Nov 29, 2008
மகேஷ்..சரண்யா..மற்றும் பலர் - திரை விமர்சனம்
இப்படி கவிதையாய் ஓரு டைட்டிலை வைக்க தெரிந்த இயக்குனருக்கு, கவிதையாய் கதை சொல்ல தெரியவில்லை. சமீபத்தில் பார்த்த மிக அமெச்சூரிஷான காதல் கதை இது தான். கும்பகோணத்தில் ஓரு பெரிய குடும்பத்தின் ஓரே மகன் மகேஷ். தன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்பதற்காக, பரிட்சை முடிந்து சென்னையிலிருந்து கும்பகோணம் வருகிறான். மாப்பிள்ளை பிடித்து போய் திருமணம் வரைக்கும் போகும் போது மகேஷுக்கும், அவன் தங்கைக்கும் விபத்துகுள்ளாக.. அதனால் தங்கையின் திருமணம் தள்ளி போகிறது.
தங்கையின் மாப்பிள்ளையின் தங்கைக்கு வேறு மாப்பிளளை பார்த்து திருமண மேடையில், அவளீன் மாப்பிள்ளை ஓடி விடுகிறான். மாப்பிள்ளை தன் தங்கையை திருமணம் செய்து கொள்ள மகேஷை கேட்க, அவன் மறுத்து விடுகிறான். ஏன் என்றால் அவனுக்கும், சரண்யாவிக்கும் இருக்கும் காதல். அந்த காதலை சொல்கிறேன் பேர்விழி என்று, படம் ஆரம்பித்தது முதல் க்ளைமாக்ஸ் வரை அவர்களின் காதல் காட்சிகளை பிச்சி பிச்சி தங்கச்சி, அம்மா, அண்ணி, அண்ணன், அப்பா, தாத்தா, குடும்பம் முழுவதும், பார்ட், பார்டாய் படம் முடியும் வரை சொல்லி கழுத்தை அறுக்கிறார்கள். கதை சொல்லும் முறையில் புதுமை புகுத்த நினைத்த இயக்குனருக்கு, அதற்கு சமமாய் காட்சிகள் வேண்டுமென்று தெரியவில்லை. ஓரே சவ, சவ,. காதல் காட்சிகள். இயக்குனர் க்ளைமாக்ஸ் காட்சியை மட்டுமே நம்பி.. படம் பூராவும் சொதப்பி விட்டார். டைட்டானிக் படத்தில் க்ளைமாக்ஸில் ஜாக் இறந்துவிடுவதால் மட்டுமே படம் ஜெயிக்கவில்லை. அவர்களுக்குள் இருந்த காதலை திரையில் காட்டியதால் தான் ஜெயித்தது.. இதில் டைட்டானிக் மியுசிக்கை வேறு உல்டா பண்ணி.. அய்யோடா சாமி.. முடியல..
சக்தி தம்பிக்கு விஜய் மாதிரி நிக்கிறதுக்கு, நடக்குறதுக்கு, டான்ஸ் ஆடறதுக்கு எல்லாம் வரும், ஆனா நடிக்க மட்டும் தான் வரமாட்டேங்குது. ( அதுக்காக விஜய் நடிக்கிறாருன்னு சொல்ல வரல) எப்ப பாத்தாலும், சிரிச்சி கிட்டே,இருக்கிற மாதிரி முகத்தை வச்சிகிட்டு, அது சோக சீனா, சந்தோச சீனான்னு குழப்புறார்.
படத்தில் கல்யாண மாலை மோகன் இருக்கிறார். கல்யாண மாலை நல்ல ப்ரோக்ராம். வித்யாசாகரின் இசையில் “தங்கத்தில செய்த நிலா” என்ற பாடல் அருமை. மற்றபடி படத்தில் நிறைய் ஆர்டிஸ்டுகள், சந்தியா, காஜல் அகர்வால், போன்ற ”சிறந்த” நடிகர்கள் இருக்கிறார்கள்.. டிவி சீரியல் கூட அருமையாய் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். நீஙக் எடுக்கிறது சினிமா.. தயவு செஞ்சு கொஞ்சம் புரிஞ்சிக்கங்க..
மகேஷ்..சரண்யா.. தியேட்டரில் மிக சிலர்.
சர்வே ரிசல்ட்..
வாரணம் ஆயிரம் படம்
சூப்பர்னு சொன்னவங்க : 55 பேர்.
ஓகேன்னு சொன்னவங்க: 46 பேர்.
சப்பைன்னு ‘’’’ : 38 பேர்.
எஸ்கேபுன்னு “ : 31 பேர்.
மொத்ததில படம் நல்லாயிருக்குன்னு சொல்லியிருக்கீங்க.. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இணையத்தில் நல்லாயிருக்கும் சொன்ன மெஜாரிட்டி படங்கள் வியாபார ரீதியில் தோல்வி படங்களே.. அதற்கு இந்த படமும் ஓரு சான்று.. சென்னை,கோவை, போன்ற சிட்டிகளை தவிர எல்லா இடங்களிலும், மிக மோசமான வசூலை கொண்டிருக்கிறது வ.ஆயிரம்.
Nov 28, 2008
பூ - திரைவிமர்சனம்
மனிதனின் வாழ்கையில் ஓவ்வொருவருக்கும் ஓரு கனவுகள், கற்பனைகள், நிஜ வாழ்கையில் ஓவ்வொருவரும் அவர்தம் கனவுகளை, கற்பனைகளை விட்டு கொடுத்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி மற்றவருக்காக விட்டு கொடுத்து அதனால் அவர் நன்றாய் இருப்பார் என்று நம்பி செய்த தியாகம் வீணாகும் போது வரும் துக்கம் மிகப் பெரிய சோகம். அந்த சோகம் காதலாய் இருந்தால்..? அந்த சோகத்தை இவ்வளவு எளிமையாய், ஒரு கிராமத்து காதல் கதையை வில்லன் இல்லாமல்,குத்துபாட்டு இல்லாமல்,இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல், கவிதையாய் தர முயன்றிருக்கிறார் இயக்குனர் சசி.
தமிழ்செல்வனின் “வெயிலோடு போய்” என்கிற சிறுகதையை திரைகதையாக்கி இருக்கிறார். முழுக்க, முழுக்க, கதாநாயகியை சுற்றியே வரும் கதை. அறிமுக நாயகி பார்வதிக்கு முதல் படமே பேர் சொல்லும் படமாய் அமைந்திருக்கிறது. மாரியம்மாவாகவே வாழ்ந்திருக்கிறார். சந்தோஷம், கோபம், துக்கம், காதல், ஏக்கம், பிரிவு, என்று உணர்வுகளின் களஞ்சியமாய் மின்னுகிறார். புதியவர் என்று சொன்னால் நம்பமுடியாது.
கதையின் நாயகன் தங்கராசுவாய் ஸ்ரீகாந்த். ஆம் கதையின் நாயகன் தான். முதலில் இந்த மாதிரியான ஹீரோயின் ஓரியண்டட் படத்தில் நடித்தற்கே அவரை பாராட்ட வேண்டும். சில காட்சிகளே வந்தாலும் குறை சொல்ல முடியாது.
தங்கராசுவின் அப்பாவாக வரும் பேனாகாரன். கிராமத்தில் உழைத்து, உழைத்து தேயும் தகப்பன்களை கண் முன்னே காட்டுகிறார். மிக இயல்பான நடிப்பு. அவருடய மனைவியாய் எழுத்தாளர் பாரததேவி வருகிறார்.
தென் தமிழ்நாட்டின் சிவகாசி, ராஜபாளையத்தில் நடைபெறும் கதையில், அந்த ஊரின் இயல்பு தன்மை மாறாமல் நேட்டிவிட்டியோடு, நம் கண் முன்னே நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் பி.சி.முத்தையா. அந்த அகண்ட செம்மண் வெட்டவெளியும் அதில் இரண்டே இரண்டு பனைமரமும், தியேட்டரில் பாருங்கள் அந்த கந்தக பூமியின் தகிப்பு உங்களுக்கு புரியும்.
புதிய இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனின் இசை ஏற்கனவே ஹிட். அதிலும் சுத்ததன்யாசியில் என்று நினைக்கிறேன் அந்த “ஆவாரம்பூ” பாடல் ரொம்ப நாளுக்கு ரீங்காரமிடும்.
படத்தில் வரும் ஓவ்வொரு காட்சியிலும் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. சிறுகதையை கொஞ்சமும் மாற்றாமல், பாடல் காட்சிகளை தவிர அதை ஓட்டியே திரைக்கதை அமைத்திருப்பதால், வழக்கமான சினிமாதனமான காட்சிகள் இல்லாமல், யதார்தமாய் காட்சிகளை அமைத்திருக்கிறார். உதாரணமாய் மாரி, தங்கராசுவை எவ்வளவு அழுத்தமாய் மனதில் கொண்டிருக்கிறார் என்பதை அவர் பள்ளிகூடத்தில் வாத்தியார் “நீ பெரியவளானதும் என்ன செய்ய போறே”ன்னு கேட்டதும் “நான் தங்கராசுக்கு பொண்டாட்டியாக போறேன் சார்” என்று சொல்லும் ஓரு காட்சியே போதும். ஆனால் இவருக்கு இவ்வளவு அழுத்தமாய் காட்சி அமைத்துவிட்டு, அவரின் காதலை தங்கராசு வேறு ஓருவர் சொல்லித்தான் உணர்வதென்பது அவ்வளவு ஆழமாய் இல்லை. அதுவும் ஓரே பாடலில் அவர் மாரியின் காதலை உணர்வதும், வேறு ஆளாய் இருந்தால் பரவாயில்லை, சொந்த அத்தை மகனிடம் பேசுவதற்கு எதற்கு அவ்வளவு எக்ஸைட்மெண்ட்.. தயக்கம்? ஏதோ ஓரு காட்சியில், இரண்டு காட்சியில் இருந்தால் பரவாயில்லை, படம் முழுக்க, அதே உணர்வில் நகர்வதால், பார்க்கும் நம்மை இம்சை பண்ணுகிறார் இயக்குனர். அதிலும் மாரியின் காதலை தங்கராசு உணர்ந்தும் அவரை வேண்டாம் என்னும் காரணம் மருத்துவ ரீதியாய் சரியாக இருந்தாலும், அதை மாரியிடம் சொல்லி உணர்த்தியிருந்தால் பரவாயில்லை. ஏதோ திடீரென்று சம்மந்தமில்லாமல் மன்னிப்பு கேட்டான் என்று சொல்வது ஒட்டும்படியாய் இல்லை.
அது மட்டுமில்லாமல் படத்தின் ஆரம்ப காட்சியில் தன் புது கணவனுடன் சரச சல்லாபங்கள் புரிந்து விட்டு, தன் முன்னால் காதலனை பார்க்க வருவது, ஆரம்பத்தில் எதிர்பார்பை ஏற்படுத்தினாலும், எதை நோக்கி போகும் என்பதில் தெரிந்து விடுவதால் படம் முழுக்க ஓரு தொய்வு இருக்கத்தான் செய்கிறது. க்ளைமாக்ஸில் தங்கராசுவின் அப்பா மாரியிடம் “ உனக்கு ஓரு கனவு இருந்திச்சு.. எனக்கு ஓரு கனவு இருந்திச்சு.. அது போல அந்த பொண்ணுக்கு ஓரு கனவு இருந்திருக்கறது தெரியாம இருந்துட்டோம்ன்னு சொல்லி மன்னிப்பு கேட்டு நிற்பதெல்லாம் சினிமா. நல்ல கதை அதை சுருக்கமாய் சொல்லியிருந்தால் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய் அடையாளமாய் வந்திருக்க வேண்டிய படம். இருந்தாலும் மிக நுணுக்கமாய் மனித உணர்வுகளை படம் பிடித்து காட்ட முயற்சித்திருக்கும் சசியை பாராட்ட வேண்டும்
பூவில் குறைகள் இருந்தாலும்,கவிதையாய் ஓரு படத்தை தர முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் கவிதை எல்லாருக்கும் பிடிப்பதுமில்லை, புரிவதுமில்லை. அப்படி மக்களுக்கு பிடித்தும், புரிந்தும் விட்டால் அதை விட சந்தோஷம் வேறேதுமில்லை. பார்போம் பூ மலருமா..? மலராதா?? என்று.
சிறுகதைளை படிக்க
முத்தம்
நீங்க இந்த மாதிரி பண்ணதேயில்லையா சார்..?
கமான்..கமான்..
மீனாட்சி..சாமான் நிக்காலோ..
ரமேஷூம்..ஸ்கூட்டி பெண்ணும்..
"வயாக்ரா” பயன்படுத்தும் இரண்டு வயது சிறுவன்.
ஆம் உண்மை தான். உலகிலேயே மிக சிறிய வயதில் வயாக்ரா பயன்படுத்தும் சிறுவனின் பெயர் கெல்வின் முட்டுஸா. பிறந்த மூன்று மாதங்களிலிருந்தே மிகவும் அரிதான ஓரு மூச்சு பிரச்சனை காரணமாய் வயாகராவை உட்கொண்டு வருகிறான். ஓரு நாளைக்கு ஆறு வேளை வீதம் அவன் கடந்த முப்பது மாதங்களாய் வயாக்ராவை பயன் படுத்தி வருகிறான்.
”பெல்மோனரி ஆர்டிரியல் ஹைபர்டென்ஷன்” என்கிற அரிதான் வியாதியுடன் அவன் பிறந்ததிலிருந்தே போராடி வருகிறான். அதாவது மிக ஆபத்தான ரத்த கொதிப்பு காரணமாய் அவனுடய இதயம் அவனுடய சுவாசப்பைக்கு அனுப்ப வேண்டிய ரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல் கஷ்டபடுகிறது. இதனால் அவனுடய இதயம் நான்கு மடங்கு வேலை செய்ய வேண்டியாதாக இருந்தது.
கெல்வின் பிறப்பதற்கு முன்பே அவன் பிறக்கும் போதே பவுல் மற்றும் கிட்னி பிரச்சனையுடன் தான் பிறப்பான் என்று டாக்டர்கள் அவனின் தாயிடம் தெரிவித்திருக்கிறார்கள். பிறந்து ஓரே நாளில் அதை கரெக்ட் செய்ய சர்ஜரி நடந்திருக்கிறது அவனுக்கு. கருவிலேயே அவனுடய் குறையை கண்டுபிடித்த டாக்டர்களால் அவனுடய் சுவாசப்பை பிரச்சனையை கண்டு பிடிக்க முடியவில்லை.
ஓரு நாள் நான் அவனுக்கு பால் கொடுக்க எழுந்து பார்த்த போது கெல்வின் கண்களில் எந்த அசைவு மற்றும் பேச்சு மூச்சின்றி கிடந்தான். டாக்டர்கள் அவனுடய ஆக்ஸிசன் லெவல் மிகவும் மோசமாய் இருப்பதாய் தெரிவித்தார்கள். ஓவ்வொரு முறை அவன் மூச்சுக்காக, சிரமப்படும்போது அவன் இறந்து விடுவானோ.. என்ற அச்சம் என்னை துரத்தும். ஆனால் டாக்டர்கள் அவனுக்கு மிக மோசமான பிரச்சனை உள்ளது என்றவுடன் என்ன செய்வதென்றே புரியவில்லை. ஓரு நாள் டாக்டர்கள் என் மகனுக்கு ‘வயாகராவை” கொடுத்த போது.. என்ன கொடுமை இது ? பிறந்து மூன்று மாதமே ஆன ஓரு குழைந்தைக்கு ‘வயாக்ரா’வா..? என்று நினைத்து பயந்தேன். ஆனால் அது செய்த ஆதிசயத்தை கண்டு என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்கிறார் கெல்வினின் தாய் மவுரின்.
அது சரி எப்படி கெல்வினுக்கு ‘வயாக்ரா’ வேலை செய்கிற்து என்று கேட்கிறீர்களா..?
ரத்தத்திலிருக்கும் ஆக்ஸிசன் கிடைக்காமல் மூச்சுவிட கஷ்டப்படும் போது ‘வயாக்ரா’ அவனுடய் பல்மொனரி ஆர்டிரரியை இலகுவாக்கி சுவாசப்பைக்கு ரத்தத்தை பம்ப் செய்கிறது அதனால் அவனுடய இதயம் கஷ்டப்படாமல் இலகுவாய் இயங்குவதாய் டாக்டர்கள் சொல்கிறார்கள்..
எது எப்படியோ ‘வயாக்ரா’ முடியாதவர்களை மட்டும் ’எழுப்பவில்லை’. இந்த சிறுவனை எழுந்து ஆடி ஓடி விளையாட வைத்திருக்கிறதே..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும் கட்டாயம் குத்தவும்..
சிறுகதைளை படிக்க
முத்தம்
நீங்க இந்த மாதிரி பண்ணதேயில்லையா சார்..?
கமான்..கமான்..
மீனாட்சி..சாமான் நிக்காலோ..
ரமேஷூம்..ஸ்கூட்டி பெண்ணும்..
Nov 27, 2008
செய்திகளை முந்தி தருவது ...சன், ராஜ், ஜெயாவா..?
ராத்திரி சுமார் 11 மணி இருக்கும் இணையத்தில் உலாவி கொண்டிருந்தபோதுதான் தெரிய வந்தது. மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல் பற்றி ஓருவர் பதிவிட்டிருந்தார். அதை பார்த்ததும் உடனடியாய் நான் பழக்க தோஷ்த்தில் நம் தமிழ் செய்தி சேனல்களை பார்க்க ஆரம்பிக்க, சன்நியூஸ், ஜெயா, என்று எவ்ருமே தங்களுடய சேனல்களில் செய்திகளை அப்டேட் செய்யவில்லை. சாயங்காலம் தங்களது மெயின் சேனல்களில் மழை, புயல், தங்கள் சார்பு, ம்ற்றும் எதிர்ப்பு செய்திகள் என்று ஏற்கனவே காட்டபட்ட விஷயங்களையே திரும்ப, திரும்ப காட்டி கொண்டிருந்தார்கள். ஆனால் ஆங்கில, இந்தி செய்தி சேனல்கள் எல்லாமே பரபரப்பாய் சுடசுட செய்திகளை ‘நேரலை’யாய் தந்து கொண்டிருந்தார்கள்.
மும்பையின் சத்ரபதி சிவாஜி நிலையம், தாஜ் கொலாபா, ட்ரைடண்ட், காமா மருத்துவமனை என ஒரே சமயத்தில் தாக்குதல் தொடுத்திருக்கின்றனர், தீவிரவாதிகள். தாக்குதலின் தீவிரம் அதிர்ச்சியடைய வைத்தது. கிட்டத்தட்ட ஓரு போர் நடப்பதை போன்றிருக்கிறது. நம் செய்தி சேனல்கள் இதை பற்றி சற்றும் கவலைபடாமல் இருந்தது அதிர்ச்சியையும் தலைகுனிவையும் ஏற்படுத்தியது.
ஏன் ஓரு 12 மணிவாக்கில் டிவி9 என்கிற் தெலுங்கு செய்தி சேனலில் கூட மற்ற சேனலிலிருந்து காட்சிகளை ஓளிபரப்பினார்கள். ஆனால் நம் செய்திகளை உடனுக்குடன் தருவதாய் சொல்லும், சன் நீயூஸ், சுமார் ஓரு மணி வாக்கில் ப்ளாஷ் நியூஸ் போட்டார்கள். ராஜ் நியூஸ் பரவாயில்லை. ஓரு கால் மணி நேரம் முன்னமே ப்ளாஷ் நியூஸ் போட்டுவிட்டார்கள்.
நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் நாட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிவிப்பதுதான் செய்தி சேனல்களின் கடமை. பிராந்திய செய்தி சேனல்களில் அவர்களின் பிராந்திய செய்திக்கு முக்கியத்துவம் தருவதுதான் அவர்களின் டி.ஆர்.பி என்றாலும், தேசிய அளவில் நடக்கும் இம்மாதிரியான விஷயங்களை உடனடியாய் காட்டாத 24 மணி நேர செய்தி சேனல்கள் இருந்தால் என்ன.. இல்லாவிட்டால் என்ன.
சி.என்.என்.கூட நேரலையாய் தன் உலக நிகழ்வுகளை விட்டுவிட்டு சுமார் ஓரு மணிநேரம் இந்த் தாக்குதலை ஓளிபரப்பியது.
அமெரிக்க தீவிரவாத தாக்குதலின் போது சி.என்.என். தங்களுடய நாட்டின் நடந்த அந்த தாக்குதலை ஓரு சராசரி அமெரிக்கனின் பதைபதைப்போடு வெளிபடுத்தியது. அதே பி.பி.சி எங்கே நம்மையும் இதே போல் தாக்குவார்ளோ என்ற பயம் கலந்த எச்சரிக்கை உணர்வுடன் செய்திகளை ஓளிபரப்பினார்கள். இந்திய ஆங்கில செய்தி சேனல்கள் எல்லோருமே.. ரெய்டரில் கிடைத்த புட்டேஜை மட்டுமில்லாமல் மற்ற சேனல்களில் கிடைத்த வீடியோக்களையும் காட்டி நம் பக்கத்து உண்ர்வுகளை சரியாய் வெளிபடுத்தி கொண்டிருந்தார்கள். ஆனால் அப்போது தான் ஆரம்பித்திருந்த சன் நியூஸ், ஏதோ இங்கிலீஷ் பட டிரைலரை காட்டுவது போல திரும்ப திரும்ப அந்த விமான மோதல் சமாச்சாரத்தையே காட்டி கொண்டிருந்தார்கள் இரண்டு நாள் வரை. இதை பற்றி ஓரு சந்திப்பின் போது சன் ”தலைமை”யிடம் பேசிக் கொண்டிருந்த போது இதை பற்றி திரு. மா..... சொல்லுங்கள் என்றார். சொன்ன போது அவர் சொன்னது “உலகத்துல சந்தோஷமான விஷயங்களை செய்தியாக்க முடியாது. இன்னொருவருடய துக்கமும் பிரச்சனையும் தான் செய்திகளாகும் அது கூட நம்ம பக்கத்து ஆளாயிருந்தாத்தான்..” என்றார்.ஓரு வேளை மும்பை நம் நாட்டில் இல்லையோ..? என்னே ஓரு தீர்க தரிசனம்..
இந்த லட்சணத்தில் கலைஞர் தொலைக்காட்சி வேறு செய்தி சேனலை ஆரம்பிக்கிறது. அவர்களும் குட்டையில் ஊறிய மட்டைகள் தான். என்ன செய்கிறார்கள் என்று பார்போம்
உங்களின் கருத்துகளை பின்னூட்டமிட்டும், தமிழ்மணத்திலும், தமிலிஷிலும் ஓட்டை அளிக்குமாறு கேட்டுக்கிறேன்.
முத்தம் சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்
Nov 26, 2008
STAR MAKER - ITALIAN FILM
1995ஆம் ஆண்டு வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் நாமினேஷன் பெற்ற படம். “சினிமா பாரடைசோ” திரைப்பட இயக்குனர் குசுப்பே டோர்னடோரே இயக்கிய படம்.
1954 இத்தாலிய கிராமங்களில் டிவிகூட அவ்வளவாக நுழையாத காலம், ஜோமொரிலி என்னும் ஓருவன் ஓரு பழைய லாரி போன்ற வாகனத்தில் ஊர் ஊராக சுற்றி தான் ரோமில் இருக்கும், கொலப்பியா பிக்சர்ஸின் ஆள் என்றும், சினிமாவில் நடிக்க ஆட்களை தேர்வு செய்வதற்காக வந்திருப்பதாகவும், உங்களில் யார் வேண்டுமானாலும், திரைப்படங்களில் நடிக்க முடியும், அதற்கான ஸ்கிரின் டெஸ்ட் எடுப்பதற்கு ஆயிரம் லியர் வரை வாங்கி கொண்டு, அவன் திருடி கொண்டுவந்த கேமராவும், எக்ஸ்பயரி ஆகிய பிலிம் ரோலை வைத்து, எல்லா கிராமங்களுக்கும் போய், டேரா போட்டு, பணத்தை வசூலிக்கிறான். இந்த படம்பிடிக்கும் எல்லாருடைய காட்சிகளையும் போட்டு பார்த்துவிட்டு அவர்க்ளில் ஒருவரை கொலம்பியா பிக்சர்ஸ் தேர்தெடுக்கும் என்று நம்பிகையை சொல்லி ஏமாற்றுகிறான்.
அப்போது ஓரு கிராமத்தில் பியாட்டா என்னும் பேரழகியை சந்திக்கிறான். யாருடய ஆதரவில்லாமல் வீடுகளையும், அலுவலகங்களையும், சுத்தம் செய்து,ஓரு தேவாலயத்தில் தங்கியிருக்கிறாள். தன்னை எப்படியாவது கதாநாயகி ஆக்கிவிட வேண்டுமென்று அவனிடம் மன்றாடுகிறாள். அவளிடம் அவன் கேட்குமளவுக்கு பணம் இல்லை.ஓரு கட்டத்தில் அவளின் அழகு அவனை இறங்கி வர செய்கிறது. அவளுக்காக அரை பணத்தில் எடுத்து கொடுப்பதாய் பணத்தை வாங்கி படப்பிடிப்பு முடித்துவிட்டு வேறு ஓரு ஊருக்கு புறபடுகிறான். சினிமாவில் சேர அவள் டெஸ்ட் சூட் எடுத்ததால் அவளை தேவாலயத்திலிருந்து வெளியேற, அவளுக்கு எங்கே போவது என்று தெரியாமல் அவனுக்கு தெரியாமலே அவனுடய வண்டியில் ஏறி பயணிக்கிறாள். அவர்கள் இருவருக்கும் ஓரு புரிதல் ஆரம்பிக்க, அப்போது அவனை இத்தாலிய போலீஸார் கைது செய்கிறார்கள்.
சில மாத சிறை தண்டனைக்கு பிறகு வெளிவரும் அவன் பியாட்டா அவனுடய வண்டியிலேயே தங்கியிருந்தாக தெரிய வர, அவளை தேடி அலைகிறான். பிறகு ஓரு நாள் அவளை ஓரு அசைலத்தில் பார்க்கிறான். தன முடியெல்லாம் இழந்து மொட்டை அடிக்க பட்டு, ஓரு அடிபட்ட பறவையாய் சுய சிந்தனை இழந்து, தன் அருகிலிருப்பவன் தன்னுடய் காதலன் என்பதை கூட உணர முடியாமல்.. ஜோமொரிலி வருவான் தன்னை இத்தாலியில் உச்ச நாயகியாய் ஆக்குவான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
சினிமாவின் தாக்கம், சினிமாவில் நடிக்கும் ஆர்வம் சிறுவர்கள் முதல் கிழவர்கள் வரை, ஏன் செவிடு, ஊமைகள் கூட ஆசைபடுவதை பார்க்கும் போது அந்த மீடியத்தின்ஆளுமை நம்மை மட்டுமல்ல உலகில் உள்ள எல்லாருடய மனதிலும் அந்த ஆர்வமும்,பாதிப்பும் இருக்கிறது என்பதை காட்டுகிறது. அதிலும் ஓரு பெண் தன்னுடய 15 வய்து மகளை எப்படியாவது கதாநாயகி ஆக்க தன்னையே கொடுப்பதாகட்டும், அவளுடன் புணரும் போது அவள் ஓயாமல் தன்னால் ஓரு கதாநாயகியாய் வரமுடியாமல் போனதை பற்றியே புலம்பிக் கொண்டிருப்பதும், போன்ற காட்சிகள் நம் மனதை பிசையத்தான் செய்யும்..
பியட்டா.. அசத்துகிற் அழகி.. அவருடய இன்னொசென்ஸும், அழகும், நம்மை கட்டி போடாமல் இருக்காது. அதிலும் பியட்டாவும், ஜோமொரிலியும் அந்த மலைக் குகையில் இணையும் காட்சியில் ஓளிப்பதிவு சூப்பர்.
சீரான திரைக்கதை, இயல்பான் வசனங்கள், அற்புதமான் ஓளிப்பதிவு, சிறந்த இயக்கம், என்று எல்லா விதத்திலும் நம்மை கவரும் இந்த ”ஸ்டார் மேக்கர்”.
உஙகள் கருத்துகளை பின்னூட்டமிட்டும், தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் ஓரு ஓட்டை குத்திட்டு போங்க தல..
Nov 25, 2008
DASVIDANIYA - FILM REVIEW
தாஸ்விதானியா என்றால் மிக சிறந்த வழியனுப்புதல் ஆங்கிலத்தில் The best ever good bye என்று பொருள். இந்த படத்தின் நாயகன் விநய்பத்க்குக்கு மீண்டும் தன்னை நிருபிப்பதற்கான படம்.
அமர்கவுல் என்கிற திருமணமாகாத 37 வயது இளைஞனின் கதை. மிக சாதாரணன், இவனைபோல நாம் பலரை சந்தித்திருந்தாலும் மறந்திருபோம்.. அப்படிபட்ட சாதாரணன். தினமும் தான் செய்ய வேண்டிய காரியங்களை Thinks to do என்று பட்டியலிட்டு வாழ்பவன். அவனுக்கு stomach cancer வ்ந்து இன்னும் மூன்று மாதங்களில் அவன் இறந்து போவான் என்றவுடன் எப்படியிருக்கும். ஆடிப்போய் இருக்கும் அவன் என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் செய்யவேண்டிய பழைய வேலைகளை பட்டியலிட, அவனுடய் மனசாட்சி வ்ந்து அவனை திட்டுகிறது. இது நாள் வரை எந்தவிதமான் ஆசைகளையும் பூர்த்தியடையாமல் வாழ்ந்து என்ன கண்டாய்..? இனி இருக்கும் நாட்களிலாவது வாழ்கையை வாழ்ந்து பார்.. ஆசை பட்டதையெல்லாம் அனுபவி என்கிறது.
அதன் படி அவன் ஓரு பட்டியலிடுகிறான் Things to do before I die என்று. புதிய கார், கிடார் வாசிக்க கற்பது, அம்மா, வெளிநாட்டு பயணம், நேகா.., ஆத்ம ந்ண்பன் ராஜூ, செக்ஸ்,பாஸூக்கு பாஸாய் இருப்பது என்று பத்து விதமான் ஆசைகளை அடைய விழைகிறான்.
ஓருவன் தன்னுடய் சாவை ஒப்பாரி வைக்காமல் கொஞ்சம் சர்ரியலிஸ்டிக் காமெடியுடன் இயல்பாய் தர முடியுமா..? என்று கேட்டால் இதோ.. தஸ்விதானியா.
விந்ய் பதக்கின் நடிப்புக்கு மீண்டும் ஓரு மைல்கல். மனுசன் சும்மா பிச்சி உதறியிருக்கார்.. அவருடய டயலாக் டெலிவரியும்,பாடி லேங்குவேஜூம் பகுத் அச்சா ஹே.. அதிலும் அவருடய் முன்னால் காதலியிடம் தன் காதலை எப்படியாவது சொல்ல ’டம் சராப்ஸ்’ விளையாட்டு மூலம் அவர் வெளிப்படுத்தும் இடம் சிம்பிளி சூப்பர்ப்.. காதலி நேகா தன் பங்குக்கு நன்றாகவே நடித்துள்ளார்.
அதன் பிற்கு வரும் ரஷ்ய காதலி.. ஓரு காட்சியிலும் அவள் பேசும் பேச்சுக்கு சப்டைட்டில் போடாமலேயே அவர் பேசுவது நமக்கு புரிகிறது.. அது சரி காதலுக்கும், காமத்துக்கும் பாஷை ஏது..
ராப் ரையினரின் “த பக்கெட் லிஸ்ட்” , மற்றும் வெயின் வாங்ஸின் “லாஸ்ட் ஹாலிடே”யை ஞாபகபடுத்தினாலும் இயக்குனர் சஷான்ந்த் ஷா பாராட்டபட வேண்டியவர்.
மேலும் படத்தை பற்றி நிறைய சொன்னால் படத்தை ரசிக்க முடியாது..
அதனால் வெள்ளி திரையில் காண்க..
DASVIDANIYA
உங்கள் ஓட்டை தமிழ்மணம் மற்றும் தமிலிஷில் மறக்காமல் குத்தவும்..
Nov 23, 2008
VINAYAKUDU - REVIEW
ரொம்ப நாளாகிவிட்டது இவ்வளவு இயல்பான ஒரு காதல் கதை பார்த்து. ஒரு குண்டான இளைஞனுக்கும், ஒரு இளம் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதலை பற்றி தான் படம்.
கார்திக் ஹைதராபாத்துக்கு ஹைடெக் என்னும் விளம்பர நிறுவனத்தில் சேர வருகிறான். அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் கல்பனாவை பார்த்ததுமே விரும்ப ஆரம்பிக்கிறான். இயல்பாகவே ரொம்பவும் சாப்ட் ஸ்போகன் பேர்வழி கார்த்திக். கல்பனாவோ..மிகவும் கோபக்காரி, குண்டான கார்திக்கை பார்த்த முதலே அவளுக்கு பிடிக்கவில்லை. கல்பனாவின் குடும்பம் தங்களுடய தம்பியின் வீட்டு விஷேசத்துக்கு வெளிநாடு செல்ல, கல்பனா தன் தோழியுடன் அவளுடய வீட்டில் தங்குகிறாள்.. கல்பனா,கார்திக்கை முகத்திலடித்தார் போல் எவ்வளவுதான் பேசினாலும், அவன் அதை பற்றி கவலை படுவதில்லை. கல்பனாவின் பெற்றோர் ஊருக்கு போவதற்கு முன் அவளுக்காக ஓரு பையனை பார்த்து, அவ்னுடன் பேசி பார்த்து பிடித்திருந்தால் கல்யாணம் செய்வதாய் ஏற்பாடு செய்துவிட்டு போயிருக்க, கல்பனாவுக்கும், அவளுடய வருங்கால கணவன் ராஜிவுக்கு இடையே காமனான விஷயங்கள் நிறைய இருக்க, கார்திக் தன்னுடய காதலை சொல்ல நினைக்கிறான்.
இதற்கிடையில் கார்திக்கின் நண்பன் அல்டாபுக்கும், கல்பனாவின் தோழி சாண்டிக்கு காதல். அதே சமயத்தில் கல்பனாவுக்கும், ராஜீவுக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிகிறார்கள். ஒரு நாள் அல்டாப் சாண்டியை முத்தமிட்டுவிட அதனால் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனையை சால்வ் செய்ய போகும் கார்திக்கும், கல்பனாவுக்கும் சண்டை வந்து, கார்திக் அவளை பிரிகிறான். அவர்கள் எப்படி ஓன்று சேர்கிறார்கள் என்பதை ஆழகாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சாய் கிரண் அடவி.
கார்திக்காக நடிக்கும் கிருஷ்ணடுவும், கல்பனாவாக நடிக்கும் சோனியாவும் ஏற்கனவே ஹாப்பி டேஸ் படத்தில் ஓன்றாய் நடித்திருந்தார்கள். அவர்கள் இருவரும் மெயின் காரெக்டராய் நடித்திருக்கும் படம் இது.
படம் முழுவதும் சோனியாவை பார்த்து கொண்டேயிருக்கலாம் போலிருக்கு. i’ve never come across a dusky beauty like her in recent time. சூஸி சூஸி சச்சு போத்துன்னானு பாபு... அவருடய பாடிலேங்குவேஜும், அந்த பார்வைகளும், சிம்பிளி சூப்பர்ப். அவருக்காகவே மீண்டும் ஓரு முறை பார்க்க வேண்டும்.
கிருஷ்ணுடுக்கு லட்டு மாதிரி கேரக்டர்.. மிக அழகாய் உணர்ந்து நடித்திருக்கிறார். தன் காதலி தன்னையும், தன் தந்தையையும், குண்டர்கள் என்று கிண்டல் பண்ணியதை நினைத்து, தன் அக்காவிடம் சொல்லி அழும் காட்சியில் கொஞ்சம் டிராமா முயற்சி செய்திருக்கிறார். கல்பனாவை பார்த்தும் மொஹலே ஆசம் பாடல் ஞாபகம் வருவதும், மீண்டும் ஓரு முறை வீட்டில் தனியாய் இருவரும் டிவி பார்க்கும் காட்சியில் அந்த பாடல் டீவியில் வந்ததும், கார்திக் டென்ஷனாவதை பார்த்து கல்பனா உள்ளுக்குள் சிரிப்பதும் அருமை.
ஹாப்பிடேஸ் இயக்குனர் சேகர் கம்முலா வின் அஸிஸ்டெண்ட் இயக்கியிருக்கும் படம், கம்முலாவின் பாணியிலேயே கொஞ்சம் ஸ்லோவாக செல்கிறது படம். ஆனாலும் இயல்பான நடிப்பு, ஷார்பான டைலாக், லாஜிக்கோடு காமெடி, மிக இயல்பான திரைக்கதை என்று படம் முழுவதும் சந்தோச்ஷமும், துள்ளலுமாய் இயக்கி ஓரு ஃபீல் குட் படத்தை அளித்திருக்கிறார் இயக்குனர். எதையும் எதிர்பார்காமல் போய் பாருங்கள் உங்களுக்கு கண்டிப்பாய் பிடிக்கும்
ம்.. அப்புறம் அந்த சோனியா இருக்கா....ம்ஹூம் நமக்கில்ல...நமக்கில்ல..
Nov 21, 2008
தெனாவெட்டு - திரை விமர்சனம்
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும்.. இ.எல்.கே பிக்சர்ஸ் பி லிமிட்டெட் தயாரிப்பில் வெளிவந்துள்ள புதிய திரைப்படம் “தெனாவட்டு” .
ஜிவா, பூனம் பாஜ்வா, கஞ்சா கருப்பு, சரண்யா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் இன்று வெளியாகியுள்ளது.
இதெல்லாம் ஓரு படம் அதுக்கு ஓரு விமர்சனம்.. சன் டிவி தனது டிரைலரை எடிட் பண்ணிய குவாலிட்டி கூட படத்தில் இல்லை. பழைய தெலுங்கு படம் பார்த்தா மாதிரி இருக்கு.. எங்கள் தங்கத் தலைவி, பூனம் பாஜ்வாவை தவிர சொல்லிக் கொள்ளும் படியாய் எதுவுமில்லாததால்.. படம் பார்க்க விரும்புவர்கள் வ்.ஆயிரத்தையே பார்க்கலாம்.
வாரணம் ஆயிரம் v/s தெனாவெட்டு
வாரணம் ஆயிரம் படத்தின் வசூலைக் கண்டு சூரிய கம்பெனி சந்தோசஷ குதியாட்டத்தில் இருகிறது. சென்னையை தவிர மிக மோசமான் ஓப்பனிங் இந்த படத்திற்கு. இந்த நிலையில் சூரிய கம்பெனியின் புதிய படமான தெனாவெட்டு படத்தின் ஆடியோ வெளியீடு இரண்டு நாட்களுக்கு முன்பாய் நடந்தது. சூரிய கம்பெனியே தனது இன்னொரு அங்கமாய் சன் ஆடியோ என்று ஆரம்பித்து வெளியிட்டது.
இதனிடையில் சினிமாகாரர்கள் வாரணம் ஆயிரம் பிஸினெஸ் முறையை அறிந்து அல்லு விட்டிருகிறதாய் தகவல். முதலில் 17 கோடிக்கு ஒத்துக் கொண்டு படத்தை வாங்கியவர்கள், ரிலீஸுக்கு முன் நாள் லேப்பில் அவ்வளவு எல்லாம் முடியாது என்று சொல்லி 11.5 கோடிக்குதான் வியாபாரம் ஆனதாகவும், 50லட்சம் எங்கள் பிசினெஸ் கமிஷன் என்றும், மீதி 11 கோடியை கொடுத்துவிட்டு, பெட்டிகளை கொடு என்று கேட்டு, அதற்கு மேல் கொடுக்க முடியாது என்று சொல்லி பெட்டிகளை எடுத்து போயிருக்கிறார்கள் என்கிறது சினிமா வட்டாரம், 50 லட்சம் சம்பாதித்தும் இல்லாமல், பேசியபடி வியாபாரம் செய்யாமல் இப்படி பண்ணியது பற்றி கேள்விபட்டு எல்லா தயாரிப்பாளர்களும் செய்வத்றியாது நிற்பதாய் தெரிகிறது. ரிலீசூக்கு முந்தினம் இரவு படத்தின் தயாரிப்பாளர்,இயக்குனர் இவ்ர்களையெல்லாம் வைத்து பஞ்சாயத்து நடத்து, அவர்கள் விட்டு கொடுத்ததாய் தெரிகிறது. இதனால் அவர்களது கம்பெனி படத்தை வாங்குவதாய் வந்தால் கொடுக்க முடியாது என்று சொல்ல முடிவெடுத்திறுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.
சூரிய கம்பெனியின் தெனாவெட்டின் புதிய டிரைலரும் எதிர் குழுவை எரிச்சலடைய வைத்திருக்கிறது.. டிரைலரில் ஜீவா..”வேணாம்னு நான் ஓதுங்கியிருக்கேன்.. சும்மா சீண்டாதே..” என்று எச்சரிகிறார். யாரை எச்சரிக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர்களில் ஓருவரான சிவசக்தி பாண்டியன் சூரிய இசை கம்பெனி வெளியிட்ட தெனாவெட்டு பட பாடல் விழாவில் “ அவர்களை வல்லவர்கள், நல்லவர்கள், திறமைசாலிகள் என்றும் அதனால் தான் எமகண்டத்தில் தங்கள் பாடல் கம்பெனியின் முதல் கேசட்டை வெளியிடுகிறார்கள் என்று சொம்படித்திருக்கிறார். இதிலிருந்தே தெரிகிறது தயாரிப்பாளர்களின் ஆதரவை சூரிய கம்பெனிக்கு கிடைக்க ஆரம்பிக்கி
றது என்று. அது மட்டுமில்லாமல்..
சூரிய கம்பெனி தன்னுடய விழுந்த படத்தை அதிக விலைக்கு விற்காமல் மிகவும் நியாயமான் விலையில் விநியோகஸ்தர்களுக்கு விற்றிருக்கிறது. படத்தின் ஓப்ப்னிங் மிக பெரிய ஓப்பனிங்காக இருந்ததால், வாங்கிய அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் லாபம். சின்ன படமோ.. பெரிய படமோ.. சன் டிவியின் விளம்பரம் மிகப் பெரிய அளவில் ரீச் ஆவதால் ஓப்பனிங்கில் காசை தேத்திவிடலாம் என்று விநியோகஸ்தர்கள் ஆவலுடன் அவர்களின் படங்களை வாங்குவதாய் கேள்வி..
எது எப்படியோ..நாளை வெளிவரும் தெனாவெட்டுக்கு ரசிகர்கள் விடை சொல்லிவிடுவார்கள்.
டிஸ்கி:
கவுதம் மேனன் நேற்று தன்னுடய பேட்டியில் படம் வெளியாகி மூண்று நாட்களே ஆகியிருப்பதால் பெண்கள் கூட இனிமேல் தான் வரும் என்று கூறியிருக்கிறார்.
இதே போல் குசேலனுக்கு பி.வாசு ஆடிமாதமானதால் பெண்கள் படத்திற்கு வரவில்லை என்றும், ஆடி முடிந்ததும் பெண்கள் கூட்டம் அம்மும் என்று சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அம்மியதா..? கும்மியதா..? என்று தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தெரியும்.
ஓரு படம் நல்லாயிருக்கா இல்லையா என்று பெரிய பட்ஜெட் படங்களில் முதல் காட்சியிலேயே தெரிந்துவிடும். சிறிய, மற்றும் புதிய நடிகர்கள் நடித்த படங்கள்தான் மிக சிறிய ஓப்பனிங்கில் ஆரம்பித்து சுமார் மூன்று நாட்களுக்குள் படம் பிக்க்ப் ஆகும் என்பது நிதர்சன உண்மை..
நமக்கும் உஙக் ஓட்டை தமிழ்மணத்துலேயோ.. தமிலிஸிலேயோ குத்தவும்..
Nov 20, 2008
ரமேஷும்..ஸ்கூட்டி பெண்ணும்....
ஓசியில் பினாயில் கொடுத்தாலும், சந்தோஷமாய் குடிப்பவன் ரமேஷ். கஞ்சன். அதைப்பற்றி சொல்லி அவனை கிண்டலடித்தால் வேறு யாரையோ கிண்டல் செய்வதாய் பாவித்து, அவனும் சிரிப்பான். யாருக்காவது ஏதாவது உதவி தேவையென்றாலும் கூட என்ன ஏதென்று கேட்க மாட்டான்.. ஏன் என்று கேட்டால், “அத கேட்கபோய்..அவங்க நம்ம கிட்டயே எதாவது கேட்டுட்டா..?” என்பான். தலையிலடித்து கொண்டு நகர்வேன்.
அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்றே தெரியவில்லை.. முடிந்த வரை எனது அலுவலகத்தில் எல்லோரும் அவரை அவாய்ட் செய்வார்கள், அல்லது கிண்டல் செய்வார்கள். அன்று நான் அலுவலகத்திலிருந்து கிளம்புவதற்கே ரொம்ப லேட்டாகிவிட்டது, கிளம்புகையில் பின்னாடி என் பேரை யாரோ கூப்பிடுவது போல இருக்க.. பார்த்தால் ரமேஷ்.
“சார்.. என்னை கொஞ்சம் போற வழியில டிராப் செய்றீங்களா..?”
என்று கேட்டபடி என் பதிலை எதிர்பாராமல் என் பைக்கின் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டான். எனக்கு கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது.. என்ன விதமான ஜந்து இவன்.. கொஞ்சம் கூட மற்றவர்களை பற்றி யோசிக்காமல்.. நடந்து கொள்கிறானே.. என்று மனதுக்குள் திட்டினாலும், நான் ஓன்றும் அவனுக்காக ஊரை சுற்ற் போவதில்லை. போகிற வழியில்தான் அவன் வீடு இருக்கிறது. அதனால் ஓன்றும் சொல்லாமல் வண்டியை கிளப்பினேன்.
அவனுக்கும் எனக்கும் பேசிக் கொள்வதற்கு எதுவும் இல்லாததால், அமைதியாகவே வண்டியோட்டி கொண்டிருந்தேன். என்னுடய் வீடு நகரத்துக்கு வெளியே இருக்கிறது.. அதற்கு முன்னால் ரமேஷின் வீடு.. இரவு லேட்டானால் பஸ், ஆட்டோ எதுவும் கிடைக்காது. மணி 11.30 மேல் ஆனதால் டிசம்பர் மாதத்து குளிர் முகத்திலடிக்க, கொஞ்சம் வேகமாகவே வண்டிய செலுத்தினேன்.
“ சார்.. சார்.. கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க சார்..” என்றான் ரமேஷ் பதட்டமாய்,
“ என்ன ரமேஷ்.. என்னாச்சு.. எதையாவது கீழே போட்டுட்டீங்களா..?” என்று கேட்டபடி வண்டியை நிறுத்தினேன். அவன் பதில் சொல்லாமல் வந்த திசை நோக்கி ஓடினான். அங்கே ஓரு பெண் ஸ்கூட்டியை பிடித்தபடி நிற்க, அவளுடன் அவன் எதையோ பேசி.. அவளுடய வண்டியை ஸ்டார்ட் செய்ய முயன்று கொண்டிருந்தான். நான் வண்டியை திருப்பி அவர்களை அடைந்து,
“என்ன ஆச்சு ரமேஷ்..?”
“ வண்டி ரிப்பேர் ஆயிருச்சு சார்..ஸ்டார்ட் ஆகலையாம்.. அதான் பாக்கறேன்..”
அப்போதுதான் நான் அந்த பெண்ணை பார்த்தேன். நல்ல உயரம், அளவான உடல், வண்டியை ரொம்ப தூரம் தள்ளிக் கொண்டு வந்திருக்க வேண்டும், முகத்தில் வேர்வை.., முகத்தில் கொஞ்சம் பயம் கலந்ததிருந்தது. இடுப்பில் கைவைத்து ரமேஷ் சைக்கிளுக்கு காத்தடிப்பதை போல எகிறி, எகிறி, கிக்கரை உதைப்பதை பார்த்து கொண்டிருந்தாள். எனககு அவனை பார்க்க ஆசச்ர்யமாகிவிட்டது. இவனா இப்படி உதவுகிறான்.. நாலு உதைக்கு ஓரு முறை அந்த பெண்ணை ஏறிட்டு பார்த்து கொண்டிருந்தான். ஓ..பிகரை மடிக்கிறதுக்காகவா..?
“எங்கே வேலை செய்றீங்க..? “ என்றேன்..
அவளின் பதட்டத்தை குறைப்பதற்காக, அவள் என்னுடய அலுவகத்தின் அருகே உள்ள ஓரு பிரபல கம்பெனியை சொல்ல..
“ எதுக்காக ராத்திரியில ரிஸ்க் எடுக்கிறீங்க.. கம்பெனி கேப் இருக்கில்ல..” என்று கேட்டேன்.
ரமேஷ் இன்னமும் காத்து அடித்து கொண்டிருந்தான்.. மனதுக்குள் சிரித்து கொண்டேன்.. என்ன ஓரு அர்பணிப்பு.. “ரமேஷ்.. வண்டியில பெட்ரோல் இருக்கா பாருங்க.. என்றேன்.”
ரமேஷ் வண்டியின் டாங்கை திற்ந்து பார்த்து, “ அட ஆமா சார்.. சுத்தமா டிரை..” என்று சொன்னவுடன். இங்கே பக்கதில நாலு கிலோ மீட்டருக்கு பங்க் எதும் கிடையாதே.. என்று தனக்குள் பேசியாடி யோசித்தவன் முகத்தில் பல்ப் எறிய, சற்று தூரத்தில் ஓரு பெட்டி கடை தெரிய, பரபர வென்று ஓடி திரும்பி வரும் பொது ஓரு மினரல் வாட்டர் பாட்டிலை வாங்கி வந்திருந்தான். “த..பார்றா..பிகருன்னதும்.. என்ன ஓரு பில்டப்பு..” இதே நமக்கு ஓண்ணுன்னா.. செய்வானா.. என்று யோசிக்கும் போதே..
“சார். கொஞ்சம் தண்ணி குடிங்க..,என்று அவன் கொஞ்சம் குடித்துவிட்டு, எனக்கும் குடித்துவிட்டு, மிச்சத்தை, அந்த பெண்ணிடம் கொடுத்து குடிக்க சொல்லிவிட்டு, பாட்டில் காலியானவுடன் சுத்தமாய் அதிலிருந்த தண்ணியை வெளியேற்றி, என்னுடய் வண்டியிலிருந்து என்னுடய் அனுமதியில்லாமலே..பெட்ரோல் டியூபை க்ழற்றி வண்டியிலிருந்து பெட்ரொலை அந்த பாட்டிலில் பிடித்து, அந்த் பெண்ணின் வண்டியில் ஊற்றி.. வண்டியை ஸ்டார்ட் செய்து, அவளிடம் கொடுத்து “பார்த்து போங்க.. வழியில எங்கயும் நிறுத்தாதீங்க.. பார்த்துபோ..” என்று கரிசனத்துடன் வழியனுப்பினான்.
எனக்குள் கோபமும், ஓரு பக்கம ரமேஷை பார்த்து நகக்லும் எட்டி பார்த்தது.. எதையும் காட்டிக் கொள்ளாமல் வண்டியை ஸ்டார்ட் செய்து கிளப்பினேன். ரமேஷும் ஏறிக் கொண்டான்..வழியில் எதுவுமே..பேசவில்லை.. நான் இந்த விஷயத்தை அதும் ரமேஷ் தன் கை காசிலிருந்து பத்து ரூபா செலவு செய்து ஓரு பெண்ணிக்கு கொடுத்ததை பரப்ப வேண்டும் என்று நினைத்தப்டியே.. வண்டியை ஓட்ட..அது..ஓரு ரெண்டு கிலோ மீட்டர் தாண்டியவுடன் திக்கி..திக்கி ஓடி நின்று போனது. என்னவென்று பார்த்தால் வண்டியில் பெட்ரோல் இல்லை.. நான் ரமேஷை பார்த்தேன்.. “ சாரி சார்..உங்க வண்டியில பெட்ரோல் இருக்கும்னு நினைச்சு புல்லா எடுத்திட்டேன்.. கொடுங்க சார் பகக்த்துல ஓரு கிலோ மீட்டர் தூரத்துல பங்க இருக்கு நான் தள்ளீகிட்டு வரேன்..” என்று என்னிடமிருந்து வண்டியை தள்ளி கொண்டு வர, அவனை திட்ட முடியாமல் அவனை ஆச்சர்யமாய் பார்த்தபடி..
“ ஏன்..ரமேஷ் உங்க கையிலேர்ந்து பத்து பைசா கூட செலவு பண்ணமாட்டீங்க.. இன்னைக்கு என்னடானா.. ஓரே தாராளமா பின்னி பெடலெடுக்கிறீங்க..? பிகர்ன்னதும் என்னமா உதவுறீங்க..?” என்றேன் கிண்டலாய்..
ரமேஷ் எதுவும் பேசாமல் கொஞ்சம் தூரம் வண்டியை தள்ளிக் கொண்டே.. “ பிகருக்காக, இல்லசார்.. நாலு வருஷம் முந்தி இதே ஏரியாவுல ஓரு பொண்ணு ஆபீஸ் விட்டு லேட்டா வரும் போது அந்த பொண்ணை மடக்கி ரேப் பண்ணி கொன்னுட்டானுங்க.. அது வேற யாருமில்ல... என் லவ்வர் தான்.. இன்னொரு பொண்ணுக்கு அந்த மாதிரி ஆயிரகூடாதுன்னுதான்..” என்று கண்கள் பனிக்க சொல்லிவிட்டு..
‘ இதோ.. பங்க் பக்கத்துல வந்திட்டோம் சார்.. ” என்றபடி வண்டியை வேகமாய் தள்ளி சென்றான்.
நான் அவன் போவதையே பார்த்து கொண்டிருந்தேன்..
பின்குறிப்பு:
நண்பர் ராஜ் சொன்ன ஓரு சம்பவத்தின் தாக்கத்தில் எழுதியது.
பார்ததில் பிடித்தது..
மேலும் படிக்க.. இங்கே அழுத்தவும்
அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்றே தெரியவில்லை.. முடிந்த வரை எனது அலுவலகத்தில் எல்லோரும் அவரை அவாய்ட் செய்வார்கள், அல்லது கிண்டல் செய்வார்கள். அன்று நான் அலுவலகத்திலிருந்து கிளம்புவதற்கே ரொம்ப லேட்டாகிவிட்டது, கிளம்புகையில் பின்னாடி என் பேரை யாரோ கூப்பிடுவது போல இருக்க.. பார்த்தால் ரமேஷ்.
“சார்.. என்னை கொஞ்சம் போற வழியில டிராப் செய்றீங்களா..?”
என்று கேட்டபடி என் பதிலை எதிர்பாராமல் என் பைக்கின் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டான். எனக்கு கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது.. என்ன விதமான ஜந்து இவன்.. கொஞ்சம் கூட மற்றவர்களை பற்றி யோசிக்காமல்.. நடந்து கொள்கிறானே.. என்று மனதுக்குள் திட்டினாலும், நான் ஓன்றும் அவனுக்காக ஊரை சுற்ற் போவதில்லை. போகிற வழியில்தான் அவன் வீடு இருக்கிறது. அதனால் ஓன்றும் சொல்லாமல் வண்டியை கிளப்பினேன்.
அவனுக்கும் எனக்கும் பேசிக் கொள்வதற்கு எதுவும் இல்லாததால், அமைதியாகவே வண்டியோட்டி கொண்டிருந்தேன். என்னுடய் வீடு நகரத்துக்கு வெளியே இருக்கிறது.. அதற்கு முன்னால் ரமேஷின் வீடு.. இரவு லேட்டானால் பஸ், ஆட்டோ எதுவும் கிடைக்காது. மணி 11.30 மேல் ஆனதால் டிசம்பர் மாதத்து குளிர் முகத்திலடிக்க, கொஞ்சம் வேகமாகவே வண்டிய செலுத்தினேன்.
“ சார்.. சார்.. கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க சார்..” என்றான் ரமேஷ் பதட்டமாய்,
“ என்ன ரமேஷ்.. என்னாச்சு.. எதையாவது கீழே போட்டுட்டீங்களா..?” என்று கேட்டபடி வண்டியை நிறுத்தினேன். அவன் பதில் சொல்லாமல் வந்த திசை நோக்கி ஓடினான். அங்கே ஓரு பெண் ஸ்கூட்டியை பிடித்தபடி நிற்க, அவளுடன் அவன் எதையோ பேசி.. அவளுடய வண்டியை ஸ்டார்ட் செய்ய முயன்று கொண்டிருந்தான். நான் வண்டியை திருப்பி அவர்களை அடைந்து,
“என்ன ஆச்சு ரமேஷ்..?”
“ வண்டி ரிப்பேர் ஆயிருச்சு சார்..ஸ்டார்ட் ஆகலையாம்.. அதான் பாக்கறேன்..”
அப்போதுதான் நான் அந்த பெண்ணை பார்த்தேன். நல்ல உயரம், அளவான உடல், வண்டியை ரொம்ப தூரம் தள்ளிக் கொண்டு வந்திருக்க வேண்டும், முகத்தில் வேர்வை.., முகத்தில் கொஞ்சம் பயம் கலந்ததிருந்தது. இடுப்பில் கைவைத்து ரமேஷ் சைக்கிளுக்கு காத்தடிப்பதை போல எகிறி, எகிறி, கிக்கரை உதைப்பதை பார்த்து கொண்டிருந்தாள். எனககு அவனை பார்க்க ஆசச்ர்யமாகிவிட்டது. இவனா இப்படி உதவுகிறான்.. நாலு உதைக்கு ஓரு முறை அந்த பெண்ணை ஏறிட்டு பார்த்து கொண்டிருந்தான். ஓ..பிகரை மடிக்கிறதுக்காகவா..?
“எங்கே வேலை செய்றீங்க..? “ என்றேன்..
அவளின் பதட்டத்தை குறைப்பதற்காக, அவள் என்னுடய அலுவகத்தின் அருகே உள்ள ஓரு பிரபல கம்பெனியை சொல்ல..
“ எதுக்காக ராத்திரியில ரிஸ்க் எடுக்கிறீங்க.. கம்பெனி கேப் இருக்கில்ல..” என்று கேட்டேன்.
ரமேஷ் இன்னமும் காத்து அடித்து கொண்டிருந்தான்.. மனதுக்குள் சிரித்து கொண்டேன்.. என்ன ஓரு அர்பணிப்பு.. “ரமேஷ்.. வண்டியில பெட்ரோல் இருக்கா பாருங்க.. என்றேன்.”
ரமேஷ் வண்டியின் டாங்கை திற்ந்து பார்த்து, “ அட ஆமா சார்.. சுத்தமா டிரை..” என்று சொன்னவுடன். இங்கே பக்கதில நாலு கிலோ மீட்டருக்கு பங்க் எதும் கிடையாதே.. என்று தனக்குள் பேசியாடி யோசித்தவன் முகத்தில் பல்ப் எறிய, சற்று தூரத்தில் ஓரு பெட்டி கடை தெரிய, பரபர வென்று ஓடி திரும்பி வரும் பொது ஓரு மினரல் வாட்டர் பாட்டிலை வாங்கி வந்திருந்தான். “த..பார்றா..பிகருன்னதும்.. என்ன ஓரு பில்டப்பு..” இதே நமக்கு ஓண்ணுன்னா.. செய்வானா.. என்று யோசிக்கும் போதே..
“சார். கொஞ்சம் தண்ணி குடிங்க..,என்று அவன் கொஞ்சம் குடித்துவிட்டு, எனக்கும் குடித்துவிட்டு, மிச்சத்தை, அந்த பெண்ணிடம் கொடுத்து குடிக்க சொல்லிவிட்டு, பாட்டில் காலியானவுடன் சுத்தமாய் அதிலிருந்த தண்ணியை வெளியேற்றி, என்னுடய் வண்டியிலிருந்து என்னுடய் அனுமதியில்லாமலே..பெட்ரோல் டியூபை க்ழற்றி வண்டியிலிருந்து பெட்ரொலை அந்த பாட்டிலில் பிடித்து, அந்த் பெண்ணின் வண்டியில் ஊற்றி.. வண்டியை ஸ்டார்ட் செய்து, அவளிடம் கொடுத்து “பார்த்து போங்க.. வழியில எங்கயும் நிறுத்தாதீங்க.. பார்த்துபோ..” என்று கரிசனத்துடன் வழியனுப்பினான்.
எனக்குள் கோபமும், ஓரு பக்கம ரமேஷை பார்த்து நகக்லும் எட்டி பார்த்தது.. எதையும் காட்டிக் கொள்ளாமல் வண்டியை ஸ்டார்ட் செய்து கிளப்பினேன். ரமேஷும் ஏறிக் கொண்டான்..வழியில் எதுவுமே..பேசவில்லை.. நான் இந்த விஷயத்தை அதும் ரமேஷ் தன் கை காசிலிருந்து பத்து ரூபா செலவு செய்து ஓரு பெண்ணிக்கு கொடுத்ததை பரப்ப வேண்டும் என்று நினைத்தப்டியே.. வண்டியை ஓட்ட..அது..ஓரு ரெண்டு கிலோ மீட்டர் தாண்டியவுடன் திக்கி..திக்கி ஓடி நின்று போனது. என்னவென்று பார்த்தால் வண்டியில் பெட்ரோல் இல்லை.. நான் ரமேஷை பார்த்தேன்.. “ சாரி சார்..உங்க வண்டியில பெட்ரோல் இருக்கும்னு நினைச்சு புல்லா எடுத்திட்டேன்.. கொடுங்க சார் பகக்த்துல ஓரு கிலோ மீட்டர் தூரத்துல பங்க இருக்கு நான் தள்ளீகிட்டு வரேன்..” என்று என்னிடமிருந்து வண்டியை தள்ளி கொண்டு வர, அவனை திட்ட முடியாமல் அவனை ஆச்சர்யமாய் பார்த்தபடி..
“ ஏன்..ரமேஷ் உங்க கையிலேர்ந்து பத்து பைசா கூட செலவு பண்ணமாட்டீங்க.. இன்னைக்கு என்னடானா.. ஓரே தாராளமா பின்னி பெடலெடுக்கிறீங்க..? பிகர்ன்னதும் என்னமா உதவுறீங்க..?” என்றேன் கிண்டலாய்..
ரமேஷ் எதுவும் பேசாமல் கொஞ்சம் தூரம் வண்டியை தள்ளிக் கொண்டே.. “ பிகருக்காக, இல்லசார்.. நாலு வருஷம் முந்தி இதே ஏரியாவுல ஓரு பொண்ணு ஆபீஸ் விட்டு லேட்டா வரும் போது அந்த பொண்ணை மடக்கி ரேப் பண்ணி கொன்னுட்டானுங்க.. அது வேற யாருமில்ல... என் லவ்வர் தான்.. இன்னொரு பொண்ணுக்கு அந்த மாதிரி ஆயிரகூடாதுன்னுதான்..” என்று கண்கள் பனிக்க சொல்லிவிட்டு..
‘ இதோ.. பங்க் பக்கத்துல வந்திட்டோம் சார்.. ” என்றபடி வண்டியை வேகமாய் தள்ளி சென்றான்.
நான் அவன் போவதையே பார்த்து கொண்டிருந்தேன்..
பின்குறிப்பு:
நண்பர் ராஜ் சொன்ன ஓரு சம்பவத்தின் தாக்கத்தில் எழுதியது.
பார்ததில் பிடித்தது..
மேலும் படிக்க.. இங்கே அழுத்தவும்
Nov 19, 2008
தோஸ்தானா - திரை விமர்சனம்
ஹிந்தி திரையுலகின் முக்கிய நாயகர்கள் ஓரின சேர்கையாளர்களாய் நடிக்கும் படம் என்றதும் ஓரு ஆர்வம் ஏற்படத்தான் செய்தது. படத்திலும் அவர்கள் வீடூ வாடகைக்கு எடுப்பதற்காக, ஓரின சேர்கையாளர்களாய் நடிக்கிறார்கள்.
மியாமியில் ஆண் நார்சாய் பணிபுரியும் அபிஷேக், மாடல் போட்டோகிராபரான ஜான் அபிரஹாமும் வீடு தேடும் படலத்தின் போது பேச்சிலர்களுக்கு இடம் கிடையாது என்றதால், தாங்கள் இருவரும் ஓரின தம்பதிகள் என்று பொய் சொல்லி வீட்டை பிடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் அங்கேயே இருக்கும் வீட்டு ஓனரின் அண்ணன் மகளான பிரியங்காவுடன் தங்க வேண்டும் என்றதும், ஓருவரை ஓருவர் மாற்றி பிரியங்காவை இம்ப்ரஸ் செய்ய பார்கிறார்கள். அவர்களின் போட்டி பிரியங்காவை காதலிக்கும் வரை போகிறது.
பிரியங்காவின் பத்திரிக்கை ஆபிஸில் எடிட்டராக வரும் டைவர்ஸி பாபி டியோலுக்கும், பிரியங்காவுக்கும் காதல அரும்ப, அதை கெடுப்பதற்காக, மின்சார கனவு போல பாபி டியோலுக்கு, பிரியங்காவை இம்ப்ரஸ் செய்ய தப்பு தப்பான ஜடியாக்களை சொல்லி, அவரை ஓரு மாதிரி கோமாளீயாய் சித்தரிக்கிறார்கள்.. அப்படியும் அவர்களின் காதல் நிச்சயதார்த நிலைக்கு வர, அதை கெடுக்க பாபியின் ஐந்து வயது மகனுக்கு மூளை சலவை செய்து அவன் வேண்டாம் என்று சொன்னதால் பாபி திருமணத்தை நிறுத்துகிறார்.
பிரியங்காவிடம் தங்கள் காதலை சொல்ல, அதை அவர் ஏற்காமல் தன்னுடய வாழ்க்கை பாபியுடந்தான் என்று சொல்ல எவ்வாறு இரு நண்பர்கள் அவர்களை சேர்த்து வைக்கிறார்கள் என்பது தான் கதை.
ஓப்பனிங் சாங்கில் ஜான் தன் வேக்ஸ்ட் மார்புடன் ஷில்பாவுடன் போடு ஆட்டம் கண்களுக்கு குளிர்ச்சி. “எதற்காக நர்ஸ் வேலை.. அதே ஐந்து வருடங்களில் டாக்டருக்கு படித்திருக்கலாமே..?” என்று ஓரு பேஷண்ட் அபிஷேகிடம் கேட்க, அப்போது அங்கே வரும் ஓரு பெண் தனக்கு ஸ்பாஞ்ச் பாத் செய்ய கூப்பிட, அதை பேஷண்ட் புரிந்து கொள்வதும், ரெஸிடெண்ட் பர்மிட் வாங்குவதற்காக, செக்கிங் வந்திருக்கும் நேரத்தில், பிரியங்காவிட்ன் மேலாளர் அவரும் ஓரு ஓரின சேர்கையாளர் அவரும் வந்திருக்க, மேலாளரிடம் அபிஷேக் ஆண் போலவும், செக்கிங் செய்ய வந்த அதிகாரியிடம் பெண் போல ஓரே சமயத்தில் நடிப்பது சூப்பர். படத்தில் பிரியங்காவிடம் உள்ள கெமிஸ்டிரியை விட அபிஷேக்குக்கும், ஜானுக்கும் இடையில் உள்ள கெமிஸ்ட்ரி மிக் நன்றாக உள்ளது. அபிஷேகின் தாய் கிரன் கர், தன்னுடய மகன் ஓரு ஓரின சேர்கையாளன் என்று நினைத்து வருந்துவதும், வேறு வழியில்லாமல், மருகளுக்கு செய்ய வேண்டிய எல்லா சடங்குகளையும், ஜானுக்கு செய்து விட்டு போவதும், செம காமெடி.
அதே போல் அபிஷேக்கை, பெண்களின் பார்டிக்கு திருப்பிவிட்டுவிட்டு, ஜான் பிரியங்காவை ஓரு தனி இடத்துக்கு அழைத்து போய், ஓப்பன் தியேட்டரில் குச்,குச் ஓத்தஹே..படத்தை போட்டு , அதில் வரும் காட்சி போலவே சைமல்டேனியஸாய் ஜான் நடிப்பதும், ஆர்டிபீஸியல் மழை ஏற்படுத்தி, அதில் அவர்கள் நனைந்து ஆடுவது இனிமை.
முண்ணனி நடிகர்களின் தைரியம், அபிஷேக்கின் இயல்பான நடிப்பு, பிரியங்காவின் அழகின் எக்ஸிபிஷன், மிகையில்லாத நகைச்சுவை என்று ஓரு கேண்டிபிளாஸ் கதையை அளித்திருக்கிறார் இயக்குனர் தருண் மன்சுக்கானி. ஓரின சேர்கையாளர்கள் என்றாலே அருவருப்பு கொள்ளும் நம் ஆட்களை, உறுத்தாமல் அதனுள் ஓரு காமெடி கலந்த காதல் கதையை கொடுத்திருப்பதால் வெற்றி பெற்றிருக்கிறார் தயாரிப்பாளர் கரன் ஜோகர் என்றே சொல்ல வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)