கத்திகப்பல் பேர் வித்யாசமாய் இருக்கிறது, மணிரத்னதின் அசிஸ்டெண்ட், பாரதிராஜாவின் ஆஸ்தான கதாசிரியர் ஆர்.செல்வராஜின் புதல்வர் என்று இயக்குனர் தினேஷ் பற்றி எதிர்பார்போடு படத்துக்கு போனேன்.. இது போதாதென்று நாளிதழ்களில் வேறு படத்தின் நாயகன், நாயகி படத்துக்கு பதிலாய் மணிரத்னமும், பாரதிராஜாவும் பேசிக் கொள்வது போல் விளம்பரம் வேறு என்னை உசுப்பேற்றிவிட.. கத்திகப்பல் விமர்சனம்
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வீரய்யன் என்கிற வீரப்பனை போல ஓருவன் ஒரு மாஜி அமைச்சரை கடத்தி கொண்டு போய் பல கோடி கேட்டு மிரட்டுகிறான். அவனை பிடிப்பதற்காக அமர்த்தியிருந்த ஐந்து போலீஸ் அதிகாரிகள், சந்திரபோஸ், தென்னவன்,ஜெயபிரகாஷ், சக்திவேல்,வினோத் குமார் என்கிர அதிகாரிகள் அவனை கொன்று வெற்றி வாகை சூடிக் வரும் வேளையில் நேர்மையான டாக்டர் பாரிவள்ளலையும் வீரய்யன் கொன்று விடுகிறான். அந்த கேஸ் க்ளோஸ் செய்யபடுகிறது.
இருபது வருடங்களுக்கு பிறகு பாரிவள்ளலின் மனைவி சாரா தனிமையில் வீட்டில் விளக்கு கூட இல்லாமல் ஓரு திருதிரு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருக்க, அவளை தேடி ஹீரோ அனுப்குமார் வருகிறார். வந்து அவர் தான் பாரிவள்ளல் எனவும் சாராவின் கணவன் மறுபிற்வி எடுத்து வந்திருப்பதாக சொல்லி எல்லோரும் நம்புகிறார்கள், சாரா உட்பட்.
அனூப்பை தேடி அவரது மனைவி மல்லிகா ,அவரது அண்ணனுடன் வர, அவர் பங்குக்கு அவரும் குழப்ப, இந்த செய்தியை படித்த தற்போது போலீஸ் கமிஷனராக இருக்கும் சந்திரபோஸ், விரய்யனின் ஓளித்து வைத்த பணத்தை தேடித்தான் அனுப் வந்திருப்பதாக் முடிவு செய்து, தனது பழைய டீம்மேட்டுகளை கொடைக்கானலுக்கு வரவழைத்து, விசாரணையை ஆரம்பிக்க, அனூப் மல்லிகாவிடம் தான் ஓன்றும் சாராவின் கணவன் இல்லை என்றும் புதையலை தேடி வந்திருப்பதாகவும் அது கிடைத்து விட்டால் நாம் இருவரும் பெரும் செல்வத்தோடு ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வோம் என்று பேசுவதை சாரா கேட்கிறாள்..
இப்படியாக போகிற கதையில் சாராவின் கணவர் பாரிவள்ளல் எப்பேர்பட்டவர், அனுப்புக்கும், சாராவுக்கு என்ன தொட்ர்பு, என்று பல டுவிட்டுகளை வைத்திருக்கும் இந்த கதையில், மிகப் பெரிய வருத்தம் என்னவென்றால் மிக அமெச்சூர்தனமான டயலாக்குகளும், வரிக்கு வரி ஓரு கிலோ மீட்டர் இடைவெளியுடன் பேசும் வசனங்களும், இது திரில்லர் படமா ? பேய் படமா? என்ன மாதிரி படம் என்று குழ்ப்பத்துடனேயே படமெடுத்திருப்பது படு கொடுமை..
இயக்குனரின் அமெச்சூர்தனத்துக்கு ஓரு உதாரணம், படத்தில் முக்கிய கேரக்டராய் காண்பிக்கபட்டு பின்னர் அவர்தான் கதையின் காரணமான வில்லன் என்பது திருப்பம். ஆனால இயக்குனர் டைட்டில் கார்டிலேயே “வில்லானாக சந்திரபோஸ் அறிமுகம்” என்று போட்டு உடைத்து விட சப்பென்று ஆகிவிடுகிற்து.. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..
அனூப் குமார் பாவம் எவ்வளவு கொடுத்து நடித்திருக்கிறாரோ? அய்யோ பாவம், எதோ கொடுத்த காசுக்கு நாலு பாட்டுக்கு டான்ஸ் ஆடி, சண்டை போட்டிருக்கிறார், கதாநாயகி பூர்ணிதா பாவம் ஆள் மட்டும் இரண்டரைஅடிக்கு இருந்து கொண்டு, முப்பது வயது முதிர்ந்த முகம்..பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..
மீரா வாசுதேவன் தான் கதாநாயகி.. போல் படம் முழுவதும் வருகிறார்.. அமைதியாய் இருகிறார். பின் பாதியில் வேட்டைகாரன் டிரஸ்சை போட்டு கொண்டு தீபாவளி ஊதுபத்தி மாதிரி ஓரு துப்பாக்கியை எப்படி பிடிப்பது என்று தெரியாமல் த்மிழக காவல் துறையின் கமிஷனர், மற்றும் அதிகாரிகளை இரண்டரை மணி நேரம் பேசியே கொன்று விடுகிறார்.
இயக்குனர் பற்றி சொல்ல வார்தைகளேயில்லை.. இன்னொரு கலாபிரபு, ஜோதிகிருஷ்ணா வரிசையில் ..
இதுக்கு மேல ஏதும் எழுத முடியலை.. படத்தைவிட சிட்டி செண்டர் மாலில் வந்த பிகர்கள் நன்றாக இருந்த்தால் படம் முடிவதற்கு முன்னாலேயே வந்து கொடுத்த காசை பயனுள்ளதாக்கினேன். கத்திக்கப்பல்... குத்திருச்சு...
படித்ததில் பிடித்தது
வாசுதேவன் இன்னும் இரண்டு நாட்களில் அமெரிக்காவுக்குச் செல்கிறார், சியாட்டிலில் இருக்கும் மகன் வீட்டுக்கு. தினமும் இரண்டொருவர் இது குறித்து விசாரிக்க வாசுதேவனின் வீட்டுக்கு வருவதுண்டு. அன்று வாசுதேவனிடம் மாட்டியவர் மீனாட்சிசுந்தரம். மீனாட்சிசுந்தரத்திடம் ஏதோ அவர் தான் அமெரிக்காவின் அரசியல் சாசனத்தையே வடிவமைத்தது போல அளந்துகொண்டிருந்தார்.
“சார் போஸ்ட்”, சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தார் வாசுதேவன். “சார், ஸ்டாம்ப் ஒட்டாம வந்திருக்கு. எட்டு ரூவா குடுத்தீங்கன்னா லெட்டரக் குடுத்துட்டுப் போயிருவேன்” போஸ்ட்மேன் மிகவும் பணிவாகவே சொன்னார். எட்டு ரூபாய் என்று காதில் விழுந்தது தான் தாமதம், மிளகாய் அரைத்த அம்மியில் வெற்றுடம்புடன் உட்கார்ந்த மாதிரி எரிந்து விழ ஆரம்பித்தார். “ஸ்டாம்ப் ஒட்டாம அனுப்புற அளவுக்கு கேடு கெட்ட சொந்தக்காரனுங்க எவனும் எனக்கு இல்லை. எடுத்துக்கிட்டு கெளம்பு…” இது போதாதென்று “வந்துட்டானுங்க லெட்டர எடுத்துக்கிட்டு…” என்று முனகலுடன் வீட்டுக்குள் நடையைக் கட்டினார். அவருக்கு எங்கே தெரியும், உறைக்குள் இருப்பது முந்தாநாள் ஜெராக்ஸ் எடுக்கப் போன இடத்தில் அவரையும் அறியாமல் தொலைத்த அவரது பாஸ்போர்ட் என்று.
திரு விஜயகோபால்சாமியின் பதிவிலிருந்து...மேலும் கதைகளை படிக்க இங்கே அழுத்தவும்
Post a Comment
14 comments:
பாவம்...மணிரத்னம், பாரதிராஜா....அவங்க இமேஜை கெடுக்க இப்படியெல்லாம் ஆட்கள் கிளம்பினால்...அவங்க என்ன செய்வாங்க!
கத்திகப்பல் கவிழ்ந்திரிச்சி!
sos
sos
sos
//“வில்லானாக சந்திரபோஸ் அறிமுகம்” என்று போட்டு உடைத்து விட சப்பென்று ஆகிவிடுகிற்து.. //
"எங்கப்பன் குதிருக்குள் இல்ல" ன்ற மாதிரி :)
//கத்திகப்பல் பேர் வித்யாசமாய் இருக்கிறது, //
அப்ப காகித கப்பல் இன்னு வச்சிக்கோங்க!
பொருத்தமா இருக்கும் !
இந்த படத்துக்கும் (படமா இது !!?) வீரப்பனின் கதைக்கும் தொடர்பு இருப்பது போல இருக்கே !
இவ்வருட சிறந்த மொக்கை படத்திற்கான ஆஸ்கார் அவார்ட் - கண்டிப்பா இந்த படத்துக்குத்தான்!
விமர்சனத்தை படித்ததும் கை காலெல்லாம் வெட வெடங்குது! கண்ணெல்லாம் மங்கலா தெரியுது ! ஹார்ட் பீட்- அதிகமாகுது! தல சுத்துது! பேச்சே வரமாட்டிங்குது!
கடுப்புல பின்னூட்டம் போடறதுக்கு மட்டும் மூளை அலவ் பண்ணுது.
படம் பார்த்துட்டு எப்படி தப்பி பிழைத்து வீடு போயி சேர்ந்திங்க?
//படத்தைவிட சிட்டி செண்டர் மாலில் வந்த பிகர்கள் நன்றாக இருந்த்தால் படம் முடிவதற்கு முன்னாலேயே வந்து கொடுத்த காசை பயனுள்ளதாக்கினேன். //
குருவே! அங்கதான் நீங்க தப்பி பிழைத்திருக்கிறீர்கள்!
வாழ்கையில கஷ்டம்னு ஒன்னு வந்தா கூட கொஞ்சமா சந்தோசத்தையும் கூட்டிக்கிட்டு வரும்! (உங்க விமர்சனத்தை படிச்சதும் கொஞ்ச நேரமா பித்து பிடித்த மாதிரி ஆகி தத்துவமா வருது !)
குருவே,
இந்த லிங்கை பார்த்திங்களா?
http://www.bosskaboss.com/tm/index.htm
இப்போதைக்கு இந்த மெயில் தான் அங்கயும் இங்கயும் தாவிகிட்டு இருக்கு.
//பாவம்...மணிரத்னம், பாரதிராஜா....அவங்க இமேஜை கெடுக்க இப்படியெல்லாம் ஆட்கள் கிளம்பினால்...அவங்க என்ன செய்வாங்க!//
:( :( :(-
//விமர்சனத்தை படித்ததும் கை காலெல்லாம் வெட வெடங்குது! கண்ணெல்லாம் மங்கலா தெரியுது ! ஹார்ட் பீட்- அதிகமாகுது! தல சுத்துது! பேச்சே வரமாட்டிங்குது!
கடுப்புல பின்னூட்டம் போடறதுக்கு மட்டும் மூளை அலவ் பண்ணுது.
படம் பார்த்துட்டு எப்படி தப்பி பிழைத்து வீடு போயி சேர்ந்திங்க?//
எல்லாம் வல்ல என் அருமை ஜூர்கேன் போன்ற வாசகர்கள் ஆவலாய் படிக்க ரெடியா இருக்கும்போது.. இதெல்லாம் ஓரு கஷ்டமா? (சும்மா சொல்லக்கூடாது.. சும்மா ஷாலு மாலுங்கள் சிட்டி செண்டர்ல)
//குருவே,
இந்த லிங்கை பார்த்திங்களா?
http://www.bosskaboss.com/tm/index.htm
இப்போதைக்கு இந்த மெயில் தான் அங்கயும் இங்கயும் தாவிகிட்டு இருக்கு//
ரஜினி ரசிகர்கள் பார்த்து சந்தோசப் படுவார்களா? வருத்தபடுவார்களா>
என்னுடைய கதையைப் பற்றிக் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. உண்மையிலேயே அந்த முதல் கதையைத் தவிர மற்ற நான்கும் வெறுங்கதைகளாகிவிட்டது. :)
//என்னுடைய கதையைப் பற்றிக் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. உண்மையிலேயே அந்த முதல் கதையைத் தவிர மற்ற நான்கும் வெறுங்கதைகளாகிவிட்டது. :)//
அதெல்லாம் அப்படித்தான் நடக்கும் பாஸூ.. இதுக்கெல்லாம் விசனபட்டா முடியுமா.. சும்மா டிரை பண்ணுங்க.. உங்க பவரு உங்களுக்கு தெரியாது.. வரட்டா...
Post a Comment