Thottal Thodarum

Oct 17, 2008

ராஜூ.....


ராஜூவை பார்த்ததுமே எனககு ரொம்ப பிடித்துவிட்டது..அப்பா,தம்பி, தங்கை என்று எல்லோருக்கும் பிடித்துவிட்டது அம்மாவை தவிர.. அம்மாதான் வேண்டா வெறுப்பாய் சரி என்று சொன்னாற் போல் தெரிந்த்து.. மெஜாரிட்டி வின்ஸ்..

ராஜூ என்று எதற்காக பெயர் வைத்தோம் என்று எனக்கு தெரியவில்லை..ஆனால் எல்லோருக்கும் ரொம்பவே பிடித்துவிட்டதால் அதையே வைத்து கூப்பிட.. ஆரம்பிக்க..முதல் முறை கூப்பிடும்போது அது எனக்கென்ன என்று உட்கார்ந்திருக்க.. ச்சூ..சுசூ ராஜூ என்று பேர் சென்னதும்.. அவன் திரும்பியது.. சூசூவுக்கா..இல்லை பேரை தெரிந்தா என்று பட்டிமன்றம் நடந்த்து..

அவனுக்கு பால் கொடுப்பது, வாக்கிங் போகிறேன் பேர்விழி என்று இரண்டொருநாள் அவனுடய கழுத்தில் பட்டை அதில் ஓரு மணி என்று ஜோடித்து போய் விட்டு வெளியே பீத்தி கொண்டவுடன், வாக்கிங் நின்று போயிற்று..

அவனுடய் வளர்ச்சி ரொம்ப சீக்கிரமே வளர்ந்துவிட்டான்.. ரொம்ப கோபக்காரனாயிட்டான்.. யாரையும் உள்ளே விடமாட்டான்.. நானோ..அலலது என் அப்பாவோ போய் அவனிடம் போய் காட்டி “ராஜு.. இவரு நம்ம ப்ரண்ட் “என்று அறிமுகத்துக்கு அப்புறமே போனால் போகிறதென்று பக்கத்தில் வந்து உட்கார்ந்து,வாலாட்டிய பிற்கும் சந்தேகத்தோடு பார்த்து கொண்டிருப்பான்..அவனுக்கு அவ்வளவு சீக்கிரம் நம்பிக்கை வராது..

அப்படித்தான் ஓரு முறை என்னுடய் வீட்டில் கார்பெண்டர் வேலை நடந்து கொண்டிருந்த்து.. அப்பாவும், அம்மாவும், வேலைக்கு போய்விட்டார்கள்.. நாங்கள் எல்லோரும் ஸ்கூலுக்கு போய்விட்டோம்.. வீட்டின் முன்னால் இருந்த போர்டிகோவில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்..நான் சாயங்காலம் ஸ்கூல் முடிந்து வந்த போது. அந்த கார்பெண்டர்கள் என் ராஜூவின் முன்பு கைகட்டி போலீஸ் ஸ்டேசனில் உட்கார்ந்திருக்கும் கைதிகளை போல் உட்கார்ந்திருக்க,அவர்கள் முன்பு இரண்டு பப்பாளி பழங்கள் அழகாய் துண்டுகள் போடப்பட்டிருக்க.. என்னவென்று கேட்டால்.. அந்த கார்பெண்டர்கள் எங்களுடய பப்பாளி மரத்தில் ஏறி அதிலிருந்து நான்கு பப்பாளி பழத்தை எடுத்திருக்கிறார்கள்.. அவர்கள் ஏறி எடுத்ததை தடுக்காத ராஜூ.. அவர்கள் அதன் தோலை எல்லாம் அழகாய் சீவி துண்டங்கள் போட்டு சாப்பிட ஆரம்பிக்க, நம்ம ஆள் அவர்கள் முன்பு நின்று “உர்ர்ர்ர்ர்..” என்று உறுமியிருக்க.. அவர்களும் ஓரு ரெண்டு துண்டத்தை போட்டுவிட்டு சாப்பிட அரம்பிக்க, ராஜூ அந்த துண்டுகளை சாப்பிட்டு விட்டு மீண்டும் “உர்ர்ர்” என்று உரும.. இப்படி ஓரு துண்டு கூட சாப்பிடாமல் இரண்டு பழத்தை தானே சாப்பிட்டு.. மீதி பழத்தை பாதுகாத்து.. அவர்களையும் பிடித்து வைத்திருந்த்து.. நான் வந்தவுடன் தான் ராஜூ ரிலாக்ஸ் ஆனான்.

ராஜூவிக்கு பக்கத்து வீட்டு ஷீலா வென்றால் ரொம்பவும் ஜொள்ளு.. அந்த வயதில் வழக்கமாய் விடும் ஜொள்ளைவிட ரொம்ப அதிகமாய் ஏன் விடுகிறது என்று அப்போது புரியவில்லை..அனால் இப்போது புரிகிறது..அப்பாவிடம் கேட்டபோது..ஓரு மாதிரி மையமாய் சிரித்து.. வெயில் அதிகமாயிருக்கில்ல அதான்..என்றார். இதனால் எங்க வீட்டுக்கும், பக்கத்துவீட்டிக்கும் சின்ன சண்டை வந்துவிட்டது.. இதையெல்லாம் மீறீ அவர்களுக்கிடையில்” கில்மாக்கோ...கில்பாத்ரி” நடந்து விட்டது என்பதை.. என் அப்பாவிடம், பக்கத்துவீட்டு அங்கிள் முடிஞ்சிருசுன்னு சொன்னதுக்கான அர்த்தமும் இப்போதுதான் புரிந்த்து..

ஓரு முறை ராஜூவை அப்பா அடித்துவிட்டார்... அவருடய மாமாவை ஏன் என்றே தெரியவில்லை.. வீட்டினுள் விடவே இல்லை.. துரத்தி துரத்தி கடிச்சி வச்சிருச்சு.. அந்த கோபத்துல ராஜூவை போட்டு விளாசிட்டார்.. ஆனா ராஜூ ரொம்ப பெரிசா ரியாக்ட் பண்ணல ஓரு ஓரமா உட்கார்ந்துகிட்டே இருந்துச்சு..அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம் அவங்களுக்கு பிடிக்காத மாமாவை துறத்தினதுனாலே.. அவனுக்கு எக்ஸ்டராவா பால் எல்லாம் கொடுத்தாங்க.அப்பா மட்டும் ரெண்டு நாளைக்கு அப்புற்ம ராஜுகிட்ட சுத்தும் முத்தும் பார்த்து “சாரிடா” என்று கண்கலங்கினார்..அத நான் பாத்துட்டேன்.. ஏன் அழுதார்ன்னு தெரியல..அனா அவர் அழறத பார்த்த ராஜூ பதறின பதட்டம் இருக்கே.. சொன்னா நம்ப மாட்டீங்க.. அவர் கண்ணை துடச்சி விடாத குறைதான்..

ஓரு ஆறு மாசத்துக்கு அப்புறம் ராஜு திடீர்னு டல்லாயிட்டான்..அவ்வளவு சுறுசுறுப்பில்ல.. ராத்திரி 12 மணியிருக்கும் வீட்டின் வாசக் கதவை சுரண்டிகிட்டே இருந்தான்.. வழக்கமா அவனுக்கு எதாவ்து வேணும்னா மட்டும் அப்பிடி செய்வான்.. அவன் சுரண்டி, சுரண்டியே வாசக்கதவு கீழ்பக்கத்தில ஓரு மார்டன் ஆர்ட் ஓவியமே வரஞ்சிட்டான்.. அனா இப்ப அவன் சுரண்டினது அவ்வளவு சுறுசுறுப்பா இல்ல.. நான் தான் கதவ திறந்து போய் பார்த்தேன்.. ராஜுவை பார்த்தேன்.. கண் கலங்கலா இருந்துச்சு.. என்னையே பாத்துகிட்டேயிருந்தான்..

“என்னடா ராஜு.. தண்ணி வேணுமா..? “

ஓண்றும் சொல்லாமல் பார்த்து கொண்டேயிருந்தான்.. நான் போய் அப்பாவை எழுப்பி
“அப்பா.. ராஜுவை பாருப்பா.. ஓரு மாதிரி பாக்கறான்..” என்றவுடன் அப்பா பதறியடித்து எழுந்து வந்தார்.. “என்னடா ராஜூ.. என்ன வேணும்.. உடம்பு சரியில்லையா..? என்று கேட்டபடி அவனை தடவிக் கொடுக்க.. அவன் திடீரென்று அப்பவின் மேல் ஏறி நின்று முகத்தை நக்கி..க்கும்..க்கும் என்று முனகி என் காலையும் நக்கிவிட்டு.. மெல்ல அவன் படுக்கும் படுக்கையில் போய் நின்று கொண்டு மூன்று மூறை சுற்றிவிட்டு படுத்தான்.. எதுவும் புரியாமல் பார்த்து கொண்டிருக்கும்போதே.. அவன்.. ராஜூ.. இறந்துவிட்டான்..

நான் பார்த்த முதல் இறப்பு அது...நான் அழ ஆரம்பிக்க... என் சத்ததை கேட்டு, தம்பி, தங்கை, அம்மா எல்லோரும் எழுந்து வர.. அப்பா அம்மாவிடம்..ராஜூ ஏன் மாமாவை கடிச்சான் தெரியுமா?.. அன்னைக்கு வீட்டிக்குள்ளே வர போதே போர்டிகோவில இருந்த என் வாட்சை எடுத்துட்டான்.. அத பார்த்தினால தான் அவனை கடிச்சிருக்கான்.. என்றார்..
Post a Comment

10 comments:

Raj said...

மனசுக்கு கஷ்டமாயிருச்சு....எவ்வளவு அன்பான ஜீவன்.

Cable சங்கர் said...

//மனசுக்கு கஷ்டமாயிருச்சு....எவ்வளவு அன்பான ஜீவன்.//

ஆமாம் ராஜ்.. நன்றி

தமிழ் அமுதன் said...

செல்ல பிராணிகளை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
அது நமக்கு உணர்த்தும் விசயங்களை நாம்
புரிந்து கொள்ளாத போது,அது தவிக்கின்ற
தவிப்பு இருக்கிறதே?..வேதனை!

யூர்கன் க்ருகியர் said...

சங்கர் ,,,,,,,உருக்கமான கதை...
(நீங்க இப்படிகூட எழுதுவீங்கன்னு இத்தனை நாள் எனக்கு தெரியாது.)

Cable சங்கர் said...

//செல்ல பிராணிகளை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
அது நமக்கு உணர்த்தும் விசயங்களை நாம்
புரிந்து கொள்ளாத போது,அது தவிக்கின்ற
தவிப்பு இருக்கிறதே?..வேதனை!//

ஆமாம் ஜீவன்.. உண்மைதான்..

Cable சங்கர் said...

//நீங்க இப்படிகூட எழுதுவீங்கன்னு இத்தனை நாள் எனக்கு தெரியாது.)//

உங்களை போன்ற வாசகர்கள் கருத்துகளையும் ஆதரவையும் பொறுத்துதான எழுத முடிகிறது.. மேலும் உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கும்..

விஜய்கோபால்சாமி said...

என் மாமாவும் வீட்டில் ஒரு நாய் வளர்த்தார். சொந்தக்காரர்கள் சாவுக்குக் கூடக் கண்ணீர் விடாதவர், அதன் நோயின் தீவிரம் தாங்காமல் ஊசி போட்டு சாகடிக்க சொல்லிவிட்டு தேம்பித் தேம்பி அழுத அழுகை இருக்கிறதே... எனக்கே வேதனை தாங்க முடியவில்லை. இதற்கு ஏன் இவ்வளவு வேதனைப்படுகிறார் என்று அப்போது கேலியாக நினைத்ததுண்டு. ஆனால் இதெல்லாம் புரிய நாம் அவர் இடத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது...

Cable சங்கர் said...

//ஆனால் இதெல்லாம் புரிய நாம் அவர் இடத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது...//

ஆமாம் விஜய்.. நன்றி உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்..

DR.K.S.BALASUBRAMANIAN said...

உயிரோட்டமான கதை.

\\“என்னடா ராஜூ.. என்ன வேணும்.. உடம்பு சரியில்லையா..? என்று கேட்டபடி அவனை தடவிக் கொடுக்க.. அவன் திடீரென்று அப்பவின் மேல் ஏறி நின்று முகத்தை நக்கி..க்கும்..க்கும் என்று முனகி என் காலையும் நக்கிவிட்டு.. மெல்ல அவன் படுக்கும் படுக்கையில் போய் நின்று கொண்டு மூன்று மூறை சுற்றிவிட்டு படுத்தான்.. எதுவும் புரியாமல் பார்த்து கொண்டிருக்கும்போதே.. அவன்.. ராஜூ.. இறந்துவிட்டான்..\\

கலங்கிவிட்டேன். ஒரு நிகழ்வை அருகிலிருந்து பார்க்கும் உணர்வை ஏற்படுத்திய எழுத்து நடை...!

வாழ்த்துக்கள்!

பிரதீபா said...

ஊர்ல எங்க வீட்டுலயும் ஒரு நாய் இருக்குங்க.. அவனுக்கும் வயசாயிடிச்சு. அவனும் ஒரு நாள் எங்க எல்லாரையும் விட்டுட்டு போய்டுவானா? இப்பவே எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்குங்க கேபிள். எத்தன பாசமான ஜீவன் அது !!

இந்த ராஜு உங்க வீட்ல இருந்த ராஜு-ங்களா?