![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZ2VvLsb7Ej_Y6bsm2q5a4S1XGLhGSOsn2UQGUEKyLxECT0LdqBxdEYPkgmCQKeqlUi3_utjguEDdmdCWWR68f8WxJlL9cE_5lKaK74nILxvIddpFJKEWeS1Cdn1NuweUM2zKy8A/s320/vv250.jpg)
திபாவளி திரைப்படங்கள் மழையில் நினைந்து போன புஸ்வாணங்களாகி போனதால்..ரசிகர்க்ள் அடுத்த பெரிய படங்களை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்..தீபாவளிக்கு ரிலீஸாகவிருந்த “வாரணம் ஆயிரம்” படத்தை சன் பிக்சர்ஸ்க்கு போட்டியாய் திரு தயாநிதி அழகிரி ஆரம்பித்திருக்கும் Cloud nine pictures தமிழகமெங்கும் விநியோக உரிமையை வாங்கியிருக்க.. அதே நேரத்தில் சன் பிக்சர்ஸ் ஜீவா நடிக்கும் ‘சிவா மனசுல சக்தி’ படத்துக்கு பதிலாய் ரொம்ப நாளாய் வெளியிடப்படாமல் காத்திருக்கும் ஜீவாவின் “தெனாவெட்டு” திரைபடத்தை அதே நவம்பர் 14ஆம் தேதி வெளியிட போகிறது..
வாரணம் ஆயிரம் திரைப்டத்தின் தொலைக்காட்சி உரிமை கலைஞர் டிவியிடம் இருக்க, அவர்களும் தினமும், தங்களது சேனல்களில் விளம்பரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.. சன் பிக்சர்சும், தெனாவெட்டின் பட பாடல்களை..ரீஷூட் செய்து தங்களது சேனல்களில் விளம்பர படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSVdx2wXQ8Mv_ihF_fDS6LAyKhqM_lgYt8yr2F4I4SRHYsZsIXMCeWF0YzmaalpS3_YdejQza1kqe86kr_UpQ2mNOzY4uEL22itxGdOueH1QWu_pmC5-JyT_6mvcZS-OnRYPMnqA/s320/thenavattu250.jpg)
என்னதான் அவர்கள் விளம்பரபடுத்தினாலும்.. வாரணம் ஆயிரம் பாடல்கல் ஏற்கனவே மிகப் பெரிய ஹிட்.. தெனாவெட்டு படபாடல்கள் ஒன்றும் செல்ப் எடுக்கவில்லை.. இந்த நிலையில் சன் டிவியின் விளம்பரம் வெற்றி பெறுகிறதா? அல்லது.. கண்டண்ட் வெற்றி பெறுகிறதா என்று பார்ப்போம்..
Post a Comment
3 comments:
தலைப்பு 'பயங்கர' குறும்பு!
//தலைப்பு 'பயங்கர' குறும்பு!//
நன்றி செல்வகுமார்.. உங்கள் வ்ருகைக்கும், கருத்துக்கும்
படம் வந்ததும் உங்க கிட்ட இருந்து விமர்சனம் வருமில்ல ...?
Post a Comment