எனது பெயரை இனிமேல் யூஸ் செய்ய வேண்டாம் என்று மணிரத்னம் அறிவித்திருக்கிறார். அவர் இவ்வாறு அறிவித்ததன் காரணம் என்னவாக இருக்கும் என்று அவரின் ரசிகர்களும், பத்திரிக்கையாளர்களும், தமிழ் திரையுலகமும் அறிய ஆவலாயிருக்கிறார்கள்.
சமீபத்தில் மணிரத்னத்தின் உதவியாளர் திரு. தினேஷ்குமார் இயக்கிய கத்திக்கப்பல் என்கிற திரைப்படத்தை பார்த்து விட்டு நொந்து போய்தான் மணிரத்னம் இந்த அறிக்கையை விட்டுள்ளார் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
அலைபாயுதே படத்தில் மட்டும் தன்னுடன் உதவியாளராக பணிசெய்த அதுவும் அந்த படத்தின் கதையாசிரியர் திரு செல்வராஜ் என்பதால். அதுமட்டுமில்லாமல் தன்னுடய உதவியாளர் என்று சொல்லி படத்தின் விளம்பரத்தில் தன்னையும், பாரதிராஜாவையும் போட்டு, ஏகப்பட்ட விளம்பரம் செய்து, படு அமெச்சூரான ஓரு படத்தை எடுத்திருக்கும் இவரை பார்த்து அடுத்து வரும் தலைமுறையினர் இவரே இப்படி என்றால் அவரின் குருவின் படம் எப்படி இருக்குமோ என்று நினைத்துவிடுவார்கள் என்று அஞ்சி தான் இந்த அறிக்கை வந்திருப்பாக சொல்கிறார்கள்.
இதில் பாரதிராஜாவை எதற்காக போட்டார்கள் என்று கேட்டீர்களானால் அது ஓண்ணுமில்லை தினேஷின் தந்தை பிரபல கதையாசிரியர் செல்வராஜ் அவர்கள்..
கத்தி குத்திருச்சு அண்ணே.. கத்தி குத்திருச்சு..முடியல..
டிஸ்கி : இதையும் மீறி நீங்கள் கத்திக்கப்பல் விமர்சனத்தை படிக்க வேண்டும் என்று விரும்புவர்கள்.. பின்னூட்டமிட்டு உறுதிபடுத்தினால் நாளை உங்களுக்காக .....
நான் படித்ததில் பிடித்தது
சிங்கமும் சுண்டெலியும்
சிங்கம் தூங்காது
சுண்டெலிதான் தூங்கும்
நீ சிங்கமா சுண்டெலியா
மகனிடம் கேட்டேன்
உடனே சொன்னான்
நிறைய சிங்கம்
கொஞ்சம் சுண்டெலி
திரு ராஜா சந்திரசேகரின் பதிவிலிருந்து மேலும் அவரின் பதிவுகளை படிக்க..
Post a Comment
7 comments:
//இதையும் மீறி நீங்கள் கத்திக்கப்பல் விமர்சனத்தை படிக்க வேண்டும் என்று விரும்புவர்கள்..//
வெயிட்டிங் ! வெயிட்டிங் ! வெயிட்டிங் !
//வெயிட்டிங் ! வெயிட்டிங் ! வெயிட்டிங் !//
வீரன்யா நீ.. நீ வீரன்யா..
நானும் காத்திருக்கேன்...
ஆமாம் உங்கள் பதிவில் பயன்படுத்தியுள்ள படம் எந்த நடிகையுடையது ?
உங்க முகப்புப் பக்கத்தில் இருக்கிற அந்த அம்மா யாரு?
ராஜா சந்திரசேகரின் கவிதைகளின் தொடுப்புக்கு நன்றி
//நானும் காத்திருக்கேன்...
ஆமாம் உங்கள் பதிவில் பயன்படுத்தியுள்ள படம் எந்த நடிகையுடையது ?//
ரவி நீங்களும் வீரன் தான்.. அந்த பெண் என்னுடய குறும்படத்தில் நடித்த நடிகை ஸ்ரீ.
//ராஜா சந்திரசேகரின் கவிதைகளின் தொடுப்புக்கு நன்றி//
நடிகை பெயர் ஸ்ரீ. நன்றி தருமி அவர்களே..உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
கேபிள் ஸார்..
விஷயம் இவ்ளோ முத்திப் போச்சா..
விட்ருங்க. நாங்க பாவம்.. தெரியாம வந்துட்டோம்..
அந்தப் படத்தோட கதையை தலைவிதியேன்னு கேட்டு வேற தொலைஞ்சிட்டோம்.. போதுமே..
Post a Comment