வாலிப, வயோதிக அன்பர்களே...இந்த பதிவை படிக்க,நல்ல நகைச்சுவை உணர்வும்,சகிப்புதன்மையும் தேவை.. அதனால்..உங்களூக்கு 10 எண்ணுகிறேன்..
1,2,3,4,5,6,7,8,9,10...அவ்வளவுதான் கவுண்ட்டவுன் க்ளோஸ்...சொல்லலன்னுசொல்ல
கூடாது..(சுஜாதா)
ஆம் நீங்கள் நினைக்கும் “அந்த” இடத்தில் தான் .. அந்த இடத்தில் பல் இருந்தால்.. ???
அப்படி ஓரு பெண்ணிற்கு இருக்க, அதனால் ஏற்படும் பிரச்சனைகள்தான் கதை. பிறந்ததிலிருந்தே அவளுக்கு அந்த பிரச்சனை இருக்கிறது. அவளது ஸ்டெப் பாதரின் மகனும், அவளும் சிறு குழந்தைகளாய் இருக்கும் போது பாத்டப்பில் குளிக்கையில் “நி உனதை..நான் எனதை’ விளையாட்டாய் காட்ட, அந்த இடத்தில் கைவைக்கும் பையன் விரல் கடிபடுகிறது. (கவலைபடாதீர்கள்.. எந்த விதமான செக்ஸூவல் காட்சியமைப்பும் இல்லாத ஓரு செக்ஸ், காமெடி,படம்.
வளர்ந்து பெரியவளாகும் அவளுக்கு ஓரு குழுவின் உந்துதலால் தன் கன்னிதன்மையை,ஒருவனுக்கே கொடுக்க வேண்டும் என்ற எணணத்தில் இருக்க, அங்கே.. பழகும் ஓரு பையனை பிடித்து போக..ஓரு சுபயோக சுபதினத்தில்... ஓரு அழகிய அருவின் மடியில் மிக ரொமாண்டிக்கான ஓரு இடத்தில் அற்புதமான லொகேஷன், அவர்கள் இருவரின் தவிப்பும், நடிப்பும் அருமை...
அது நடக்க ஆரம்பிக்க.. சிறிது நேரத்தில் பையன் துடிதுடித்து..கீழே பார்த்தால்.. துண்டாய் அவனது “லுல்லா”..
இப்படி தன்னை டெஸ்ட் செய்யும் டாக்டரின் நான்கு விரல்கள்.. தன்னை பாதி மயக்கதில் அடைந்த இன்னொரு நண்பன் ,பின்னர் மயக்கம் தெளிந்த பின் அவனையும், தன்னுடய ஸ்டெப் பாதரின் மகனையும்,./என்று தொடர்கிறது...
இதையெல்லாம் மீறி அவளை வெற்றி கொண்டு எவனாவது அடைந்தால்தான் உண்டு.. ஆனால் அவள் வாழ்கை போய்க் கொண்டுடிருக்கிறது.
என்னதான் படம் என்றாலும்..கொஞ்சம் ஓவர்தான்.. ஹாலிவுட்டில் கூட இந்த படம் வெற்றி பெறவில்லை... இருந்தாலும் படத்தின் டைட்டிலும், அதன் ஸினோப்ஸிஸும் என்னை இழுத்தென்னவோ.. ஹி..ஹி..ஹி.. (படத்தில ஓரு செம சூடான மேட்ட்ர் ஓன்னு சும்மா வாலை மீன் கணக்கா.. ஹூம்... ஆமா சொல்லிட்டேன்.. சொல்லன்னு சொல்ல கூடாது..
அது சரி அது என்ன எ.த.வ.கூ.படம்ன்னு கேக்கிறீங்களா?
எப்பவும் தமிழில் வர கூடாத படம்.. (ஏன்னா..நமக்கு ......தன்மை கொஞம் கம்மி)
Post a Comment
8 comments:
த.வ.ரெ.ஓ.படம்.
தமிழ்ல வந்தா ரெண்டு நாள் ஓடும் படம்.
(என்னைய மாதிரி,உங்களை மாதிரியான மக்கள் பாக்கறதுக்கு அட்லீஸ்ட் ரெண்டு நாளாவது ஒடனுமில்லே!)
நன்றி ஜூர்கேன்.. அது எங்க வரது.. அதனால டிவிடியே சரணம்.
எப்படித்தான் இந்த மாதிரில்லாம் யோசிக்கிறாங்களோ :))))
அந்த டி.வி.டி எங்க வாங்கினீங்க கொஞ்சம் சொல்லுங்களேன்???
//எப்படித்தான் இந்த மாதிரில்லாம் யோசிக்கிறாங்களோ :))))
அந்த டி.வி.டி எங்க வாங்கினீங்க கொஞ்சம் சொல்லுங்களேன்???//
நம்ம பர்மா பஜார்ல தான். பர்டிகுலரா இந்த படம்னு கேட்காதீங்க.. ரேட்ட ஏத்திவிட்டுடுவானுங்க..நன்றி கமல் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
//cable sankar said...
நம்ம பர்மா பஜார்ல தான். பர்டிகுலரா இந்த படம்னு கேட்காதீங்க.. ரேட்ட ஏத்திவிட்டுடுவானுங்க//
நீங்க சொல்வது உண்மை தான். குறிப்பாக எதையும் கேட்காமல் பொதுவாக கேட்டு அங்கு பொருட்கள வாங்குவதே நமக்கு நல்லது நம்ம பர்சுக்கும் நல்லது
சாதாரணமான படத்தை பார்த்து விமர்சனம் செய்யவே பல விதத்துல யோசிக்க வேண்டி இருக்கும். இந்த மாதிரி அசாதாரணமான படத்தை பார்த்து, அதன் இலை மறைவு காய் மறைவான விமர்சனங்களுக்கு..... படிப்பதற்குள் பத்து முறை சிரித்து விட்டேன்.
//சாதாரணமான படத்தை பார்த்து விமர்சனம் செய்யவே பல விதத்துல யோசிக்க வேண்டி இருக்கும். இந்த மாதிரி அசாதாரணமான படத்தை பார்த்து, அதன் இலை மறைவு காய் மறைவான விமர்சனங்களுக்கு..... //
அதென்னவோ நிஜம் தான். நன்றி சிம்பா உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும்
படத்தோட எழுத்தோட்டத்துல அந்த பல்லு எப்டியுருவாயிருக்கும்னு விஞ்ஙான ரீதியா காட்றது ஆஹா...
அப்புறம் கடைசி சீன்ல வர்ற பெருசு பாவம்...
உங்க விமர்சனம் சூப்பர்...
Post a Comment