தோஸ்தானா - திரை விமர்சனம்

ஹிந்தி திரையுலகின் முக்கிய நாயகர்கள் ஓரின சேர்கையாளர்களாய் நடிக்கும் படம் என்றதும் ஓரு ஆர்வம் ஏற்படத்தான் செய்தது. படத்திலும் அவர்கள் வீடூ வாடகைக்கு எடுப்பதற்காக, ஓரின சேர்கையாளர்களாய் நடிக்கிறார்கள்.
மியாமியில் ஆண் நார்சாய் பணிபுரியும் அபிஷேக், மாடல் போட்டோகிராபரான ஜான் அபிரஹாமும் வீடு தேடும் படலத்தின் போது பேச்சிலர்களுக்கு இடம் கிடையாது என்றதால், தாங்கள் இருவரும் ஓரின தம்பதிகள் என்று பொய் சொல்லி வீட்டை பிடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் அங்கேயே இருக்கும் வீட்டு ஓனரின் அண்ணன் மகளான பிரியங்காவுடன் தங்க வேண்டும் என்றதும், ஓருவரை ஓருவர் மாற்றி பிரியங்காவை இம்ப்ரஸ் செய்ய பார்கிறார்கள். அவர்களின் போட்டி பிரியங்காவை காதலிக்கும் வரை போகிறது.
பிரியங்காவின் பத்திரிக்கை ஆபிஸில் எடிட்டராக வரும் டைவர்ஸி பாபி டியோலுக்கும், பிரியங்காவுக்கும் காதல அரும்ப, அதை கெடுப்பதற்காக, மின்சார கனவு போல பாபி டியோலுக்கு, பிரியங்காவை இம்ப்ரஸ் செய்ய தப்பு தப்பான ஜடியாக்களை சொல்லி, அவரை ஓரு மாதிரி கோமாளீயாய் சித்தரிக்கிறார்கள்.. அப்படியும் அவர்களின் காதல் நிச்சயதார்த நிலைக்கு வர, அதை கெடுக்க பாபியின் ஐந்து வயது மகனுக்கு மூளை சலவை செய்து அவன் வேண்டாம் என்று சொன்னதால் பாபி திருமணத்தை நிறுத்துகிறார்.
பிரியங்காவிடம் தங்கள் காதலை சொல்ல, அதை அவர் ஏற்காமல் தன்னுடய வாழ்க்கை பாபியுடந்தான் என்று சொல்ல எவ்வாறு இரு நண்பர்கள் அவர்களை சேர்த்து வைக்கிறார்கள் என்பது தான் கதை.
ஓப்பனிங் சாங்கில் ஜான் தன் வேக்ஸ்ட் மார்புடன் ஷில்பாவுடன் போடு ஆட்டம் கண்களுக்கு குளிர்ச்சி. “எதற்காக நர்ஸ் வேலை.. அதே ஐந்து வருடங்களில் டாக்டருக்கு படித்திருக்கலாமே..?” என்று ஓரு பேஷண்ட் அபிஷேகிடம் கேட்க, அப்போது அங்கே வரும் ஓரு பெண் தனக்கு ஸ்பாஞ்ச் பாத் செய்ய கூப்பிட, அதை பேஷண்ட் புரிந்து கொள்வதும், ரெஸிடெண்ட் பர்மிட் வாங்குவதற்காக, செக்கிங் வந்திருக்கும் நேரத்தில், பிரியங்காவிட்ன் மேலாளர் அவரும் ஓரு ஓரின சேர்கையாளர் அவரும் வந்திருக்க, மேலாளரிடம் அபிஷேக் ஆண் போலவும், செக்கிங் செய்ய வந்த அதிகாரியிடம் பெண் போல ஓரே சமயத்தில் நடிப்பது சூப்பர். படத்தில் பிரியங்காவிடம் உள்ள கெமிஸ்டிரியை விட அபிஷேக்குக்கும், ஜானுக்கும் இடையில் உள்ள கெமிஸ்ட்ரி மிக் நன்றாக உள்ளது. அபிஷேகின் தாய் கிரன் கர், தன்னுடய மகன் ஓரு ஓரின சேர்கையாளன் என்று நினைத்து வருந்துவதும், வேறு வழியில்லாமல், மருகளுக்கு செய்ய வேண்டிய எல்லா சடங்குகளையும், ஜானுக்கு செய்து விட்டு போவதும், செம காமெடி.

அதே போல் அபிஷேக்கை, பெண்களின் பார்டிக்கு திருப்பிவிட்டுவிட்டு, ஜான் பிரியங்காவை ஓரு தனி இடத்துக்கு அழைத்து போய், ஓப்பன் தியேட்டரில் குச்,குச் ஓத்தஹே..படத்தை போட்டு , அதில் வரும் காட்சி போலவே சைமல்டேனியஸாய் ஜான் நடிப்பதும், ஆர்டிபீஸியல் மழை ஏற்படுத்தி, அதில் அவர்கள் நனைந்து ஆடுவது இனிமை.

முண்ணனி நடிகர்களின் தைரியம், அபிஷேக்கின் இயல்பான நடிப்பு, பிரியங்காவின் அழகின் எக்ஸிபிஷன், மிகையில்லாத நகைச்சுவை என்று ஓரு கேண்டிபிளாஸ் கதையை அளித்திருக்கிறார் இயக்குனர் தருண் மன்சுக்கானி. ஓரின சேர்கையாளர்கள் என்றாலே அருவருப்பு கொள்ளும் நம் ஆட்களை, உறுத்தாமல் அதனுள் ஓரு காமெடி கலந்த காதல் கதையை கொடுத்திருப்பதால் வெற்றி பெற்றிருக்கிறார் தயாரிப்பாளர் கரன் ஜோகர் என்றே சொல்ல வேண்டும்.
Comments
kaveriganesh
இது என்ன சாமியோவ்.... திருத்துங்கப்பு....
படம், நல்ல இருக்கும் என்று நினைக்கிறேன்; பார்க்கிறேனே...
:) :)
திருத்திபுட்டேன் வாத்தியாரே.. படம் நல்லாத்தானிருக்கு சார்.
பதிவுலகில் வாத்தியார் என்றால் அது க்ளாஸ் ரூம் வைத்து நடத்தும் நமது மரியாதைக்குரிய திரு. சுப்பையா அவர்கள் தான்....
நான் என்றும் உங்களில் ஒருவன்.
:) :)
வேற வேலை!!!!!!!!!!!
சரி பாஸ்..
நன்றி அக்னி பார்வை.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றாக புரியும், பேச தான் ஆள் கிடைக்கல.. நான் தெலுங்கு பேச கத்துக்கிட்டதே சினிமா பார்த்துதான்..அத பேசறதுக்கு ஆள் இருந்ததால இம்ப்ரூவ் ஆயிருச்சு.
நான் பெயரிலேயே சினிமா விரும்பி! ஆனாலும் இந்தப் படத்துக்கு பில்டப் ஜாஸ்தி, மேட்டர் கம்மி ஐயா! அபிஷேக் பச்சனும் ஜான் ஆபிரகாமும் காதலிப்பது போல் நடிக்கும் காட்சிகளில் கிச்சுக்கிச்சு மூட்டினால் கூட சிரிப்பு வரவில்லை! கிரண் தாகூர் சிங் கேர் , ஜானை மருமகளாக ஏற்றுக் கொள்ளும் காட்சியும், போமன் இரானி அடிக்கும் கூத்தும் டிட்டோ! படத்தில் பாதிக்கு மேல் வசனம் ஆங்கிலத்தில் ( ஒரு முழுப் பாட்டும் ஆங்கிலத்தில் என்று ஞாபகம்!) . படத்தின் ஒரே மிகப் பெரிய ஆறுதல், படம் முழுக்க இளமைத் துள்ளலுடன் வித விதமான (நம்ப ஊர் பாஷையில் சொல்வதென்றால் பாந்தமான ) உடைகளில் வந்து அசத்தும் 'கவர்ச்சிப் புயல்' பிரியங்கா சோப்ராதான் ! She has never been so delectably glamourous before என்றால் அது மிகையாகாது! ஃபரா கான் நடனம் அமைத்த 'தேசி கேர்ள்' உம் பிறர் நடன அமைப்பில் 'மா தா லாட்லா பிகட் கயா ' வும் பாடல், நடனம் இரண்டுமே அம்சம்! எல்லாம் சரி, gay couple என்று பொய் சர்டிபிகேட் கொடுத்ததற்காக இரண்டு ஹீரோக்களையும் கடைசியில் உள்ளே தள்ளியிருக்க வேண்டாமோ?!
நன்றி!
சினிமா விரும்பி

//குச்,குச் ஓத்தஹே..//
அது சரி..., இப்பல்லாம் நெறய கெட்ட வார்த்தை பேச ஆரம்பிச்சிட்டீங்களே..!!! :-))))
அது ‘குச்,குச் ஹோத்தா ஹே’.. இல்ல??!!!