பேஜ் 3, சாந்தினிபார், கார்பரேட் போன்ற படங்களின் இயக்குனர் மதுர் பண்டார்கரின் புதிய படம்... இந்தி திரைபட உலகமே மிகவும் எதிர்பார்த்த ஓரு படம் பாஷன். மாடலிங் உலகை தோலுறித்து காட்ட போகும் படம் என்றெல்லாம் மிகவும் எதிர்பார்த்த படம்..
கன்சர்வேடிவ் ஊரான சண்டிகாரிலிருந்து ஓரு சூப்பர் மாடலாய் வருவேன் என்று சபதமிட்டு விட்டை விட்டு வெளியேறி மும்பை வருகிறார் மேக்னா மாத்தூர் (பிரியங்கா.) .மும்பை வந்திரங்கியவுடன் தனக்கு தெரிந்த ஓரு அப் கம்மிங் மாடலின் உதவியுடன், தன் மாடலிங் முயற்சியை தொடர்கிறார்.. கொஞ்சம், கொஞ்சமாய் தன்னுடய சுயத்தை விட்டு விலகி தன்னுடய மிகப்பெரிய இலக்கை அடைய பல விஷயங்களை இழந்து பெறுகிறார்.. பிரியங்காவின் வரவால் ஷோஸ்டாப்பராக இருந்த சூப்பர் மாடல், சோனாலி (கங்கனா ராவத்) போதையின் பிடியில், மேம்போக்காய் நடக்க.. அந்த இடத்தில் பிரியங்கா நுழைந்து அவரின் இடத்தை அடைகிறார்.
ஓரு முறை கங்கணா, பிரியங்காவிடம்.. போதையின் உச்சத்தில், நீ இந்த இடத்துக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள்.. ஆனால் அதே இடத்தில் இருப்பதற்கு நிறைய இழக்க வேண்டியிருக்கும், ஜாக்கிரதை.. என்று வாழ்த்துகிறார்.. பிரியங்காவும் நேருக்கு நேராய் பார்த்து பார்வையில் வருத்தத்தோடு தேங்க்ஸ் என்று சொல்ல... கங்கனாவின் ரியாக்ஷன் சூப்பர்ப்..இவரா தாம் தூமில் சப்பி போட்ட மாங்கொட்டையாய் இருந்தார்.. ஷோ ஸ்டாபராய் கடைசி நிமிடத்தில் போதை மருந்தை உறிஞ்சிவிட்டு, போதையுடன் ஓரு விதிர்பு விதிர்த்து அவர் ஸ்டேஜூக்கு வரும் ஸ்டைல் இருக்கிறதே.. அம்மணி சும்மா விளையாடியிருக்கிறார். மிக அற்புதமான நடிப்பு.
பிரியங்காவிற்கு மிக சிறந்த ஓரு வாய்ப்பு.. அதை சரியாய் பயன் படுத்தியிருக்கிறார். பெண்மைதனமான டிசைனர்கள்..மாடல்கள்.. போராடும் ஆண் மாடல்.. ஓரின டிசைனர்.. தன் தாய்க்காக, காலேஜில் கூட படித்த ஓரு மாடல் பெண்ணை திருமணம் செய்யும் ஓரினசேர்கையாளரான டிசைனர்.. மாடல் கோ-ஆர்டினேடர்கள்.. பாஷன் உலகின் பிதாமகன்கள்.. ராம்ப் ஷோக்கள், என்று பாஷன் உலகின் பிண்ணணிகளை ஓன்று விடாமல் புட்டு, புட்டு வைத்திருக்கிறார்கள்..ஆனால் என்ன அதனின் கருப்பு பக்கங்களை மட்டுமே காட்டியிருப்பதால்.. கொஞ்சம் வெறுப்பாய்தான் இருக்கிறது..
ஷோஸ்டாபராய் உச்சநிலை புகழ்,பணம் என்கிற மமதையின் உச்சியிலிருந்து வீழ்ந்து போதையின் உச்சத்தில் தன்னை உதறிய காதலனை பழிவாங்குவதாய் நினைத்து பாரில் ஓரு கருப்பின இளைஞனுடன் வலுக்கட்டாயமாய் இழைந்து.. அவனுடன் உடலறுவு கொள்வதாகட்டும், போதை தெளிந்து படுத்திருக்கும் கருப்பின இளைஞனை பார்த்துவிட்டு தன்னிச்சையாய், முகம், கை, என்று மாற்றி மாற்றி துடைத்து கொண்டேயிருப்பது, நொந்து போய் மீண்டும் தோற்றவளாய் சண்டிகாருக்கு திருப்புவதும் என்று இயல்பான நடிப்பாலும், மிக நெகிழ்வான காட்சியகளாலும், இயக்குனரும், நடிகர்களும் உழைத்திருக்கிறார்கள்.
தன் குடும்பதின் ஆதரவோடு மீண்டு வந்து போராடும் மேக்னா மாத்தூரின் கேரக்டர் நிஜ வாழ்வில் லாக்மே சூப்பர் மாடல் ஷிவானிகபூரின் வாழ்கையிலிருந்து எடுக்கபட்டுருக்கிறது., நெ.1 மாடலாய் வலம் வந்து போதையின் பிடியில் வீழ்ந்து ,ரோடில் வீழ்ந்து கிடப்பது நிஜவாழ்வில் கீதாஞ்சலி நாக்பால் எனும் மாடல் அழகியின் வாழ்கையையும், சேர்த்து திரைக்கதையாக்கியிருக்கிறார்கள்..
என்னதான் ஆங்காங்கே மிளிரும் கேரக்டர்கள், சிறந்த நடிப்பு, என்று இருந்தாலும், செயற்கைதனம் அதிகம்.. அது சரி பேஷன் என்றாலே செயற்கைதானே..
Post a Comment
5 comments:
//நல்ல விமர்சனம்//
நன்றி முரளிகண்ணன்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
Nice review. makes me to see at the earliest...
//Nice review. makes me to see at the earliest...///
நன்றி.. லோகன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
இந்த படத்தை தமிழில் எடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்????
//இந்த படத்தை தமிழில் எடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்????//
தமிழில் இந்த மாதிரி படங்கள் வருவதற்கு நாளாகும்.. அப்படியே காட்டினாலும் இல்லாத கலாச்சாரம் என்ற ஓன்றை பற்றி பேசியும், எழுதியுமே.. மாய்ந்து போவார்கள்.
Post a Comment