மாறனின் சன் குழுமம் படத்தயாரிப்பில் இறங்கினால்.. கலைஞர் டிவியும் படத்தயாரிப்பில் இறங்குகிறது.ஆம் கலைஞர் டிவி சார்பில் அமிர்தத்தின் மகன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் "முரட்டுக்காளை" படத்தை சுந்தர்.சியை வைத்து தயாரிக்கிறது..
சன் குழுமம் காமெடி திரை என்று தன்னுடய் டி.டி.எச் நெட்வொர்குக்கென்றே பிரத்யோகமாய் ஓரு சேனலை ஆரம்பிக்க, கலைஞர் டிவியும், தன் பங்குக்கு சிரிப்பொலி என்று ஓரு சேனலையும், கலைஞர் செய்திகள் என்றொரு சேனலையும் ஆரம்பிக்க இருக்கிறது.. ஏற்கனவே காமெடிதிரை அவ்வளவாக ஓன்றும் வேலைக்காகவில்லை என்று கேள்வி.. அதுமட்டுமில்லாமல் அந்த சேனல் இப்போது இலவசமாய் தங்களுடய டி.டி.எச் சேவையில் வழங்கி வரும் சன் டைரக்ட்..மூன்று மாதங்கள் கழித்து விடியோ ஆன் டிமாண்ட் என்கிற வகையில் வழங்க இருக்கிறது.. அதற்குள் கலைஞரின் சிரிப்பொலி ஆரம்பிக்கபட்டால் அதுவும் காலி.. சன்னில் ஓன்றும் புதிதாய் ஓரு காமெடி நிகழ்ச்சிகள் எதுவும் தருவதாய் தெரியவில்லை.. ஏற்கனவே தினமும் பல சேனல்கள் நான் ப்ரைம் டைமில் போடும் காமெடி காட்சிகளைத்தான் அதுவும் காட்டுகிறது..இதெல்லாம் இப்படி இருக்க..கலைஞர் டிவிக்கு மிகவும் ஆதரவாய் இருக்கும் அழகிரியின் மகன் தயாநிதி அவர்கள்.. சன் பிக்சர்ஸுக்கு ஓரு செக் வைத்திருக்கிறார்.
ஆம் சன் பிக்சர்ஸ் போல படங்களை வாங்கி விநியோகம் செய்ய போகிறார்.. முதல் கட்டமாய் கெளதம்மேனனின், சூர்யா நடிக்கும் "வாரணம் ஆயிரம்" திரைப்படத்தை தமிழக விநியோக உரிமையை வாங்கியிருப்பதாய் செய்தி.. படத்தை அழகிரி அவர்கள் வாங்கியிருப்பதால்.. படத்தை திபாவளிக்கு வெளியிட போவதில்லை.. நவம்பர் 14ஆம் தேதி வெளியிடப்போவதாய் தெரிகிறது..
சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்ட 'காதலில் விழுந்தேன்" திரைப்படத்தை தன்னுடய சேனல்களில் விளம்பரபடுத்தி மிகப் பெரிய ஓப்பனிங்கை ஓரு லோ பட்ஜெட் படத்துக்கு அளித்து, மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கும் சன் பிக்சர்ஸ், நவம்பரில் "சிவா மனசுல சக்தி" என்கிற ஜீவா நடிக்கும் படத்தை வெளியிட உள்ளதாய் தெரிகிற இந்நேரத்தில்.. சூர்யாவின் "வாரணம் ஆயிரம்" படத்தை நவம்பரில் வெளிவர ப்ளான் செய்திருப்பது பார்க்கும் போது சரியான போட்டியாய்தான் தெரிகிறது..
எது எப்படியோ.. தமிழ் சினிமா உலகத்துக்கு ஓரு கொண்டாட்டமான நேரம்தான் என்பதை மறுப்பதற்கில்லை..
Post a Comment
5 comments:
ஹலோ கேபிள் டிவி உரிமையாளர் என்று சொல்கிறீர்கள் VOD(Video on demand ) தொடர்பாக தவறான தகவல்களை சொல்கிறீர்களே.
சன் DTH இது வரை படு ப்ளாப்..மேலும் கூடவே VOD சேவையை அவர்கள் தனி சானலாக விளம்பரபடுத்துவது படு மோசமான உக்தி..
டாடா ஸ்கை , டிஸ் டிவி, ரிலையன்ஸ் பிக் டிவி, ஏர் டெல் டிஷ் டிவி இவை எல்லாவற்க்கும் கடைசியில் தான் சன் direct இருக்கிறது.
இதற்க்கே இப்படியா?
சரி இன்னமும் நீங்கள் zee தமிழ் பார்க்கவில்லையா?
நான் vod பற்றி தவறான தகவல்களை கொடுக்கவில்லை.. அவர்கள் அப்படி சொல்லிதான் விளம்பரபடுத்துகிறார்கள்.. அதுமட்டுமில்லாமல் நான் ஓன்றும் அவர்களின் சேனல் வெற்றி பெற்றுவிட்டது என்று கூறவில்லை..வேலைக்காகவில்லை என்று தான் சொல்லியிருக்கிறேன்..
//டாடா ஸ்கை , டிஸ் டிவி, ரிலையன்ஸ் பிக் டிவி, ஏர் டெல் டிஷ் டிவி இவை எல்லாவற்க்கும் கடைசியில் தான் சன் direct இருக்கிறது.//
இதை நான் ஓத்துக் கொள்ள மாட்டேன்.. ஏனென்றால் பிக்டிவி, மற்றும் ஏர்டெல் இரண்டும் வெளிவந்து சில மாதங்களும், சில நாட்களுமே ஆகியிருக்கும் நிலையில்.. சன் டி.டி.எச்.. தென்னிந்தியாவில் சுமார்..ஓரு மில்லியன் இணைப்புகளை மிக குறைந்த காலத்தில் விற்றிருக்கிறது என்பதை டாடா ஸ்கை நிறுவன சி.இ.ஓ வே சொல்லியிருக்கிறார்.
http://www.indiantelevision.com/interviews/y2k8/executive/vikram_int.php
அதற்காக சன் டைரக்ட் ஓன்று மாபெரும் வெற்றியென்று சொல்லவில்லை..சென்னையில் கேபிள் செட்டாப் பாக்ஸ் இலவசமாய் இருப்பதால்.. சென்னையில் ஓன்றும் பெரிதாய் வேகவில்லை பருப்பு என்றே தெரிகிறது..
zee தமிழ் இன்னும் பொதுமக்களுக்கு சாதாரண அலைவரிசையில் அதாவ்து அனலாக்கில் வரவில்லை. கேபிள் செட்டாப் பாக்ஸில் மட்டுமே வ்ருகிறது.. ஓளிபரப்பு பற்றி ஓன்றும் குறை சொல்ல முடியாது.. ஆனால் சீரியல்கள், மற்ற நிகழ்ச்சிகள் பற்றி ஓரு மாதம் பொறுங்கள்.
ஊரூ ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சொன்னது உண்மைதானோ..?
உங்களுக்கு ரொம்ப துணிச்சலுங்கன்னா ?
உங்களுக்கு ரொம்ப துணிச்சலுங்கன்னா ?
Post a Comment