ராத்திரி சுமார் 11 மணி இருக்கும் இணையத்தில் உலாவி கொண்டிருந்தபோதுதான் தெரிய வந்தது. மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல் பற்றி ஓருவர் பதிவிட்டிருந்தார். அதை பார்த்ததும் உடனடியாய் நான் பழக்க தோஷ்த்தில் நம் தமிழ் செய்தி சேனல்களை பார்க்க ஆரம்பிக்க, சன்நியூஸ், ஜெயா, என்று எவ்ருமே தங்களுடய சேனல்களில் செய்திகளை அப்டேட் செய்யவில்லை. சாயங்காலம் தங்களது மெயின் சேனல்களில் மழை, புயல், தங்கள் சார்பு, ம்ற்றும் எதிர்ப்பு செய்திகள் என்று ஏற்கனவே காட்டபட்ட விஷயங்களையே திரும்ப, திரும்ப காட்டி கொண்டிருந்தார்கள். ஆனால் ஆங்கில, இந்தி செய்தி சேனல்கள் எல்லாமே பரபரப்பாய் சுடசுட செய்திகளை ‘நேரலை’யாய் தந்து கொண்டிருந்தார்கள்.
மும்பையின் சத்ரபதி சிவாஜி நிலையம், தாஜ் கொலாபா, ட்ரைடண்ட், காமா மருத்துவமனை என ஒரே சமயத்தில் தாக்குதல் தொடுத்திருக்கின்றனர், தீவிரவாதிகள். தாக்குதலின் தீவிரம் அதிர்ச்சியடைய வைத்தது. கிட்டத்தட்ட ஓரு போர் நடப்பதை போன்றிருக்கிறது. நம் செய்தி சேனல்கள் இதை பற்றி சற்றும் கவலைபடாமல் இருந்தது அதிர்ச்சியையும் தலைகுனிவையும் ஏற்படுத்தியது.
ஏன் ஓரு 12 மணிவாக்கில் டிவி9 என்கிற் தெலுங்கு செய்தி சேனலில் கூட மற்ற சேனலிலிருந்து காட்சிகளை ஓளிபரப்பினார்கள். ஆனால் நம் செய்திகளை உடனுக்குடன் தருவதாய் சொல்லும், சன் நீயூஸ், சுமார் ஓரு மணி வாக்கில் ப்ளாஷ் நியூஸ் போட்டார்கள். ராஜ் நியூஸ் பரவாயில்லை. ஓரு கால் மணி நேரம் முன்னமே ப்ளாஷ் நியூஸ் போட்டுவிட்டார்கள்.
நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் நாட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிவிப்பதுதான் செய்தி சேனல்களின் கடமை. பிராந்திய செய்தி சேனல்களில் அவர்களின் பிராந்திய செய்திக்கு முக்கியத்துவம் தருவதுதான் அவர்களின் டி.ஆர்.பி என்றாலும், தேசிய அளவில் நடக்கும் இம்மாதிரியான விஷயங்களை உடனடியாய் காட்டாத 24 மணி நேர செய்தி சேனல்கள் இருந்தால் என்ன.. இல்லாவிட்டால் என்ன.
சி.என்.என்.கூட நேரலையாய் தன் உலக நிகழ்வுகளை விட்டுவிட்டு சுமார் ஓரு மணிநேரம் இந்த் தாக்குதலை ஓளிபரப்பியது.
அமெரிக்க தீவிரவாத தாக்குதலின் போது சி.என்.என். தங்களுடய நாட்டின் நடந்த அந்த தாக்குதலை ஓரு சராசரி அமெரிக்கனின் பதைபதைப்போடு வெளிபடுத்தியது. அதே பி.பி.சி எங்கே நம்மையும் இதே போல் தாக்குவார்ளோ என்ற பயம் கலந்த எச்சரிக்கை உணர்வுடன் செய்திகளை ஓளிபரப்பினார்கள். இந்திய ஆங்கில செய்தி சேனல்கள் எல்லோருமே.. ரெய்டரில் கிடைத்த புட்டேஜை மட்டுமில்லாமல் மற்ற சேனல்களில் கிடைத்த வீடியோக்களையும் காட்டி நம் பக்கத்து உண்ர்வுகளை சரியாய் வெளிபடுத்தி கொண்டிருந்தார்கள். ஆனால் அப்போது தான் ஆரம்பித்திருந்த சன் நியூஸ், ஏதோ இங்கிலீஷ் பட டிரைலரை காட்டுவது போல திரும்ப திரும்ப அந்த விமான மோதல் சமாச்சாரத்தையே காட்டி கொண்டிருந்தார்கள் இரண்டு நாள் வரை. இதை பற்றி ஓரு சந்திப்பின் போது சன் ”தலைமை”யிடம் பேசிக் கொண்டிருந்த போது இதை பற்றி திரு. மா..... சொல்லுங்கள் என்றார். சொன்ன போது அவர் சொன்னது “உலகத்துல சந்தோஷமான விஷயங்களை செய்தியாக்க முடியாது. இன்னொருவருடய துக்கமும் பிரச்சனையும் தான் செய்திகளாகும் அது கூட நம்ம பக்கத்து ஆளாயிருந்தாத்தான்..” என்றார்.ஓரு வேளை மும்பை நம் நாட்டில் இல்லையோ..? என்னே ஓரு தீர்க தரிசனம்..
இந்த லட்சணத்தில் கலைஞர் தொலைக்காட்சி வேறு செய்தி சேனலை ஆரம்பிக்கிறது. அவர்களும் குட்டையில் ஊறிய மட்டைகள் தான். என்ன செய்கிறார்கள் என்று பார்போம்
உங்களின் கருத்துகளை பின்னூட்டமிட்டும், தமிழ்மணத்திலும், தமிலிஷிலும் ஓட்டை அளிக்குமாறு கேட்டுக்கிறேன்.
முத்தம் சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்
Post a Comment
26 comments:
கலைஞரில் உடனடியாகவே பிளாஸ் நியூஸ் ஓடவிட்டார்கள். சன்னில் இப்போ ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்க்குத் தான் முக்கியம். ஜெயா வழக்கம்போல் நிஷா புயல் ஏற்பட மைனாரிட்டி திமுக அரசுதான் காரணம் என புலம்பியது.
நான் இப்போதைக்கு கலைஞரை தொலைக்காட்சியை குற்றம் சொல்ல மாட்டேன். ஆனால் இவர்கள் எல்லோரும் செய்திகென ஓரு சேனலை வைத்திருக்கிறார்கள். அதனால் தான் இந்த பெறுமல்
திரு. மா..... சொல்லுங்கள்
திரு மாலனா?
செய்திகளை பொருத்தவரை லோக்கல் டிர்பி தான் முக்கியமோ?
//செய்திகளை பொருத்தவரை லோக்கல் டிர்பி தான் முக்கியமோ?//
பிராந்திய மொழி செய்தி சேனல்கள் வழக்கமாய் அவர்களுடய பிராந்திய செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். அப்போது தான் அவர்களின் பார்வையாளர்கள் கூடும்.
நேரடியாக ஒளிபரப்புகிறேன் பேர்வழி என்று கிளம்பிய இந்த தொலைக்காட்சிகள் ஓட்டல் வெளியே நடப்பதை நேரடியாக ஒளிபரப்பி உள்ளே உள்ள தீவிரவாதிகளுக்கு தெரியாமலேயே உதவுகின்றன. தலைமை அதிகாரிகள் இறந்ததற்கு அது கூட ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆதலால் இரண்டுமே தவறுதான்.
நானும் நெனைச்சேன் சங்கர். இவங்க ஏன் இப்படி தாமதமா ஒளிபரப்பறாங்கன்னு...
நம்ம சட்டக்கல்லூரி ப்ரச்சினையப்போ தமிழ்சானல்கள் காட்டிய அதே தீவிரத்தை, ஆங்கில சானல்களும் காட்டியதை கவனித்தீர்களா??
//தலைமை அதிகாரிகள் இறந்ததற்கு அது கூட ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆதலால் இரண்டுமே தவறுதான்.//
செய்தி சேனல்கள் தங்களின் பரபரப்புக்காக சில விஷயங்களை செய்கிறார்கள் அது கண்டிக்கதக்கதும் கூட, அதற்காக ஓரு தனி பதிவே எழுதவேண்டும்..
//நம்ம சட்டக்கல்லூரி ப்ரச்சினையப்போ தமிழ்சானல்கள் காட்டிய அதே தீவிரத்தை, ஆங்கில சானல்களும் காட்டியதை கவனித்தீர்களா??//
அதை தான் சொல்கிறேன் பரிசல். புரபசனலிசம் இல்லாத செய்தி சேனல்களாக வலம் இவர்களை நினைத்தால் பாவமாய் இருக்கிறது. அதனால் தான் தமிழ் நாட்டை தாண்டி அவர்களால் வளர முடியவில்லை.
மும்பையில் சுமார் 15 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்வதாக வாசித்திருக்கிறேன். தமிழ் தொகாவினர் அவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லையோ என்னவோ?
ஆசியாநெட் செய்தி, People, ஜெய்ஹிந்த் மற்றுமுள்ள மலையாள தொகாவினர் இந்நிகழ்வு குறித்து விரிவாகவே செய்திகளைத் தந்து கொண்டுள்ளனர். அல்ஜஸீரா ஆங்கிலம், பிபிசி, சிஎன்என் போன்ற வேற்று நாட்டு தொகாவினரும் இதுகுறித்து விரிவாகப் பேசும்போது, தமிழ் தொகாவினர் வழக்கம்போல் அரசியல் காழ்ப்புணர்வு செய்திகளையே தந்து கொண்டிருக்கின்றனர்.
// தமிழ் தொகாவினர் வழக்கம்போல் அரசியல் காழ்ப்புணர்வு செய்திகளையே தந்து கொண்டிருக்கின்றனர்.//
இவர்கள் டிவி நடத்துவதே இவர்களின் அரசியல் நடத்துவதற்கு தானே.. எது எப்படி போனால் இவர்களூக்கு என்ன..?
நம்ம ஊர் தொலைகாட்சி நிறுவனங்கள் உருப்படாத பிரச்னையை தான் முன்னிறுத்தி காட்டுவார்கள்..
இவர்களும் ...இவர்கள் செய்திகளும்....
அட நீங்க வேற நேத்து நைட்டு 9 மணிக்கு வாசிச்ச செய்தியேதான் நடுராத்திரி 1 மணி வரைக்கும் ரிப்பீட்டு ஆச்சு சன் நியூஸ்ல.(அதுக்கப்புறம் நானும் பாக்கல)
பாவம் அவங்களும் தூங்க வேணாமா?
நல்ல பதிவு கேபிள் சங்கர்.! (எந்த பதிவுக்கு தொடர் எழுத அழைத்தீர்கள் என்றே தெரியவில்லை. உங்கள் பதிவுக்கு வந்து தேடி சலித்துவிட்டேன். அதற்குள் ஆயிரம் பதிவுகள் போட்டுவிட்டீர்கள் போல தெரிகிறது.)
//நேரடியாக ஒளிபரப்புகிறேன் பேர்வழி என்று கிளம்பிய இந்த தொலைக்காட்சிகள் ஓட்டல் வெளியே நடப்பதை நேரடியாக ஒளிபரப்பி உள்ளே உள்ள தீவிரவாதிகளுக்கு தெரியாமலேயே உதவுகின்றன. தலைமை அதிகாரிகள் இறந்ததற்கு அது கூட ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆதலால் இரண்டுமே தவறுதான்.//
I agree.
I had the same worry when I saw the ATS chief in the channels before I went to sleep. I saw Mr. Karkare being calm on his arrival. Indeed the clippings were showing him donning the helmet and the bullet-proof vest. I also had worries becoz these channels were focussing the top cops with their flashglights.
When I wake up in the morning, I see that he is killed.
Even in the morning, the TV channels where rushing so close to a vehicle where an injured person is carted on the way to hospital. They were focussing on the injured person while he is writhing in pain. So disgusting.
I saw Jaya TV or Jaya News sacrolling a flash around 11PM from where I turned to the English news channels.
நம் தொலைக்காட்சிக்களுக்கு அங்கு மிகக் குறைவான நிருபர்கள்தானோ?
இல்லையோ
அப்போது தான் ஆரம்பித்திருந்த சன் நியூஸ், ஏதோ இங்கிலீஷ் பட டிரைலரை காட்டுவது போல திரும்ப திரும்ப அந்த விமான மோதல் சமாச்சாரத்தையே காட்டி கொண்டிருந்தார்கள்////
என்னத்த சொல்ல என்னத்த பார்க்க
//நம்ம ஊர் தொலைகாட்சி நிறுவனங்கள் உருப்படாத பிரச்னையை தான் முன்னிறுத்தி காட்டுவார்கள்..//
ரிப்பீட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்..
//பாவம் அவங்களும் தூங்க வேணாமா?//
அது சரி.. அதுக்கு பேசாம 10 -5 ஆபீஸ் அவரில் நியூஸ் சேனல் நடத்த வேண்டியது தானே..?
//They were focussing on the injured person while he is writhing in pain. So disgusting.//
இதை செய்திகளை காட்டுவதைவிட கொடுமை.
//I saw Jaya TV or Jaya News sacrolling a flash around 11PM from where I turned to the English news channels.//
அப்படியா.. நான் பார்ததாக நினைவில்லை..
//நம் தொலைக்காட்சிக்களுக்கு அங்கு மிகக் குறைவான நிருபர்கள்தானோ?//
அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிருபர்களை வைத்திருந்தாலும், நிறைய் ப்ரிலான்சர்கள் பணியாற்றுவதாய் கேள்வி.
சபாஷ்
//சபாஷ்//
நன்றி ஆட்காட்டி.
சந்தேகமின்றி சன் டீ தான்..
இன்று காலை ப்ளாஷ் நியுஸ் - போரூர் ஏரி உடைந்தது. கிட்டதட்ட 1 மனி நேரம்
நான் போரூர்வாசி, உண்மையில் ஏரி நிறைந்து தண்ணீர் வழிந்தது என்பது தான் உண்மை.. உடைப்பெடுக்கவில்லை..
1 மணி நேரத்துக்கு மேல் ஒடிய அந்த ப்ளாஷ் பின்னர் "போரூர் ஏரியில் தண்ணிர் நிரம்பி வ்ழிந்தது" என்று மாற்றப்பட்டது..
உடைப்பு என்பது தான் ப்ளாஷ் நியுஸாக வரும், நிரம்பி வழிந்தது ப்ளாஷாக வராது.. இவர்களின் அவசர குடுக்கையால் 'நிரம்பி வழிந்ததை ப்ளாஷாக 1 மணி நேரம் போடவேண்டிய நிலை பாவம்
உடைப்பெடுத்துவிடுமொ என்று ரொம்ப முன் கூட்டியே ப்ளாஷ் போட்ட சன் தானே செய்திகளை முந்தி தருவது??
//உடைப்பெடுத்துவிடுமொ என்று ரொம்ப முன் கூட்டியே ப்ளாஷ் போட்ட சன் தானே செய்திகளை முந்தி தருவது??//
ஹா..ஹா..ஹா.. அது சரிதான் நான் ஓத்து கொள்கிறேன். செய்திகளை முந்தி தருவது சன் டிவிதான்.
Post a Comment