுவதே மேல். சும்மா கலக்குறார். அதே போல் ஹனிபா, கார்திக்கின் இளைமையான தாய். என்று யாரையும் குறைசொல்ல முடியாது.
படத்தின் முக்கிய ஆறுதல் பாட்டு போகிறேன் பேர்வழி என்றும் நாலு டூயட்டை போடாமல் மாண்டேஜிலேயே பாடல்களை போட்டிருப்பது இயக்குனரின் தைரியத்தையும் , புத்திசாலிதனத்தையும் காட்டுகிறது.
அரவிந்த்கிருஷ்ணாவின் ஆடம்பரமில்லாத ஒளிப்பதிவு. படத்தில் அவர் நடித்திருக்கிறார் கூட.
இயல்பான நகைச்சுவை.”கங்குலீன்னு பேர் வைச்சுகாத..அப்புறம் அவன் ரன் அடிக்கலன்னா உன்ன வந்து அடிப்பான்”
முதல் பாதி- உண்மை இரண்டாம் பாதி - பொய்.
ஆனால் பொய் ஜெயிக்கிறது சிரிப்பாய்.
Comments