”கொத்த பங்காரு லோகம்”ன்னா “புதிய தங்க உலகம்”ம்னு அர்த்தம்.. ஹாப்பி டேஸ் ஹீரோ..வருண் சந்தேஷ், புசு,புசுவென பசுங்கன்று குட்டி போல சுவேதா பிரசாத், அலட்டாமல் மனதை அள்ளும் பிரகாஷ்ராஜ், அமைதியான அழகான அம்மா ஜெயசுதா.. மைக்கேல்ஜே. மேயரின் இனிய இயல்பான இசை.. இவை எல்லாம் சேர்ந்து நம்மை புதிய் உலகுக்கு அழைத்து செல்ல முயன்றிருக்கிறார்கள்.
படத்தின் ஆரம்ப காட்சியில் ஓரு தாய் தன் குழந்தையை மேலே தூக்கி போட்டு பிடிப்பது போல் வரும் காட்சி அப்படியே ஃபிரிஸ் ஆக.. வாய்ஸ் ஓவரில்.. எல்லாருக்குமே மேலேர்ந்து கீழே விழுந்துவோமேன்னு நினைச்சாலே பயந்துடுவாங்க.. ஆனா குழந்தை மட்டும் தான் சிரிக்கும், ஏன்னா.. அதுக்கு தன் அம்மா நம்மை பிடிச்சிருவாங்கன்னு ஓரு நம்பிக்கை, அது போல குழந்தையை நாம விடமாட்டோம்னு அம்மாவோட நம்பிக்கை.. இப்படித்தான் என் குழந்தைய வளர்த்தேன்னு ஓரு ஜெயசுதாவோட தன் நினைவுகளை பின்னோக்கி போக..
ஸ்கூல் முடித்து ரெஸிடென்ஸியல் காலேஜில் படிக்கும் வருண், அப்பா, அம்மாவின் கெடுபிடிகளோடு வளர்ந்த சுவேதா இருவரும் ஓரே காலேஜில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறார்கள், வேறென்ன அடுத்தது காதல் தானே.. ஆம் காதல் தான் வருகிறது.. அனால் அவர்களுக்குள் ஓரு குழப்பம் அவர்களூக்குள் இருப்பது காதல்தானா என்ற கேள்வி கேட்டு ஓரு வாரம் காலேஜ் லீவில் ஓருவர் நினைவு ஓருவருக்கு அதிகம் வந்தால் காதல்..இல்லையேல் இன்பாச்சுவேசன் என்று முடிவு செய்து கிளம்புகின்றனர்.. இதை பற்றி நினைக்க ஆரம்பித்த உடனேயே அவர்க்ள இருவரும் கையில் கிடைத்த இடத்தில் எல்லாம் நம்பர்களாய் எழுத ஆரம்பிப்பது ஓரு இன்ப அவஸ்தை பட்டவர்களுக்கே புரியும்..
தன் மகன் மீது அதிக பாசம் வைத்திருக்கும் அம்மா.., அதை விட அன்பும் பாசமும் வைத்திருக்கும் அப்பா பிரகாஷ்ராஜ்.. மனிதர் சும்மா கேக் வாக் செய்திருக்கிறார்.. இவரை விட்டால் வேறு யாரையும் அந்த இடத்தில் நினைத்து பார்க்க முடியவில்லை..ஓரு சமயம் மகனுக்கு காலேஜ் போவதற்கு முன்னாலேயே வாட்ச் ஓன்றை பரிச்ளிக்க.. அதற்கு மகன்.. “நான் பாஸ் பண்ணிட்டு வாங்கிக்கிறேன்” என்று சொல்ல.. “நீ கண்டிப்பாய் பாஸாவாய்.. அப்படியே பாஸாகவிட்டாலும் நீ என் மகன் உனக்கு வாங்கிதராமல் யாருக்கு வாங்கி தரப்போறேன்..அனா எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு” என்று சொல்லி கையில் வாட்சை கட்டிவிடுவதும்.. தன் மகனுக்கு அவனுடய காதலினால் பிரச்சனை என்றதும், அதை பற்றி கேட்க நினைக்க.. மகனும் மருக.. தான் தன் தந்தை தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாறறவில்லை என்று அவர் கொடுத்த வாட்சை திரும்பி கொடுக்க.. அதை கையில் பார்த்தபடி ஓடுகிற் ரயிலில் இருந்து மகன் போவதை பார்க்கும் பார்வை இருக்கிறது.. ப்ரகாஷ் ராஜ் சிம்பிளி சூப்பர்ப்..
ஜாடிகேத்த மூடி போல ஜெயசுதா.. தன் மகன் தன்னை திட்டிவிட்டான், அவனுக்கு ஏதோ பிரச்சனை சொல்ல மாட்டேங்கிறான் என்று கணவனிடம் பெருமுவதும், அத்ற்கு பிரகாஷ்.. அவனுக்கு பிரச்சனை என்றால் கண்டிப்பாய் சொல்லுவான்.. அப்படி சொல்ல தோணாம நாம கேட்கிறதுனால அவன் நம்ம கிட்ட பொய் சொல்லிட்டான்னா அதைவிட நாம அவன் மேல வச்சிருக்கிற நம்பிக்கை கெடுத்தும் என்று சொல்லும்போதும், அவருக்கும்,பிரகாசுக்கும் உள்ள காதலை, உற்வுக்கார பெண்ணிடம் சொல்லதும் .. அநத காதலை அனுபவித்தவர்களூக்கே தெரியும்..புரியும்..
ஆங்காங்கே வரும் வசனங்களில் கூர்மையும், இளமையும்.. சும்மா பின்னி பெடலெடுக்கிறார் இயக்குனர் ஸ்ரீகாந்த அடாலா..
எங்கேயிருந்து பிடித்தார்கள் இந்த கன்றுக்குட்டியை..ப்தினேழு வயதாம்.. பார்த்தாலே கன்னத்தை பிடித்து கிள்ள வேண்டுமென்ற தோற்றம்.. செம க்யூட்..அதிலும் அவர் அவ்வப்போது ஓரு விதமான் மாடுலேசனில் சில வசனங்களை ரிபிட் செய்யும் இடங்களில் அவரை ரசிக்காமல் இருக்க முடியாது..
கல்லூரி பிரின்ஸிபல் ப்ரமானந்தம், ஹாஸ்டல் வார்டன்.. சுவேதாவின் அப்பா பிரசாத, அவரின் சிடு சிடு மனைவி, மாணவர்களின் ஓரு மித்த நண்பனாய் வரும் லெக்சரர்.. சுவேதாவின் மாமா.எல்லாமே நினைவில் நிற்க கூடிய கேரக்டர்கள்..ஆயினும் ஆங்காங்கேயும், க்ளைமாக்ஸிலும் கொஞ்சம் சினிமாத்தனம் தெரிந்தாலும்.. மீண்டும் கொஞ்ச நாட்கள் கழித்து இனிமையான ஓரு அடிதடி மசாலா இல்லாத இளமையான குடும்ப காதல் கதை...டோண்ட் மிஸ்..
டிஸ்கி: தெலுங்கில் சமீபத்திய சூப்பர் ஹிட் இதுதான்.. தீபாவளிக்கு ரிலீஸான படங்கள் எல்லாம் புஸ்ஸாகிவிட்டது..
Post a Comment
11 comments:
நல்ல விமர்சனம் !
//நல்ல விமர்சனம் !//
படம் பாருங்கள் ஜூர்கேன்.. காஸினோவில் ஜருகுதுந்தி... மிஸ் செய்யக்கா..
தீபாவளி ரிலீஸ் தமிழ் படங்களுக்கு விமர்சனம் எழுதி முடிஞ்சுருச்சுன்னா, தெலுங்கு படங்களையும் விடுறதில்லையா .... ???
அன்னி தெலுகு பிக்சர் கி review ராய்ஸ்துன்னாரெ....மீரு மனவாடா?
//புசு,புசுவென பசுங்கன்று குட்டி போல சுவேதா பிரசாத்//
இலான்டே குட்டியன்டே நாகு சால இஷ்டம்!....நேனு பசுங்கன்று குட்டி குறின்செ செப்புதா...மீரு வேறு ஏதெய்னா குட்டி குறின்சு தப்பர்த்தம் சேஸ்கொக்கு, ப்ளீஸ்.
நேனு சால மன்சுவாடு!
//தீபாவளி ரிலீஸ் தமிழ் படங்களுக்கு விமர்சனம் எழுதி முடிஞ்சுருச்சுன்னா, தெலுங்கு படங்களையும் விடுறதில்லையா .... ???//
நமக்கு லேங்குவேஜ் எல்லாம் ஓரு பிரச்சனையே கிடையாது.. இன்னும் ரெண்டு தெலுங்கு படம், மூணு இந்தி படம், ஓரு கொரியன், இரண்டு போலந்து படத்தை பத்தி இப்பதிக்கி எழுத வேண்டியிருக்குது.. டைம் கிடைக்கில..
//இலான்டே குட்டியன்டே நாகு சால இஷ்டம்!....//
அட்லனா..பயின உன்ன ஆ குட்டி ஓத்தா மீக்கு.. காவாலண்டே தீஸ்கோண்டி.. நாக் கேண்டி.. பாபு.. அம்மாயி சால ஹாட் பாபு..
//அன்னி தெலுகு பிக்சர் கி review ராய்ஸ்துன்னாரெ....மீரு மனவாடா?//
நேனு அந்தரிவாடு..
//அட்லனா..பயின உன்ன ஆ குட்டி ஓத்தா மீக்கு.. //
சொற்களில் கவனம்....
////அட்லனா..பயின உன்ன ஆ குட்டி ஓத்தா மீக்கு.. //
சொற்களில் கவனம்....//
நன்றி அனானி.. ஆனால் ஓன்று அதை தமிழில் அர்த்தம் செய்யக்கூடாது.. தெலுங்கில் படிக்க வேண்டும்..
தெலுங்கில் பூவுக்கு சொல்லும் வார்த்தை நமக்கு ஓரு கெட்ட வார்த்தை..
அதனால படிச்சுட்டு ஆராயபடாது...
நன்றி அனானி.
naan indru thaan padam paarthen.
unga review super
thanks
Post a Comment