காதலில் விழுந்தேன் மதுரையில்


காதலில் விழுந்தேன் திரைப்படத்தை சன் தொலைக்காட்சி குழுமம் தயாரித்து வெளியிட்டிருப்பது எல்லோரும் அறிந்ததே.. ஆனால் காதலில் விழுந்தேன் திரைப்படம் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளியிடப்படவேயில்லை. மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் சுமார் 15 தியேட்டர்களில் வெளியிடபட இருந்த காதலில் விழுந்தேன் படத்தை வெளீயிட்டால் அதற்கு பின்னால் நடக்கும் விபரீதங்களையும் சந்திக்க தயாராகுங்கள் என்று தியேட்டர் அதிபர்கள் மிரட்டப்பட்டிருப்பதாக தெரிகிறது. இன்றளவில் காதலில் விழுந்தேன் படம் மதுரையில் திரையிடப்படவில்லையென்றாலும் சென்னை மற்றும் தமிழகம் எங்கும் மிகப் பெரிய ஓபனிங்கோடு ஓடிக்கொண்டிருப்ப்தாக தகவல்.

இதுக்கு முன்னால் முதல்வன் படத்தை கேபிள் டிவியில் ஓட்டியவர்கள் தானே..அதனால் என்ன முதல்வன் ஓடாமல போய்விட்டது.

சக்கரகட்டி தாணுவின் டவுசரை அவிழ்த்து விட்டதாக தெரிகிறது (நன்றி: லக்கிலுக்)

சன் குழுமத்திற்கு போட்டியாய் கலைஞர் டிவியும் திரைப்படம் தயாரிக்க இருக்கிறது.

அது பற்றிய தகவல் அடுத்த பதிவில்
காதலில் விழுந்தேன் விமர்சனம் - இங்கே அழுத்தவும்

Comments

ARV Loshan said…
அது எப்படிங்க தாணுவோட திரௌசெரை அவுத்தாங்க? எங்களுக்குக் கொஞ்சம் விபரமா சொல்லுங்களேன்..
//அது எப்படிங்க தாணுவோட திரௌசெரை அவுத்தாங்க? எங்களுக்குக் கொஞ்சம் விபரமா சொல்லுங்களேன்..//

படமெடுத்துதான் டவுசரை அவுக்கிறதுன்னா.. கோமணத்தோட விட்றதுன்னு நினைக்கிறேன்.. எதுக்கும் ஓரு வாட்டி லக்கிலுக் கிட்ட கேட்டுக்கறேன்.

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.