இப்படி கவிதையாய் ஓரு டைட்டிலை வைக்க தெரிந்த இயக்குனருக்கு, கவிதையாய் கதை சொல்ல தெரியவில்லை. சமீபத்தில் பார்த்த மிக அமெச்சூரிஷான காதல் கதை இது தான். கும்பகோணத்தில் ஓரு பெரிய குடும்பத்தின் ஓரே மகன் மகேஷ். தன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்பதற்காக, பரிட்சை முடிந்து சென்னையிலிருந்து கும்பகோணம் வருகிறான். மாப்பிள்ளை பிடித்து போய் திருமணம் வரைக்கும் போகும் போது மகேஷுக்கும், அவன் தங்கைக்கும் விபத்துகுள்ளாக.. அதனால் தங்கையின் திருமணம் தள்ளி போகிறது.
தங்கையின் மாப்பிள்ளையின் தங்கைக்கு வேறு மாப்பிளளை பார்த்து திருமண மேடையில், அவளீன் மாப்பிள்ளை ஓடி விடுகிறான். மாப்பிள்ளை தன் தங்கையை திருமணம் செய்து கொள்ள மகேஷை கேட்க, அவன் மறுத்து விடுகிறான். ஏன் என்றால் அவனுக்கும், சரண்யாவிக்கும் இருக்கும் காதல். அந்த காதலை சொல்கிறேன் பேர்விழி என்று, படம் ஆரம்பித்தது முதல் க்ளைமாக்ஸ் வரை அவர்களின் காதல் காட்சிகளை பிச்சி பிச்சி தங்கச்சி, அம்மா, அண்ணி, அண்ணன், அப்பா, தாத்தா, குடும்பம் முழுவதும், பார்ட், பார்டாய் படம் முடியும் வரை சொல்லி கழுத்தை அறுக்கிறார்கள். கதை சொல்லும் முறையில் புதுமை புகுத்த நினைத்த இயக்குனருக்கு, அதற்கு சமமாய் காட்சிகள் வேண்டுமென்று தெரியவில்லை. ஓரே சவ, சவ,. காதல் காட்சிகள். இயக்குனர் க்ளைமாக்ஸ் காட்சியை மட்டுமே நம்பி.. படம் பூராவும் சொதப்பி விட்டார். டைட்டானிக் படத்தில் க்ளைமாக்ஸில் ஜாக் இறந்துவிடுவதால் மட்டுமே படம் ஜெயிக்கவில்லை. அவர்களுக்குள் இருந்த காதலை திரையில் காட்டியதால் தான் ஜெயித்தது.. இதில் டைட்டானிக் மியுசிக்கை வேறு உல்டா பண்ணி.. அய்யோடா சாமி.. முடியல..
சக்தி தம்பிக்கு விஜய் மாதிரி நிக்கிறதுக்கு, நடக்குறதுக்கு, டான்ஸ் ஆடறதுக்கு எல்லாம் வரும், ஆனா நடிக்க மட்டும் தான் வரமாட்டேங்குது. ( அதுக்காக விஜய் நடிக்கிறாருன்னு சொல்ல வரல) எப்ப பாத்தாலும், சிரிச்சி கிட்டே,இருக்கிற மாதிரி முகத்தை வச்சிகிட்டு, அது சோக சீனா, சந்தோச சீனான்னு குழப்புறார்.
படத்தில் கல்யாண மாலை மோகன் இருக்கிறார். கல்யாண மாலை நல்ல ப்ரோக்ராம். வித்யாசாகரின் இசையில் “தங்கத்தில செய்த நிலா” என்ற பாடல் அருமை. மற்றபடி படத்தில் நிறைய் ஆர்டிஸ்டுகள், சந்தியா, காஜல் அகர்வால், போன்ற ”சிறந்த” நடிகர்கள் இருக்கிறார்கள்.. டிவி சீரியல் கூட அருமையாய் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். நீஙக் எடுக்கிறது சினிமா.. தயவு செஞ்சு கொஞ்சம் புரிஞ்சிக்கங்க..
மகேஷ்..சரண்யா.. தியேட்டரில் மிக சிலர்.
சர்வே ரிசல்ட்..
வாரணம் ஆயிரம் படம்
சூப்பர்னு சொன்னவங்க : 55 பேர்.
ஓகேன்னு சொன்னவங்க: 46 பேர்.
சப்பைன்னு ‘’’’ : 38 பேர்.
எஸ்கேபுன்னு “ : 31 பேர்.
மொத்ததில படம் நல்லாயிருக்குன்னு சொல்லியிருக்கீங்க.. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இணையத்தில் நல்லாயிருக்கும் சொன்ன மெஜாரிட்டி படங்கள் வியாபார ரீதியில் தோல்வி படங்களே.. அதற்கு இந்த படமும் ஓரு சான்று.. சென்னை,கோவை, போன்ற சிட்டிகளை தவிர எல்லா இடங்களிலும், மிக மோசமான வசூலை கொண்டிருக்கிறது வ.ஆயிரம்.
Post a Comment
12 comments:
// மகேஷ்..சரண்யா.. தியேட்டரில் மிக சிலர்.
//
படத்தோட விமர்சனம் மற்றும் ரிசல்ட் ரெண்டையும் ஒரே வரியில சொல்லிட்டீங்க.. சூப்பர்..
வாரணம் ஆயிரம் படம்
சூப்பர்னு சொன்னவங்க : 55%
ஓகேன்னு சொன்னவங்க: 46%
சப்பைன்னு ‘’’’ : 38%
எஸ்கேபுன்னு “ : 31%
ayya, 55+46+38+31=170%
Tally agalye?!!!
//படத்தோட விமர்சனம் மற்றும் ரிசல்ட் ரெண்டையும் ஒரே வரியில சொல்லிட்டீங்க.. சூப்பர்..//
நன்றி வெண்பூ..
//ayya, 55+46+38+31=170%
Tally agalye?!!!//
சாரி மாஸ்டர்.. பேருக்கு பதிலா..பர்சண்டேஜை போட்டுட்டேன்.. இப்ப கரெக்ட் பண்ணிடறேன். மாஸ்டர்..
எங்களை மட்டமான படங்களில் இருந்து காப்பாற்றும் காவல் தெய்வமே நீ வாழ்க.
இவண்
காவல் தெய்வம் கேபிள் சங்கர் பேரவை
//காவல் தெய்வம் கேபிள் சங்கர் பேரவை//
காவல் தெய்வத்துக்கு ஏதாவது காணிக்கை கலெக்ட் பண்ணி குடுங்க.. ஆபத்துலேர்ந்து காப்பாத்தற்துக்கு செலவாகுதுல்ல.. இல்லேன்னா.. சாமி கண்ணை குத்திரும்.
I am escape.....
//I am escape.....//
காணிக்கை எப்ப தரீங்க..?
//மகேஷ்..சரண்யா.. தியேட்டரில் மிக சிலர்.//
Good one :)
//Good one :)//
நன்றி வெட்டிபயல்..
//மகேஷ்..சரண்யா.. தியேட்டரில் மிக சிலர்//
நச்
//நச்//
நன்றி நாடோடி இலக்கியன்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
Post a Comment