Thottal Thodarum

Oct 9, 2008

இதுதாண்டா போலீஸ்


மாலை ஏழு மணி இருக்கும் சாலிக்கிராமம் பிரசாத் லேப் ரோடும், அருணாசலம் ரோடும், மற்றொரு ரோடும் சந்திக்கும் மும்முணை..ஓரே டிராபிக் ஜாம்.. எல்லா பக்கத்திலும் பெட்போர்டும், சுமோக்களும், குவாலிஸூகளும். டிவிஎஸ் 50களூம், பைக்குகளும் எல்லா பக்கத்திலும் வண்டிகள்.. ஆரன்கள்..யாருக்கும் பொறுமையில்லை.

பொறுமையில்லாமல் எதிர்பக்கம் முன்னேற முயன்று எதிர் பக்கம் வரும் டிராபிக்கையும், நிறுத்தி, மேலும் இடத்தை போர்களமாய் மாற்றி கொண்டிருந்தார்கள். எனக்கு எரிச்சலாய் இருந்த்து.. தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டோமோ? வேறு ஏதாவது சந்தில் எஸ்கேப் ஆகலாம் என்றால், என்னை சுற்றி வண்டிக் கடல். பக்கத்தில் ஓரு டீக்கடையில் ஓரு டிராபிக் போலீஸ் கடையினுள் உட்கார்ந்து ரகசிய தம் அடித்தபடி ”நமக்கென்ன” என்ற ரேஞ்சில் உட்கார்திருக்க..

அப்போது ஓரு அம்பாசிடர் கார் ஓன்று சிறிது, சிறிதாக முந்திக் கொண்டு, என் பக்கத்தில் வந்து நின்றது..உள்ளே ஓரு போலீஸ் ஆபிஸர், அநேகமாய் இன்ஸ்பெக்டர் ரேங்க.. உள்ளேயிருந்தபடி அங்கும், இங்கும் பார்த்தபடி இருந்தார்..என்ன நினைத்தாரோ சட்டென்று மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்த காரிலிருந்து இறங்கி, “டிரைவர் நாம ப்ரசாத் லேப் முன்னாடி ரைட் திரும்பணும்” என்று சொல்லிவிட்டு, சுறுசுறுப்பாய் களத்த்தில் இறங்கினார். எல்லா வண்டிகளையும் தாண்டி அந்த மும்முனைக்கு நடுவில் சென்று, அங்கிருந்த டிராபிக்கை க்ளியர் செய்ய ஆரம்பித்தார். அவர் செய்வதை பார்த்த பக்கத்திலிருந்த ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்களும் உதவிக்கு வர ஓரு 10 நிமிடங்களில் டிராபிக் கிளியர்..

அப்போது அங்கே வந்த டிராபிக் போலீசை பார்த்து ஓரு வார்தையை சொல்லி திட்டி விட்டு, தன் காரில் ஏறி போகும்போது நான் அவரை நிறுத்தி

“சார்.. ஓரு நிமிடம் உங்களை ஓரு போட்டோ எடுத்துக்கிறேன்..என் பதிவுல போடற்துக்கு” என்று சொன்னதும்,

“எதுக்கு சார்..? என்னோட வேலை இது, சட்டம் ஓழுங்கு மட்டுமில்ல.. டிராபிக்கையும் பாக்கறது என் வேலைதான். அதுக்காகதானே எனக்கு சம்பளம்.?”ன்னு சொல்லிட்டு போய்கிட்டேயிருந்தாரு.. அவரு சென்னை போலீஸ் இல்லை, திருச்சி போலீஸ்

இதுதாண்டா போலீஸ்..


Post a Comment

16 comments:

Anonymous said...

இப்படியும் ஓரு போலீஸ்..திருச்சிலேர்ந்து.. குட்.. வெரிகுட்

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

"அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை ! "

பாபு said...

அந்த போட்டோ ல ஒருத்தர் ஸ்டாலின் மாத்ரி இருக்கார் பாருங்க

Cable சங்கர் said...

//"அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை ! "//

ஆம் பெய்யட்டும் மழை நன்றி அருப்புக்கோட்டை பாஸ்கர்.. உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்

Cable சங்கர் said...

அட ஆமாமில்ல நான் கூட கவனிக்கவேயில்ல..நன்றி பாபு உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

Raj said...

அவர், எனக்கென்ன வந்தது...நாந்தான் திருச்சி போலிசாச்சே என்று போகாமல் போக்குவரத்தை சரி செய்தது பெரிய விஷயமில்லை...நீங்கள் புகைப்படம் எடுக்க கேட்டபோது மறுத்து விட்டு போனார் பாருங்கள்........இல்லை அவர் போகவில்லை..நம் மனதில் நின்று விட்டார்!

Raj said...

உங்களோட முகப்பு பக்கத்துல இருக்க அம்மணி படம் சூப்பர்..........ஆமாம் அவங்க யாரு?

யூர்கன் க்ருகியர் said...

// பக்கத்தில் ஓரு டீக்கடையில் ஓரு டிராபிக் போலீஸ் கடையினுள் உட்கார்ந்து ரகசிய தம் அடித்தபடி ”நமக்கென்ன” என்ற ரேஞ்சில் உட்கார்திருக்க..//

கடமை தவறிய அந்த காவலரையும்(?!) கொஞ்சம் சாடி இருக்கலாம்!

Cable சங்கர் said...

//அவர், எனக்கென்ன வந்தது...நாந்தான் திருச்சி போலிசாச்சே என்று போகாமல் போக்குவரத்தை சரி செய்தது பெரிய விஷயமில்லை...நீங்கள் புகைப்படம் எடுக்க கேட்டபோது மறுத்து விட்டு போனார் பாருங்கள்........இல்லை அவர் போகவில்லை..நம் மனதில் நின்று விட்டார்!//

அதனால் தான் இந்த பதிவே ராஜ்.. நன்றி உங்கள் வ்ருகைக்கும், கருத்திறகும்

Cable சங்கர் said...

//கடமை தவறிய அந்த காவலரையும்(?!) கொஞ்சம் சாடி இருக்கலாம்!//

அந்த இன்ஸ்பெக்டர் ஓரு வார்த்தை சொன்னார் என்று சொன்னேன் அல்லவா அதுவே போதுமானது.

Cable சங்கர் said...

//உங்களோட முகப்பு பக்கத்துல இருக்க அம்மணி படம் சூப்பர்..........ஆமாம் அவங்க யாரு?//

நான் இயக்கிய குறும்படத்தின் கதாநாயகி..

Raj said...

சங்கர்....இப்பதான் அந்த படம் (accident)பார்த்தேன்....நல்லா பண்ணி இருக்கீங்க...க்ளைமாக்ஸ்ல நீங்க கொடுத்த twist ஐ ரொம்ப ரசிச்சேன்...உங்களை அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியுமா

Cable சங்கர் said...

உங்களுடய மின்னஞ்சலில் என்னுடய் கைபேசி எண்னை அனுப்பியுள்ளேன்
ராஜ்

சிம்பா said...

"சேற்றில் மலர்ந்த செந்தாமரை.."

இன்னனும் போலீஸ் துறைல இவரமாதிரி அதிகாரிங்களும் இருக்கிறத நெனச்சா சந்தோசமா இருக்கு.

வாழ்க...

Cable சங்கர் said...

//இன்னனும் போலீஸ் துறைல இவரமாதிரி அதிகாரிங்களும் இருக்கிறத நெனச்சா சந்தோசமா இருக்கு.

வாழ்க...//

அது என்னவோ உண்மைதான். என் அடுத்த பதிவ படிங்க..சிம்பா.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

தமிழ் அமுதன் said...

நல்ல போலீஸ்!!!