Pages

Sep 24, 2008

வானமெனும் வீதியிலே....


எப்படியாவது பறந்து போகணும்னு எனக்கு ஆசை வந்திருச்சு. அதுவும் என் பையன் ரெண்டு வாட்டி பெங்களூருக்கும், பாம்பேக்கும் என்னோட ரிலேஷன்ஸ் கூட போய்ட்டு வந்ததுக்கப்புறம், எனக்கு அந்த ஆசை ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. எனக்கென்னவோ ப்ளைட்டுல போறதுக்கு பிடிக்கல, ஏன்னு யோசிச்சா..ரொம்ப சீக்கிரமே போகணும்கிறது ஓரு முக்கியமான விஷயம்.

நானெல்லாம் வழக்கமா 9 மணி டிரெயினுக்கு, 8மணிக்கு வீட்டிலேர்ந்து கிளம்பி, செண்ட்ரல் ஸ்டேஷனில் வாசல்ல ஓரு கட்டிங் அடிச்சிட்டு, மிச்சத்தை கோக் பாட்டில்ல ஊத்திகிட்டு, சாவகாசமா கிளம்பி போனோம்னா நம்ம ரயில் தன் பின்பக்கத்தை 'X' மார்கை காட்டிகிட்டு போய்ட்டுருக்கும். அதை நம்ம தமிழ்பட ஹீரோ கணக்கா..ஹைஸ்பீடுல ஓடி ஏறியே பழக்கப்பட்ட நமக்கு இப்படி சீக்கிரம் போறதே கஷ்டம்தான்.

இருந்தாலும் எப்படியாவது ப்ளைட்டுல போயிறணூங்கற முடிவ எடுத்து,ஹைதராபாதுக்கு போக டிக்கெட் புக் பண்ணலாம்னு நெட்டுல போய் தேடினேன். 6000 ரூபாயிலேர்ந்து டிக்கெட் இருந்துச்சு..கடைசியா ஓரு வழியா “கோ ஏர்” ன்னு ஓரு ஏர்வேஸுல 500 ரூபாய்க்கு டிக்கெட்ன்னு சொன்னதும், அடிச்சு பிடிச்சு புக் பண்ணா..மொத்தமா 2500 ரூபாய் கிட்ட ஆயிடுச்சு.. டிக்கெட் சார்ஜ் 500 ரூபாயாம்.. ஆனா ஏர்போர்ட் டாக்ஸ்,அந்த டாக்ஸ்ன்னு 2000ரூபாயை அமுத்திட்டான். ராத்திரி 10.30 மணி ப்ளைட்டு. ஒண்ணரை மணி நேரம் முன்னாடியே வரணும்னு சொல்லிட்டான். வேற வழி..

ஓரு வழியா கையில லேப்டாப், ஓரு பேக் சகிதமா கிளம்பி, சைதாப்பேட்டையிலேர்ந்து, திருசூலத்திக்கு எலக்டிரிக் ரயில் பிடிச்சி போய் வேர்த்து விருவிருத்து போய் சேர்ந்தேன். (செலவ மிச்சம் பிடிக்கிறேனாம்). உள்ளே போனதும் எனக்கு எந்த வித உணர்வும் இல்லை. ஏன்னா எவ்வளவோ தடவ பல பேரை அனுப்பி வைக்கிறதுக்காக, போயிருக்க்கேன். அதனால எனக்கு எந்த விதமான ஓரு நர்வஸூம் இல்லை. எனக்கென்னவோ உள்ளே நுழைந்ததிலிருந்து ரொம்ப பழக்கப்பட்ட விஷயமாகதான் தெரிந்தது.

ஓரு வழியா செக்-இன் பண்ணதுக்கு அப்புறம் வேற என்ன செய்யறதுன்னே தெரியல.. சும்மாவே உக்காந்திருக்க பிடிக்கல.. மெல்லமா ஓரு ரவுண்ட் அடிக்க ஆரம்பிச்சேன்... டெல்லி ப்ளைட்டுக்காக காத்திருந்த நமது மேயர் தனது சகாக்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பக்கத்தில் ஓரு சேட்டு பையன் ஓருவன் அங்கே இருந்த பேக்கரியில் ஏதோ வேண்டுமென கேட்டு அழ, அவனின் “மா” “நை.. பேட்டா..நை..” என்று அவனை அந்த பக்கதிலிருந்து இழுத்துபோக முயற்சிக்க, அவன் அவளைவிட பலமாய்.. பிடிங்கிக் கொண்டு ஓடினான். ஓரு முஸ்லிம் குடும்பம் கிட்டத்தட்ட ஓரு 15 பேர் இருப்பார்கள் அந்த கேண்டின் அருகிலேயே இருந்து கொண்டு ஆளுக்கு ஆள் மாற்றி,மாற்றி எதையாவது தின்று கொண்டே இருந்தார்கள்.. அதில் ஓரு புர்கா அணியாத ஓரு அமலா..( ம்ஹூம்.. நமக்கில்ல..), அவசர லேப்டாப் யுவதிகளும்,யுவன்களும், ஓவ்வொரு விமான கிளம்பலுக்கும் முன்னால் ஓரு சிறிய பரபரப்பு, அங்கே இருக்க, லேப்டாப் யு.யுக்க்ள் கிளம்புகையில் இறுக அணைத்து முத்தமிட்டு கிளம்பினார்கள்.. அவள் வேறு யாருடனோ.. அவன் வேறு யாருடனோ,, வேறு வேறு விமானங்களில்.

கிட்டதட்ட பத்து மணியாயிருச்சு.. ஏர்போர்ட்டுல கூட்டம் கம்மியாயிடுச்சு.. அப்போ என் பக்கதுல ஓருத்தர் வந்து “சார்.. ஹைதரபாத் ப்ளைட் எங்க வரும்னு?”ன்னு என்னை பார்த்து கேட்க, நானும் மனசுக்குள்ள அந்த் கேள்வியதான் கேட்டுக்கிட்டிருந்தேன்.. அனா கேக்கல,, என்ன பார்த்தா புதுசு மாதிரி தெரியல போலருக்கே..ன்னு நினைச்சுகிட்டு, “இருங்க.. அவங்க அனொன்ஸ் பண்ணுவாங்க.” ன்னு சொல்லிட்டு போர்டிங் போர்டை பார்த்தேன். 10.45க்கு மாடியில இருக்கிற ஓருகேட்டுக்கு வர சொன்னாங்க.. பளைட்டுக்கு முத முதலா காலடியெடுத்து வைச்சேன்.. சும்மா சிலு, சிலுன்னு தான் இருந்துச்சு.. நுழைஞ்சதும் ரெண்டு குட்டிங்க அதில ஓருத்தி பருத்திவீரன் ப்ரியாமணி போல இருந்தா..கலரா.. அவ என்னை மட்டுமே பார்த்து சிரிச்ச மாதிரி இருந்தது. என் டிக்கெட்டை பார்த்த அவ எகானமி டிக்கட்டுன்னு சொல்லியதில் ஓரு சின்ன எள்ளல் இருந்தது போல் இருந்தது. சே அடுத்த வாட்டி வேற டிக்கெட் எடுக்கணும்ன்னு மனசுல நினைச்சுக்கிட்டு உள்ளே போனா ஆம்னி பஸ் கூட கொஞ்சம் நல்லா இருக்கும் போலருக்கு,, அதவிட் கீக்கிடமா ஓரு சீட்டிங் அரெஞ்மெண்ட்.. இடுக்கிட்டுதான் போகணும்.. எனக்கு நல்ல வேல விண்டோ சீட் கரெக்டா ரக்கை பக்கத்தில.. எனக்கு பக்கதில என்கிட்ட ப்ளைட் டைம் கேட்ட ஆசாமி, அவருகூட அவருடய மனைவி, ஓரு கைக்குழந்தை பெண், ஓரு பத்து வயது பையன். அந்த பெண்ணுக்கும், பையனுகும் நிறைய வயது வித்யாச்மிருக்கும் போலருக்கிறது. ரொமான்சின் மிச்சம்.

ஓரு வழியாய் ப்ளைட் கிளம்ப ஆயத்தமாக, சற்றே பெறிய சத்தமாய் ” டகா டக்” என்றது. பக்கதிலிருந்த பெரியவர்..கண்ணை மூடி “பெருமாளே” என்று முணுமுணுத்தார். பக்கதிலிருந்த தன் மனைவியிடம் “நன்னா சேவிச்சிக்கோடி”ன்னு சொல்ல அவங்களூம் “பெருமாளே”ன்னாங்க.. இதற்குள் அவரின் பையன் எழுந்து சார் எனக்கு விண்டோ சீட் தரீங்களா சார்..ன்னு கேட்டு அரிக்க ஆரம்பிக்க, பெரியவர்.. “சார் கொடுப்பார்டா.. அவர் என்ன இப்பதான் ப்ளைட்டுல போறாறா என்ன.. கொடுப்பார்.” என்றார். நான் அவரை பார்த்து மையமாய் தலையாட்டிவிட்டு.. இப்ப மாறகூடாது சார்.. சீட் பெல்ட் போட்டுக்கோங்க..” அட்லீஸ்ட் டேக் ஆப் பாக்கிற வரைக்குமாவது சீட்டை விடக்கூடாதுன்னு முடிவோட சொன்னேன். ப்ளைட் டேக் ஆப் ஆகும் போது அடி வயிற்றில் ஓரு சின்ன அழுத்தம், ஏற்பட்டு காதை அடைத்தது.. என்ன அழகு மேலிருந்து நம் செனனையை பார்பது அதிலும் கீழேயிருந்து தெரியும் மின்விளக்குளுடன் பார்க்கும் போது சிம்பிளி சூப்பர்ப்..

இப்போது ஹோஸ்டஸ் குட்டிகள் விமானம் ஏதாவது ப்ரச்சனைக்குட்பட்டால் எவ்வாறு முதல் உதவி கருவிகளை உபயோக படுத்துவது என்று செய்முறை விளக்கம் சொல்ல.. பக்கத்து பெரிசு.. சனியன்கள் கிள்ம்பும் போதே அபசகுனமா ஆக்ஸிடெண்ட் ஆறத பத்தி பேசறதுகள் பார்.என்று திட்டிக்கொண்டு இருந்தார். எனக்கு அவர் சொன்னது அவ்வளவாக காதில் ஏற்வில்லை ப்ரியாமணி செய்யும் ஆக்‌ஷனெல்லாம் ஹைஸ்பீடில் என்னை பார்த்தபடி செய்த்தாக தெரிந்தது. அப்போது திடீரென ஓரு அழுகுரல் பக்கத்து சீட் ஆளின் பெண்ணின் கைக்குழந்தை.. அப்போது அழ ஆரம்பித்ததுதான் அடுத்த ஹைதராபாத்தில் இறங்கும் வரை அழுது கொண்டே இருந்த்து..அந்த குழந்தையை அந்த பெண் “ஓணாம்மா..ஓணாம்மா.. என்று கொஞ்சி சமாதான படுத்த மொத்த ப்ளைட்டிலும் நடந்த படியே இருந்தாள்.

நடுராத்திரி 12.30 மணிக்கு மேல் புது ஏர்போர்டில் வந்திறங்கியதும், தேவலோகம் போல் இருந்தது.. வெளியே வந்து டாக்ஸி கேட்டால் ப்ளைட் சார்ஜைவிட அதிகம் கேட்டான்.. அதனால் ஏர்போர்ட் வோல்வோவில் 90 கொடுத்து ஹைதராபாத் சேரும்போது மணி 2. அதுக்கப்புறம் ரூம் தெடி அலைந்தது எல்லாம் இன்னொரு விஷயம்..

எனக்கென்னவோ.. சென்ட்ரல் ஸ்டேசன், கட்டிங், கோலா பாட்டில், ஏறி குடிச்சி முடிச்சதும், ஆடிக்கிட்டே ஓரு அருமையான தூக்கம், நமக்கு டிரையின் தான் சொர்கம்..

2 comments:

  1. நல்லா எழுதி இருக்கீங்க ! உங்க பயண அனுபவங்களை பகிந்துகிட்டதுக்கு நன்றி !

    விமானத்தில் பயணிப்பது என்பது எல்லாருக்குமே பயத்துடம் கூடிய சுகமான பயணம் தான்.!

    அதுவும் விண்டோ சீட் இருந்தா சொர்கத்துல இருக்கிற/பறக்குற மாதிரி இருக்கும்.

    விமானம் மேலே ஏறும் போது ,இறங்கும் போது,வளையும் போது நம்ம குடலுக்கு கிச்சு கிச்சு மூடற மாதிரியே இருக்கும்.

    என்னால் மறக்க முடியாத விமான பயணங்கள் இரண்டு.
    1. நான் பயணித்த விமானம் தொடர்ந்து பதினைந்து நிமிடங்கள் மேக மூட்ட்த்திற்க்கு உள்ளேயே போனதினால் ரொம்ப ஓவரா ஆடிக்கிட்டே போச்சு.
    இதுல சத்தம் (குடு குடு குடு குடு ன்னு ) வேற! எங்க பார்த்தாலும் எல்லாமே வெள்ளையா இருக்குது. பைலட் எப்படி ஒட்டுவான்னு ரொம்ப கவலையா இருந்திச்சு.
    நல்ல நேரம் ஒன்னும் ஆவல.

    2.விமானம் தரைய தொடர நேரம் பார்த்து "டக்குன்னு" மறுபடியும் மேல போய்ட்டான். பைலட் மைக்குல என்னோவோ சொன்னான்.ஒரே பதட்டமாயிடிச்சி. நல்ல நேரம் தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஏற் போர்ட் ஐ விட்டு சென்றேன்

    ReplyDelete
  2. //1. நான் பயணித்த விமானம் தொடர்ந்து பதினைந்து நிமிடங்கள் மேக மூட்ட்த்திற்க்கு உள்ளேயே போனதினால் ரொம்ப ஓவரா ஆடிக்கிட்டே போச்சு.
    இதுல சத்தம் (குடு குடு குடு குடு ன்னு ) வேற! எங்க பார்த்தாலும் எல்லாமே வெள்ளையா இருக்குது. பைலட் எப்படி ஒட்டுவான்னு ரொம்ப கவலையா இருந்திச்சு.
    நல்ல நேரம் ஒன்னும் ஆவல.

    2.விமானம் தரைய தொடர நேரம் பார்த்து "டக்குன்னு" மறுபடியும் மேல போய்ட்டான். பைலட் மைக்குல என்னோவோ சொன்னான்.ஒரே பதட்டமாயிடிச்சி. நல்ல நேரம் தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஏற் போர்ட் ஐ விட்டு சென்றேன்//


    உள்ளுக்குள்ள அல்லு இருந்திருக்காதே..

    ReplyDelete