Thottal Thodarum

Nov 25, 2008

DASVIDANIYA - FILM REVIEW


தாஸ்விதானியா என்றால் மிக சிறந்த வழியனுப்புதல் ஆங்கிலத்தில் The best ever good bye என்று பொருள். இந்த படத்தின் நாயகன் விநய்பத்க்குக்கு மீண்டும் தன்னை நிருபிப்பதற்கான படம்.

அமர்கவுல் என்கிற திருமணமாகாத 37 வயது இளைஞனின் கதை. மிக சாதாரணன், இவனைபோல நாம் பலரை சந்தித்திருந்தாலும் மறந்திருபோம்.. அப்படிபட்ட சாதாரணன். தினமும் தான் செய்ய வேண்டிய காரியங்களை Thinks to do என்று பட்டியலிட்டு வாழ்பவன். அவனுக்கு stomach cancer வ்ந்து இன்னும் மூன்று மாதங்களில் அவன் இறந்து போவான் என்றவுடன் எப்படியிருக்கும். ஆடிப்போய் இருக்கும் அவன் என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் செய்யவேண்டிய பழைய வேலைகளை பட்டியலிட, அவனுடய் மனசாட்சி வ்ந்து அவனை திட்டுகிறது. இது நாள் வரை எந்தவிதமான் ஆசைகளையும் பூர்த்தியடையாமல் வாழ்ந்து என்ன கண்டாய்..? இனி இருக்கும் நாட்களிலாவது வாழ்கையை வாழ்ந்து பார்.. ஆசை பட்டதையெல்லாம் அனுபவி என்கிறது.

அதன் படி அவன் ஓரு பட்டியலிடுகிறான் Things to do before I die என்று. புதிய கார், கிடார் வாசிக்க கற்பது, அம்மா, வெளிநாட்டு பயணம், நேகா.., ஆத்ம ந்ண்பன் ராஜூ, செக்ஸ்,பாஸூக்கு பாஸாய் இருப்பது என்று பத்து விதமான் ஆசைகளை அடைய விழைகிறான்.

ஓருவன் தன்னுடய் சாவை ஒப்பாரி வைக்காமல் கொஞ்சம் சர்ரியலிஸ்டிக் காமெடியுடன் இயல்பாய் தர முடியுமா..? என்று கேட்டால் இதோ.. தஸ்விதானியா.

விந்ய் பதக்கின் நடிப்புக்கு மீண்டும் ஓரு மைல்கல். மனுசன் சும்மா பிச்சி உதறியிருக்கார்.. அவருடய டயலாக் டெலிவரியும்,பாடி லேங்குவேஜூம் பகுத் அச்சா ஹே.. அதிலும் அவருடய் முன்னால் காதலியிடம் தன் காதலை எப்படியாவது சொல்ல ’டம் சராப்ஸ்’ விளையாட்டு மூலம் அவர் வெளிப்படுத்தும் இடம் சிம்பிளி சூப்பர்ப்.. காதலி நேகா தன் பங்குக்கு நன்றாகவே நடித்துள்ளார்.


அதன் பிற்கு வரும் ரஷ்ய காதலி.. ஓரு காட்சியிலும் அவள் பேசும் பேச்சுக்கு சப்டைட்டில் போடாமலேயே அவர் பேசுவது நமக்கு புரிகிறது.. அது சரி காதலுக்கும், காமத்துக்கும் பாஷை ஏது..

ராப் ரையினரின் “த பக்கெட் லிஸ்ட்” , மற்றும் வெயின் வாங்ஸின் “லாஸ்ட் ஹாலிடே”யை ஞாபகபடுத்தினாலும் இயக்குனர் சஷான்ந்த் ஷா பாராட்டபட வேண்டியவர்.
மேலும் படத்தை பற்றி நிறைய சொன்னால் படத்தை ரசிக்க முடியாது..

அதனால் வெள்ளி திரையில் காண்க..

DASVIDANIYA


உங்கள் ஓட்டை தமிழ்மணம் மற்றும் தமிலிஷில் மறக்காமல் குத்தவும்..
Post a Comment

7 comments:

அக்னி பார்வை said...

சத்யம் தியட்டரில் இந்த படத்திற்க்கு கூட்டம் போகும் போதே நினைத்தேன் படம் ‘something special' என்று..

உங்கள் விமரிசனதிற்க்கு நன்றி...

இருந்தாலும் buckle list superb....

Cable சங்கர் said...

//சத்யம் தியட்டரில் இந்த படத்திற்க்கு கூட்டம் போகும் போதே நினைத்தேன் படம் ‘something special' என்று..//.

ஆமாம் அக்னி.. கண்டிப்பாக பார்க்கவும்.

முரளிகண்ணன் said...

ஆஹா ஆசையை கிளப்புறீங்க. சத்யம்ல நான் படம் பார்க்கணும்னா இரண்டு நாள் சாப்பிடாம இருக்கனுமே.

Cable சங்கர் said...

//ஆஹா ஆசையை கிளப்புறீங்க. சத்யம்ல நான் படம் பார்க்கணும்னா இரண்டு நாள் சாப்பிடாம இருக்கனுமே./

சத்யம்ல விலை குறைச்சுட்டாங்க..90 ரூபாதான் ஸ்டுடியோ 5 ல.

யூர்கன் க்ருகியர் said...

Intersting Concept.

Cable சங்கர் said...

//Intersting Concept.//

நன்றி ஜூர்கேன்.

Raj said...

பார்த்துடுவோம்.