ஓரு மத்யான நேரம்.. பர்கிட் ரோடு காலியாய் இருந்தது.. மேட்லி ரோடிலிருந்து நேர் சிக்னல் கிடைத்தவுடன் நேராக சென்றேன், திடீரென்று டிராவல்ஸ் எல்லாம் தாண்டிய பிறகு ஓரு மரமிருக்கும் அதனிடயிலிருந்து ஓரு டிராபிக் கான்ஸ்டபில் வெளியே வந்து என்னை மறித்தார். எனக்கும் முன்னால் ஓருவர் போய் கொண்டிருந்தார் அவரையும் சேர்த்துதான் மறித்தார். ஆனால் அவர் போடாங்க்க்க்...ன்னு சொல்லியபடி அவரை கட் செய்துவிட்டு எம்மாச்சுன்னு போயிட்டார்.. நான் மட்டும் ஓரு நல்ல பிரஜையாய் நின்றேன்.
“என்ன சார்..?”
“ஹெல்மெட் போடல..?”
“அந்த ரூல்ஸ் இன்னும் இருக்கா என்ன.?”
“என்ன கிண்டலா?”
“ எனக்கு முன்னால போனவர் கூட போடல அவரை ஏன் பிடிக்கல.. தானா வந்து நின்னவங்களைதான் பிடிப்பீங்களா..?”
“ தேவையில்லாம பேசற.. இல்லாட்டி ஐயாகிட்ட போய் பேசிக்க..”
ஐயா அதே மர இடுக்கில் பக்கத்தில் தன்னுடய பைக்கின் மீது ரசீதை வைத்துக் கொண்டு ரொம்ப சீரியஸாய் எனக்கென்ன என்று எங்கோ பார்த்து கொண்டிருந்தார்.
“ என் கிட்ட காசில்ல..”
“ எங்க பர்சை காட்டு..”
“ அது உங்களூக்கு தேவையில்லாதது சார். என்கிட்ட காசில்ல.. காசு விஷயமாத்தான் போறேன்.. இல்லாட்டி வண்டிய வச்சிக்கங்க.. ஓரு அம்பது ரூவாதாங்க.. ஆட்டோல போயிட்டு காசுவாங்கிட்டு வந்து தரேன்..”
“ ஓரு அம்பது ரூவாகூட இல்லையா?”
நான் பரிதாபமாய் பார்க்க.. அவர் நேராய் என்னை பார்த்து
“ சரி போ..” என்றார்.
@@@@@@@@
ரியல் இமேஜூக்கு போவதற்காக ஆள்வார்பேட்டை வழியாய் ஆஞ்சநேயருக்கு வணக்கம் போட்டுவிட்டு, இஸபெல்லா ஆஸ்பிட்டல் வழியாய் போய் கொண்டிருந்தேன்.. அதே போல் போலீஸ், ஓரு சார்ஜெண்ட், வழிமறித்தல்..எனக்கு முன்னால் ஹெல்மெட்டை பின்பக்கம் மாட்டியபடி போய்க் கொண்டிருந்தார். நான் நின்றேன். அவர் அதற்குள் அடுத்த வண்டிக்காக குருப் சேர்க்க போக, எனக்கு உடனடியாய் போய் ஆகவேண்டிய வேலை.. வண்டியை ஐயாவை நோக்கி ஓட்டியபடி.. அவரை பார்த்து..
“ சார்.. ஓரு அர்ஜெண்ட் மேட்டர் வ்ந்து பாக்கறேன்..” என்று சொல்லியபடி வண்டிய கிளப்பி போய் கொண்டேயிருந்தேன்.. என் பின்னால் வந்த நண்பர் சொன்னார்.
“ சார்.. அவரு சீரியஸா பூக்குல ஏதோ எழுதிட்டுருந்தப்ப நீங்க சொன்னதை கேட்டு தலையாட்டிட்டு திடீருனு ரியாக்ட் பண்ணத நீங்க பாக்கலையே..?” என்றார்.
@@@@@@@
நந்தனம் சிக்னலுக்கு முன்னால் சி.ஐ.டி நகருக்கு ஓரு சிக்னல் இருக்கிறது.. எனக்கு முன்னால் வெள்ளமாய் வாகனங்கள்..அந்த ஜோதியில் சேருமுன் சிக்னல் கிடைத்து வண்டிகள் போக ஆரம்பித்தது நான் கடைசியாய் போய் கொண்டிருந்தேன்.. எனக்கு முன்னால் ஓரு ஸபாரி போய் கொண்டிருந்த்து.. சரியாய் நடு ரோடிலிருந்து ஓரு டிராபிக் கான்ஸ்டபிள் கையை நீட்டியபடி கிராஸ் செய்ய நான் அவர் கிராஸ் செய்கிறாராக்க்கும் என்று நினைத்து அவருக்கு லெப்ட் கட் கொடுத்து நேராக மவுண்ட் ரோடை நோக்கி போனேன். நடுவில் ஓரு வர பெரியார் பில்டிங் பக்கத்தில் நின்று அந்த போனை பேசிவிட்டு மெல்ல வண்டிய கிளப்பியபோது எனக்கு பின்னால் ஓரு வண்டி என்னை பாலோ செய்தது, திரும்பி பார்த்தால் அந்த கான்ஸ்டபிளும், இன்னொரு போலீஸும்.. என்னவோ ஏதோவென்று யோசித்தபடி அவர்களை பார்க்க, “ டேய் வண்டிய நிறுத்துங்க..” நான் கொஞ்சம் தூரம் வண்டியை ஓட்டி நந்தனம் பெட்ரோல் பங்க் அருகில் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி,
“ என்ன.?” என்றேன்..
பின்னாலிருந்து இறங்கிய "கிராஸ்" செய்த கான்ஸ்டபிளுக்கு ஓரு 50 வயதிருக்கும், வண்டியிலிருந்து இறங்கி..” சிக்னல் கிராஸ் பண்ணீங்க..?”
“ ஆமா.. அந்த சிக்னல் கிராஸ் செஞ்சுதான் வந்தேன். அதுக்கென்ன..?”
“ என்ன நக்கலா.. ரெட் விழுந்தப்புறம் நீங்க வந்திருக்கீங்க..அதுக்காகத்தான் நான் உங்களை நிறுத்தினேன்..நீங்க என்னை கட் அடிச்சிட்டு போயிட்டா விட்டுருவோமா..?” என்று கேட்டபோது அவருக்கு உள்ள கோபம் அவர் விடும் மூச்சில் தெரிந்தது..
“ சார்.. நான் வரும் போது சிக்னல் இருந்திச்சு..”
“ நான் பொய் சொல்றோம்மா..? அப்படின்னா நீங்க ஏன் நான் மறிச்சப்ப வண்டிய நிறுத்தாம ஓட்டிகிட்டு போனீங்க..?”
“ சார். நான் நிறுத்தாம் போகல.. நீங்க கிராஸ் செய்யறீங்கன்னு நினைச்சுதான் போனேன்.. அதுக்காக் என்னை தீவிரவாதியை பிடிக்க வர்ர மாதிரி சேஸ் பண்ணிகிட்டு வர்றீங்களா..?
“ ஹலோ.. பொய் சொல்லாதீங்க..நீங்க சிக்னல் கிராஸ் பண்ணீங்கன்னு புருவ் பண்ணா டபுள் ஃபைன் கட்டீறீங்களா..?
“ டபுள் ஃபைன் எதுக்கு முதல்ல நான் கிராஸ் பண்ணேன்னு புருவ் பண்ணுங்க.. அப்புறம் என ஃபைன்னு நான் உங்களுக்கு சொல்றேன்.. வாங்க பொய் பாக்கலாம்”
“ அங்க நாங்க கேமரா வச்சிருக்கோம்.. அதுல உங்க வண்டி ரிக்கார்ட் ஆயிருக்கு. இதோ பார்
“என்று ஓரு பேப்பரை காண்பித்து இதுமாதிரி ஓரு சம்மன் உங்களுக்கு வரும் அதுல நீங்க ஏழு நாளைக்குள்ள வந்து இதில உள்ள ஸ்டேஷனில் வந்து 1050 ரூபாய் கட்டணும் தெரியுமில்ல.. அங்க போய் பாத்துக்க..”
எனக்கு தெரிந்து அங்கே மேமரா இருப்பதாய் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அத பற்
றி எனக்கு கவலையில்லை.. நான் அவர்களுக்கு லஞ்சம் கொடுப்பதாய் இல்லை..
“ அதான் கேமரா இருக்குல்ல.. அப்புறம் எதுக்கு இந்த சேசிங்.. நான் ஸ்டேஷ்ன்ல புருவ் பண்ணிக்கிறேன்..”
“ 1050 ரூபா சார்..”
” பராவாயில்லை.. நான் கட்டிக்கிறேன்.. எனக்கு வேலையிருக்கு.. “
“ அவ்வள்வு பெரிய ஆளா..நீ..?
“ அனுப்சி பார் நான் பெரிய ஆளா இல்லையான்னு சொல்றேன்.. முதல்ல கேமரா இருக்கும் போது தேவையில்லாம குறுக்கே வந்தியே .. அத்னால நான் ஸ்கிட் ஆகி விழுந்து ஆக்ஸிடெண்ட் ஆகியிருந்தா என்ன பண்ணுவீங்க.. எனக்கு முன்னாலே ஓரு ஸபாரி போச்சே அதும் முன்னாலே போய் நிக்க வேண்டியதுதானே..? சரி உங்க பேர் என்னனு சொல்லுங்க.. எந்த ஸ்டேஷன்? சம்மன் அனுப்புங்க நா பாத்துக்கிறேன்..”
வண்டியில் அவ்வளவு நேரம் உட்கார்ந்த படியே பார்த்து கொண்டிருந்த இன்னொரு போலீஸ், “ அப்ப ஃபைன் கட்டமாட்டீங்க.. ஏட்டு நம்பரை நோட் பண்ணிகிட்டு வா போலாம்..”
“ அட்ரஸ் போன் நம்பர் ஏதாவது வேணுமா..?
“ இதெல்லாம் ரொம்ப அநியாய்ம்” என்று புலம்பியபடி அந்த் ஏட்டு வண்டியேறி சென்றார். அவர்கள் மீண்டும் எதிர் திசையில் ராங் ரூட்டில் சிஜடி நகர் ஜங்கஷனை நோக்கி போய் கொண்டிருந்தார்கள்.. அவர்களை பிடிக்க போலீஸ் இல்லையா..?
டிஸ்கி: இதே போல் பல பேருக்கு இம்மாதிரி நிகழ்வுகள் நடந்திருக்கும் அதை ஓரு தொடர் பதிவாக தொடரலாமென்ற எண்ணம்.. அதனால்..
1. அதிஷா.
2. பரிசல்
3. லக்கிலுக்
4. உண்மைதமிழன்
5. தாமிரா
ஆகியோர்களை அழைக்கிறேன்.. முடிந்தால் தொடருங்கள்.. மற்றவர்கள் கூட எழுதலாம்..அவர்களையும் நான் அழைக்கிறேன்..
சமீபத்தில் ஓரு முறை என்னுடய பதிவு ஓன்று சூடான இடுகைகளில் இருந்ததாய் சொன்னார்கள் நான் பார்த்தபோது மாறியிருந்தது.. உண்மையாய் இருந்தால் மேலும் சந்தோஷமே..
பார்ததில் பிடிச்சது
சத்யம் தியேட்டர் காம்ளெக்சில் blur என்று விளையாட்டு அரங்கம் ஓன்று அமைத்திருக்கிறார்கள். மூன்று தளங்களில். நான் பார்த்த ஹைடெக் விளையாட்டு அரங்கம் இதுதான்.. சும்மா அசத்தியிருக்கிறார்கள்.. அவ்வளவாக ஓன்றும் பர்ஸை பதம் பார்க்கவில்லை. ஒரு மணி நேரத்துக்கு 60 ரூபாய் தான் வாங்குகிறார்கள். அதிலும் நீங்கள் அரை மணி நேரத்தில் வெளியேறிவிட்டால் அதை மீண்டும் வேறு ஓரு நாளில் ஓரு மாசத்திற்குள் வந்து விளையாடிக் கொள்ளலாம்.. உங்கள் குழந்தைகளுடன் நீங்களும் குழந்தையாக வேண்டுமா..? Why dont you try..
பின் குறிப்பு.
நான் ஓண்றும் சத்யம் பி.ஆர்.ஓ.கிடையாது
Post a Comment
12 comments:
//“ ஓரு அம்பது ரூவாகூட இல்லையா?”
நான் பரிதாபமாய் பார்க்க.. அவர் நேராய் என்னை பார்த்து
“ சரி போ..” என்றார்.//
பாவம் அவரு ரொம்ப நல்லவரு போலருக்கு..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
//“ இதெல்லாம் ரொம்ப அநியாய்ம்”//
சிரிப்பு போலிசோ
சீரியஸ் மேட்டர் என்றாலும் மைய நகைச்சுவையுடன் இருந்தந்து..
//சீரியஸ் மேட்டர் என்றாலும் மைய நகைச்சுவையுடன் இருந்தந்து..//
சீரியஸ் மேட்டர்தான் நகைச்சுவையாத்தான் எடுத்துக்க வேண்டியிருக்கு ப்ரதர். நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
//
“ என் கிட்ட காசில்ல..”
“ எங்க பர்சை காட்டு..”//
பர்ஸ காட்டுனேன் .
வெறும் அஞ்சு ரூபா தான் இருந்தது...
"டீ குடிக்க இருக்கட்டும் " அப்டீன்னு வாங்கிகிட்டாங்க ....
என்ன கொடும சார் இது...
முருகா..
இன்னொரு சோகத்தையும் வெளில சொல்லணும்னு கேபிள் ஸார் கூப்பிடுறாரு..
நமக்கு எப்போ நேரம் கிடைக்குதோ அன்னைக்கு கச்சேரியை வைச்சுக்கலாம்னு சொல்லிப்புடு..
அப்புறம் கடைசியா சத்யம் தியேட்டரை பத்தி சொல்லிட்டு ஜாக்கிரதையா நான் ஒண்ணும் அந்த தியேட்டருக்கு பி.ஆர்.ஓ. இல்லைன்னு உதார்விட்டுத் தப்பிச்சிட்டாரு..
நோட் பண்ணி வைச்சுக்குறேன்..
மத்தபடி அவருக்கு இருக்கும் தைரியத்துக்கு போயஸ் கார்டனுக்குள்ளேயே டூவீலர்ல தைரியமா சுத்தலாம்..
//நமக்கு எப்போ நேரம் கிடைக்குதோ அன்னைக்கு கச்சேரியை வைச்சுக்கலாம்னு சொல்லிப்புடு..//
இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்ககூடாது சொல்லிபுட்டேன்..
//மத்தபடி அவருக்கு இருக்கும் தைரியத்துக்கு போயஸ் கார்டனுக்குள்ளேயே டூவீலர்ல தைரியமா சுத்தலாம்..//
:) :) :)
நன்றி உண்மைதமிழன்.. உங்களின் வருகைக்கும், கருத்துக்கும்,, விடமாட்டேன்..
இனிமே எங்கெயாச்சும் trafficல மாட்டினா, நான் "கேபிள் சங்கர்" ஆளுன்னு சொல்லி தப்பிச்சுக்க வேண்டியதுதான். அந்த அளவுக்கு சிட்டி முழுக்க எல்லா traffic போலிசுக்கும் உங்களை தெரியுமுன்னு நினைக்கிறேன்
//இனிமே எங்கெயாச்சும் trafficல மாட்டினா, நான் "கேபிள் சங்கர்" ஆளுன்னு சொல்லி தப்பிச்சுக்க வேண்டியதுதான். அந்த அளவுக்கு சிட்டி முழுக்க எல்லா traffic போலிசுக்கும் உங்களை தெரியுமுன்னு நினைக்கிறேன்//
நான் நிம்மதியா சுத்திக்கிட்டுருக்கிறது பிடிக்கல போலருக்கு ராஜ்.. ஏற்கனவே என்னை சேஸ் பண்ணி பிடிக்கிறாங்க..
தொடர் பதிவா... ஐ ஜாலி...
நானும் போடறேன் அதர் சைட்ஆஃப் போலீஸ் வுமன்
என் அனுபவம் இது. நான் ஒரு நாள் நந்தனம் சிக்னலில் ரெட் சிக்னல் இருக்கும் போது கவனிக்காமல் கடந்துவிட்டேன். தாண்டியவுடன் எங்கிருந்தே வந்த போலீஸ் பிடித்து கொண்டார். எனக்கு தெரியும் நாம் செய்தது தப்பு என்று. அதனால், எவ்வளவு பைன் கட்ட வேண்டும் சார் என கேட்டேன். தம்பி பைன் கட்ட வேண்டாம், ஒரு 100 ரூபாய் கொடுத்திட்டு கிளம்பு என சொன்னார். நான் சார் 1000 ரூபாய் பைனா இருந்தாலும் பரவாயில்லை அதை கட்டுகின்றேன் என சொன்னதற்கு, பிழைக்க தெரியாதவனாக இருக்காயே என என்னை திட்டி, பைனும் கட்ட வேண்டாம், ஒன்னும் வேண்டாம் போய்யா அப்படின்னு சொல்லி அனுப்பி விட்டார். இதற்கு என்ன சொல்கின்றீர்கள். இராகவன், நைஜிரியா.
பின் குறிப்பு : நைஜிரியா ராகவன் எப்ப சென்னை வந்தார் என யாரும் கேள்வி கேட்க கூடாது.. நான் நைஜிரியாவுக்கு 23/02/2008 அன்றுதான் வந்தேன். அதுவரை சென்னை வாசம் தான்.
//நான் சார் 1000 ரூபாய் பைனா இருந்தாலும் பரவாயில்லை அதை கட்டுகின்றேன் //என சொன்னதற்கு, பிழைக்க தெரியாதவனாக இருக்காயே என என்னை திட்டி, பைனும் கட்ட வேண்டாம், ஒன்னும் வேண்டாம் போய்யா அப்படின்னு சொல்லி அனுப்பி விட்டார்.//
மிகசரியான் முடிவு ராகவன். நாம் பிழைக்க தெரியாதவனாகவே இருந்துட்டு போவோம். ஆனால் லஞ்சத்தை ஞாயப்படுத்தவே கூடாது.
//நானும் போடறேன் அதர் சைட்ஆஃப் போலீஸ் வுமன்//
ஆவலுடன் அத்ர் சைட் ஆஃப் போலீஸ் உமன்..”சோலிகே பீச்சே மாதிரி இல்ல..?
Post a Comment