Thottal Thodarum

Oct 30, 2008

”நீங்க இந்த மாதிரி பண்ணதேயில்லையா சார்?”


மதியம் சுமார் 2 மணியிருக்கும் ரொம்ப அர்ஜெண்டாய் என்னுடய குதிரையை (அதாங்க..நம்ம பைக்தான் அப்படி சொல்றேன்..மனசுக்குள்ள இளவரசன்னு நினைபபு) ஓட்டி சென்று கொண்டிருந்தேன்.. அதற்கு காரணம் என்னுடய இளவரசி சுலோசனா..பெயர்தான் சுலோவே தவிர பார்ட்டி செம பாஸ்டு..சாந்தம் தியேட்டரில் ஓரு முறை ட்புள் சீட்டில் நெருக்கமாய் உட்கார்ந்திருந்த ஓரு சூட்டு தருணத்தில்,அவளை தொட்டா சுடுமோன்னு நினைச்சுக்கிட்டு இருந்த நேரத்தில..படத்தில நைட் எபெக்ட்டுல சீன் வரும் போது கிஸ் அடிச்சவ, டார்கெட் முடிக்காததால் டீம் ஹெட் காய்ச்சும் காய்ச்சலிலிருந்து தப்பிக்கும் முடிவாய் “லேடீஸ் ப்ராப்ளம்”ன்னு அவன் எதுக்கு என்னனு கேட்க முடியாதபடி பீலாவிட்டுவிட்டு, எனக்கு மிஸ்ட் கால் கொடுத்திருந்தாள்.. (எப்ப கால் பண்ணியிருக்காங்கன்னு கேட்கிறீங்களா? அதுசரி அவங்க ரிசார்ஜ் பண்ற காசுக்கு எப்பதான் பேசுவாங்க..?)உடனடியாய் வந்தால் ரொம்ப நாளாய் கேட்ட மாயாஜால், ஈ.ஸி.ஆர் என்றாள்..

தேன் குடிக்கும் நரியின் ஆவலோடு அடுத்த செகண்ட் என்னுடய டார்கெட் முடிக்காவிட்டால் ஆப்பு அடிக்கும் டீம் லீடர், இந்த மாச இன்செண்டீவ் எதுவும் என் கண்ணுக்கு தெரியவில்லை..இருட்டு ஸீனில், திருட்டு முத்தம் என்னை விரட்டியது, இந்த முறை கொஞ்சம் தைரியமாய்.. எதாவது செய்யணும் அவ கேட்கறதுக்கு முன்னாலேயே..என்று நினைத்தபடி கிரீம்ஸ் ரோடுக்குள் நுழைந்தேன்.. அவளுக்கு ஆபீஸ் அங்கே தான் சங்கீதாவில் இருப்பதாய் சொல்லியிருந்தாள். என் கண்முன்னே ரோடு தெரியவில்லை.. சுலோவே தெரிந்தாள்.. உடனே வர சொன்னதன் பலனாய் நான் முக்கால் மணி நேரம் லேட்டாய் போகிறேன்..டைம் முக்கியம் இல்லாட்டா சுலோ கக்கிடும்..அனால் இந்த கதை நான் சுலோவை பார்க சென்றதை பற்றியல்ல.. அதற்கு முன்னால் நடந்த ஓரு விஷயத்தை பற்றித்தான்

படு வேகமாய் குதிரையை விரட்டி கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த ஓரு பைக்காரன் (நான் என்னை தவிர மற்றவர்களை இளவரசர்களாய் கருதுவதில்லை).. என்ன நினைத்தானோ தெரியவில்லை சடாரென்று வலது பக்கம் வண்டியை திருப்பினான்.. அதை எதிர்பார்காத நான் வந்த வேகத்தில் என்னுடய குதிரையின் ப்ரேக்கை எழுந்து நின்று போட்டு ஸ்கேட்டிங் பண்ணாத குறையாய் இங்கிலீஷ் பட ஸ்டைலில் தரையெல்லாம் டயர் மார்காய் தேய்த்து கொண்டு அவனுக்கும் எனக்கும் சில பல இன்ச்கள் இடைவெளியில் மிகப் பெரிய ஓரு விபத்து தவிர்க்கபட.. என்னுடய அவசரம், பதட்டம், சுலோ காத்திருக்கும் நினைப்பு, நான் சென்ற வேகம், விபத்தை தவிர்பதற்காக என்னுடய ரிஸ்க் எல்லாம் சேர்த்து பெருங்கோபமாய் வெகுண்டெழுந்து அந்த பைக்காரனை அவனையும், அவன் குடும்பத்தையும் தெரிந்தவர்கள் கூட அப்படி திட்ட மாட்டார்கள், நான் வாய்க்கு வந்தபடி திட்ட.. அவன் எந்தவித பதட்டமும் இல்லாமல்.. நேராய் என்ன பார்த்து

“நீங்க இந்த மாதிரி பண்ணதேயில்லையா சார்?” என்றான்.

Post a Comment

12 comments:

வெண்பூ said...

அருமை.. அந்த கடைசி வரியிலும் அவன் மெதுவாய் கேட்டது "நச்"..... சூப்பர் சங்கர். (அந்த படமும் சூப்பர்.. ஹி..ஹி.. நான் பைக் படத்தை சொல்லல)..

Cable சங்கர் said...

//அந்த படமும் சூப்பர்..//

நீங்க படம் சூப்பர்ன்னு சொல்லும்போதே எனக்கு தெரியும்.. அது எங்க தங்கத்தலைவி பூனம் பாஜ்வாவை பத்தித்தான்னு.. நன்றி வெண்பூ... உங்கள் வருக்கைக்கும், கருத்துக்கும்..

Anonymous said...

கடைசி வரியில் ‘நச்’

Anonymous said...

;-))

Cable சங்கர் said...

நன்றி பாலசந்தர்..

தமிழ் அமுதன் said...

நானும் அதேதான் கேக்குறேன்
நீங்க அப்படியெல்லாம் பண்ணினது
இல்லையா ?

Cable சங்கர் said...

//நானும் அதேதான் கேக்குறேன்
நீங்க அப்படியெல்லாம் பண்ணினது
இல்லையா ?//

எப்படியெல்லாம்????

Raj said...

அப்படியெல்லாம் விடுங்க.....நீங்க எப்படியெல்லாம் பண்ணி இருக்கீங்க???!!!! அதையெல்லாம் முதல்ல சொல்லுங்க.

Cable சங்கர் said...

//அப்படியெல்லாம் விடுங்க.....நீங்க எப்படியெல்லாம் பண்ணி இருக்கீங்க???!!!! அதையெல்லாம் முதல்ல சொல்லுங்க.//

எப்படியெல்லாம் பண்ணேன்..??

பரிசல்காரன் said...

நடை அருமை. (பூனம்மின் உடை அருமைன்னு கவுஜ வருது.... )

என்ன சொல்ல வர்றாருன்னு பரபரப்பா படிக்க வெச்சுட்டீங்க.

கடைசி வரி அருமை. அதுதான் தலைப்பா வெச்சிருக்கீங்கன்னாலும்., அந்த வரியை முடிக்கறப்போ ‘சூப்பரு’ன்னு நெனைக்கவெச்சிட்டீங்க. அப்பப்ப இந்தமாதிரியும் எழுதுங்க தலைவா..

Cable சங்கர் said...

//கடைசி வரி அருமை. அதுதான் தலைப்பா வெச்சிருக்கீங்கன்னாலும்., அந்த வரியை முடிக்கறப்போ ‘சூப்பரு’ன்னு நெனைக்கவெச்சிட்டீங்க. அப்பப்ப இந்தமாதிரியும் எழுதுங்க தலைவா..//

நன்றி பரிசல் உங்கள் கருத்துக்கு.. முயற்சி செய்கிறேன்..

Cable சங்கர் said...

//(பூனம்மின் உடை அருமைன்னு கவுஜ வருது.... )//

பூனத்தின் உடை அருமையை பற்றி உங்கள் கவுஜயை விரைவில் ஆவலாய் எதிர்பார்கிறேன்.