Thottal Thodarum

Sep 22, 2008

மீனாட்சீ.. சாமான் நிக்காலோ.....



சாந்தி மீனாட்சியை நான் மீண்டும் பார்பேன் என்று நினைக்கவில்லை..அவள்தானா?..அவள்தானா? யெஸ்.. அவளேதான்.. எப்படி மறக்க முடியும் அவளை... அவளால் அடிவாங்கியதை எப்படி மறைக்க முடியும்? எதற்கு அடி வாங்கினேன்.. என்று தெரியாமல் நான் அலைந்ததை எப்படி மறைக்க முடியும்?

நானும் ஆனந்த ராஜூம ரொம்ப நெருங்கிய நண்பர்கள் ஓவ்வொரு திங்கட்கிழமையும்.. ஆம் ஓவ்வொரு திங்கட்கிழமையும்தான்.. ஏன்னா அன்னைக்குத்தான் அவன் குடும்பத்தோடு எல்லா ஞாயித்துகிழமையும் படம் பார்த்துட்டு, அடுத்த நாள் வந்து கதை சொல்வான்..அதனால் நானும் அவனும் திங்கட்கிழமை மட்டும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்..

அவன் கதை சொல்லும் போதே ஓரு முழு படத்தை பார்த்தா மாதிரி இருக்கும்.. காலையில முதல் ப்ரீயட் போதே ஏதாவது சாக்கு சொல்லி நானும் அவனும் கடைசி ரோவில் போய் உட்கார்திருவோம்.. அப்புறம் எங்க வேலையை ஆரம்பிச்சுடுவோம்..சத்தமே இல்லாம..(அதெப்படி சத்தமே இல்லாமன்னு..) தியேட்டர்ல போட்ட அட்வர்டைசிங் முதக் கொண்டு ஓண்ணு விடாம மியூசிக்கோட சொல்லுவான்.. அப்படி அவன் அந்த வாரம் சொன்ன படம் சூப்பர் படம் ..அந்த படத்தோட பாட்டுவேற சும்மா சூப்பர் டூப்பர் ஹிட்.. தமிழ்நாடே பத்திக்கிட்டு எறிஞ்சுது..

அவன் சொல்ல, சொல்ல, எப்படியாவது அந்த படத்த பாக்கணும்னு முடிவெடுத்துட்டேன்..அவன் கதைசொன்ன இம்பாக்டுல அன்னைக்கு பூரா எனக்குள்ள அந்த பாட்டுதான்.

க்ளாஸ் முடிஞ்சி வெளியே போகும்போதும் அதே பாட்டுதான், அந்த பாட்டு என்னையும், என் திங்கட்கிழமை நண்பனுக்கும் ரொம்ப பிடிச்சதினாலே.. தெருவெல்லாம் “ஷோலே” பட “ஏ..தோஸுதி’” வருமே அது போல தோளில் மேல் இருவரும் கைபோட்டுக் கொண்டு, பாடிக் கொண்டே போனோம்..அதை , அந்த நிமிஷத்தை எப்படி சொல்றதுன்னே தெரியல..சும்மா மனசெல்லாம் பூ கணக்கா இருந்திச்சு..

அடுத்த நாள் காலையில க்ளாஸூக்கு போனவுடனே..வழக்கபடி நாங்க ரெண்டுபேரும் அவங்க, அவங்க சீட்ல போய் உட்காந்திக்கிட்டோம்.. க்ளாஸ் எடுக்க வந்த அமுதவல்லி மேடம்.. எதையும் பத்தியும் பேசாம..எடுத்த்வுடனேயே என்னையும் என் திங்ககிழமை நண்பன் ஆனந்த ராஜையும் கூப்பிட..என்ன ஏதுன்னு புரியாம.. இரண்டு பேரும் எழுந்து நின்னோம்..

“இங்க வாங்கடா” மேடம் கூப்ப்டாங்க..

எதுக்கா இருக்கும்ன்னு யோசிச்சிக்கிட்டே.. மெல்ல அவங்க பக்கத்தில போக,, மேடமுக்கு என்ன ஆச்சோ தெரியல.. எங்க தெருமுனையில குறி சொல்ற முனியம்மா மாதிரி ரியாக்‌ஷன் கொடுத்திகிட்டு அங்கே இருந்த ஓரு கழிய எடுத்து சும்மா.. கையிலயும், முதுகிலெயும்.. ரெண்டு பேரையும் பின்னி எடுத்துட்டாங்க.. ஓவ்வொரு முறை அடிக்கும் போதும்..

“முளைச்சு மூணு இலைவிடல அதுக்குள்ள..அதுக்குள்ள..”ன்னு சொல்லிகிட்டே அடிச்சாங்க..

எங்களுக்கு என்னனு புரியவே இல்ல.. நான் மட்டும் வீரனா “எங்கள எதுக்கா மேடம் அடிக்கீறீங்கன்னு கேட்டதுக்கு எக்ஸ்ட்ராவா ரெண்டு எனக்கு கிடைச்சுது.. இதையேல்லாம் பார்த்த என் க்ளாஸ் மேட்க்ளுக்கு ரொம்ப வருத்தமாயி..என் க்ளோஸ் கேர்ள் ப்ரண்ட்..ஆண்டாள் என்னிடம் மட்டும் தனியாக வந்து “எல்லாத்துக்கு காரணம் அவதான்னு “சொன்னா.. அவதான் மேடத்துக்கிட்ட என்னவோ காலையிலேயே சொன்னான்னு சொன்னதும் நான் மீனாட்சிய பார்த்தேன்..அவ என்னவோ தனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமில்லங்கற கணக்கா.. என்னைப் பார்த்ததும் மூஞ்சிய திரும்பிக்கிட்டா..

என்ன சொன்னேன்னு அப்ப கேட்கிற தைரியம் அப்ப எனக்கு இல்ல.. ஆனா இப்ப இவ்வளவு வருஷத்துக்கு அப்புறம் மீனாட்சிய பார்த்ததும் கேட்கணும்னு தோணிச்சு.. கொஞ்ச நேரம் சகஜமா பேசினதுக்கு அப்புறம் மீனாட்சியிடம் “ஆமா.. அப்ப எதுக்காக மேடத்துக்கிட்ட அடிவாங்க வச்சே..?”

மீனாட்சி ஆச்சர்யத்துடன் சிரித்தபடியே.. “அத இன்னும் ஞாபகம் வச்சிருக்கியா..?”கேட்டா.. எப்படி மறக்க முடியும்ன்னு நினைச்சுகிட்டே.. அவளை பார்க்க..

“அது ஓண்ணுமில்ல அன்னைக்கு நீயும் ஆனந்த ராஜூம்.. என் பின்னாடி வந்துகிட்டே.. என்னை பத்தி பாட்டு பாடி கிண்டல் பண்ணீங்களா..அதத்தாஅன் மேடத்துக்கிட்ட சொன்னேன்.. அதுக்குதான் அடிச்சாங்க...ன்னு சொல்லிட்டு சிரிச்சிகிட்டே போயிட்டா..

”என்ன கொடுமை சார் இது? நாலாம் க்ளாஸ் படிக்கும் போது, “என்னடி மீனாட்சீ.. ன்னு எங்களுக்கு முன்னால் போன சாந்தி மீனாட்சிய பார்த்துகிண்டல் பண்ணி பாடற வயசா சார் அது.. ?? ஆனந்தராஜூ எங்கடா இருக்கே..???
Post a Comment

9 comments:

Anonymous said...

கலக்கல் சார்..!

Cable சங்கர் said...

//கலக்கல் சார்..!//

நன்றி பாலசந்தர் சார்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்..

யூர்கன் க்ருகியர் said...

சினிமா கதை சொல்றதுல உங்க பிரண்டு மட்டுமில்லை நீங்களும் கில்லாடி தான்.!

Cable சங்கர் said...

//சினிமா கதை சொல்றதுல உங்க பிரண்டு மட்டுமில்லை நீங்களும் கில்லாடி தான்.!//

சினிமா கதையில்ல ஜூர்கேன்.. நிஜமா நடந்த்து..

யூர்கன் க்ருகியர் said...

cable sankar said...
//சினிமா கதை சொல்றதுல உங்க பிரண்டு மட்டுமில்லை நீங்களும் கில்லாடி தான்.!//

சினிமா கதையில்ல ஜூர்கேன்.. நிஜமா நடந்த்து..

3:30 AM


//அவன் கதை சொல்லும் போதே ஓரு முழு படத்தை பார்த்தா மாதிரி இருக்கும்.. //

அதாவது உங்க பிரண்டு உங்க கிட்ட கதை சொன்னாருன்னு சொன்னிங்க இல்லையா ? அது மாதிரி நிங்களும் சொல்ற புதிய சினிமா விமர்சனங்கள் ரொம்ப நல்லாருக்கு இன்னு சொல்றேன்.

Cable சங்கர் said...

அப்படியா.. நன்றி ஜூர்கேன்.. ஏன் உங்க ப்ளாக்ல எதுவும் எழுதல??

Unknown said...

ஹா ஹா ஹா...
நல்லா இருக்கு...கலக்குறீங்க போங்க!!!

Cable சங்கர் said...

//ஹா ஹா ஹா...
நல்லா இருக்கு...கலக்குறீங்க போங்க!!!//

நன்றி கமல்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.. மேலும் உங்கள் கருத்துக்களை மற்ற பதிவுள் குறித்து ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இந்த மாதிரி என் வாழ்க்கையிலும் நடந்திருக்கு,
அஞ்சாம்க்ளாசில...ஆனா அடி வாங்கல...