சமீபத்தில் நடந்த ---வ்ர் ஜெயந்தி அன்று மாலை போட்டுவிட்டு அதற்கான போஸ்டரில் டாக்டர் அம்பேத்கார் சட்டகல்லூரி பெயர் போடாமல் விட்டுவிட்டதால் ஆரம்பித்தது பிரச்சனை.. --வர் ஜெயந்தி விழாவிற்கு அடித்த போஸ்டரில், தாழ்த்தப்பட்டவருக்க்காக போராடிய ஓருவரின் பெயரை எதற்காக போடவேண்டுமென்பது இவர்களின் வாதம். அதெல்லாம் ஓண்ணுமில்ல அவங்களுக்கு எப்பவுமே நம்மள கண்டா இளப்பம்தான் என்கிறார்கள்.. வழக்கமாகவே ---வர் இனத்தை சேர்தவர்களுக்கு எப்போதுமே..தாழ்த்தபட்ட இனத்தவர்களை கண்டால் ஆகாது.. தென் மாவட்டங்களில் இது கண்கூடாக தெரிந்த உண்மை.. அதே அடக்குமுறை இங்கேயும் தொடர்கிறார்கள்.இல்லை என்று எந்த --வர் இனத்தை சார்தவர்கள் நெஞ்சை தொட்டு சொல்லட்டும். இப்போது அது திரும்பி அவர்கள் முறையாயிருக்கிறது..
அடிபட்டவர்களும் ஓன்றும் லேசு பட்டவர்கள் அல்ல.. கையில் கத்தியுடன் ஓடி அவர்களை தாக்க முயற்சி செய்தவன் தான்.. என்ன அவன் அடிப்பட்டு விட்டான் என்பதால் அவன் மேல் பரிதாபம் கொள்ள வேண்டியதாகிவிட்டது..
பொதுவாகவே.. இவர்களுக்கு அடிப்பது, வெட்டுவது என்பதுதான் வீரம் என்று சொல்லிக் கொடுத்து வளர்க்க படுகிறார்கள். நம் திரையுலக ஜாம்பவான்களும் சும்மா ஏத்திவிட்டு, அவர்களை வீரர்களாய் காட்டுகிறார்கள்.. என் நண்பர் ஓருவர் கமலின் படத்தின் டைட்டிலை பற்றி சொல்லி ”கமலே எங்க ஜாதி பேர வச்சித்தான் படமெடுக்கிறாரு.. வேணுமின்னா..வேற சாதி பய பேர வச்சி எடுக்க சொல்லேன்.. படம் ஊத்திகிடுமில்ல..”
“ அட..முட்டாளே.. உங்க சாதியிலதாண்டா முட்ட்...கு தனமா எதுக்கெடுத்தாலும் அரிவாளல தூக்கிட்டு முன் பின் யோசிக்காம வீரம்னு சொல்லிகிட்டு செய்யறதுக்கு திரியிரீங்க.. அதனால்தான் உங்கள் பேரை வச்சி படமெடுத்தாரு..நீங்க இப்படி செய்ய, செய்ய, நி அவன செய்ய, அவன் உன்னைய செய்யன்னு கிளம்பிருவீங்கன்னுதானே.. க்ளைமாக்ஸிலே உங்களை திருந்த சொல்லுறாருடா.. அது சரி.. அது புரிஞ்சா நீயேன் இப்படி பேசப் போறே?”
நான் எந்த ஜாதிய பற்றி உயர்வாகவோ.. தாழ்வாகவோ எழுத வேண்டுமென்று எழுதவில்லை.. சொல்லப்போனால் இந்த இந்த வன்முறைக்கான காரணம் ஜாதி வெறி என்பதை நாம் என்னதான் மீடியாவை கண்ட்ரோல் செய்து வைத்தாலும் தெரியத்தான் வருகிறது.
போலீஸை விடுங்கள் பொதுமக்கள் கூட வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்களே.. என்று பலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். நம் மக்களின் ஆதார குணமே வேடிக்கை பார்பதுதான். விபத்தில் அடிபட்டவருக்கே உதவுவதற்கு பதிலாய் வேடிக்கை பார்பவர்கள் நம் மக்கள்.
இந்த வன்முறையை பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு தான் போலீஸார் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லையோ என்று தோன்றுகிறது. இதன் பிண்ணனியில் பல அரசியல் ஜாதி கட்சிகளும், ஜாதிக்கார போலீஸ் அதிகாரிகளும் கண்டிப்பாய் இருக்கிறார்கள்.. என்னதான் விசாரணை செய்தாலும்அந்த உண்மை வெளிவர போவதில்லை..
நான் அந்த விடியோவை இன்றுதான் பார்த்தேன்.. ஆனால் தினசரிகளில் வந்த புகைப்படங்களீல் தெரிந்த வன்முறையே என்ன நடந்திருக்குமென சொல்லியது.. ஜாதி வெறி, படித்தவர்களிடையே வளர்வது, கேன்சர் போல, நாட்டின் ஓற்றுமையை கெடுத்து குட்டிசுவராக்கிவிடும்.. இதை வளர விடாமல் தடுப்பது நம் ஓவ்வொருவருடய கடமையே..
டிஸ்கி..
என்னுடய் நண்பர் ஓருவர் கேரளாவிலிருந்து போன் செய்தார்..
“ என்ன சார்.. சென்னையில என்ன பிரச்சன..?”
“ லா காலேஜுக்குள்ள இரண்டு குரூபுக்குள்ள சண்ட கொஞ்சம் ஓவராகி மீடியாவில வந்திருச்சு. மேட்டர் பெரிச்சாயிருச்சு..”
“ அது சரி விடுங்க.. அடிபட்டது எங்க ஆளுங்க சார்..அடிச்சா திரும்பி அடிகிரவந்தான் ....ன்” என்றார் என் வக்கீல் நண்பர்..
ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்கள திருத்த முடியாதுய்யா.....
டிஸ்கி 2
இந்த விஷயத்தில் போலீஸார் புகுந்து த்டுப்பதற்காக, அடித்து விரட்டியிருந்தால்.. போலீஸ் அராஜகம் என்று இதே பத்திரிக்கைகாரர்கள் மாணவர்களுக்கு ஆதரவாய் பேசியிருப்பீங்க.. எது நடந்தாலும் எங்க தலதான் உருளுது.. என்ன செய்ய நாங்க வாங்கி வந்த வரம் அப்படின்னு புலம்புனாரு எனது போலீஸ் உயரதிகாரி நண்பர் ஓருவர்.. அதுவும் சரிதான்
Post a Comment
12 comments:
சரியான கண்ணோட்டத்தில் சொல்லியிருக்கிறீர்கள். தலைநகர் சென்னையிலே இப்படின்னா, மற்ற இடங்களில்???????????????!!!!!!!!!!!!
போங்கடா....போய் புள்ளைங்களை படிக்க வைங்கடா!
மக்களுக்காக உழைத்தத் தலைவர்களை சாதிய குறியீடாக மாற்றுவது அந்தத் தலைவர்களை இழிவுபடுத்தும் செயலாகும்.
உட்கார்ந்து பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனையை படித்த, படிக்கும் முட்டாள்கள் வன்முறையாக மாற்றியதை யாராலும் மன்னிக்க முடியாது.
காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களுக்காக அல்ல, பொது மக்களுக்காக அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார்கள்.
//சரியான கண்ணோட்டத்தில் சொல்லியிருக்கிறீர்கள். தலைநகர் சென்னையிலே இப்படின்னா, மற்ற இடங்களில்???????????????!!!!!!!!!!!!//
அத நினைதாலே பயமாய் இருக்கிறது..
//போங்கடா....போய் புள்ளைங்களை படிக்க வைங்கடா!//
படிக்க வந்தவர்கள்தான் இப்படி பண்ணுகிறார்கள் ராஜ்
//உட்கார்ந்து பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனையை படித்த, படிக்கும் முட்டாள்கள் வன்முறையாக மாற்றியதை யாராலும் மன்னிக்க முடியாது.//
ரிப்பீஇட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்
நானும் இதை பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்.... தங்கள் கருத்தை சொல்லவும்
//போங்கடா....போய் புள்ளைங்களை படிக்க வைங்கடா!//
அப்போ சட்டக் கல்லூரி கல்வி கற்கும் இடமில்லையா?
அடக் கடவுளே!!!
வீரம் பற்றிய அறிவு சிறிதும் இன்றி காட்டுமிராண்டிகளாக நடந்துகொண்ட அந்த மாணவர்கள் நம்பிக்கை தன்னுடைய சாதிக்காரர்கள் தங்களை கைவிடமாட்டார்கள் என்பதே மனத்தைரியத்தை கொடுத்திடும். மனிதனாய் சிந்திக்க தெரியாத அறிவிலிகள். இதில் குற்றம் சொல்லப்படவேண்டியவர்கள் சம்மந்தப்பட்ட சாதிக்கட்சித் தலைவர்கள்தான். ஒழுக்கம் பற்றிய எந்த விசயங்களும் அவர்களால் அவர்களை பெற்றவர்களால் சரியான விதத்தில் போதிக்கப்படவில்லை என்பதே நிதர்சன்ம்.
//நானும் இதை பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்.... தங்கள் கருத்தை சொல்லவு//
கண்டிப்பா நைனா..ராவுல போய் சுகுரா பட்சிட்டு எளுதிர்ரேன்
நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
//அப்போ சட்டக் கல்லூரி கல்வி கற்கும் இடமில்லையா?
அடக் கடவுளே!!!//
பாத்தாலே தெரியலயா..? என்ன கொடுமை சார் இது..இது தெரியாம ஓரு இந்தியன். நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
//இதில் குற்றம் சொல்லப்படவேண்டியவர்கள் சம்மந்தப்பட்ட சாதிக்கட்சித் தலைவர்கள்தான். ஒழுக்கம் பற்றிய எந்த விசயங்களும் அவர்களால் அவர்களை பெற்றவர்களால் சரியான விதத்தில் போதிக்கப்படவில்லை என்பதே நிதர்சன்ம்.//
யார குத்தம் சொல்ல.. உங்குத்தமா.. என் குத்தமா.. யாரை நானும் குத்தம் சொல்ல..?
Post a Comment