கொஞம் பழசுதான் ஆனாலும் மிக நல்ல படம். இதை பற்றி பதியாமல் இருக்க முடியவில்லை.
செரட்டேரியட்டில் வேலைபார்க்கும் ரமேசன் அவரின் கனவுதன் மகனை எப்படியாவது சிவில் சர்வீஸ் பரிட்சையில் தேர்ச்சியாக வேண்டும் என்பது.
ஆயிரம் தான் லட்சம் லட்சமாய் ஐ.டி, மற்றும் மற்ற துறைகளீல் சம்பாதித்தாலும் சிவில் ச்ர்வீஸ் துறையில் கிடைக்கும் மரியாதை தனி என்பது அவரது எண்ணம். துடியான மகன் மனு, குட்டி மணியா ஓரு பெண் குழந்தை, இவர்க்ளுக்கு எல்லாம் மணியாய் இப்படி ஓரு மனைவி அமையாதா என்று ஏங்க வைக்கும் மனைவி.
மனுவிக்கு எல்லாமே அப்பா தான். அவர் தான் ஆதர்சம். மனு தன் சிநேகிதியுடன் பர்த்டேக்கு பிஸ்சா கார்னர் போய்விட்டு லேட்டாய் வர, அதை சொல்லாமல் மறைக்க அவன் பொய் சொல்ல, அதை அறிந்த மோகன்லால் (ரமேசன்) அதை பற்றி பேசாமல் தான் சிறுவயதில் பொய் சொல்லிவிட்டு ப்ரச்சனையில் மாட்டியதாகவும், ஆனால் அவரின் அம்மா அவரை விட்டுக் கொடுக்காமல் பேசியதாகவும். அதனால் இனிமேல் வாழ்கையில் பொய் சொல்ல கூடாது என்று முடிவெடுத்ததை சொல்ல.. அதை கேட்டு மனு கலங்கி போய் அழுது உண்மை சொல்வதும்.. இது வெறும் காட்சியல்ல.. ஓரு தந்தைக்கும் மகனுக்குமான உறவை இதைவிட எப்படி சொல்லவது.
பாரதியார் பாடல்களின் மேல் அளவில்லா காதல் கொண்ட மோகன்லால் “காற்றுவெளீய்டை கண்ணம்மா” பாடலை பாடுவது அமோகம். ஞாபகசக்தியை பற்றி தன் மகனின் ஸ்கூலில் ஓரு லெக்சர் அடிப்பதாகட்டும், உங்களுடய மனைவியைவிட அழகான பெண்க்ளை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டு யாரும் பதில் சொல்லாமல் இருக்க, உங்களூக்கு எல்லோருக்கும் இங்கிருக்கும் யாரோ ஓருவர் உங்கள் மனைவியை விட அழகானவர் யார் என்று தெரியும்,ஆனால் சொல்ல விருப்பமில்லை..ஏனென்றால் அப்படி சொன்னால் உங்கள் மனைவி மனது புண்படும் என்பதால். ஆனால் ஆதே பெற்றோகளாக இருக்கும் போது உங்கள் மகனிடம் அவன் எப்படி படிக்கிறான் இவ்ன் எப்படி படிக்கிறான் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்க.. பெற்றோர்களுக்கு ஓரு பாடம். இப்படி எல்லாவிதத்திலும் சிறந்த கணவனாய், தகப்பனாய், புத்திசாலியாய், மிகுந்த ஞாபக சக்தி வாய்ந்தவனாய் இருக்கும் மோகன்லாலுக்கு அல்சைமர் என்ற நோய் வந்து கொஞ்சம் கொஞ்சமாய் ஞாபகங்கள் மறைய ஆரம்பிக்க.. கண்களிலில் க்ண்ணீர் மழையை உங்களால் கட்டுபடுத்த முடியாது.
அவரின் தந்தையாக நெடுமுடி வேணு, மனுசன் சும்மா பின்னியிருக்கார். ஓரு முறை ஊருக்கு வரும் மோகன்லால் உயரமான வீட்டுக்கு படிக்க்ட்டு ஏறுவதற்கு சுலபமாய் மண அடித்து ரோடு போட்டு மேடு பண்ணி உன் முட்டிக்கு ரெஸ்ட் கொடுக்கணும்ன்னு சொல்ல, அதே வீட்டிற்கு முழு குழந்தையாய் மோகன்லாலை வேலை முடிந்து மேடு செய்த வீட்டின் வாசலில் வண்டி நிற்க, காரை விட்டு இறங்காத வேணு எந்த வித ப்ளாஷ்கட்டும் இல்லாமல் தன் கண்களில கண்ணீர் சேர்ந்து நிற்க. பார்க்கும் பார்வையிலேயே ஆயிரம் காட்சிகள் ஓடும்.
மோகன்லாலின் நண்பனாக ஜெகதி.. மனுசனுக்கு, காமெடியும் வரும், குணசித்திரமும் வரும்..மோகன்லாலின் சின்ன வயது நட்பான சீதா.. மனைவி மீரா வாசுதேவன்.. என்று யாரையும் சும்மா சொல்லிவிடமுடியாது..
எல்லோரையும் விட பாராட்ட வார்தைகளே கிடைக்காத ஓருவர் இயக்குனர் ப்ளசி..நிஜமாகவே அவரிடம் நேரில் பேச வாய்ப்பு கிடைத்தபோது என்னால் பேச முடியவில்லை. எவ்வளவோ ஜாம்பவான்களூடன் நான் பேசியிருக்கிறேன். என்னவோ தெரியவில்லை. என்னால் முடியவில்லை.
சினிமா பார்த்து நான் அழுவது என்பது பல நேரங்களில் எனக்கு சிரிப்பாய் இருந்திருக்கிறது...அங்கும், இங்கும் சில நேரங்களில் நெகிழ்ந்திருக்கிறேன்.. ஆனால் படம் முழுவதும் நெகிழ்ந்தும், உருகியும், பொல..பொலவென்று அழுதும் படம் பார்த்ததில்லை..
படத்தில் வரும் பலகாட்சிகளை பற்றி உங்களிடம் பகிந்து கொள்ள முயன்று எழுத ஆரம்பித்தேன்.. ஆனால் என்னால் முடியவில்லை.. படத்தின் காட்சிகளை நினைக்கும்போது என்னால் கண்கலங்காமல் இருக்க முடியவில்லை..
ம்...ஹூம்..எ.வ.த.இ.மா.படம்?
Post a Comment
9 comments:
முற்றிலும் உண்மையே
உங்கள் தகவலுக்கு நன்றி
( பல நாட்களாகவே உங்களின் பல திரைப்பட விமர்சனங்களை படித்து வருகிறேன். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அந்த படத்தை பார்த்து விடவேண்டும் என்ற ஆவலை அடக்க முடியவில்லை)
சங்கர்..
எனக்கும் படம் முடிந்தவுடன் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.. அப்படியொரு மன இறுக்கத்தைக் கொடுத்தது இப்படம்.
இன்றுவரையில் இப்படத்திற்கு விமர்சனம் எழுத முயன்றுதான் வந்திருக்கிறேன். முடியவில்லை. அந்தளவிற்கு மனதைப் பிசைகிறது.
மோகன்லாலின் நடிப்பிற்கு ஒரு சோறு அலுவலகத்தில் வந்து சட்டையைக் கழட்டிவிட்டு வீடு என்ற நினைப்பில் அவர் செய்யும் செயல்கள்.. அற்புதம்.. வெகு இயல்பான நடிப்பு..
இதற்கு முன் இதே போன்ற மனநிலையைக் கொடுத்த இன்னுமொரு திரைப்படம் "குணா" மட்டுமே..
சிறந்த படத்திற்கு தேவையான விமர்சனத்தை அளவோடு கொடுத்திருக்கிறீர்கள் சங்கர்..
நன்றிகள் பல உரித்தாகட்டும்..
உங்கள் வருகைக்கு நன்றி நிழல்
நன்றி ஜூர்கேன் க்ருகேர்.. அது சரி அது என்ன ஜூர்கேன் க்ருகேர்?
உங்கள் எண்ணங்களுக்கு நன்றி உண்மை தமிழன். மோகன்லாலின் நடிப்பை பற்றி சொல்வதானால் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
I like your narration style.
//I like your narration style.//
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தமிழ் நெஞ்சம்..
//cable sankar said...
நன்றி ஜூர்கேன் க்ருகேர்.. அது சரி அது என்ன ஜூர்கேன் க்ருகேர்?//
ஜூர்கேன் க்ருகேர்.. என்னுடைய "boss" இன் பெயர்.
Post a Comment