Posts

Showing posts from October, 2008

நன்றி...நன்றி... நன்றி...

Image
மீண்டும் ஓரு முறை ஓரே மாதத்தில் 12,775 ஹிட்ஸ்களும், இரண்டு மாதங்களில் 25,000 ஹிட்ஸ்களையும் கொடுத்த, என் சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும், என்னுடய் பதிவை தொடர்ந்து வாசிக்கும், உண்மை தமிழன், ராஜ்,ஜீவன், ஹரி,அருப்புகோட்டை பாஸ்கர், டமில் சினிமா, ராமன்,சிம்பா, ஆதிஷா, தமிழ்நெஞ்சம், ஆதிரை ஜமால், ஆகியோருக்கும், தவறாமல் பின்னுட்டமிடும், ஜூர்கேனுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.. மேலும் என் பதிவு சிறக்க உங்கள் அன்பார்ந்த கருத்துக்க்ளை பின்னூட்டமிட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்..

தயாநிதியும் - மாறனின் தெனாவெட்டும்...

Image
திபாவளி திரைப்படங்கள் மழையில் நினைந்து போன புஸ்வாணங்களாகி போனதால்..ரசிகர்க்ள் அடுத்த பெரிய படங்களை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்..தீபாவளிக்கு ரிலீஸாகவிருந்த “வாரணம் ஆயிரம்” படத்தை சன் பிக்சர்ஸ்க்கு போட்டியாய் திரு தயாநிதி அழகிரி ஆரம்பித்திருக்கும் Cloud nine pictures தமிழகமெங்கும் விநியோக உரிமையை வாங்கியிருக்க.. அதே நேரத்தில் சன் பிக்சர்ஸ் ஜீவா நடிக்கும் ‘சிவா மனசுல சக்தி’ படத்துக்கு பதிலாய் ரொம்ப நாளாய் வெளியிடப்படாமல் காத்திருக்கும் ஜீவாவின் “தெனாவெட்டு” திரைபடத்தை அதே நவம்பர் 14ஆம் தேதி வெளியிட போகிறது.. வாரணம் ஆயிரம் திரைப்டத்தின் தொலைக்காட்சி உரிமை கலைஞர் டிவியிடம் இருக்க, அவர்களும் தினமும், தங்களது சேனல்களில் விளம்பரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.. சன் பிக்சர்சும், தெனாவெட்டின் பட பாடல்களை..ரீஷூட் செய்து தங்களது சேனல்களில் விளம்பர படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் என்னதான் அவர்கள் விளம்பரபடுத்தினாலும்.. வாரணம் ஆயிரம் பாடல்கல் ஏற்கனவே மிகப் பெரிய ஹிட்.. தெனாவெட்டு படபாடல்கள் ஒன்றும் செல்ப் எடுக்கவில்லை.. இந்த நிலையில் சன் டிவியின் விளம்பரம் வெற்றி பெறுகிறதா? அல்லது.. கண்டண்ட் வெ...

கலைஞரும்.. காலில் விழுவதும்..

Image
நேற்று ராஜ் டிவியின் செய்திகளை பார்த்து கொண்டிருந்தேன்..தமிழக் முதலமைச்சரிடம் இலங்கை தமிழர்களுக்கான நிதி காசோலைகளை பல பேர் கொடுப்பதை வரிசையாய் காட்டி கொண்டிருந்தார்கள்.. அதில் மனதை நெருடிய விஷயம் ஓன்று இருந்தது.. அது என்னவென்றால் காசோலையை கொடுத்த பின்பு வரிசையாய் வந்தவர்கள் எல்லோரும் அவ்ர் காலில் விழுந்து ஆசி பெற்று சென்றனர்..கலைஞர் அவர்களூம் அதை பற்றி எந்தவிதமான ரியாக்‌ஷனும் காட்டாமல் இருந்தது ஓரு உறுத்தலாகவே இருந்தது.. ஒரு காலகட்டத்தில் ஜெயலலிதாவின் காலில் விழும் கலாசாரத்தை பலமாய் எதிர்தவர் நம் தலைவர்..மற்றவர் காலில் விழுவது தனிமனித தன்மானத்துக்கு இழுக்கு என்று சொன்னவர்.. அவர்.. அப்படிபட்ட அவர் இதை தடுக்காதது ஏன்? ஓரு வேளை அவர் சொல்லியும், கேட்காமல் அன்பு மிகுதியில் பலர் அவரை முதல் முறையாகவோ.. பல நாட்களுக்கு பிறகாகவோ. சந்தித்த பரபரப்பில் அப்படி செய்திருக்கலாம்.. கலைஞரும் சொல்லி அலுத்திருக்கலாம்.. ஆனால் ராஜ்டிவி அதை ஓளிபரப்பாமல் தவிர்திருக்கலாம் இல்லையா? எல்லோரும் கலைஞரை கூட இருந்தே கவிழ்பதற்கே இருக்காங்க போலருக்கு..

கண்டேன் தமிழ்மணத்தை...

Image
நான் பதிவு போட்டதன் விளைவாலே.. தமிழ்மணம் தன்னுடய பணியை மீண்டும் ஆரம்பித்துவிட்டது என்பதை மிக மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.. அந்த மகிழ்ச்சியை கொண்டாட இதோ.. உங்களுக்காக

தமிழ்மணத்தை காணவில்லை..?

Image
கடந்த இரண்டு நாட்களாய் கொஞ்சம் மெதுவாகவே டவுன்லோட் ஆன தமிழ் பதிவுகளின் திரட்டி தமிழ்மணத்தை மதியத்திலிருந்து காணவில்லை.. தமிழ் பதிவுலகில் பெரும் சேவையாற்றிய தமிழ்மணததை காணவில்லை என்பதை பார்க்கும் போது எனக்கு தேன்கூடு திரட்டிதான் நினைவுக்கு வருகிறது. இதே போல்தான் கொஞ்சம் கொஞ்சமாய் ஸ்லோவாகி திடீரென்று காணாமல் போய்விட்டது.. அதை பற்றி எந்த தகவலும் இல்லை..எனக்கு மட்டும்தான் அப்படி வருகிறதா.. இல்லை எல்லோருக்கும் அப்படி இருக்கிறதா? என்று தயவு செய்து உங்கள் பதில்களை பதியுங்கள்.. தமிழ் மணம் திரும்பவும் வரும் வரை துக்கத்தை மற்பபதற்காக..மேலே உள்ள படம் படித்ததில் பிடித்தது ஏகனை பற்றி அஜித்தின் விமர்சனம் தமிழ்மணம் வரும்வரை..பதிவர்கள் கீழ்கண்ட புதிய திரட்டிகளை உபயோகிக்கலாம்.. www.tamilish.com www.tamilagam.net www.thamilbest.com www.in-tamil.com

”நீங்க இந்த மாதிரி பண்ணதேயில்லையா சார்?”

Image
மதியம் சுமார் 2 மணியிருக்கும் ரொம்ப அர்ஜெண்டாய் என்னுடய குதிரையை (அதாங்க..நம்ம பைக்தான் அப்படி சொல்றேன்..மனசுக்குள்ள இளவரசன்னு நினைபபு) ஓட்டி சென்று கொண்டிருந்தேன்.. அதற்கு காரணம் என்னுடய இளவரசி சுலோசனா..பெயர்தான் சுலோவே தவிர பார்ட்டி செம பாஸ்டு..சாந்தம் தியேட்டரில் ஓரு முறை ட்புள் சீட்டில் நெருக்கமாய் உட்கார்ந்திருந்த ஓரு சூட்டு தருணத்தில்,அவளை தொட்டா சுடுமோன்னு நினைச்சுக்கிட்டு இருந்த நேரத்தில..படத்தில நைட் எபெக்ட்டுல சீன் வரும் போது கிஸ் அடிச்சவ, டார்கெட் முடிக்காததால் டீம் ஹெட் காய்ச்சும் காய்ச்சலிலிருந்து தப்பிக்கும் முடிவாய் “லேடீஸ் ப்ராப்ளம்”ன்னு அவன் எதுக்கு என்னனு கேட்க முடியாதபடி பீலாவிட்டுவிட்டு, எனக்கு மிஸ்ட் கால் கொடுத்திருந்தாள்.. (எப்ப கால் பண்ணியிருக்காங்கன்னு கேட்கிறீங்களா? அதுசரி அவங்க ரிசார்ஜ் பண்ற காசுக்கு எப்பதான் பேசுவாங்க..?)உடனடியாய் வந்தால் ரொம்ப நாளாய் கேட்ட மாயாஜால், ஈ.ஸி.ஆர் என்றாள்.. தேன் குடிக்கும் நரியின் ஆவலோடு அடுத்த செகண்ட் என்னுடய டார்கெட் முடிக்காவிட்டால் ஆப்பு அடிக்கும் டீம் லீடர், இந்த மாச இன்செண்டீவ் எதுவும் என் கண்ணுக்கு தெரியவில்லை..இருட்டு ஸீன...

TAMILAN என்று சொல்லடா.. தலை குனிந்து நில்லடா..

Image
தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. இப்படி சோல்லி சொல்லியே நம்மள உசுப்பேத்தி விட்டுராங்க.. அப்படி உசுப்பேரிய நாம தமிழை தவிர எதையும் படிக்காம எத்தனை பேர் தமிழ்நாட்டு பார்டர் தாண்ட முடியாம இருக்கோம்? அது சரி அதைப்பத்தி நமக்கென்ன கவலை..அறிவுரை எல்லாம் மத்தவங்களூக்கு தானே.. தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று முதல்வர் அறிவித்தவுடன், தமிழில் பெயர் தேடி அலைய ஆரம்பித்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தமிழிலேயே அர்த்தம் சொன்னால்தான் புரியும்படியான் தலைப்புகளை வைத்து வரிவிலக்கு பெற்று வருகிறார்கள்.. (உ.த: வாரணம் ஆயிரம்(ஆயிரம் யானைகள்) ஏகன் (சிவன், எல்லாம் அறிந்தவ்ன்)). அதே போல் அந்த படங்களை தயாரிக்கும், விநியோக செய்கிற நிறுவனங்களின் பெயர்களும் தமிழில் இருந்தால்தான் வரிவிலக்கு என்று அறிவித்தால் நன்றாய் இருக்கும் போலருக்கு. நம் முதல்வரின் வாரிசுகள் நடத்தும் அத்தனை நிறுவனங்களூக்கும் ஆங்கிலத்திலேயே பெயர் வைத்திருக்கிறார்கள். 1. Suntv 2. Ktv 3. Sun Music 4. Sun news மேற்படி பெயர்களை வைத்த பேரன்களுக்கும், ந்ம் தலைவருக்கும் இப்போது தொடர்பு இல்லாவிட்டாலும்,மாறன் சகோ...

சேவல் - விமர்சனம்

Image
சேவல்ன்னு ஏன் பேர் வச்சீங்கன்னு ஹரிகிட்ட கேட்டபோது, சேவல் போல ஊரை சுத்திகிட்டு இருக்கறவந்தான் என் படத்தோட ஹீரோ.. அதனாலதான் படத்திக்கு இந்த பேரை வச்சேன்னு சொன்னாரு..அதுக்கு ஏத்தாப்ல பரத்தும் சும்மாவே ஊரையே சுத்திகிட்டு கிடக்காரூ..திடீர்ன்னு அக்ரஹாரத்து பொண்ணு பூனத்தை பாக்கிறார்.. லவ் பண்ண ஆரம்பிக்க.. அவருடய அக்கா சிம்ரன், அப்பா வழக்கம் போல கோவில் குருக்கள்.. ஏழை பிராமணன்.. பொறுப்பில்லாத வேற சாதி பையன்..அவனுக்கு சித்தப்பாவா.. வடிவேலு..எந்த ஊருக்கு பெரியவர்ன்னு சொல்ல முடியாம ஓரு பெரிய மனுஷன் சண்முகம்.. சண்முகத்திக்கு பூனத்தின் மேல ஓரு கண்ணு, பரத்துக்கு பூனத்தின் மேல லவ், சிம்ரனின் கொழுந்தனுக்கு பூனத்தின் மேல ஓரு கண்ணு..இப்படி ஆளாளுக்கு கண் வைக்கிற மாதிரிதான் பூனம் இருக்காரு.. ஹரிக்கு என்ன ஓரு இதுவோ தெரியல.. அவருடய எல்லா படங்கள்லேயும் ஹீரோயின் அக்ரஹாரத்து பொண்ணாதான் வர்றா..அனா ஓரு அரத பழசான ஓரு கதையை வச்சிக்கிட்டு அவர் பாவம் என்னதான் பண்ணுவாரூ.. சேவலா சுத்திகிட்டுருந்த பரத், பூனத்தை காதலிக்க ஆரம்பித்ததுமே திருந்த ஆரம்பிக்க, பூனம் பரத்தை காதலிக்கணூம்னா அவருடய தாத்தா நிலத்தை எடுத்து வித்து க...

ஏகன் -விமர்சனம்

Image
வழக்கமாய் ரீமேக் ராஜாவை எல்லோரும் கிண்டல் செய்வார்கள், இவரால் ரீமேக்கை தவிர புதுசாய் எடுக்க தெரியாதென்று.. ஆனால் ரிமேக் செய்வது எவ்வளவு கஷ்டம் என்று ஏகனை பார்த்தால் தெரியும்.. ஹிந்தியில் ஷாருக்கான் நடித்து வெளிவந்த “மே ஹூன் நா” என்ற படத்தைதான் தமிழில் கொடுக்க நினைத்து கெடுத்திருக்கிறார்கள்.. ஹிந்தியிலேயே ஷாருக்கின் கிரேஸினால் தப்பிய படம்.. வில்லன் சுமனிடமிருந்து விலகிய தேவன் அப்ரூவராக மாற முடிவெடுக்க, அவரை கொலை செய்ய முயற்சிக்க, போலீசிடமிருந்தும், வில்லன் சுமனிடமிருந்தும் தப்பியோடிக் கொண்டிருக்கிறார் தேவன்.. அவரை பிடிக்க சுமன் ஓரு புற்மும், போலீஸ் ஓரு புறமும் அலைய, அவருடய பெண் ஊட்டியில் ஓரு காலேஜில் படிப்பதாய் போலீஸுக்கு தெரிய, அந்த காலேஜில் ஸ்டூடண்டாய் நம்ம தலைய சேர்த்து, தேவனின் பெண் பியாவிடம் நெருக்கமாய் பழகி தேவனை பற்றி அறிந்து கொள்ள காலேஜில் நுழைகிறார் அஜித். இதற்கு நடுவில் தன்னுடய வளர்ப்பு அம்மா, தம்பி,அப்பா என்று செண்டிமெண்ட் குழப்பம், தம்பி நவ்தீப், பியாவின் காதல் என்று குழப்பியடித்து கும்மியடித்திருக்கிறார்கள்.. கல்லூரி முதல்வர் ஜெயராமும், சத்யனும் நடத்தும் அபத்தங்கள் எல்லாம் ...

அமெரிக்கனாய் வாழ்ந்துபார்...

Image
அமெரிக்கா..அமெரிக்கா.. படித்ததில் பிடித்தது குரல் "சிக்னல் வந்துருக்கு லேன்கோ", கத்திக்கொண்டு வருகின்றான் தூர். பல ஆண்டுகளுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ரேடியோ அலைகளுக்கு பதில் வந்திருக்கின்றது. தூரும் லேன்கோவும் வளர்ந்துவரும் ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் அலுவலகத்தில் லேன்கோவின் உதவியாளனாக வேலை செய்கிறான் தூர். "என்னால நம்பவே முடியல தூர், பணத்த விரயம் பண்ணின ஆராய்ச்சிக்கு இப்போ பலன் கிடைச்சிருக்கா?" "இருக்கலாம். ஆனா இதை decipher செய்ய இன்னும் எவ்வளவு காலம் ஆகும்னு தெரியலயே" "ஏற்கனவே funds நிறுத்தப்போறதா சொல்லிருக்குற நேரத்துல இது கண்டிப்பா நல்ல செய்தி தான் தூர்" "சரி இப்போ அடுத்த ஸ்டெப் என்ன?" "நாமளே decipher பண்ணி பார்க்கலாம். நல்ல இன்ஃபர்மேஷன் கிடைச்சா வேலைய ரிஸைன் பண்ணிட்டு NASA ல போய் ஜாய்ன் பண்ணிடலாம்" "இல்லைனா?" "இல்லைனா, வெறும் ரேடியோ நாய்ஸா இருக்கும், ப்ரஸ்மீட்டுக்கு சொல்லிவிடுவோம். புகழ், சூப்பர் போதை" திரு.கிஷோர் அவர்களின் பதிவிலிருந்து..படித்ததில் பிட...

காதலில் விழுந்த மாறனும், வாரணம் ஆயிரம் அழகிரியும்....

Image
மாறனின் சன் குழுமம் படத்தயாரிப்பில் இறங்கினால்.. கலைஞர் டிவியும் படத்தயாரிப்பில் இறங்குகிறது.ஆம் கலைஞர் டிவி சார்பில் அமிர்தத்தின் மகன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் "முரட்டுக்காளை" படத்தை சுந்தர்.சியை வைத்து தயாரிக்கிறது.. சன் குழுமம் காமெடி திரை என்று தன்னுடய் டி.டி.எச் நெட்வொர்குக்கென்றே பிரத்யோகமாய் ஓரு சேனலை ஆரம்பிக்க, கலைஞர் டிவியும், தன் பங்குக்கு சிரிப்பொலி என்று ஓரு சேனலையும், கலைஞர் செய்திகள் என்றொரு சேனலையும் ஆரம்பிக்க இருக்கிறது.. ஏற்கனவே காமெடிதிரை அவ்வளவாக ஓன்றும் வேலைக்காகவில்லை என்று கேள்வி.. அதுமட்டுமில்லாமல் அந்த சேனல் இப்போது இலவசமாய் தங்களுடய டி.டி.எச் சேவையில் வழங்கி வரும் சன் டைரக்ட்..மூன்று மாதங்கள் கழித்து விடியோ ஆன் டிமாண்ட் என்கிற வகையில் வழங்க இருக்கிறது.. அதற்குள் கலைஞரின் சிரிப்பொலி ஆரம்பிக்கபட்டால் அதுவும் காலி.. சன்னில் ஓன்றும் புதிதாய் ஓரு காமெடி நிகழ்ச்சிகள் எதுவும் தருவதாய் தெரியவில்லை.. ஏற்கனவே தினமும் பல சேனல்கள் நான் ப்ரைம் டைமில் போடும் காமெடி காட்சிகளைத்தான் அதுவும் காட்டுகிறது..இதெல்லாம் இப்படி இருக்க..கலைஞர் டிவிக்கு மிகவும் ஆதரவாய் இருக்கு...

தியேட்டர்களை வாங்கும் சூரிய கம்பெனி...

Image
காதலில் விழுந்தேன் திரைபடத்தை சில பல பேரின் அச்சுறுத்தல், மற்றும் மிரட்டலினால் மதுரையில் வெளிய்டமுடியாமல் தவித்த சூரிய கம்பெனி, அதற்கு ஓரு வழியை கண்டு பிடித்திருக்கிறார்கள். வேறு ஓருவரின் தியேட்டரில் தானே படத்தை ஓட விடமாட்டார்கள்.. நாமே தியேட்டர்க்ளை லீஸ் எடுத்து வைத்துவிட்டால்..என்று யோசிக்க ஆரம்பித்திருப்பதாக நம்பதகுந்த வட்டாரம் தெரிவிக்கிறது... ஏற்கனவே சில நூறு தியேட்டர்களை தன் வசம் லீஸில் வைத்துள்ள ஓரு ”எகிப்து” லோகோ கம்பெனியிடமிருந்து தியேட்டர்களை சப் லீஸ் எடுப்பதாக இருக்கிறதாம் சூரிய கம்பெனி.. ”எகிப்து” கம்பெனியின் தற்போதைய நிலைமை சற்று கவலைக்கிடமாய் உள்ளதால்..அவர்களுக்கும் இது ஓரு வரபிரசாதமாகவே இருக்கும் என்று நினக்கிறது.. சூரிய கம்பெனி இப்படி பல தியேட்ட்ர்களை தன் வசம் வைத்துதிருந்தால் அவர்களின் டிஸ்ட்ரிபூஸ்ன் நெட்வொர்கின் பலம் மேலும் கூடும் என்றே எதிர்பார்க்கிறது.. எதிர்காலத்தில் அவர்களின் படத்தை அவர்களே தங்கள்து தியேட்டர்களில் வெளியிடப்படுவதால்.. அவர்களை அச்சுறுத்துபவர்கள் ஏதேனும் எதிர் நடவடிக்கை எடுத்தால் அதையும் தன்னுடய, தொலைக்காட்சியில் காட்டிவிட்டுவிடலாம்.. என்ற பயம் அச்ச...

அந்த ஆறு நாட்கள்...

Image
சரியாக ஆறு நாட்கள் ஆகிவிட்டது.. நான் பதிவு எழுதி..அப்படி நான் பதிவெழுதாததால் பதிவுலகம் ஓன்றும் பாதித்ததாய் தெரியவில்லை.. பாலசந்தர், சுரேஷ், போன்ற பதிவர்கள் பின்னூட்டமிட்டும், ராஜ் தொலைபேசியிலும் விசாரித்தார்.. அவர்களுக்கு என் வந்தனம்.. கடைசியாய் பாபாவின் திருவிளையாடல் பதிவிட்டுவிட்டு என்னுடய இண்டர்நெட் இணைப்பை துண்டிக்க சொல்லிவிட்டேன்.. நான் என்னுடய் வீடு மாறியதால்.. அதற்கு பிறகு மிக பிஸியாய் இருக்க வேண்டிய நேரமாகிவிட்டது.. வீடு மாறியது ஓருபுறம், பேக்கிங் ஓருபுறம், இதற்கு நடுவில் ஓரு திரைப்படத்திற்க்கு திரைக்கதை விவாதம் வேறு ஓத்து கொண்டிருந்தேன்..ஓரு வழியாய் கலந்து கட்டி, ஞங்கே..மங்கே.. என்று குழப்பமாய் என் காரியங்களை செய்துவிட்டேன்.. அவ்வப்போது என் ப்திவுக்கு வந்த பின்னூட்டங்களை மட்டுறுத்தி வேலையை மட்டும் ப்ரவுசிங் செண்டரில் சென்று செய்துவந்தேன்.. ஓரு வழியாய் மூண்று நாட்களுக்கு பிறகு இண்டர்நெட் இணைப்பு புதிய வீட்டுக்கு கொடுக்கபட்டதும்.. எழுதலாம் என்று நினைத்து சிஸ்டத்தை பூட் செய்தபோது.. ஓரு மாதிரியான எண்ணை போடாத கீல் போல ஓரு சத்ததுடன் திரையில் வார்ட்ரோப் போட்டதுபோல் தோரணம் தோரணமாய் ஓர...

பாபாவின் >>>>திருவிளையாடல்கள்....

Image
இப்போது சமீப காலமாய் சென்னையில் ஓரு விஷயம் பரபரப்பாய் செய்யப்படுகிறது.. அதுவும் புட்டபர்த்தி சாய்பாபாவின் பெயரில்.. நீங்கள் நினைத்த காரியம் நடக்க வேண்டுமா? உடனடியாய் இந்த காரியத்தை செய்தால் நீங்கள் நினைத்த காரியம் ஈடேறும்.. என்று சொல்லபபட்டு தொடர் சங்கிலியாய் தொடர்கிறது.. ஓரு வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் இரண்டு டீஸ்ஸ்பூன் டீ தூளையும், இரண்டு டீஸ்பூன் சக்கரையையும் சேர்த்து கலக்கி, அதன் வாயை காற்று புகா வண்ணம்..துணியால் மூடி நம் மனதில் நினைக்கும் காரியத்தை பாபாவை நினைத்து வேண்டிக் கொண்டு, வியாழன் முதல் வியாழன் வரை பூஜை அறையில் வைத்து பூஜித்து விட்டு அடுத்த வியாழன் அன்று அதை பூஜை செய்து திறந்து பார்த்தால்.. அந்த தண்ணீரின் மேலே ஓரு ஏடு போல திக்காக ப்ரவுன் நிற ஓரு லேயர் பார்ம் ஆகியிருக்க, அப்படி அகியிருந்தால் அவர்கள் எதை நினைத்து வேண்டி கொண்டார்களோ.. அது நடந்துவிடும் என்கிறார்கள்.. அனால் இதற்கு அப்புறம் தான் இருக்கிறது விஷயம்.. அவர்களின் பாத்திரத்தில் பார்ம் ஆன லேயரில் நான்கில் ஓரு பகுதியை அந்த தண்ணீரிலேயே போட்டு அதே பாத்திரத்தில் மேலும், அதே டீ தூள் , அதே சக்கரை சேர்த்து.....

ராஜூ.....

Image
ராஜூவை பார்த்ததுமே எனககு ரொம்ப பிடித்துவிட்டது..அப்பா,தம்பி, தங்கை என்று எல்லோருக்கும் பிடித்துவிட்டது அம்மாவை தவிர.. அம்மாதான் வேண்டா வெறுப்பாய் சரி என்று சொன்னாற் போல் தெரிந்த்து.. மெஜாரிட்டி வின்ஸ்.. ராஜூ என்று எதற்காக பெயர் வைத்தோம் என்று எனக்கு தெரியவில்லை..ஆனால் எல்லோருக்கும் ரொம்பவே பிடித்துவிட்டதால் அதையே வைத்து கூப்பிட.. ஆரம்பிக்க..முதல் முறை கூப்பிடும்போது அது எனக்கென்ன என்று உட்கார்ந்திருக்க.. ச்சூ..சுசூ ராஜூ என்று பேர் சென்னதும்.. அவன் திரும்பியது.. சூசூவுக்கா..இல்லை பேரை தெரிந்தா என்று பட்டிமன்றம் நடந்த்து.. அவனுக்கு பால் கொடுப்பது, வாக்கிங் போகிறேன் பேர்விழி என்று இரண்டொருநாள் அவனுடய கழுத்தில் பட்டை அதில் ஓரு மணி என்று ஜோடித்து போய் விட்டு வெளியே பீத்தி கொண்டவுடன், வாக்கிங் நின்று போயிற்று.. அவனுடய் வளர்ச்சி ரொம்ப சீக்கிரமே வளர்ந்துவிட்டான்.. ரொம்ப கோபக்காரனாயிட்டான்.. யாரையும் உள்ளே விடமாட்டான்.. நானோ..அலலது என் அப்பாவோ போய் அவனிடம் போய் காட்டி “ராஜு.. இவரு நம்ம ப்ரண்ட் “என்று அறிமுகத்துக்கு அப்புறமே போனால் போகிறதென்று பக்கத்தில் வந்து உட்கார்ந்து,வாலாட்டிய பிற்கும் சந்...