எ.வ.த.இ.ம.படம் -Slumdog Millionaire

படம் பார்த்துட்டு ஒரு இரண்டு மணிநேரத்துக்கு என் மனம் முழுவதும் ஜமால் மாலிக், மாலிக், லதிகா என்றே உழன்று கொண்டிருந்தது. What a movie yaar..? படத்தின் கதை ஜமால் மாலிக் என்கிற 18வயது கால்சென்டரில் டீ பாய்யாக வேலை செய்யும், ஒருவன் நமது கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எல்லா கேள்விகளுக்கும் சரியான் பதிலை சொல்லி அசத்துகிறான். நிகழ்ச்சியை நடத்தும் அனில் கபூருக்கு ஒரு சாதாரண குப்பத்தில் அனாதையாய் வளர்ந்த இவனுக்கு எப்ப்டி இந்த பதில்கள் தெரியும், இதற்கு பின்னால் ஒரு சதியிருக்கும் என்று சந்தேகப்பட்டு, கடைசி கேள்வியின் போது நிகழ்ச்சியின் நேரம் முடிய, அன்று இரவு அவனை போலீஸில் பிடித்து கொடுக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் அவனை டார்சர் செய்யும் காட்சியிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. டார்சரின் முடிவில், தனக்கு எவ்வாறு அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தெரிந்தது என்று தன் வாழ்கையை சொல்கிறான். முஸ்லிம்கள் அதிகமாய் வசிக்கும் மும்பை குப்பத்தில் இந்துக்கள் கலவரத்தில் தன் தாயை இழந்து அனாதையான சகோதரர்கள், அவர்களுடன் சேரும் லதிகா என்ற சிறுமி, இவர்கள் மூவரும் ஒரு கொடிய மனமுள்ள குழந்தைகளை வைத்து, அவ...