பூ - திரைவிமர்சனம்

மனிதனின் வாழ்கையில் ஓவ்வொருவருக்கும் ஓரு கனவுகள், கற்பனைகள், நிஜ வாழ்கையில் ஓவ்வொருவரும் அவர்தம் கனவுகளை, கற்பனைகளை விட்டு கொடுத்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி மற்றவருக்காக விட்டு கொடுத்து அதனால் அவர் நன்றாய் இருப்பார் என்று நம்பி செய்த தியாகம் வீணாகும் போது வரும் துக்கம் மிகப் பெரிய சோகம். அந்த சோகம் காதலாய் இருந்தால்..? அந்த சோகத்தை இவ்வளவு எளிமையாய், ஒரு கிராமத்து காதல் கதையை வில்லன் இல்லாமல்,குத்துபாட்டு இல்லாமல்,இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல், கவிதையாய் தர முயன்றிருக்கிறார் இயக்குனர் சசி.
தமிழ்செல்வனின் “வெயிலோடு போய்” என்கிற சிறுகதையை திரைகதையாக்கி இருக்கிறார். முழுக்க, முழுக்க, கதாநாயகியை சுற்றியே வரும் கதை. அறிமுக நாயகி பார்வதிக்கு முதல் படமே பேர் சொல்லும் படமாய் அமைந்திருக்கிறது. மாரியம்மாவாகவே வாழ்ந்திருக்கிறார். சந்தோஷம், கோபம், துக்கம், காதல், ஏக்கம், பிரிவு, என்று உணர்வுகளின் களஞ்சியமாய் மின்னுகிறார். புதியவர் என்று சொன்னால் நம்பமுடியாது.
கதையின் நாயகன் தங்கராசுவாய் ஸ்ரீகாந்த். ஆம் கதையின் நாயகன் தான். முதலில் இந்த மாதிரியான ஹீரோயின் ஓரியண்டட் படத்தில் நடித்தற்கே அவரை பாராட்ட வேண்டும். சில காட்சிகளே வந்தாலும் குறை சொல்ல முடியாது.
தங்கராசுவின் அப்பாவாக வரும் பேனாகாரன். கிராமத்தில் உழைத்து, உழைத்து தேயும் தகப்பன்களை கண் முன்னே காட்டுகிறார். மிக இயல்பான நடிப்பு. அவருடய மனைவியாய் எழுத்தாளர் பாரததேவி வருகிறார்.
தென் தமிழ்நாட்டின் சிவகாசி, ராஜபாளையத்தில் நடைபெறும் கதையில், அந்த ஊரின் இயல்பு தன்மை மாறாமல் நேட்டிவிட்டியோடு, நம் கண் முன்னே நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் பி.சி.முத்தையா. அந்த அகண்ட செம்மண் வெட்டவெளியும் அதில் இரண்டே இரண்டு பனைமரமும், தியேட்டரில் பாருங்கள் அந்த கந்தக பூமியின் தகிப்பு உங்களுக்கு புரியும்.
புதிய இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனின் இசை ஏற்கனவே ஹிட். அதிலும் சுத்ததன்யாசியில் என்று நினைக்கிறேன் அந்த “ஆவாரம்பூ” பாடல் ரொம்ப நாளுக்கு ரீங்காரமிடும்.

படத்தில் வரும் ஓவ்வொரு காட்சியிலும் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. சிறுகதையை கொஞ்சமும் மாற்றாமல், பாடல் காட்சிகளை தவிர அதை ஓட்டியே திரைக்கதை அமைத்திருப்பதால், வழக்கமான சினிமாதனமான காட்சிகள் இல்லாமல், யதார்தமாய் காட்சிகளை அமைத்திருக்கிறார். உதாரணமாய் மாரி, தங்கராசுவை எவ்வளவு அழுத்தமாய் மனதில் கொண்டிருக்கிறார் என்பதை அவர் பள்ளிகூடத்தில் வாத்தியார் “நீ பெரியவளானதும் என்ன செய்ய போறே”ன்னு கேட்டதும் “நான் தங்கராசுக்கு பொண்டாட்டியாக போறேன் சார்” என்று சொல்லும் ஓரு காட்சியே போதும். ஆனால் இவருக்கு இவ்வளவு அழுத்தமாய் காட்சி அமைத்துவிட்டு, அவரின் காதலை தங்கராசு வேறு ஓருவர் சொல்லித்தான் உணர்வதென்பது அவ்வளவு ஆழமாய் இல்லை. அதுவும் ஓரே பாடலில் அவர் மாரியின் காதலை உணர்வதும், வேறு ஆளாய் இருந்தால் பரவாயில்லை, சொந்த அத்தை மகனிடம் பேசுவதற்கு எதற்கு அவ்வளவு எக்ஸைட்மெண்ட்.. தயக்கம்? ஏதோ ஓரு காட்சியில், இரண்டு காட்சியில் இருந்தால் பரவாயில்லை, படம் முழுக்க, அதே உணர்வில் நகர்வதால், பார்க்கும் நம்மை இம்சை பண்ணுகிறார் இயக்குனர். அதிலும் மாரியின் காதலை தங்கராசு உணர்ந்தும் அவரை வேண்டாம் என்னும் காரணம் மருத்துவ ரீதியாய் சரியாக இருந்தாலும், அதை மாரியிடம் சொல்லி உணர்த்தியிருந்தால் பரவாயில்லை. ஏதோ திடீரென்று சம்மந்தமில்லாமல் மன்னிப்பு கேட்டான் என்று சொல்வது ஒட்டும்படியாய் இல்லை.
அது மட்டுமில்லாமல் படத்தின் ஆரம்ப காட்சியில் தன் புது கணவனுடன் சரச சல்லாபங்கள் புரிந்து விட்டு, தன் முன்னால் காதலனை பார்க்க வருவது, ஆரம்பத்தில் எதிர்பார்பை ஏற்படுத்தினாலும், எதை நோக்கி போகும் என்பதில் தெரிந்து விடுவதால் படம் முழுக்க ஓரு தொய்வு இருக்கத்தான் செய்கிறது. க்ளைமாக்ஸில் தங்கராசுவின் அப்பா மாரியிடம் “ உனக்கு ஓரு கனவு இருந்திச்சு.. எனக்கு ஓரு கனவு இருந்திச்சு.. அது போல அந்த பொண்ணுக்கு ஓரு கனவு இருந்திருக்கறது தெரியாம இருந்துட்டோம்ன்னு சொல்லி மன்னிப்பு கேட்டு நிற்பதெல்லாம் சினிமா. நல்ல கதை அதை சுருக்கமாய் சொல்லியிருந்தால் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய் அடையாளமாய் வந்திருக்க வேண்டிய படம். இருந்தாலும் மிக நுணுக்கமாய் மனித உணர்வுகளை படம் பிடித்து காட்ட முயற்சித்திருக்கும் சசியை பாராட்ட வேண்டும்

பூவில் குறைகள் இருந்தாலும்,கவிதையாய் ஓரு படத்தை தர முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் கவிதை எல்லாருக்கும் பிடிப்பதுமில்லை, புரிவதுமில்லை. அப்படி மக்களுக்கு பிடித்தும், புரிந்தும் விட்டால் அதை விட சந்தோஷம் வேறேதுமில்லை. பார்போம் பூ மலருமா..? மலராதா?? என்று.
சிறுகதைளை படிக்க
முத்தம்
நீங்க இந்த மாதிரி பண்ணதேயில்லையா சார்..?
கமான்..கமான்..
மீனாட்சி..சாமான் நிக்காலோ..
ரமேஷூம்..ஸ்கூட்டி பெண்ணும்..
Comments
இசையமைப்பாளரின் குரலில் வரும் ஒரு சோகப்பாடலில் இளையராஜா தொனி தெரிந்தது.
இன்றுதான் திரு. அறிவிழி அவர்களும் இந்த படத்தை பற்றி எழுதியிருந்தார். தற்போது வரும் மசாலா படங்கள் போல் இல்லாமல், பூவாய் வரும் போது நன்றாக மலரும் என்பது என் எண்ணம். படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
இராகவன், நைஜிரியா.
பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்.
அடை மழை, தீவிரவாதம் என பல பிரச்சினைகள். டாக்கே ஜெனெரேட் ஆக வழியில்லை.
சற்று தாமதித்து வெளியிட்டிருக்கலாம்
அதெல்லாம் வேண்டாம் சார்.. அவங்களும் நாலு காசு பாக்க வேணாமா..? எனக்கு தெரித்து படம் பார்த்தவர்களின் ரிப்போர்ட் மிகவும் மோசம்.. என்ன செய்ய கவிதை புரியல போலருக்கே..
அடை மழை, தீவிரவாதம் என பல பிரச்சினைகள். டாக்கே ஜெனெரேட் ஆக வழியில்லை.
சற்று தாமதித்து வெளியிட்டிருக்கலாம்//
பட ரிலிசை முன் கூட்டியே சொல்ல முடியும், அடை மழை, தீவிரவாதிகள் எல்லாம் சொல்லிட்டா வருது. எல்லாம் அவன் அவன் நேரம் முரளி.
நானும் பார்த்துவிட்டு முடிந்தால் பதிவிடுகிறேன்..
கண்டிப்பாய்.. அதிரை.. உங்களை எதிர்பார்கிறேன்.
எழுதுங்கள் உண்மை தமிழன். நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
விமர்சனத்தின் ஆரம்பத்திலேயே சுவாரசியப் படுத்தி விடுகிறீர்கள்.
சிறு கதையை திரைப் படமாக்கும் முயற்ச்சியை வரவேற்ப்போம்...
(நீங்க கூடத்தான் நிறைய சிறு கதை எழுதிஇருக்கீங்க...!)
நான் எப்ப இந்த படத்த பாக்க முடியும்ன்னு தெரியல...!
அடைமாமழையில் ஒரு அழகான பதிவு ,நனைந்து கொண்டே படிப்பது போன்ற உணர்வு.
காவேரி கணேஷ்
நான் கூட ஓரு சிறுகதைக்கான விஷயத்தை எடுத்து கொண்டு அதை திரைக்கதையாக்கி, ஸ்ரீகாந்திடம் சொல்லி அவருக்கும் பிடித்து விட்டது.
திரைப்படம் ஆரம்பிக்க முயற்சிகள் ஆரம்பித்தாகிவிட்டது. நவநீதன்.
நன்றி காவேரி கணேஷ்.
படத்தில சில இடங்களில் தான் அப்படி இருக்காங்க.. ஜூர்கேன்.
நன்றி ஜாக்கி சேகர்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
’The Wednesday' படத்த பார்த்துடிங்களா? இல்ல லைவ் வெட்நேஸ்டே பார்தீங்களா?
‘பூ’ சிறப்பு என்பது என் கருத்து!!
விமர்சனம் சூப்பர்
நிஜ வெட்நெஸ்டே பார்த்து எப்போதோ பதிவிட்டுவிட்டேன். லைவ் வெட்நெஸ்டேயும் பார்த்து் அதிர்சியுற்று இருக்கிறேன்
பரவாயில்லை உஙகளுக்கு கவிதை புரிந்தும், பிடித்தும் ,இருக்கிறது... வாழ்த்துக்கள்.
ஆங்காங்கே சிறுசிறு குறையிருப்பினும்,குறிப்பாக டீ கடை காமெடி,எல்லாமே ரொம்ப பழைய மொக்கை.
இருப்பினும் மாரிக்காக சகித்துக்கொள்ளலாம்.
கண்டிப்பாக இந்த 'பூ' -வாசம் வீசும்.
நானும் அப்படித்தான் நினைக்கிறேன் சேரல்.. மிக்க நன்றி உங்கள் வருக்கைக்கும், கருத்துக்கும்
ஆங்காங்கே சிறுசிறு குறையிருப்பினும்,குறிப்பாக டீ கடை காமெடி,எல்லாமே ரொம்ப பழைய மொக்கை.
இருப்பினும் மாரிக்காக சகித்துக்கொள்ளலாம்.
கண்டிப்பாக இந்த 'பூ' -வாசம் வீசும்.//
வீசனூம்னுதான் ஆசைப்படுறேன்.. ஆனா கலெக்ஷன் ஓண்ணும் சொல்லும் படியா இல்லையாமே..?