முதல் முதல் முதல் வரை - திரை விமர்சனம்


முதல் முதலாய் தமிழில் வழக்கமான விதத்தில் வரும் கமர்சியல் பார்மேட் இல்லாத ஓரு தமிழ் படம்... உதாரணமாய் இந்த படம் எந்த மாதிரிபடம் என்று கேட்டால்..ஆங்கிலத்தில் சில இண்டிபெண்டண்ட் ப்ரொடக்‌ஷன் கம்பெனிகள் தங்களது டிஜிட்டல் விடியோவில் படமெடுத்து சில சமயம் அந்த படம் வழக்கமான ஹாலிவுட் சினிமாவிலிருந்து விலகியிருக்க, ஹிட்டாகிவிடும்,sex,lies, and videotape போன்ற படங்கள் இந்த வகைப்படும்.

மு.மு.மு.வரை கூட அதுபோல்தான். ஓரு அட்பிலிம் மேக்கர் திரைப்பட இயக்குனராவதற்கு நடத்தும் போராட்டம் தான் கதை. அதை வழக்கமான் திரைக்கதை பார்மெட்டில் சொல்லாமல் ஓரு டாகு-பில்ம் என்கிற் பாணியில் ஓருவரது பார்வையில் சொல்லியிருக்கிறார்கள்.

அதனால் படம் ஆரம்பம் முதலே.. நாயகன் டைரக்டர் ஆவது பற்றியே சொல்லி போரடிக்க ஆரம்பித்துவிடுகிறது. அவருக்கு ஓரு காதலி அவளுக்கு எதோ ஓரு வியாதி.. அதனால் அவள் எப்போது வேண்டுமென்றாலும் இறந்து போகலாம் அதனால் அவன் டைரக்டர் ஆகி அதை பார்த்து விட்டு தான் சாகவேண்டும் என்கிறாள்.

படத்தில் டெக்னிகலாக் சொல்ல வேண்டுமென்றால் பெளசியாவின் கேமராவும் கோணங்களும் அபாரம்.. அநேகமாய் ஹெ.டி எனப்படும் டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்டிருப்பதால் மிக வித்யாசமான கோணங்கள் அமைந்திருக்கிறது.

படத்தில் கிட்டத்ட்ட 100 புதுமுகங்கள்.. இருக்கிறார்கள். கதாநாயகியும், ஹீரோவும், ஆங்காங்கே வரும் சில முகங்களூம் பரவாயில்லை. கதை சொல்லும் முறையை தவிர அவ்வளவு ஓண்ணும் இம்ப்ரஸிவாக இல்லை. ஆரம்பத்திலிருந்து பார்க்க, .....பொறுமை வேண்டும்..

பேசாம பந்தயத்துக்கே போயிருக்கலாமோ.. சிந்து துலானியையாவது பார்த்திருக்கலாம்...

Comments

மீ த பர்ஸ்ட்..
பந்தயத்தை விட மோசமா ? அடக்கடவுளே.. குசேலனை விடவும் மோசமா ?

ஆமா நீங்க எப்படி எல்லா படத்தையும் உடனுக்குடன் பாத்துடுறீங்க.. எதாவது வி.சி.டி கடை வெச்சுருக்கீங்களா ? :)
மக்களை காப்பாத்தனதுக்கு நன்றி !
//பந்தயத்தை விட மோசமா ? அடக்கடவுளே.. குசேலனை விடவும் மோசமா ?//

அது வேற மாதிரியான படம் .. இது வேற் மாதிரியான் படம்..

//ஆமா நீங்க எப்படி எல்லா படத்தையும் உடனுக்குடன் பாத்துடுறீங்க.. எதாவது வி.சி.டி கடை வெச்சுருக்கீங்களா ? :)//

நான் இன்னும் விமர்சனம் எழுதாம இருக்கிற படங்கள் நிறைய, பல படங்களை ரிலீசூக்கு முன்னாடியே பாத்துடுவேன்.. தனம் எல்லாம் நான் பார்த்தே ஓரு மாசத்துக்கு மேல ஆகுது.
//மக்களை காப்பாத்தனதுக்கு நன்
றி !//

எதோ என்னால் முடிஞ்ச உதவி..
அப்பாடா தப்பிச்சேன்..

போலாமா? வேண்டாமான்னு யோசனை பண்ணிட்டிருந்தேன்.. சொல்லிட்டீங்க.. 100 ரூபாய் மிச்சம்.. நன்றியோ நன்றி..

நேர்ல பார்க்கும்போது கமிஷனுக்கு எதையாவது வாங்கித் தரேன் ஸார்..
//அப்பாடா தப்பிச்சேன்..

போலாமா? வேண்டாமான்னு யோசனை பண்ணிட்டிருந்தேன்.. சொல்லிட்டீங்க.. 100 ரூபாய் மிச்சம்.. நன்றியோ நன்றி..

நேர்ல பார்க்கும்போது கமிஷனுக்கு எதையாவது வாங்கித் தரேன் ஸார்..//

ஏதோ என்னால் ஆன உதவி.. இதே போல நீங்க என்ன காப்பாத்தாமயா போயிடபோறீங்க..

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.