Thottal Thodarum

Nov 21, 2008

வாரணம் ஆயிரம் v/s தெனாவெட்டு



வாரணம் ஆயிரம் படத்தின் வசூலைக் கண்டு சூரிய கம்பெனி சந்தோசஷ குதியாட்டத்தில் இருகிறது. சென்னையை தவிர மிக மோசமான் ஓப்பனிங் இந்த படத்திற்கு. இந்த நிலையில் சூரிய கம்பெனியின் புதிய படமான தெனாவெட்டு படத்தின் ஆடியோ வெளியீடு இரண்டு நாட்களுக்கு முன்பாய் நடந்தது. சூரிய கம்பெனியே தனது இன்னொரு அங்கமாய் சன் ஆடியோ என்று ஆரம்பித்து வெளியிட்டது.

இதனிடையில் சினிமாகாரர்கள் வாரணம் ஆயிரம் பிஸினெஸ் முறையை அறிந்து அல்லு விட்டிருகிறதாய் தகவல். முதலில் 17 கோடிக்கு ஒத்துக் கொண்டு படத்தை வாங்கியவர்கள், ரிலீஸுக்கு முன் நாள் லேப்பில் அவ்வளவு எல்லாம் முடியாது என்று சொல்லி 11.5 கோடிக்குதான் வியாபாரம் ஆனதாகவும், 50லட்சம் எங்கள் பிசினெஸ் கமிஷன் என்றும், மீதி 11 கோடியை கொடுத்துவிட்டு, பெட்டிகளை கொடு என்று கேட்டு, அதற்கு மேல் கொடுக்க முடியாது என்று சொல்லி பெட்டிகளை எடுத்து போயிருக்கிறார்கள் என்கிறது சினிமா வட்டாரம், 50 லட்சம் சம்பாதித்தும் இல்லாமல், பேசியபடி வியாபாரம் செய்யாமல் இப்படி பண்ணியது பற்றி கேள்விபட்டு எல்லா தயாரிப்பாளர்களும் செய்வத்றியாது நிற்பதாய் தெரிகிறது. ரிலீசூக்கு முந்தினம் இரவு படத்தின் தயாரிப்பாளர்,இயக்குனர் இவ்ர்களையெல்லாம் வைத்து பஞ்சாயத்து நடத்து, அவர்கள் விட்டு கொடுத்ததாய் தெரிகிறது. இதனால் அவர்களது கம்பெனி படத்தை வாங்குவதாய் வந்தால் கொடுக்க முடியாது என்று சொல்ல முடிவெடுத்திறுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.

சூரிய கம்பெனியின் தெனாவெட்டின் புதிய டிரைலரும் எதிர் குழுவை எரிச்சலடைய வைத்திருக்கிறது.. டிரைலரில் ஜீவா..”வேணாம்னு நான் ஓதுங்கியிருக்கேன்.. சும்மா சீண்டாதே..” என்று எச்சரிகிறார். யாரை எச்சரிக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர்களில் ஓருவரான சிவசக்தி பாண்டியன் சூரிய இசை கம்பெனி வெளியிட்ட தெனாவெட்டு பட பாடல் விழாவில் “ அவர்களை வல்லவர்கள், நல்லவர்கள், திறமைசாலிகள் என்றும் அதனால் தான் எமகண்டத்தில் தங்கள் பாடல் கம்பெனியின் முதல் கேசட்டை வெளியிடுகிறார்கள் என்று சொம்படித்திருக்கிறார். இதிலிருந்தே தெரிகிறது தயாரிப்பாளர்களின் ஆதரவை சூரிய கம்பெனிக்கு கிடைக்க ஆரம்பிக்கி
றது என்று. அது மட்டுமில்லாமல்..


சூரிய கம்பெனி தன்னுடய விழுந்த படத்தை அதிக விலைக்கு விற்காமல் மிகவும் நியாயமான் விலையில் விநியோகஸ்தர்களுக்கு விற்றிருக்கிறது. படத்தின் ஓப்ப்னிங் மிக பெரிய ஓப்பனிங்காக இருந்ததால், வாங்கிய அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் லாபம். சின்ன படமோ.. பெரிய படமோ.. சன் டிவியின் விளம்பரம் மிகப் பெரிய அளவில் ரீச் ஆவதால் ஓப்பனிங்கில் காசை தேத்திவிடலாம் என்று விநியோகஸ்தர்கள் ஆவலுடன் அவர்களின் படங்களை வாங்குவதாய் கேள்வி..

எது எப்படியோ..நாளை வெளிவரும் தெனாவெட்டுக்கு ரசிகர்கள் விடை சொல்லிவிடுவார்கள்.

டிஸ்கி:
கவுதம் மேனன் நேற்று தன்னுடய பேட்டியில் படம் வெளியாகி மூண்று நாட்களே ஆகியிருப்பதால் பெண்கள் கூட இனிமேல் தான் வரும் என்று கூறியிருக்கிறார்.
இதே போல் குசேலனுக்கு பி.வாசு ஆடிமாதமானதால் பெண்கள் படத்திற்கு வரவில்லை என்றும், ஆடி முடிந்ததும் பெண்கள் கூட்டம் அம்மும் என்று சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அம்மியதா..? கும்மியதா..? என்று தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தெரியும்.

ஓரு படம் நல்லாயிருக்கா இல்லையா என்று பெரிய பட்ஜெட் படங்களில் முதல் காட்சியிலேயே தெரிந்துவிடும். சிறிய, மற்றும் புதிய நடிகர்கள் நடித்த படங்கள்தான் மிக சிறிய ஓப்பனிங்கில் ஆரம்பித்து சுமார் மூன்று நாட்களுக்குள் படம் பிக்க்ப் ஆகும் என்பது நிதர்சன உண்மை..

நமக்கும் உஙக் ஓட்டை தமிழ்மணத்துலேயோ.. தமிலிஸிலேயோ குத்தவும்..
Post a Comment

20 comments:

Anonymous said...

good post sankar sir, Sun Tv is really doing good job by making low budget movies and giving good opening to them by giving good ads.

Cable சங்கர் said...

thanks anaonymous

முரளிகண்ணன் said...

super sir. continue

DHANS said...

Sun pictures doing good job by buying low budjet and not able to release movies.

both kathalil vilunthen and thenavettu was not able to release and then after sun pictures got them, they both reached people with good advertisements.

getting a big movie and releasing is not at all equal to getting low budjet movie and releasing them with a good reach.
good work

DHANS said...

Sun pictures doing good job by buying low budjet and not able to release movies.

both kathalil vilunthen and thenavettu was not able to release and then after sun pictures got them, they both reached people with good advertisements.

getting a big movie and releasing is not at all equal to getting low budjet movie and releasing them with a good reach.
good work

அத்திரி said...

லேட்டஸ்ட் வசன்ம் தெனாவட்டு படத்திலிருந்து

"ஒத்தையா வந்தாலும் சரி, மொத்தப்படையா வந்தாலும் சரி வாங்கடா?"

"கோழை நூறு பேரோட போனாலும் தனியாள்தான், வீரன் தனியா போனாலும் நூறு பேர் போன மாதிரி"

"எத்தனையோ ரவுடிங்க உருத்தெரியாம போயிருக்காங்க"

மொத்தத்துல படத்துல சரக்கு இருக்கோ இல்லையோ, ஒப்பனிங் நல்லா கொடுத்தா போதும்னு நினைக்குறாங்க.

நிதானமா அடியடுத்து வைக்கிறாங்க போல

Cable சங்கர் said...

//நிதானமா அடியடுத்து வைக்கிறாங்க போல//

அவர்கள் மிக சிறந்த பிஸினெஸ்மேன்கள்..அத்திரி..

Cable சங்கர் said...

//super sir. continue//

நன்றி முரளிகண்ணன்..

anujanya said...

துறை பற்றி தெரிந்த, அரசியல் சாய்வு நிலை இல்லாத பதிவு. அதனால் தகவல்கள் நம்பகத் தன்மையுடன் இருக்கின்றன. வாழ்த்துக்கள்.

ஆனால், கலைஞர் தொலைக்காட்சியில், சன் குழுமம் தம் படங்களுக்குச் செய்வது போல், 'வாரணம்' படத்திற்கு promote செய்யாதது ஏன் என்று விளங்கவில்லை. Because as a channel they are not doing bad. They are picking up fast. உங்கள் பார்வை என்ன?

அனுஜன்யா

Anonymous said...

Dear Sankar,

Do you realy think Vaaranam Aayiram is a bad film. Till now your poll says it as a good movie (atleast in chennai).

Cheers
Christo

Cable சங்கர் said...

//Do you realy think Vaaranam Aayiram is a bad film. Till now your poll says it as a good movie (atleast in chennai).//

நான் மோசமான படமென்று சொல்லவில்லை. ஆனால் படத்தில் எல்லோருடய உழைப்பும் , இலக்கில்லாத திரைக்கதையினால் வேஸ்ட்டாகி போய்விட்டது. எனக்கு தெரிந்து மிக நல்ல படங்கள் என்று இணையத்தில் பாராட்ட படும் படங்கள் எல்லாம் வணிக ரீதியாய் தோல்வி படங்களே.. படத்தில் வரும் காட்சிகளை தனியாய் பார்த்தால் அருமையாயிருப்பதாய் தோன்றும், மொத்தமாய் பார்த்தால் ஓரே இழுவை.. டிரிம் செய்யபட்ட வ்.ஆயிரத்தையும் பார்த்தேன்.. மொத்தம் 100 பேருடன். இப்போது சொல்லுங்கள் படம் வெற்றி படமா.>>

Anonymous said...

without thaatha's support, Maran brothers seem to run business as business. They seem to engulf all spheres of media business, be it print, TV or movies which is a grand strategy. Moreover, now they are a publicly listed company. Having an image of political patronage or getting into criminal cases is not the way to run the company. Investors will shy away from them.

Whereas Azhagiri's company(!) is his personal fiefdom. He seem to run it in katta-panchayat style. His writ rules everywhere. They seem to run a extortion racket in the name of business. Remember, similar accusations were made against Udayanidhi Stalin as well when he released kuruvi. These guys don't understand business and would not survive in the long run.

Cable சங்கர் said...

நன்றி..

//ஆனால், கலைஞர் தொலைக்காட்சியில், சன் குழுமம் தம் படங்களுக்குச் செய்வது போல், 'வாரணம்' படத்திற்கு promote செய்யாதது ஏன் என்று விளங்கவில்லை. Because as a channel they are not doing bad. They are picking up fast. உங்கள் பார்வை என்ன?//

ஓரு விஷயம் என்னவென்றால் சன் குழுமம் போலவே அவர்களும் தங்களுடய சேனல்களில் விளம்பரம் செய்து கொண்டுதானிருக்கிறார்கள்.. நீஙகள் தான் கவனிக்கவில்லை.. இதிலிருந்தே தெரிகிறது உங்களை போல பலருக்கும் கலைஞர் தொலைக்காட்சியில் மனதில் இடம்பிடிக்க வில்லையென்று.. இதை சன் குழுமத்துக்கு ஆதரவாய் சொல்லவில்லை.. ஆனால் கண்டிப்பாய் கலைஞர் தொலைகாட்சி இதே போல் அவர்க்ளுடன் ஆவேசம் குறையாமல் போட்டியிட்டால் கண்டிப்பாய் சன் வீழ்ந்தே தீரும்..

Cable சங்கர் said...

//without thaatha's support, Maran brothers seem to run business as business. T//

தாத்தாவின் ஆதரவில் அவர்க்ள் வளர்ததென்னவோ உண்மைதான் ஆனால் நீங்கள் சொன்னது போல் அவர்கள் பிசினெஸ்ஸை பிசினெஸாக செய்பவர்கள்.. அதனால் தான் அவர்களின் வெற்றியை தடுக்க முடியவில்லை.

அக்னி பார்வை said...

I think comparing to Prymid Saimeera , Sun doing the real corporate work .

Maduraikkarathambi said...

Nall Surf-la potu alsi eduthu kayapottu irukinga....Nalla irukku

Cable சங்கர் said...

//I think comparing to Prymid Saimeera , Sun doing the real corporate work .//

பிரமிட் சாய்மீரா ஓரு அரைவேக்காட்டு கம்பெனி.. அத்னுடன் நீங்கள் சன் டிவியை கம்பேர் செய்ய வேண்டாம்.. என்பது என்னுடய் தாழ்மையான வேண்டுகோள். அக்னிபார்வை.

நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Cable சங்கர் said...

//Nall Surf-la potu alsi eduthu kayapottu irukinga....Nalla irukku//

எதோ என்னால முடிஞ்சது. நன்றி மதுரைக்காரன். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

Ganesan said...

11.5 கோடிக்குதான் வியாபாரம் ஆனதாகவும், 50லட்சம் எங்கள் பிசினெஸ் கமிஷன் என்றும், மீதி 11 கோடியை கொடுத்துவிட்டு, பெட்டிகளை கொடு என்று கேட்டு, அதற்கு மேல் கொடுக்க முடியாது என்று சொல்லி பெட்டிகளை எடுத்து போயிருக்கிறார்கள் என்கிறது சினிமா வட்டாரம்,




இதாவது தம்பி கொடுத்துசே .



சூரிய கம்பெனி தன்னுடய விழுந்த படத்தை அதிக விலைக்கு விற்காமல் மிகவும் நியாயமான் விலையில் விநியோகஸ்தர்களுக்கு விற்றிருக்கிறது.


சன் டிவீ ப்ரொபெசனல் கம்பெனி.

காவேரி கனேஷ்

Cable சங்கர் said...

//சன் டிவீ ப்ரொபெசனல் கம்பெனி.//

ரிப்பீட்ட்ட்டேய்ய்ய்ய்ய்...