லாஜிக் பார்காமல் விறுவிறுப்பான காமெடி கலந்த ஓரு திரில்லரை பார்க்க வேண்டுமா.? அதற்கு ரெடி என்றால் இதோ “யுவதா”. ஹாப்பி டேஸில் நடித்த பலபேர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்..
நண்பர்கள் என்றால் உயிராய் நினைக்கும் வீரபாபு..என்கிற பாபு.. அமெரிக்கா ஓன்றையே குறிக்கோளாய் கொண்டிருக்கும் அஜய்.. போலீஸ் வேலைக்கு தன்னை தயார் படுத்தி கொண்டு செக்யூரிடியாய் வேலை பார்க்கும் கிரண்.. தெலுங்கு சினிமாவை புரட்டி போட்டே தீருவேன் என்ற சபதத்துடன் இயக்குனரகும் கனவுடன் சுப்பு. ராஜ் காதலிக்கும் அவர்களின் வீட்டு ஓனரின் மக்ள்.. என்று துள்ளும் இளமை பட்டாளம்.
பாபுவுக்கும் விசாலாட்சிக்கும் காதல் மலருகிறது. எப்படி மலருகிறது என்றெல்லாம் கேட்க கூடாது.. அஜயின் காதலியும் விசாலாட்சியும் மருத்துவ கல்லூரி மாணவர்கள்.. இப்படியாய் கதை போக..உதவி இயக்குனர் சுப்புவுக்கு ஹீரோவுக்கும், வில்லனுக்கும் நடந்த சண்டையின் போது மண்டையில் அடிபட, ஐந்து லட்ச்ம் இருந்தால் தான் பிழைபார் என்றதும் வேறு வழியில்லாம்ல் ஓரு கந்து வட்டி காரனிடம் கடன் வாங்குகிறார்கள்.. கடனை திரும்ப குடுக்க முடியாமல் அவர்கள் திண்டாட.. இரண்டு நாட்களில் கொடுக்கவில்லையென்றால் எல்லோரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டிவிட்டு போகிறான் கந்து வட்டி, என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் மூவரும் ஏ.டி.எம் செண்டரில் பணம் வைக்கும் செக்யூரிட்டி சர்வீஸிலிருந்து பணம் கொள்ளையடிக்க திட்டமிட, ஆனால் இவர்கள் கொள்ளை அடிக்கும் முன்பே, பணம் கொள்ளையடிக்க பட்டு, அஜயும், பாபு கைதாகிறார்கள். அவர்கள் பிரச்சனையிலிருது மீண்டார்களா.. இல்லையா என்பதை லாஜிக் இல்லாமல் விறு விறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
அதிபுத்திசாலியான் டி.சிபி, அஜயின் காதலியின் அப்பா, ஜெயிலில் சிம்ரன் ரசிகராக தூள் பரத்தும் சூப்பர் தாதா ஷாயாஜி ஷிண்டே.. என்று பட நெடுகிலும் காமெடி பின்னி பெடலெடுக்கிறார்கள்.. அதிலும் அந்த சோனுசேட்.."ஹைதரபாத்கா பாட்ஷா" சூப்பரோ சூப்பர். படத்தில் ஹாப்பிடேஸ் ஆர்டிஸ்டுகள் பலர் நடித்திருப்பதால் பாடல்களில் கூட அப்படியே அந்த நெடி இருக்கிறது. ஆனாலும் பரவாயில்லை. மணிசர்மா.. தெலுங்கில் சரோஜா சரியாய் போகவில்லை.. ஆனால் இந்த படம் நிச்சயமாய் போகும்.. ஏனென்றால் சரியான மசாலா கலவையில் கலந்தடிக்கபட்ட ஹைதராபதி பிரியாணி.. “யுவதா”
Post a Comment
2 comments:
thanks.
சென்னைலோ ஜருகுதுந்தா....?
//சென்னைலோ ஜருகுதுந்தா....?//
அவுனண்டி..காஸினோலோ ஜருகுதுந்தி..ஈவினிங், ராத்திரி ஷோலோ ஜருகுதுந்தி.. தப்பக சூடண்டி..இப்புடே சூடண்டி.."யுவதா"
Post a Comment