அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்றே தெரியவில்லை.. முடிந்த வரை எனது அலுவலகத்தில் எல்லோரும் அவரை அவாய்ட் செய்வார்கள், அல்லது கிண்டல் செய்வார்கள். அன்று நான் அலுவலகத்திலிருந்து கிளம்புவதற்கே ரொம்ப லேட்டாகிவிட்டது, கிளம்புகையில் பின்னாடி என் பேரை யாரோ கூப்பிடுவது போல இருக்க.. பார்த்தால் ரமேஷ்.
“சார்.. என்னை கொஞ்சம் போற வழியில டிராப் செய்றீங்களா..?”
என்று கேட்டபடி என் பதிலை எதிர்பாராமல் என் பைக்கின் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டான். எனக்கு கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது.. என்ன விதமான ஜந்து இவன்.. கொஞ்சம் கூட மற்றவர்களை பற்றி யோசிக்காமல்.. நடந்து கொள்கிறானே.. என்று மனதுக்குள் திட்டினாலும், நான் ஓன்றும் அவனுக்காக ஊரை சுற்ற் போவதில்லை. போகிற வழியில்தான் அவன் வீடு இருக்கிறது. அதனால் ஓன்றும் சொல்லாமல் வண்டியை கிளப்பினேன்.
அவனுக்கும் எனக்கும் பேசிக் கொள்வதற்கு எதுவும் இல்லாததால், அமைதியாகவே வண்டியோட்டி கொண்டிருந்தேன். என்னுடய் வீடு நகரத்துக்கு வெளியே இருக்கிறது.. அதற்கு முன்னால் ரமேஷின் வீடு.. இரவு லேட்டானால் பஸ், ஆட்டோ எதுவும் கிடைக்காது. மணி 11.30 மேல் ஆனதால் டிசம்பர் மாதத்து குளிர் முகத்திலடிக்க, கொஞ்சம் வேகமாகவே வண்டிய செலுத்தினேன்.
“ சார்.. சார்.. கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க சார்..” என்றான் ரமேஷ் பதட்டமாய்,
“ என்ன ரமேஷ்.. என்னாச்சு.. எதையாவது கீழே போட்டுட்டீங்களா..?” என்று கேட்டபடி வண்டியை நிறுத்தினேன். அவன் பதில் சொல்லாமல் வந்த திசை நோக்கி ஓடினான். அங்கே ஓரு பெண் ஸ்கூட்டியை பிடித்தபடி நிற்க, அவளுடன் அவன் எதையோ பேசி.. அவளுடய வண்டியை ஸ்டார்ட் செய்ய முயன்று கொண்டிருந்தான். நான் வண்டியை திருப்பி அவர்களை அடைந்து,
“என்ன ஆச்சு ரமேஷ்..?”
“ வண்டி ரிப்பேர் ஆயிருச்சு சார்..ஸ்டார்ட் ஆகலையாம்.. அதான் பாக்கறேன்..”
அப்போதுதான் நான் அந்த பெண்ணை பார்த்தேன். நல்ல உயரம், அளவான உடல், வண்டியை ரொம்ப தூரம் தள்ளிக் கொண்டு வந்திருக்க வேண்டும், முகத்தில் வேர்வை.., முகத்தில் கொஞ்சம் பயம் கலந்ததிருந்தது. இடுப்பில் கைவைத்து ரமேஷ் சைக்கிளுக்கு காத்தடிப்பதை போல எகிறி, எகிறி, கிக்கரை உதைப்பதை பார்த்து கொண்டிருந்தாள். எனககு அவனை பார்க்க ஆசச்ர்யமாகிவிட்டது. இவனா இப்படி உதவுகிறான்.. நாலு உதைக்கு ஓரு முறை அந்த பெண்ணை ஏறிட்டு பார்த்து கொண்டிருந்தான். ஓ..பிகரை மடிக்கிறதுக்காகவா..?
“எங்கே வேலை செய்றீங்க..? “ என்றேன்..
அவளின் பதட்டத்தை குறைப்பதற்காக, அவள் என்னுடய அலுவகத்தின் அருகே உள்ள ஓரு பிரபல கம்பெனியை சொல்ல..
“ எதுக்காக ராத்திரியில ரிஸ்க் எடுக்கிறீங்க.. கம்பெனி கேப் இருக்கில்ல..” என்று கேட்டேன்.
ரமேஷ் இன்னமும் காத்து அடித்து கொண்டிருந்தான்.. மனதுக்குள் சிரித்து கொண்டேன்.. என்ன ஓரு அர்பணிப்பு.. “ரமேஷ்.. வண்டியில பெட்ரோல் இருக்கா பாருங்க.. என்றேன்.”
ரமேஷ் வண்டியின் டாங்கை திற்ந்து பார்த்து, “ அட ஆமா சார்.. சுத்தமா டிரை..” என்று சொன்னவுடன். இங்கே பக்கதில நாலு கிலோ மீட்டருக்கு பங்க் எதும் கிடையாதே.. என்று தனக்குள் பேசியாடி யோசித்தவன் முகத்தில் பல்ப் எறிய, சற்று தூரத்தில் ஓரு பெட்டி கடை தெரிய, பரபர வென்று ஓடி திரும்பி வரும் பொது ஓரு மினரல் வாட்டர் பாட்டிலை வாங்கி வந்திருந்தான். “த..பார்றா..பிகருன்னதும்.. என்ன ஓரு பில்டப்பு..” இதே நமக்கு ஓண்ணுன்னா.. செய்வானா.. என்று யோசிக்கும் போதே..
“சார். கொஞ்சம் தண்ணி குடிங்க..,என்று அவன் கொஞ்சம் குடித்துவிட்டு, எனக்கும் குடித்துவிட்டு, மிச்சத்தை, அந்த பெண்ணிடம் கொடுத்து குடிக்க சொல்லிவிட்டு, பாட்டில் காலியானவுடன் சுத்தமாய் அதிலிருந்த தண்ணியை வெளியேற்றி, என்னுடய் வண்டியிலிருந்து என்னுடய் அனுமதியில்லாமலே..பெட்ரோல் டியூபை க்ழற்றி வண்டியிலிருந்து பெட்ரொலை அந்த பாட்டிலில் பிடித்து, அந்த் பெண்ணின் வண்டியில் ஊற்றி.. வண்டியை ஸ்டார்ட் செய்து, அவளிடம் கொடுத்து “பார்த்து போங்க.. வழியில எங்கயும் நிறுத்தாதீங்க.. பார்த்துபோ..” என்று கரிசனத்துடன் வழியனுப்பினான்.
எனக்குள் கோபமும், ஓரு பக்கம ரமேஷை பார்த்து நகக்லும் எட்டி பார்த்தது.. எதையும் காட்டிக் கொள்ளாமல் வண்டியை ஸ்டார்ட் செய்து கிளப்பினேன். ரமேஷும் ஏறிக் கொண்டான்..வழியில் எதுவுமே..பேசவில்லை.. நான் இந்த விஷயத்தை அதும் ரமேஷ் தன் கை காசிலிருந்து பத்து ரூபா செலவு செய்து ஓரு பெண்ணிக்கு கொடுத்ததை பரப்ப வேண்டும் என்று நினைத்தப்டியே.. வண்டியை ஓட்ட..அது..ஓரு ரெண்டு கிலோ மீட்டர் தாண்டியவுடன் திக்கி..திக்கி ஓடி நின்று போனது. என்னவென்று பார்த்தால் வண்டியில் பெட்ரோல் இல்லை.. நான் ரமேஷை பார்த்தேன்.. “ சாரி சார்..உங்க வண்டியில பெட்ரோல் இருக்கும்னு நினைச்சு புல்லா எடுத்திட்டேன்.. கொடுங்க சார் பகக்த்துல ஓரு கிலோ மீட்டர் தூரத்துல பங்க இருக்கு நான் தள்ளீகிட்டு வரேன்..” என்று என்னிடமிருந்து வண்டியை தள்ளி கொண்டு வர, அவனை திட்ட முடியாமல் அவனை ஆச்சர்யமாய் பார்த்தபடி..
“ ஏன்..ரமேஷ் உங்க கையிலேர்ந்து பத்து பைசா கூட செலவு பண்ணமாட்டீங்க.. இன்னைக்கு என்னடானா.. ஓரே தாராளமா பின்னி பெடலெடுக்கிறீங்க..? பிகர்ன்னதும் என்னமா உதவுறீங்க..?” என்றேன் கிண்டலாய்..
ரமேஷ் எதுவும் பேசாமல் கொஞ்சம் தூரம் வண்டியை தள்ளிக் கொண்டே.. “ பிகருக்காக, இல்லசார்.. நாலு வருஷம் முந்தி இதே ஏரியாவுல ஓரு பொண்ணு ஆபீஸ் விட்டு லேட்டா வரும் போது அந்த பொண்ணை மடக்கி ரேப் பண்ணி கொன்னுட்டானுங்க.. அது வேற யாருமில்ல... என் லவ்வர் தான்.. இன்னொரு பொண்ணுக்கு அந்த மாதிரி ஆயிரகூடாதுன்னுதான்..” என்று கண்கள் பனிக்க சொல்லிவிட்டு..
‘ இதோ.. பங்க் பக்கத்துல வந்திட்டோம் சார்.. ” என்றபடி வண்டியை வேகமாய் தள்ளி சென்றான்.
நான் அவன் போவதையே பார்த்து கொண்டிருந்தேன்..
பின்குறிப்பு:
நண்பர் ராஜ் சொன்ன ஓரு சம்பவத்தின் தாக்கத்தில் எழுதியது.
பார்ததில் பிடித்தது..
மேலும் படிக்க.. இங்கே அழுத்தவும்
Post a Comment
20 comments:
நான் காமெடியா சொன்ன விஷயத்தில இப்படி மனித நேயம் கலந்து....கலக்கிட்டீங்க...அந்த நண்பர் கிட்ட இந்த பதிவை கண்டிப்பா படிக்க சொல்றேன்
நன்றி ராஜ்..நீங்க சொன்ன விஷயத்துக்கு ஓரு மறுபக்கமிருந்தா எப்படியிருக்கும்னு யோசிசேன்...கதையாயிருச்சு..நன்றி ராஜ்..
கஞ்சனா இருந்தாலும் நல்லவரா இருக்கிறார்.
நல்லா எழுதீருக்கீங்க....
மிக்க நன்றி அண்ணே. உங்களோட “படித்ததில் பிடித்தது” பகுதி மூலமா என்ன ரெண்டாவது முறையா அறிமுகப்படுத்திருக்கீங்க. ரொம்ப நன்றி
//கஞ்சனா இருந்தாலும் நல்லவரா இருக்கிறார்.//
நன்றி ஜூர்கேன்
//நல்லா எழுதீருக்கீங்க....//
நன்றி நவநீதன்.
simple and nice....
மறுபடி நல்ல நடை தோழர்!!
அப்பறம்.,.
அந்த மனுஷன் இவ்ளோ கஷ்டப்பட்டு ஃபோட்டொ எடுத்து எல்லாமே பர்தாதான் தெரியப்போகுது...?
வணக்கம்! சங்கர் சாமி!
சபரிமலை சீசன் ஆரம்பம் ஆயிடுச்சி!
மேல இருக்குற ஜீப்ல இருக்குற சாமி படம்,
இந்தாண்ட ஷ்ரேயா சாமி படம்,
இதெல்லாம் மத்த கூடாதா ?
//simple and nice....//
நன்றி பாலசந்தர்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
//மறுபடி நல்ல நடை தோழர்!!//
நன்றி பரிசல்..
//அப்பறம்.,.
அந்த மனுஷன் இவ்ளோ கஷ்டப்பட்டு ஃபோட்டொ எடுத்து எல்லாமே பர்தாதான் தெரியப்போகுது...?//
இத போட்டதுக்கு எவ்வளவு பிரச்சனை..
//வணக்கம்! சங்கர் சாமி!
சபரிமலை சீசன் ஆரம்பம் ஆயிடுச்சி!
மேல இருக்குற ஜீப்ல இருக்குற சாமி படம்,
இந்தாண்ட ஷ்ரேயா சாமி படம்,
இதெல்லாம் மத்த கூடாதா ?//
சாமி படம் தானே மாத்திர்றேன்..சாமி
Azhagha edhuttu solli irukereerghal.,
Indha padivai paghirndu konda raj kku ennudaiya nandri.
//Azhagha edhuttu solli irukereerghal.,
Indha padivai paghirndu konda raj kku ennudaiya nandri.//
நன்றி ராஜ் நண்பரே..
நன்றி! சங்கர் சாமி!
சாமி படத்துக்கு!
நன்றி! சங்கர் சாமி!
சாமி படத்துக்கு!
அருமையான கதை சங்கர்.. எதிர்பார்க்காத முடிவு.. நல்ல நடை.. உண்மைக்கதைன்னு சொன்னதுதான் மனசை கனக்க வெக்குது..
//அருமையான கதை சங்கர்.. எதிர்பார்க்காத முடிவு.. நல்ல நடை.. உண்மைக்கதைன்னு சொன்னதுதான் மனசை கனக்க வெக்குது..//
அந்த நபர் தன் காசை செலவு செய்து தண்ணீர் வாங்கியது வரைதான் உண்மை அவர் கஞ்சன் என்பதும் அந்த க்ளைமாக்ஸூம் என் கற்பனை. நன்றி வெண்பூ.
//நன்றி! சங்கர் சாமி!
சாமி படத்துக்கு!//
இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி.. எவ்வளவோ பண்றோம்.. இதைப் பண்ண மாட்டோமா..? தல..
Post a Comment