Thottal Thodarum

Nov 1, 2008

Onibus174- பஸ்ஸை கடத்திய இளைஞன்



ரியோ டி ஜெனிரோவில் ஜூன் மாதம் 12ஆம் தேதி 2000த்தில், முழுவதும் பயணிகளால் நிரம்பியிருந்த பஸ்நெ174ஐ, பட்ட பகலில் ஆயுதம் ஏந்திய சாண்ட்ரோ டோ நாஸிமெண்டோ என்கிற ஓருவனால் கடத்தப்பட்டுகிறது..

பஸ்ஸை ஓரு இடத்தில் நிறுத்தி அதிலிருந்து எவராவது வெளியேற முற்பட்டால், அவர்களையும், போலீஸ் ஏதாவது செய்ய முயன்றால் பஸ்ஸில் உள்ள எல்லா பயணிகளையும் கொன்று விடுவதாய் மிரட்டுகிறான்..

இவை அனைத்தும் இதை அங்குள்ள பிரேசிலியன் தொலைக்காட்சி நேரலை நிகழ்சியாக தன்னுடய சேனலில் ஓளிபரப்புகிறது.. அந்த கடத்தல்காரனிடம் மாட்டிய பயணிகளின் நிலைமை, பயணிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியில் போலீஸ் நடத்தும் போராட்டம் என்று எல்லா விஷயங்க்ளும் நேரலையாய் தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகி கொண்டிருப்பதால் ஏற்படும் பதட்டம்.. என்று போகிற இந்த படம் அதை மட்டும் காட்டவில்லை..

பஸ்ஸை கடத்திய சில நிமிடங்களில் அவன் யாரென்று கண்டுபிடிக்க முயற்சித்து அதை கண்டுபிடித்து, அவன் ஏன் இப்படி ஆனான்? அவனுடய குடும்ப பிண்ணனி, என்று அவனின் வேறு முகத்தையும் தேடி, தேடி காட்டுகிறது.. ஏழ்மையும், படிப்பில்லாததால் சம்பாதிக்கும் திறன் இல்லாத அவன் மிக சாதாரணமான ஓருவனாய் தான் வாழ்ந்து வந்திருக்கிறான்.. அவனை எது இந்த மாதிரியான ஓரு கடத்தலுக்கு தள்ளியது என்று அவனை பற்றிய இன்வெஸ்டிகேடிவ் முறையில் காட்டபட்டு, இடையில் இங்கே நடக்கும் நேரலை நிகழ்வையும், மாற்றி மாற்றி காட்டி நம்மை நெகிழ வைக்கிறார் இயக்குனர்..ஜோஸ் பதில்லா..


அவனினி தந்தை அவன் தாய் கருவுற்றிருக்கும் போதே அவளிடமிருந்து பிரிந்துவிட..அவனை வளர்க்க மிகவும் கஷ்டப்படும் அவனின் தாய், அவன் ஆறு வயதிருக்கும் போது அவன் கண்முன்னே தாய் கொல்லபடுவதை பார்க்கிறான்.. அதன் பிறகு அவனை வளர்க்கும் பாட்டி, பின் வேலையில்லமை, வீடில்லாமல் திரியும் பல பிரேசிலிய இளைஞர்களின் போதை பழக்கங்கள் போன்றவற்றை தீவிரமாய் விவரிக்கிறது இந்த ஆவண படம்..

போலிஸ் அவனிடமிருந்து பயணிகளை காப்பாற்ற அவனை சுட முற்பட, அவனோ தான் சரணடய ஓத்து கொள்ளும் நேரத்தில் அவ்வளவு நேர நிகழ்வின் அயர்ச்சியில் போலீஸ் சுட, அதில் அவனுக்கு பதிலாய் வேறு ஓரு பயணி இறக்கிறார்.

கடைசியில் சரணடைந்த அவனை போலீஸார் கைது செய்து அழைத்து போகிறார். இதில் நடந்த ஓரு விஷயம் என்னவென்றால் அவன் சரண்டைந்த பிறகு அவனை அழைத்து போகையில் அவன் இற்ந்து விட்டான்.. போலீசார் அவனை அடைத்து அழைத்து சென்ற வண்டியில் அவன் மூச்சு அடைத்து இற்ந்துவிடுகிறான்..என்று சொல்லபட்டாலும், போலீசாரால் அவன் கொல்லப்பட்டான் என்றும் பரவலாய் பேசப்படுவதாய் காட்டபடுகிறது..

படத்தில் வரும் பஸ் கடத்த்ல காட்சிகள் அனைத்தும் பிரேசிலியன் டிவியில் காட்ட்பட்ட ஓரிஜினல் புட்டேஜையே எடுத்தாண்டு இருக்கிறார்கள்.. அவனை பற்றிய தேடலும், அவனை பற்றி அவனுடய் பாட்டி போன்ற்வர்களின் பேட்டியும், உங்கள் மனதை உருக்கும்.. எந்த சமுதாயம் அவனை இப்படி துறத்தியது என்கிற போது நம் மனது கனக்கத்தான் செய்யும்..

இந்த படம் பெருபாலும் பிரேசிலை தவிர பல நாட்டு படவிழாக்களில் பரிசுகளை வென்றிருக்கிறது...

டிஸ்கி..
சமீபத்தில் பம்பாயில் ஓரு பிகாரி இளைஞன் பஸ்ஸை கடத்த முயற்சித்து அதில் அவனை போலீஸார் கொன்றதும், அதை பற்றிய லைவ் கவரேஜூம்.. அதை பார்த்தும்.. எனக்கு இந்த படம் தான் ஞாபகம் வந்தது..எது அந்த பிகாரி இளைஞனை இப்படி துரத்தியது.. நம் அரசியல்வாதிகளின் அட்டூழியத்தினால் தானே...அரசியல்வாதிகளே யோசியுங்கள்.. உங்களின் சுய அரசியல் லாபத்துக்காக மக்களை தூண்டிவிட்டு அதில் குளிர் காயாதீர்கள்..

Post a Comment

4 comments:

Raj said...

ஒரு நல்ல படத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.

Cable சங்கர் said...

//ஒரு நல்ல படத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.//

இந்த படத்தை பார்த்து ஓரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது இப்பொழுதுதான் எழுத சந்தர்ப்பம் கிடைத்தது..

Indian said...

I've seen this documentary a while back. An engaging and touching one.

There is another nice nat-geo/discovery documentary on a great robbery conducted in Brazil. Check it out in torrents.

யூர்கன் க்ருகியர் said...

மும்பையில் நடந்த சம்பவத்திற்கு பொருத்தமான பதிவு தான்.