பதிவெழுதி பின்னூட்டம் வாங்குறதுன்னு யோசிச்சி, யோச்சி மண்டை காஞ்சி போனது தான் மிச்சம்.. சரி வெறுமே யோசிக்காம,, ஓரு ஆராய்ச்சி போல செய்ய ஆரம்பிச்சேன் அப்பத்தான் ஓரு விஷயத்தை கண்டுபிடிச்சேன். தினமும் பதிவெழுதற பல பேர் பின்னுட்டமிடறவங்க எல்லோரும் சனி, ஞாயிறு கிழமைகளில் ஆன்லைனில் வருவதில்லை. அது என்ன பதிவெழுதறத்துக்கு வீக் எண்ட் விடுமுறையா.?
ஏண்டான்னு யோசிச்ச போது பெரும்பாலும் பல பதிவர்கள் தங்கள் அலுவலகத்திலிருந்தே பதிவெழுதுகிறார்கள். கம்ப்யூட்டர் சம்மந்தபட்ட தொழிலில் இருப்பவர்கள் அத்னூடயே இருப்பதால் வேலைக்கு நடுவே (செஞ்சாத்தானே.. என்று கேட்கும் பதிவ்ர்கள் நினைப்பது எனக்கும் கேட்கிறது.) பின்னூட்டமிடுவது, பதிவு எழுதுவது என்று பிசியாய் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தேன்.
எப்போதாவது பதிவெழுதுபவர்க்ள் சொந்தமாய் கணினியும், இண்டர்நெட் இணைப்பு வைத்திருப்ப்வர்கள் என்றும் தெரிகிற்து.
பதிவெழுதியே பெரிய பதிவர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள், பின்னூட்டமிட்டே பெரிய பின்னூட்டமானவர்களும் இருக்கிறாரிகள்..
பதிவுகளில் பொதுவாக அதிகம் படிக்க படுவது சினிமா சம்மந்தபட்ட பதிவுகள் என்பதும் தெரிகிறது.
அதிலும் அதிஷா, லக்கிலுக், பரிசல் போன்றவர்களின் திரைவிமர்சனம் வெகுவாக மக்களை கவர்திருக்கிறது என்பதும், சமீப காலமாய் ஏதோ கேபிள்,வயர் என்ற பெயரில் கிறுக்கி வரும் அவரின் விமர்சனங்களுக்கும் ஹிட்ஸ் வர ஆரம்பித்திருப்பதே.. சாட்சி.
செக்ஸ் சம்மந்தமாய் எதாவது பதிவிட்டாலும் வெகுவாக மக்களிடம் போய் சேருகிறது.. ஆனால் பார்த்துவிட்டு பின்னூட்டம் தான் இடமாட்டார்கள். கிட்டத்தட்ட பிட் படம் பார்க்க போய்விட்டு உள்ளுக்குள் கிளுகிளுபதை போல், படித்துவிட்டு போய்விடுகிறார்கள்..
சரி எதையாவது எழுதி தொலைத்தோம்னு வச்சிக்க்கங்க.. அதுக்கு தலைப்பை பிடிக்கறதுக்குள்ளே அவனவன் படற அவஸ்தை இருக்கே.. ஸ்...அப்பா.. நினைச்சாலே கண்ணைகட்டும்.. பரங்கிமலை பத்தி எழுதணும்னா “ஜோதியாய் நிற்கும் பரங்கிமலைன்னு” தலைப்பை போட்டாதான் உள்ளேயே வராங்க..
இப்படி கஷ்டப்பட்டு , வேதனைப்பட்டு பதிவெழுதறவங்களை பத்தி நான் என்னனு சொல்ல.. அதெல்லாம் ஓரு தவம்ன்னு தெரிய வருது..
அப்புறம்.. அவ்வளவுதாங்க.. என்னத்தை எழுதறதுன்னு யோசிச்சி, யோசிச்சி பாத்தப்போ.. தான் புரிஞ்சுது தினம் எதையாவது எழுதறது எவ்வளவு கஷ்டம்னு.. எதோ என்னோட இன்னைய கடமை முடிஞ்சது. ஓரு மொக்கை பதிவாவது எழுதிட்டேன். எவ்வளவு கஷ்டம்டா சாமி...
படிக்கிறவங்க எல்லோரும் தயவு செஞ்சு பின்னூட்டம் போட்டுறுங்க.. இல்லேன்னா தலைப்ப வச்சு உள்ளே வந்தவங்க நாக்க பிடிங்கிக்கிற மாதிரி பேசுவாங்க..
லேட்டஸ்ட் ஹிட்
பூ படத்தில் வரும் “ஆவாரம்பூ” பாட்டை கேளுங்கள்..அருமை..
Post a Comment
6 comments:
உனக்கு அவங்க மூணு பேர் தவிர டெய்லி எழுதறவங்கள தெரியாதா?
//உனக்கு அவங்க மூணு பேர் தவிர டெய்லி எழுதறவங்கள தெரியாதா?//
அவசரத்துக்கு எதாவது எழுதணும்னு எழுத, அவசரத்துக்கு அவங்க படம்தான் கிடைச்சுது..அவசரத்துல போட்டுட்டேன்.. மத்தவங்க படத்தையும் எப்படியாவது போட்டுடறேன் தல...
உங்க ஆராய்ச்சியில இதையும் சேர்த்துக்கோங்க!
வழக்கமாக பின்னூட்டம் மட்டுமே இடுபவர்கள் அவர்களின் பேவரிட் ரைட்டர்களுக்கு பின்னூட்டம் இடுவதையே அதிகமாக விரும்புகிறார்கள்.(சில சமயம் மொக்கையாக இருப்பினும்!)
மற்ற ரைட்டர்களின் சூடான இடுகைகள் பல இருப்பினும் நான் அவற்றிற்குள் பெரும்பாலும் செல்வதே இல்லை.
//வழக்கமாக பின்னூட்டம் மட்டுமே இடுபவர்கள் அவர்களின் பேவரிட் ரைட்டர்களுக்கு பின்னூட்டம் இடுவதையே அதிகமாக விரும்புகிறார்கள்.(சில சமயம் மொக்கையாக இருப்பினும்!)//
சரி, சரி, அதான் மொக்கைன்னு சொல்லிட்டுதானே எழுதினேன்.. இருந்தாலும் ரொம்பத்தான் என்ன புகழறீங்க.. இருந்தாலும்.. உங்கள் பணி தொடரட்டும்.. நன்றி ஜூர்கேன்.
நல்ல வாசிப்பு உள்ளவர்களிடம் எழுத்து திறமையும் இருக்கும் எப்போது எழுத போகிறீர்கள்.?? ஜூர்கேன்
Sankar,
This is good analysis and what I realized
:-))
//Sankar,
This is good analysis and what I realized
:-))//
Thank U
Post a Comment