என்னத்த எழுதறதுன்னே தெரியல.. அவ்வளவு நல்லாயிருக்கான்னு கேட்காதீங்க..ஹிந்தியில் “ஜானே தூ “போன்ற படங்களில் இருக்கும் இயல்பான எல்லோருக்கும் தெரிந்த கதையோட்டமாய் இருந்தாலும் படத்திலிருக்கும் கேரக்டர்களினால் சுவாரஸ்யமாய் சொல்ல முடியும் என்பதற்கு அந்த இந்தி படம் உதாரணம்.
எ.எம்.ரத்னதுக்கு ஓரு ஜோதி கிருஷ்ணா மாதிரி, தாணுவிக்கு ஓரு கலாபிரபு. என்ன மத்த டைரக்டரை எல்லாம் திட்டுன மாதிரி தன்னோட பையன திட்ட முடியாது. வழக்கமா தாணு படம் ஆரம்பிக்கும் போது “தம்பி, ஓரு கதை சொல்லிச்சு. அப்படி ஓரு கதைன்னு “ அறிக்கை விடுவாறு. படம் முடிஞ்சதும் “அந்த தம்பிக்கு படமெடுக்க தெரியல.. அது சரியில்ல.. இது சரியில்ல்ன்னு அறிக்கை விட்டு பப்ளீசிட்டி ஆக்கிடுவாரு.. இப்ப என்ன செய்வாருன்னு பாக்கலாம்
ரஹ்மான் இனிமே கதையை கேட்டுட்டு படத்தை ஓத்துக்கலாம். ஏன்னா.. அவர் அருமையா போட்ட பாடல்களை எல்லாம் படு கேவலமா சூட் பண்ணியிருக்காங்க..
சாந்தனுவுக்கு நடிக்க யாராவது க்ளாஸ் எடுத்தா நல்லாயிருக்கும். அவரு அப்பா ஓருத்தரே போதும் அவர் கேரியரை காலி பண்ண. ஏன்னா.. அவர் முதல்ல ரிஜெக்ட் பண்ண சப்ஜெக்ட் பாலாஜி சக்திவேலோட “காதல்’ அடுத்து “சுப்ரமணியபுரம்”. எப்போர்பட்ட திரைக்கதையாசிரியர்.. என்ன பண்றது வயசாயிடுச்சுல்ல..
இயல்பா எடுக்கிறதா நினைச்சு.. நம்ம்ளை இம்சை செய்கிறார் இயக்குனர். அடுத்த முறையாவது தெரிஞ்சிகிட்டு எடுக்கட்டும்.
ம்..ஹூம்ம் என்னத்தை சொல்ல சக்கரகட்டி.. கசப்புகட்டி
இதைவிட சிறந்த விமர்சனத்திற்கு இங்கே அழுத்தவும்
Post a Comment
4 comments:
இந்த படத்துக்கும் "fuse" பிடிங்கிட்டாங்களா?
அட கொடுமையே!
:)
சக்கரகட்டி.. கசப்புகட்டி
சன் டிவி விமர்சனம் மாதி இருக்கு :-)
//சக்கரகட்டி.. கசப்புகட்டி
சன் டிவி விமர்சனம் மாதி இருக்கு :-)//
ஏதோ ஓரு ரைமிங்கிற்காக எழுதப்பட்டது.. இருந்தாலும் என்ன இப்படி கலாய்க்க கூடாது.. நன்றி ப்ரசன்னா.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
Post a Comment