Thottal Thodarum

Oct 7, 2008

ஜீ.கே.வாசனின் சேனல் -V டிவி


சமீபகாலமாய் தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் கூட்ட்ம அதிகமாகிவிட்டது.. தமிழ் சேடிலைட் சேனல்கள் மட்டுமில்லாமல்.. லோக்கல் தொலைக்காட்சி சேனல்களும் ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டு என்னத்தைதான் காட்டுறதுன்னு புரியாம, எல்லோரும் அழுது வடிய சீரியலையும், காமெடி நிகழ்ச்சிகளையும்,”ஹலோ..யார் பேசறீங்க..? நல்லா இருக்கீங்களா? சாப்டீங்களான்னு ? கேள்வி கேட்டே கொல்லுற லைவ் ப்ரோக்மாங்களையும் போட்டு கழுத்தறுக்கறாங்க..அதுல வேற கான்கிரீட் டிரில்லிங் மிஷின் மாதிரி குரலை வைத்து கொண்டு போனில் பாட்டு வேறு பாடி..கடவுளே..

வாழும் சேனல்கள் போட்டி போட்டு கொண்டு புது புது படங்களை போட்டும், வாழாம இருக்கிற சேனல்காரங்க.. மத்தவங்க சாப்புட்டு சக்கையாக்கி போட்ட படஙகளையும்,பாடல்களையும் காட்டி வாழ முயற்சிக்கிறாங்க..

இந்த கட்டத்தில கலைஞர் டிவி ஆரம்பிச்சதுக்கப்புறம்.. சன் டிவியின் மார்கெட் மொனோபோலி உடைக்கபட்டதால்.. பல பேர் சேனல் ஆரம்பிக்க தைரியம் வந்து ஆரம்பிக்க வந்திட்டாங்க.. சீக்கிரமே எலக்‌ஷன் வேற வருதா.. இருக்கிற சேனல்ல பாதி அரசியல் சார்பா இருக்கிறதுனால..அந்த அந்த கட்சிக்காரஙக ஆளுக்கு ஓரு சேனல் ஆரம்பிக்க ஆசைப்படுறாங்க.. அவங்க ஆரம்பிக்கிறது இருக்கட்டும், ஆனா பாக்கிறது யாருன்னுதான் தெரியல.. அரசியல் சார்போட எத்தனை சேனல்கள் தமிழ்நாட்டில் இருக்குதுன்னு உஙக் எல்லாருக்குமே தெரியும்

அப்படி சேனல் ஆசை லேட்டஸ்டா வந்திருக்கிறது..விஜயகாந்த்.. அதுக்கு அப்புறம் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்.. அவரோட சேனல் பேர் “V" சேனல்.. அதாவது வாசன் சேனல்.. காங்கிரஸின் இன்னொரு தலைவர் வசந்தகுமார் அவரோட பேர்ல “வசந்த்”டிவின்னு ஆரம்பிச்சிருக்க, தங்கபாலு..”மெகா”டிவின்னு ஓண்ணு ஆரம்பிச்சி தேய்க்க ஆரம்பிச்சிருக்க, காங்கிரஸோட தலைவர் வாசன் அவருக்காக ஓரு சேனலை ஆரம்பிக்க ஆசைபடுவது என்ன தப்பு?

இத்தனை சேனல்கள் காங்கிரஸ் கூடாரத்திலிருந்தே ஆரம்பிப்பதை பார்கும் போதே அவர்க்ள் கோஷ்டி இல்லாத காங்கிரஸ் தெரிகிறது. போகிற போக்க பாத்தா ஒவ்வொரு வட்ட செயலாளர் கூட சேனல் ஆரம்பிக்க ஆசைப்படுவார் போலருக்கே..?

இதற்கு நடுவில் ஜெகத்ரட்சகன் வேறு சேனல் ஆரம்பிக்க போவதாய் பேச்சு.. எல்லாம் இந்த டிரான்ஸ்பாண்டர்களின் விலை வீழ்ச்சியாலும், 20,000த்துக்கும், 30000த்துக்கும் எல்லோரையும் நிற்க வைத்தே மாய்ந்து மாய்ந்து பேசியே, கழுத்தை அறுக்கும் சீரியல்களை ஓளிபரப்பி நாங்களும் சேனல் நடத்துறோம்ன்னு கதை பண்ணிக்கிட்டு இருக்காங்க..

பாதி பேருக்கு சேனல் ஆரம்பிச்சா அதை கடைசி நிலை பார்வையாளர்கள் வரை கொண்டு போக கேபிள் டிவி நெட்வொர்க், டி.டி.எச் நிறுவனங்களுக்கு கேரியர் ஃபீஸ் கொடுக்க வேண்டும். அதுவே மாதத்திற்கு பல லட்சமாகும்.அகில இந்திய நிலையில் உள்ள சேனலை தெரியபடுத்த வேண்டுமென்றால் பல கோடிகளை செலவழிக்க வேண்டும். இதை தவிர ப்ரொக்ராமிங் செலவுகள்..சம்பளங்கள் என்று அது சில கோடிகள்..இதையெல்லாம் தாண்டி நிகழ்சிகள் தரம் மக்களுக்கு பிடிக்க வேண்டும்.. வெறும் அரசியல் பலமும், அதிகார பலமும், பணபலமும் மட்டும் இருந்தால் சேனலை நம்பர் ஓன் சேனலாக கொண்டு வர முடியாது என்பது கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயா டிவி நம்பர் ஓன் வராததிலிருந்தே தெரிந்திருக்கும்..


பல சேனல்கள் அக்பர் கவுசர், நாடி ஜோதிடம், மூலிகை மருந்து, ராசிக்கல், மற்றும் கிருஸ்துவ, இஸ்லாமிய மத பிரசாரத்திற்கு வாடகைக்கு விட்டே இருக்கும் 24 மணி நேரத்தில் 25 மணி நேரம் புரொக்ராம் கொடுத்து கல்லா கட்டுகிறார்கள்.. அவர்களுக்கு இவர்கள் தரும் பணம் எல்லா செலவும் போக.. ஓரு சில லட்சங்களை வருமானமாய் பெற்று தருவதால்.. இன்னும் சில காலங்களில் கொஞ்சம் பணக்கார குடிசை தொழிலாய் டிவி சேனல் தொழில் மாறினாலும் ஆச்சர்யமில்லை..இப்பவே கிட்டத்தட்ட அந்த நிலையை எட்டுவிட்டது என்றே சொல்லலாம்.

இப்போ சமீபத்திய செய்தி.. கலைஞர் டிவி..அடுத்த கட்ட நடவடிக்கையாக.. குழந்தைகளுக்கான சேனல், கலைஞர் செய்தி சேனல், சிரிபொலி போன்ற் சேனகளை ஆரம்பிக்க போவதாய் தெரியவருகிறது.. சமீபத்திய புது வரவு ஜீ தமிழ்.. வாழ்க தமிழ், மற்றும் தமிழ் சேனல்களும்..என்ன ஓரே ஓரு சந்தோஷம்.. இவர்கள் இப்படி போட்டி போட்டு ஆரம்பிப்பதால் இதையே நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கும், நடிகர், நடிகைகள், இயக்குனர்களுக்கு நல்ல காலம் கிடைக்கிறதே என்று நினக்கும் போது.. இன்னும் ரெண்டு சேனல் ஆரம்பித்தாலும் “கொண்டாட்டம்” தான் என்று தோன்றுகிறது...

Post a Comment

15 comments:

சரவணகுமரன் said...

ஒரு சானல் ஆரம்பிக்க எவ்ளோங்க செலவாகும்?

Ganesan said...

hi,
inime jolly than, 24 hours we will see all the channels, will see cinema, cartoon, serials, songs, comedy , sports,news, cooking, all.
jolly jolly than.

nalla urupatta mathiri than

kaveri ganesh

யூர்கன் க்ருகியர் said...

அரசியல் சார்பாக வரும் டிவி சேனல்களை விட நாடு நிலைமையாக வருபவையே இனி வரும் காலங்களில் மக்கள் மனதில் இடம் பெறும்.( அதுக்குன்னு ராஜ் டிவி மாதிரி மொக்கைய போட்டா யாரும் பாக்க மாட்டாங்க!)

ஜீ தமிழ் - கலக்க சான்ஸ் இருக்கு!

டைம்ஸ் நவ், என் டி டி வி ,ஹெட்லைன்ஸ் டுடே மாதிரி தமிழ்ல பிரிச்சி மேயிர சேனல் ஒன்னு வந்தா நல்லாத்தான் இருக்கும்!

யூர்கன் க்ருகியர் said...

spelling mistake.
//நாடு நிலைமையாக வருபவையே //
என்பதை
நடு நிலைமையாக வருபவையே

என்று மாற்றி படிக்கவும். நன்றி

யூர்கன் க்ருகியர் said...

//கேள்வி கேட்டே கொல்லுற லைவ் ப்ரோக்மாங்களையும் போட்டு கழுத்தறுக்கறாங்க..அதுல வேற கான்கிரீட் டிரில்லிங் மிஷின் மாதிரி குரலை வைத்து கொண்டு போனில் பாட்டு வேறு பாடி..கடவுளே.. //

பட்டைய கெளப்பிட்டிங்க!

(காலங்காத்தால இருந்து இரவு தூங்கரவரை இவனுங்க/இவளுங்க அராவடி தாங்க முடியறதில்ல! ஆனாலும் சில காம்பியரிங் குட்டிங்க நல்லாத்தான் இருக்குது..!!)

//பல சேனல்கள் அக்பர் கவுசர், நாடி ஜோதிடம், மூலிகை மருந்து, ராசிக்கல், மற்றும் கிருஸ்துவ, இஸ்லாமிய மத பிரசாரத்திற்கு வாடகைக்கு விட்டே இருக்கும் 24 மணி நேரத்தில் 25 மணி நேரம் புரொக்ராம் கொடுத்து கல்லா கட்டுகிறார்கள்..//

கீச்சிட்டிங்க !

(கிரியேட்டிவ் டைரக்டரா உங்கள மாதிரி ஆளுங்க இருந்தா பின்னாளில் உருப்படரத்திற்கு கொஞ்சமாவது சான்சு இருக்கும்!)

//இதையே நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கும், நடிகர், நடிகைகள், இயக்குனர்களுக்கு நல்ல காலம் கிடைக்கிறதே என்று நினக்கும் போது.. //

சினிமா காரங்க எக்ஸ்களுசிவ்-ஆ ஒரு சேனல் ரொம்ப நாளைக்கு முன்னால ஆரம்பிசாங்கலாமே? இப்பவும் இருக்கா?

Cable சங்கர் said...

//ஒரு சானல் ஆரம்பிக்க எவ்ளோங்க செலவாகும்?//

சரவணகுமரன் நீங்க ஆரம்பிக்கறதா இருந்தா நான் உங்க சேனல் ஹெட் ஆ வர ரெடி. நீங்க ரெடியா.. ஏன்னா அது தொழில் ரகசியம்..வாங்க நேர பேசுவோம்.. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

Cable சங்கர் said...

//nalla urupatta mathiri than//

:)- :)-

Cable சங்கர் said...

//அரசியல் சார்பாக வரும் டிவி சேனல்களை விட நாடு நிலைமையாக வருபவையே இனி வரும் காலங்களில் மக்கள் மனதில் இடம் பெறும்.( அதுக்குன்னு ராஜ் டிவி மாதிரி மொக்கைய போட்டா யாரும் பாக்க மாட்டாங்க!)//

ராஜ் டிவி நடு நிலமையா? அது தான் இப்ப திமுக சொம்பு.
//டைம்ஸ் நவ், என் டி டி வி ,ஹெட்லைன்ஸ் டுடே மாதிரி தமிழ்ல பிரிச்சி மேயிர சேனல் ஒன்னு வந்தா நல்லாத்தான் இருக்கும்!//

அதுக்கு ரொம்ப செலவாகும்.. ஆரம்பத்தில விஜய் டிவி நியூஸ் நல்லா இருந்தது.. அதைதான் அப்போதய திமுக அரசின் ஆதரவுடன் அமுக்கி தூக்கிட்டாங்களே..

Cable சங்கர் said...

//ஆனாலும் சில காம்பியரிங் குட்டிங்க நல்லாத்தான் இருக்குது..!!)//

ஹி..ஹி.. நானும் அதுக்காத்தான் பாக்கறேன்..நாலு பேர் பாக்கறதுக்கு நல்லா இருக்குன்னா எதுவுமே தப்பில்லை.. இருக்குறதிலேயே “ஹட்டு” பிகர்கள் எல்லாம் ராஜ் மியூசிக்கில் உள்ளனர்..

Cable சங்கர் said...

//கிரியேட்டிவ் டைரக்டரா உங்கள மாதிரி ஆளுங்க இருந்தா பின்னாளில் உருப்படரத்திற்கு கொஞ்சமாவது சான்சு இருக்கும்!//

எங்க் கொடுக்க மாட்டேங்கறாங்களே.. இந்த மாதிரி சேனலுக்கெல்லாம் சினிமால வாழ்ந்து கெட்டவங்களுக்கு தான் சான்ஸ்.. ரிடையர் ஆற காலத்துக்கு மாசம் 2 லட்சம் மற்றும் இத்யாதிகளூடன் வசமா வாழறாங்க..

Cable சங்கர் said...

//சினிமா காரங்க எக்ஸ்களுசிவ்-ஆ ஒரு சேனல் ரொம்ப நாளைக்கு முன்னால ஆரம்பிசாங்கலாமே? இப்பவும் இருக்கா?//

அதான் தமிழ்திரைன்னு ஓன்ணு ஆரம்பிச்சாங்க.. அப்போ இதே சன் டிவி தலைவரின் ஆதரவோடு.. பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்தி ஊத்தி மூட வச்சுட்டாங்க.. அவங்களால ஊத்தி மூடின சேனல் ஜீ டிவியின் பாரதி, ரவி பெர்னாட்டின் நிலா, போன்ற பல சேனல்கள்..

Anonymous said...

nice cable sankar
im daily keep reading ur blog
bye

Cable சங்கர் said...

//nice cable sankar
im daily keep reading ur blog
bye//

நன்றி சுரேஷ், உங்கள் கருத்துக்களை என்னுடய் எல்லா பதிவுகளுக்கும் வரவேற்கிறேன்.. நன்றி..உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

தமிழ் அமுதன் said...

காங்கிரஸ் இங்கேயும்,இதுலேயும் தனி தனி கோஸ்டி தானா? என்ன சங்கர் சார் பார்த்துகிட்டு சும்மா இருக்கீங்க?எதாவது பண்ண கூடாதா ?

Cable சங்கர் said...

//காங்கிரஸ் இங்கேயும்,இதுலேயும் தனி தனி கோஸ்டி தானா? என்ன சங்கர் சார் பார்த்துகிட்டு சும்மா இருக்கீங்க?எதாவது பண்ண கூடாதா ?//

பண்ணலாம்னுதான் யோசிக்கிறேன்.. ஆனா எந்த கோஷ்டியில சேர்ரதுன்னுதான் ஓரே கன்பூசன்